Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம் தொடர்பில் மன்னிப்புச்சபையின் நிலைப்பாடு

Featured Replies

இலங்கை விவ­காரம் தொடர்பில் மன்­னிப்­புச்­ச­பையின் நிலைப்­பாடு

 

இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தும் விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்­கமும் கால இழுத்­த­டிப்பை மேற்­கொண்டு வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன. இறுதி யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பலி­கொள்­ளப்­பட்­ட­துடன் பல ஆயி­ரக்­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணா­மல்­போ­யினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். இவ்­வாறு உயிர்­களையும் உட­மை­க­ளையும் இழந்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று கோரி வரு­கின்­றனர்.

இந்­த­நி­லை­யில்தான் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை விவ­காரம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளகப் பொறி­மு­றையின் கீழ் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரும் வகை­யி­லான பிரே­ர­ணையே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சாங்கம் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­தது. ஆனால், இவ்­வாறு இணக்கம் தெரி­வித்த அர­சாங்கம் உள்­ளகப் பொறி­மு­றையின் கீழ் மாத்­தி­ரமே விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடி­யு­மென்றும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­வாங்­கு­வது என்­பது சாத்­தி­ய­மில்லை என்றும் அறி­வித்­தி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­ட­போ­திலும் கடந்த 16 மாத கால­மாக விசா­ர­ணையை நடத்­து­வ­தற்­கான எத்­த­கைய நட­வ­டிக்­கை­யி­னையும் அர­சாங்­க­மா­னது எடுக்­க­வில்லை. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­கான உள்­ளகப் பொறி­மு­றை­யினை தயா­ரிப்­ப­தாகக் கூறி அர­சாங்­க­மா­னது கால இழுத்­த­டிப்புகளையும் மேற்­கொண்டு வந்­தது. இந்­த­நி­லை­யில்தான் கடந்த மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு மேலும் இரண்­டு­வ­ருட கால அவ­காசம் வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் இலங்கை விவ­காரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அல் ஹுசைன் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்புப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

தற்­போது இலங்கை அர­சாங்­கத்­துக்கு இரண்­டு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும்­கூட சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய விசா­ரணை என்­பது ஒரு­போதும் சாத்­தி­யப்­ப­டாது என்ற தோர­ணை­யி­லேயே அர­சாங்க அமைச்­சர்கள் கருத்துத் தெரி­வித்து வரு­கின்­றனர். இதனால் இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்­துக்குள் அர­சாங்­க­மா­னது உரிய வகையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­குமா என்ற கேள்வி தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

இந்­த­நி­லையில் தற்­போது இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் செய­லாளர் நாயகம் சாளில் செட்டி தலை­மை­யி­லான குழு­வினர் வட பகு­திக்கு விஜயம் செய்து மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்­துள்­ளனர். இவர்கள் கொழும்பில் நேற்று முன்­தினம் செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்­தினர். இந்த மாநாட்டில் கருத்து தெரி­வித்த சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் செய­லாளர் சாளில் செட்டி, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். வடக்கு, கிழக்கில் யுத்­தத்தின் எந்த ஒரு தழும்­பு­களும் ஆற்­றுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அங்கு மாற்றம் நிகழ்­வ­தாக காட்­டு­வ­தற்கு அர­சாங்கம் முற்­ப­டு­கின்­றது. இருந்­த­போ­திலும் சர்­வ­தே­சத்தை ஏமாற்ற முடி­யாது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட இரண்டு வருட கால நீடிப்பு அர­சாங்கம் ஓய்­வெ­டுத்­துக்­கொண்டு மீண்டும் அதே கதையை ஒப்­பு­விப்­ப­தற்­காக அல்ல என்­ப­தனை நன்கு உணர்ந்­து­கொள்ள வேண்டும். குறிப்­பாக தமிழ் மக்கள் தமக்கு என்ன வேண்டும் என்­பதில் தெளி­வாக உள்­ளனர். அவர்கள் சர்­வ­தேச விசா­ர­ணையின் அவ­சியம் பற்றி மிகத் தெளி­வாக கருத்­து­களைக் கொண்­டுள்­ளனர். அந்த மக்கள் உள்­நாட்டுப் பொறி­மு­றை­யின்­மீது துளி­ய­ள­விலும் நம்­பிக்கை கொள்­ள­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

30 வரு­ட­கால யுத்­தத்தின் வடுக்­களை ஆற்­ற­மு­டி­யாது. கண்ணீர் விட்டு அழும் மக்கள் தங்­க­ளது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரு­கின்­றனர். தங்­க­ளது சொந்த நிலங்­களில் மீளக் குடி­யேற முடி­யாமல் முழு­மை­யான இரா­ணுவப் பிர­சன்­னத்­துக்குள் அந்த மக்கள் வாழ்­கின்­றனர். தற்­போது அந்த மக்கள் மேற்­கொண்­டு­வரும் போராட்டம் நியா­ய­மா­ன­தாகும். இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட இரண்­டு­வ­ருட கால நீடிப்பை தனது கௌர­வத்­துக்­கா­கவோ சுய­மரி­யா­தைக்­கா­கவோ பகட்­டுக்­கா­கவோ பயன்­ப­டுத்தி அம்­மக்­களின் உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம் என்ற கோரிக்­கையை நாம் முன் வைக்­கின்றோம். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கக்­கூ­டிய காத்­தி­ர­மான செயற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விசேட தேவை அல்­லது கவ­னிப்பு அவ­சி­ய­மா­கின்­றது என்­பதை அர­சாங்கம் உணர்ந்­து­கொள்ள வேண்டும். காணாமல் ஆக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க தேவை­யான அணு­கு­மு­றை­களை காலம் தாழ்த்­தாது அர­சாங்கம் மேற்­கொள்­ள­வேண்டும் என்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் செய­லாளர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட அவர் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் அறை­கூ­வலை விடுத்­தி­ருக்­கின்றார். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். இதற்­காக உலக நாடுகள் ஒன்­றி­ணைய வேண்டும். தங்­க­ளது வடுக்­களை வார்த்­தை­க­ளில்­கூட சொல்ல இய­லாது தவிக்கும் மக்­களின் துன்­பங்கள் சர்­வ­தே­சத்தின் துணை­யோடு நீக்­கப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். எனவே இந்த விட­யத்தில் சர்­வ­தேசம் நேர­டி­யாக தலை­யி­ட­வேண்டும் என்றும் மன்­னிப்­புச்­சபையின் செய­லாளர் சாளில் செட்டி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் எத்­த­கைய விசா­ர­ணை­யினை நடத்­து­வது என்­பது தொடர்பில் அர­சாங்கம் மாறு­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றது. கடந்த திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பாணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன இறுதி யுத்­தத்­தின்­போது போர்க்­குற்­றங்கள் எவையும் நடை­பெ­ற­வில்லை. ஆகையால் போர்க்­குற்ற விசா­ரணை தேவை­யில்லை என்று தெரி­வித்­தி­ருந்தார். அதே அமைச்சர் கொழும்பு திரும்­பிய பின்னர் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­விக்­கையில், உண்­மை­களைக் கண்­ட­றியும் நகர்வில் உள்­ளகப் பொறி­மு­றையின் மூல­மா­கவே தீர்வு பெறப்­படும். எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தில் இறுதி யுத்­தத்­தின்­போது காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் மற்றும் சுமத்­தப்­பட்டு வரும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உள்­ள­க­ரீ­தியில் விசா­ர­ணையை முன்­னெ­டுத்து உண்­மை­களைக் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிப்போம் என்று முன்­னுக்குப் பின் முர­ணாக கருத்து தெரி­வித்­துள்ளார்.

இதே­போன்றே யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி படை­யி­னர்­ மீது எத்­த­கைய குற்­றச்­சாட்­டு­க­ளையும் சுமத்­தப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தி­ருந்தார். தெற்கில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அவர், எமது படையினரை சர்வதேச ரீதியில் போர்க்குற்ற விடயத்தில் பிரதிவாதியாக்குவதற்கு நான் தயாரில்லை. படையினரை பாதுகாப்பது அரசின் கொள்கை யாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகைய கருத்துகளிலிருந்து அரசாங்கமானது யுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கப்போவதில்லை என்பதும் விசாரணை விவகாரத்தில் தடுமாற்றப் போக்கை கடைப்பிடித்து வருவதும் உறுதியாகின்றது. ஆனாலும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் சாளில் செட்டி மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் ஆகியோரின் கருத்துகளிலிருந்து சர்வதேச அமைப்புக்கள் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையிலேயே அக்கறை கொண்டுள்ளமை நிரூபணமாகின்றது. எனவே, அரசாங்கமானது இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஐ.நா.பிரேரணைக்கு இணங்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.