Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை கப்பக்குழு வெள்ளைவேன் கடத்தல்களின் சூத்திரதாரி எங்கே?

Featured Replies

கடற்படை கப்பக்குழு வெள்ளைவேன் கடத்தல்களின் சூத்திரதாரி எங்கே?

 

கொலை­யா­ளியை விட அவனைப் பாது­காப்­பவன் மிக ஆபத்­தா­னவன்' என்­பார்கள். ஆம், உண்­மைதான். நாட்டில் இடம்­பெற்ற பல கொடூ­ர­மான குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் போது அதனை மிகத் தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கி­றது. அதுவும் சட்ட ரீதி­யான மதிக்­கத்­தக்க உத்­தி­யோ­க­பூர்வ சீரு­டைக்குள் பதுங்கி, கீழ்த் தர­மான, மிரு­கத்­த­ன­மான நட­வ­டிக்­கைகள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ள­மையும் அதனை அரங்­கேற்­றி­ய­வர்கள் தேசத்தை பாது­காக்க வேண்­டிய பொறுப்பில் இருந்தோர் என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் கிடைத்­துள்ள நிலை­யிலும் நட­வ­டிக்கை எடுக்கத் தயங்கும் தலை­மைகள் மிக மிக ஆபத்­தா­னவை. நாட்டு மக்­களை பாது­காக்க வேண்­டி­ய­வர்கள், வெள்ளை வேன்­களில் சிவி­லி­யன்­களை கடத்திச் சென்று இர­க­சிய வதை கூடங்­களில் தடுத்து வைத்து கப்பம் கோரி அவர்­க­ளது உட­மை­களை கொள்­ளை­யிட்டு அவர்­களை கொலை செய்­வ­தென்­பது எந்த அளவு கொடூ­ர­மா­னதோ, அத்­த­கைய கொடூ­ரத்தை புரிந்­தோரை சட்­டத்தின் பிடியில் இருந்து காப்­பாற்ற முன்­னெ­டுக்­கப்­படும் சட்ட ரீதி­யற்ற நட­வ­டிக்­கைகள் அதனை விட கொடூ­ர­மா­னவை.

 

சரி விட­யத்­துக்கு வருவோம். 
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­கப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே அம்­ப­லத்­துக்கு வந்­தது. 

 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இவை இக்­க­டத்­தல்கள் மற்றும் காணாமல் போகச் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களில் கடத்­தப்­பட்­டோரின் உட­மைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டதும், பலரின் உற­வி­னர்­க­ளிடம் கப்பம் பெறப்­பட்­டதும் தெரி­ய­வந்­தது. இந் நிலையில் அதனை மையப்­ப­டுத்தி அறி­வியல் ரீதி­யி­லான த­ட­யங்­களை வைத்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி கடத்­தப்­பட்ட அனை­வரும், கடற்­ப­டையின் விசேட உளவுப் பிரிவின் கட்­டுப்­பாட்டில் கொழும்­பிலும் திரு­கோ­ன­ம­லை­யிலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான ஆத­ரங்கள் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அப்­போது திரு­மலை மற்றும் கொழும்பு முகாம்­களில் கட­மை­யாற்­றிய பல்­வேறு நிலை அதி­கா­ரி­களும் புல­னாய்வுப் பிரி­வுக்கு சாட்­சியம் அளித்­துள்­ளனர்.

அதன்­படி குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் குறித்த விசேட உளவுப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த அப்­போ­தைய கடற்­படை ஊடகப் பேச்­சா­ளரும் தற்­போ­தைய கடற்­படை கமாண்டோ தர அதி­கா­ரி­யு­மான டி.கே.பி. தச­நா­யக்க இக்­குற்­றங்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்து உதவி ஒத்­தாசை புரிந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. அதன்­படி இக்­க­டத்­தல்கள் மற்றும் காணாமல் போகச் செய்­யப்­பட்­டமை உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்கு அவரும் பொறுப்புக் கூற வேண்டும் என புல­னாய்வுப் பிரி­வினர் கோட்டை நீதி­வா­னிடம் அறிக்கை ஒன்­றி­னையும் சாட்சிப் பட்­டி­ய­லுடன் சமர்­ப்பித்­தி­ருந்­தனர்.

இத­னை­விட குறிப்­பாக திரு­மலை கடற்­படை முகாமில் உள்ள நிலத்­தடி சித்­தி­ர­வதை கூட­மான கன்சைட் எனும் முகாமில் கடத்­தப்­பட்ட பலர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களை புல­னாய்வுப் பிரி­வினர் சேக­ரித்­துள்­ளனர். இந்­நி­லையில் கடத்­தப்­பட்­ட­வர்கள் இன்­று­வரை எங்கு உள்­ளார்கள் என்­பது தெளி­வாக தெரி­யாத நிலையில், பல தட­வைகள் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளிடம் கப்பம் பெறப்­பட்­டுள்­ளன. தொலை­பேசி வலை­ய­மைப்பு ஆதா­ரங்­களின் பிர­காரம் அண்­ணாச்சி எனும் பெயரில் கடற்­ப­டையின் பிர­தான கப்பம் வசூ­லிப்­பாளர் வலம் வந்­துள்­ள­மையும் அத­னூ­டாக பல­ரிடம் கப்பம் கோரப்­பட்­டுள்­ள­மையும் உறு­தி­யா­கி­றது. குறிப்­பாக நாரம்­மல -கட­ஹ­பொல பகு­தியில் வைத்தும் திரு­கோ­ண­ம­லையில் வைத்தும் கப்பம் பெறப்­பட்­டுள்­ள­மைக்­கான அனைத்து சான்­று­களும் உள்­ளன. இத­னை­விட கடத்­தப்­பட்­ட­வர்கள் திரு­ம­லையில் உள்ள கன்சைட் நிலத்­தடி சிறைக்­கூ­டத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மை­கான 10 கண் கண்ட சாட்­சிகள் உள்­ளன.

அதன்­படி இந்த கடத்­தல்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் யார் என்­பது ஒன்றும் இர­க­சியம் இல்லை. சாட்­சி­களின் அடிப்­ப­டையில் மிகத் தெளி­வாக அவர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­னா­கொ­டவின் முறைப்­பாட்டு மீதான விசா­ர­ணையில் இந்த கடத்­தல்கள் அம்­ப­லத்­துக்கு வந்­தி­ருந்த போதும், இந்த சட்ட விரோத சம்­ப­வத்­துக்கு அவரும் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் அவரும் இந்த கடத்­தல்­களை அறிந்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் கடத்­தப்­பட்­ட­வர்கள் இது­வரை விடு­விக்­கப்­ப­டாத நிலையில் அதற்கு வசந்த கரண்­னா­கொட கண்­டிப்­பாக பொறுப்புக் கூற வேண்டும்.

கடத்­தப்­பட்ட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த ரஜீவ் நாக­நாதன் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விடு­விப்பு முயற்­சிகள் ஊடாக வசந்த கரண்­னா­கொட இதனை அறிந்­தி­ருந்தார் என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது. எனினும் இன்று வரை ரஜீவ் நாக­நாதன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. எங்கு இருக்­கின்றார் என்ற தக­வலும் இல்லை. இதே நிலைமை தான் ரஜீவ் உடன் சேர்த்து கடத்­தப்­பட்ட ஏனை­யோரின் நிலையும்.

திரு­ம­லையில் ரஜீவ் உட்­பட்­ட­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை அப்­போ­தைய கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட அறிந்­தி­ருந்தார் என்­ப­துக்கு ஆத­ர­மாக அவ­ருக்கு நீரியல் வளத்­துறை அமைச்சின் கடி­தத்­த­லையில் அனுப்­பட்ட தொலை­நகல் ஆதா­ரத்தை விட வேறு எதுவும் தேவைப்­ப­டாது. மேல­திக ஆதாரம் தேவைப்­படும் இடத்து, பீலிக்ஸ் பெரேரா, அவ­ரது செய­லா­ளர்­களில் ஒரு­வ­ராக செயற்­பட்ட முன்னாள் கடற்­படை அதி­காரி உள்­ளிட்ட நேரடி சாட்­சி­க­ளையும் முன்­வைக்க முடியும்

இத­னை­விட இந்த 11 பேரின் கடத்தல் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் இடையே மேலும் இரு தமி­ழர்­களின் கடத்தல் தொடர்­பி­லான தக­வலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

கொட்­டாஞ்­சே­னையில் கடந்த 2009ஆம் ஆண்டு கடத்­தப்­பட்டு காணாமல் போகச்­செய்­யப்­பட்ட வடிவேல் பக்­கி­ளி­சாமி லோக­நாதன், இரத்­ன­சாமி பர­மா­னந்தன் ஆகி­யோரே அவர்­க­ளாவர். இவர்கள் பய­ணித்த வேன், அவர்­க­ளது உட­மைகள் கொள்­ளை­யி­டப்­பட்டு அவர்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் கூறு­கின்­றனர்.

ஒட்டு மொத்­த­மாக தேடிப்­பார்க்கும் போது இந்த அனைத்து கடத்­தல்­களும் கடற்­ப­டையின் விசேட புல­னாய்வுப் பிரிவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இவர்கள் எவரும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளு­டனோ குற்றச் செயல்­க­ளு­டனோ தொடர்­பு­பட்­ட­வர்கள் அல்லர். அப்­ப­டி­யாயின் அவர்கள் அப்­பா­விகள். அப்­பா­வி­களை கடற்­படை புல­னாய்­வுத்­துறை கடத்தி காணாமல் போகச் செய்­துள்­ளது. அல்­லது கொலை செய்­துள்­ளது. கப்பம் பெற்­றுள்­ளது. அப்­ப­டி­யானால் கடற்­ப­டையின் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த அத்­மிரால் குறு­கேயும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். தனக்கு கீழ் இருந்த பிரிவில் இடம்­பெற்ற சட்ட விரோத நட­வ­டிக்கை தனக்கு தெரி­யாது என அவர் கூறவே முடி­யாது.

இதனை விட விசேட புல­னாய்வுப் பிரிவின் மற்­றொரு உயர் பத­வியை வகித்த முன்னாள் கடற்­படை பேச்­சாளர் தச­நா­யக்­கவின் பங்­க­ளிப்பு குறித்தும் யோசிக்க வேண்­டி­யுள்­ளது. திரு­ம­லையில் இருந்த கன்சைட் நிலத்­தடி சித்­தி­ர­வதைக் கூடம் கொமாண்டர் ரண­சிங்­கவின் கட்­டுப்­பாட்டில் இருந்த போதும் ரண­சிங்­க­வுக்கு கட்­ட­ளை­யிடும் நிலையில் இருந்து செயற்­பட்­டவர் தஸ­நா­யக்­கவே.

அத்­துடன் கன்­சைட்­டுக்குள் முன் அனு­மதி இன்றி வந்து செல்லும் அதி­கா­ரமும் தச­நா­யக்­க­வி­டமே இருந்த நிலையில் தச­நா­யக்க இக்­க­டத்­தல்கள் தடுத்து வைப்­புக்கள் தொடர்பில் அறிந்­தி­ருக்­க­வில்லை என யாரும் கூறு­வார்­க­ளாயின் அது வேடிக்­கை­யா­னதே. எது எப்­ப­டியோ, இந்த விவ­கா­ரங்கள் இரு வேறு வழக்­கு­க­ளாக தற்­போது இடம்­பெ­று­கின்­றன. 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் வேறா­கவும் கொட்­டாஞ்­சேனை கடத்­தல்கள் வேறா­கவும் இடம்­பெ­று­கின்­றன. கொட்­டாஞ்­சேனை கடத்­தல்கள் தொடர்பில் லெப்­டினன் கொமாண்டர் தம்­மிக அனில் மாப்பா எனும் அதி­காரி கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அது தொடர்பில் தக­வல்­களை அறிந்­தி­ருந்த உடந்­தை­யாக இருந்த அத்­மிரால் குறுகே, கடற்­படை கெப்டன் தயா­நந்த ஆகியோர் கைது செய்­யப்­பட வேண்­டியோர் பட்­டி­யலில் உள்­ளனர்.

11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில் கன்சைட் நிலத்­தடி முகா­முக்கு பொறுப்­பாக இருந்த கொமாண்டர் ரண­சிங்க, கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட பிர­தான கடற்­படை சிப்பாய் லக் ஷ்மன் உதய குமார ஆகி­யோ­ருடன் கடத்­தலின் சூத்­தி­ர­தாரி லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க ஆகியோர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

எனினும் இந்த வெள்ளை வேன் கடத்­தல்கள் மமற்றும் கப்பம் கோரலின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்த லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி இது­வரை கைதா­க­வில்லை. அவ­ரோடு சேர்த்து இச்­சம்­ப­வத்­துக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தச­நா­யக்க, கரண்­னா­கொட உள்­ளிட்ட எவரும் கைதா­க­வில்லை. இதன்பால் அவ­தானம் செலுத்தும் போது பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதி தொடர்பில் யோசிக்க வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் விசா­ர­ணை­யா­ளர்கள் மிகத் தெளி­வான ஆதா­ரங்­க­ளுடன் சந்­தேக நபர்­க­ளையும் பொறுப்புக் கூற வேண்­டி­யோ­ரையும் வெளிப்­ப­டுத்தும் நிலையில் அவர்­க­ளுக்கு பல்­வேறு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரத்தில் உள்ள அர­சியல் மட்­டத்தில் இருந்து இந்த இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­விட விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டிய தற்­போ­தைய கடற்­படை தள­பதி வைஸ் அட்மிரல் ரவி விஜே­கு­ண­வர்­தன குற்­ற­வா­ளி­களைப் பாது­காக்கும் முக­மாக விசா­ர­ணை­க­ளுக்கு எந்­த­வொரு ஒத்­து­ழைப்­பையும் வழங்­காமல் உள்ளார். புல­னாய்வுப் பிரி­வினர் கடற்­ப­டை­யி­னரை விசா­ர­ணைக்கு அழைக்கும் போது அவர்­களை அங்கு செல்ல விடாமல் கடற்­படை தள­பதி தடை­யேற்­ப­டுத்­து­கிறார்.

இது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நீதி­மன்­றுக்கும் கூட அறிக்கை இடப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் தலை­மை­யகம் செல்லும் ஒரு அர­சி­யல்­வாதி, விசா­ரணை அதி­கா­ரி­களை அச்­சு­றுத்தும் வித­மாக, இந்த விசா­ர­ணை­களின் ரக­சி­யங்­களை கோரும் போது விசா­ரணை மீதான பாரிய அழுத்­த­மா­கவே அதனை நோக்க வேண்­டி­யுள்­ளது. தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மலிக் ஜய­தி­லக பொலிஸ் தலை­மை­யகம் சென்று ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாக தம்மைக் காட்டிக் கொண்டு இந்த விவ­காரம் தொடர்பில் தலை­யீடு செய்­வது உன்­மையில் பாரிய சிக்­கலை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

இத­னை­விட பொலிஸ் தலை­மை­யக உள்­ளக தக­வல்­களின் பிர­காரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவே, விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கடற்­படை உய­ர­தி­கா­ரி­க­ளையும் ஜனா­தி­பதி செய­லகம் அழைத்து, இந்த விசா­ர­ணைகள் தொடர்பில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். கடற்­படை வீரர்­களை பாது­காப்­பதே அந்த கலந்­து­ரை­யா­டலின் முழு நோக்­காக இருந்­த­தாக கலந்­து­ கொண்ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். எனினும் விசா­ர­ணை­யா­ளர்கள் தமது விசா­ர­ணையில் உறு­தி­யாக இருந்­துள்­ளனர். நல்­லாட்சி எனும் போர்­வையில் பத­விக்கு வந்த ஜனா­தி­பதி ஒருவர் இவ்­வாறு செயற்­ப­டு­வா­ராயின் அது அவ­ரது செயற்­பா­டுகள் தொடர்­பிலும் மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்­ப­திலும் பாரிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்த வல்­லது. இவ்­வா­றான தலை­யீ­டுகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அனுர குமார திசா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்­தி­லேயே கடந்த வாரம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார் என்­ப­தையும் இந்த இடத்தில் நினைவு கூரு­கின்றோம்.

இது இவ்­வா­றி­ருக்க இந்த கடத்­தல்­களின் பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் ஒரு­வ­ரான லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­யா­ரச்சி இன்று வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை. அவரைக் கைது செய்ய தெளி­வான நீதி­மன்ற உத்­தரவு இருந்தும் அவர் கைதா­க­வில்லை. ரவிராஜ் படு­கொலை விவ­கா­ரத்தில் விடு­த­லை­யான அவர், மீள கடற்­ப­டையில் சேவையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டார். எனினும் அவர் தற்­போது கடற்­ப­டையில் உள்­ளாரா எங்கு உள்ளார் என்­பது கடற்­படை தள­ப­திக்கு கூட தெரி­யாதாம்.

கேசரி இது தொடர்பில் செய்த விசா­ர­ணை­களில் ஹெட்­டி­யா­ரச்சி போன்ற சந்­தேக நபர்கள் நாட்டில் இருந்துள்ளாரா எங்கு உள்ளார் என்பது கடற்படை தளபதிக்கு கூட தெரியாதாம்.

கேசரி இது தொடர்பில் செய்த விசாரணைகளில் ஹெட்டியாரச்சி போன்ற சந்தேக நபர்கள் நாட்டில் இருந்து சூட்சுமமாக தப்பிச் செல்ல கடற்படையின் உள்ளேயே உதவி ஒத்தாசைகள் செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் அந்த தகவலை உறுதி செய்ய நாம் தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம்.

குறிப்­பாக ஹெட்­டி­யா­ரச்­சியை கைது செய்ய விடாமல் தடுக்கும் காரணி அல்­லது அவரை பாது­காத்து வைத்­தி­ருப்போர் யார் என தனி­யாக விசா­ரணை செய்­யப்­படல் வேண்டும். குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் கரங்­களை உடைக்க வேண்டும். அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை அவ­சி­ய­மாகும். இல்­லாத விடத்து அது விசா­ர­ணை­க­ளுக்கும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் பாரிய சவா­லையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்த வல்லது.

 

'இரா­ணு­வத்­தினர் கொலை­யா­ளி­க­ளாக இருக்க முடி­யாது. கொலை­யா­ளிகள், குற்­ற­வா­வா­ளிகள் இரா­ணு­வத்­தி­னர்­க­ளாக இருக்க முடி­யாது.' எனவே அப்­பாவி பொது மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க கடற்­படை தள­பதி உள்­ளிட்ட எந்த தள­ப­தியும் இடை­யூ­றாக இருக்க கூடாது. அவ்­வாறு இடை­யூறு ஏற்­ப­டுத்­தினால் அவர்­களும் கைது செய்­யப்­படல் வேண்டும். குறிப்­பாக இந்த விசா­ர­ணை­களை சுதந்­தி­ர­மாக செய்ய புல­னாய்வுப் பிரி­வுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்டும். ஜனா­தி­பதி உள்­ளிட்ட எவரும் எவ­ரையும் காப்­பாற்றும் வித­மாக இதில் தலை­யீடு செய்யக் கூடாது என்­பதே அனை­வ­ரதும் எதிர்ப்­பார்ப்­பாகும். பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கிடைக்கும் வரை கேசரி தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-08#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.