Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

Featured Replies

டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

 

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 28-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
 
டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்
 
புதுடெல்லி:
 
விவசாயிகள் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 28-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மொட்டை அடித்து உள்ளிட்ட பல்வேறு நூதன போராட்டங்களை தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். 
 
201704101310152093_Farmers2._L_styvpf.gi
 
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் அலுகத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆடைகளை களைந்து போராட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
 
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “பிரதமர் எங்களை பார்க்காததால் ஆடையின்றி போராட்டம். இதுவரை பிரதமர் எங்களை சந்திக்காததால் எங்களுக்கு வேறு வழியில்லை. பிரதமரை சந்திக்க வைப்பதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தான் எங்களது நிலைமை” என்று கூறினார்.
 
பிரதமர் அலுவலகம் முன்பாக திடீரென தமிழக விவசாயிகள் நிர்வாணமாக ஓட ஆரம்பித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
 
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி முன்பு போராடிய போது பிரதமரை சந்திக்க வைப்பதாக டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளிடம் கூறியதாக தெரிகிறது. அதற்பின் இன்று தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் பிரதமர் அலுவலகம் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
201704101310152093_Farmers3._L_styvpf.gi
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10131014/1079140/TN-Farmers-has-done-Nudity-protest-in-front-of-PM.vpf

  • தொடங்கியவர்
 

“தமிழக முதல்வரே... நீங்களும் விவசாயிதானே... அந்த அம்மணம் உங்களைப் பாதிக்கவில்லையா!?” - எளியவனின் கடிதம்

எடப்பாடி பழனிசாமி

ரியாதைக்குரிய முதல்வர் கே. பழனிசாமி அவர்களுக்கு,

இப்போதுதான் நான் அருங்காட்சியகம் சென்று திரும்பினேன். அந்த அருங்காட்சியகத்தை உன்னோடு சேர்ந்து ரசிக்க விரும்பினேன் தெரியுமா...? அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அழகான ஓவியத்தை தனியனாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது உன்னை நினைத்து நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா..? ஒருநாள் நாம் இருவரும் ஒன்றாகச் செல்லவேண்டும். சொர்க்கத்துகே சென்றாலும் பிரியமானவர்கள் துணை இல்லை என்றால் வெறுமையாகத்தான் இருக்கும் என்பதை இன்று உணர்ந்தேன். 

அன்பு முத்தங்கள்...!

அய்யோ பதறாதீர்கள், திருவாளர் முதல்வர் அவர்களே... இது உங்களுக்கான வார்த்தைகள் அல்ல. இது காதல் ததும்ப ததும்பக் கலீல் ஜிப்ரான் மேரிக்கு எழுதிய கடிதம். இது மாதிரியான காதலை... காதல் கடிதங்களைத்தான் என் தலைமுறை தங்களின் பிரியமானவர்களுக்கு எழுத விரும்புகிறது. காதலில் லயிக்க விரும்புகிறது. நானும்தான் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களே. 
மஞ்சள் சூரியன் மெல்ல மறையும் ஒரு மாலைப்பொழுதில், வெம்மை அடங்கிய கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டு என் பிரியமான மனைவிக்கும், மகளுக்கும்... இதுபோன்ற எழுத்துகளில் என் காதலைக் கடத்த விரும்புகிறேன். ஆனால், அப்படியாகவா தமிழகச் சூழல் இருக்கிறது....? இன்னும் கொச்சையாக கோவை சரளாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்..."எங்கள் கிரகம்...உங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம்”. சரி... வர்ணனைகளை விடுத்து விஷயத்துக்கு வருகிறேன். 

“திரு.பழனிசாமி என்னும் பண்ணையார்” 

எடப்பாடி பழனிசாமிசோம்பல் உடுத்தியிருக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமை... ஏதோ ஒரு விஷயத்தை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக தேர்தலின்போது, நீங்கள் தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்திருந்த பிரமாணப் பத்திரத்தைப் படிக்க நேர்ந்தது. மடிக்கணினியில் கீழ்நோக்கி இருக்கும் அம்புக்குறியை அழுத்திக் கொண்டே வரும்போது, 17-வது பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயத்தைப் பார்த்தேன். அது உங்கள் தொழில் மற்றும் வேலை குறித்த விவரங்களைப் பதிந்திருந்தீர்கள்.. பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து ஓராண்டு ஆகிவிட்டது. இப்போது நீங்கள் முதல்வராக வேறு ஆகிவிட்டீர்கள். நீங்கள் அதில் என்ன தாக்கல் செய்திருந்தீர்கள் என கொஞ்சம் நினைவூட்டவா...? 

உங்களது தொழிலாக நீங்கள் விவசாயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பின், அந்த பிரமாணப் பத்திரத்தில் தேடியபோது உங்களுக்குப் பூர்வீகச் சொத்தாக 15.65 ஏக்கர் இருக்கிறது என்பதை அறிந்தேன். இதைஅறிந்த பின் கொஞ்சம் பதறித்தான் போனேன் திரு. பழனிசாமி. ஏன் பதற்றம் என்று சொல்கிறேன்.

அந்த நிலத்தை நீங்கள் வாங்கவில்லை...அது உங்கள் பூர்வீகச் சொத்து. 15 ஏக்கர் என்பதை வேலி அளவில் கணக்கிட்டால் 2 வேலி நிலம்... எங்கள் டெல்டா சொலவடையில் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பாட்டனும், பூட்டனும் சிறு பண்ணையார்களாக இருந்துள்ளனர். என்னதான் பண்ணையார்களாக இருந்தாலும், அவர்களுக்கு விவசாய முறைகளும். அதன் வலிகளும் கொஞ்சமேனும் தெரிந்திருக்கும், அது ஜீன்களாக உங்களுக்கும் கடத்தப்பட்டிருக்கும். கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் அறிவியல். ஆனால், பழனிசாமி என்னும் பண்ணையார் எப்படி இந்த அறிவியலுக்கு முரணாக நிற்கிறார் என்பதால் ஏற்பட்ட பதற்றம் அது. 


உங்களின் மரபணுக்களில் கொஞ்சமேனும் அந்த விவசாயத்தின் வலிகள் உங்கள் மூதாதையர்களிடமிருந்து கடத்தப்பட்டிருக்குமானால், டெல்லியில், தஞ்சாவூரில் நம் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் போது... டெல்லியில் நம் விவசாயிகள் ஆடை துறந்தபோது... நீங்கள் வெகுவாகப் பதறியிருப்பீர்கள்...துடித்துப் போயிருப்பீர்கள்...? அடுத்த விமானம் பிடித்து டெல்லி போயிருப்பீர்கள். ஆனால், நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால்தான், நீங்கள் அறிவியலுக்கு சவாலாக இருக்கிறீர்கள் என்கிறேன்.

“சவாலாக எல்லாம் இல்லை... பணம் வந்தபின் என் நினைவுகளிலிருந்து விவசாயத்தை உதிர்த்து விட்டேன்”  என்கிறீர்களா? அப்படியானால், அது உங்களுக்கே பேராபத்துதான் திரு. பழனிசாமி. ஆம், பணத்துக்காக எல்லாவற்றையும் உதிர்த்துக் கொண்டே சென்றால்...நாளை உங்கள் நினைவுகளில் அசைபோட அன்பான, அழகான விஷயங்கள் எதுவும் இல்லாமல் அம்மணமாகத்தான் நிற்கும். உடல் அம்மணத்தைவிட, நினைவுகளின் அம்மணம் உங்களை கூனிக் குறுகிப்போகச் செய்யும்!

“நீங்கள் எல்லாருக்குமான முதல்வர்”

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பல தற்செயலான விஷயங்கள் நடக்கின்றன. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை? ஆனால், இந்திய அரசியலமைப்பின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், நீங்கள் முதல்வர் ஆனதை தற்செயல் விஷயமாக நினைக்கவில்லை. அது பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்கிறதோ... இல்லையோ... ஆனால், அது சட்டப்படி நடந்த ஒன்றுதான். ஆக, நீங்கள் எங்கள் எல்லோருக்குமான முதல்வர். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நானும் சரி... டெல்லியில் அம்மணமாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளும் சரி... உங்கள் ஆளுகையின் கீழ்தான் வாழ்கிறோம். எங்கள் பிரச்னைகளை உங்களிடம்தான் முறையிட்டாக வேண்டும். 

அதனால்தான் கேட்கிறேன், தயவு செய்து ஆர்கே நகர் நினைவுகளில் இருந்து வெளியேவந்து கொஞ்சம் சமூகத்தை எட்டிப் பாருங்கள். பதற்றம் வேண்டாம்... தேர்தல் தள்ளிப்போய்விட்டது, தினகரன் ஏதும் தொந்தரவு செய்ய மாட்டார்... நீங்கள்தான் முதல்வராகத் தொடரப் போகிறீர்கள். எப்படி நீங்கள்தான் முதல்வர் என்பதை நாங்கள் நம்புகிறோமோ... அதைக் கொஞ்சம் நீங்களும் நம்புங்கள் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே.

எடப்பாடி பழனிசாமி

நீங்கள் வேண்டுமானால், உங்கள் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம்... இப்போதும் உங்களது பூர்வீக நிலம் இருக்கும் நெடுங்குளம் கிராமத்திலிருந்து உங்களுக்கு அரிசி வரலாம். ஆனால், எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அப்படியல்ல... நாங்கள் இன்னும் சொந்தமாக ஒரு சதுரடி நிலம்கூட இல்லாமல்தான் வாழ்கிறோம். பகட்டான மொழியில் அழைக்கப்படும் Square Feet Farming செய்வதற்கும் எங்களுக்கு நேரமில்லை... எங்கள் பகுதியான தஞ்சையில் எளிய உழவர்கள் உற்பத்தி செய்யும் உணவைத்தான் நான் இன்னமும் சாப்பிடுகிறேன். அந்த விவசாயிகள் தஞ்சையிலும், டெல்லியிலும் போராடிக் கொண்டிருக்கும்போது, நான் எப்படி சந்தோஷமாக உணவு உண்ண முடியும்?

அந்த சுயநலத்தாலும்தான் கேட்கிறேன்... தயவு செய்து தஞ்சைக்கும், டெல்லிக்கும் பயணித்து, விவசாயிகளுடன் உரையாடி, இந்த அரசு உங்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையை விதையுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்யுங்கள். 

ஏதேனும் கடுமையான மொழியை நான் பயன்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் முதல்வர் அவர்களே.  நீங்கள் எங்களுக்கான முதல்வர் என்ற உரிமையில் பேசி விட்டேன். 

இப்படிக்கு,
என்றாவது நீங்கள் நல்லாட்சி செய்வீர்கள்
என்று நம்பும் எளிய மனிதன்

http://www.vikatan.com/news/coverstory/86065-an-open-letter-to-tn-chief-minister-edappadi-k-palaniswami.html

  • தொடங்கியவர்

அம்மணம்... இரங்காத அம் மனம் - கண்டுகொள்ளாத மோடி அலுவலகம்

“மனுசங்கடா... நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா... நாங்க மனுசங்கடா!
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க
இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா -
மனுசங்கடா... நாங்க மனுசங்கடா!”


கவிஞர் இன்குலாப்பின் வரிகள், விவசாயிகளின் தற்போதைய பிரச்னைக்கும், டெல்லி போராட்டத்துக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

p6.jpg

டெல்லி ஜந்தர் மந்தரில் மண்டை ஓடுகளுடன் தொடங்கிய விவசாயிகள் போராட்டம், ஒரு மாதமாக பல்வேறு விதமாகப் பரிணமித்து, இன்று அம்மணப் போராட்டமாக வந்து நிற்கிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழிலைச் செய்வோர், நிர்வாணமாக நின்று நீதி கேட்கிறார்கள். தமிழகத்துக்கு வந்திருந்தபோது, இங்கிருக்கும் ஏழைகளின் துயரைப் பார்த்து மகாத்மா காந்தி அரை நிர்வாணக் கோலத்துக்கு மாறினார் என்பார்கள். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், முழு நிர்வாணமாகத்தான் திரிந்திருப்பார். அவ்வளவு மோசமாக இருக்கிறது நம் விவசாயிகளின் நிலைமை.

‘நிலமும் பொழுதும்தான் முதற்பொருள்’ என்கிறது தொல்காப்பியம். கண்முன்னால் அந்த நிலமும் பொழுதும் பொய்த்துக்கொண்டிருப்பதை எப்படி ஒரு விவசாயியால் பொறுத்துக்கொள்ள முடியும்? முடியாமல்தான் பலரும் அந்த நிலத்தில் விழுந்து இறந்தார்கள். இது பொறுக்காமல் சிலர், தலைநகரில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் என்னவெல்லாமோ செய்துபார்த்தும் எதுவும் முடியாமல் நிர்வாணப் போராட்டம் வரை வந்துவிட்டனர்.

 விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லிக் கோரிக்கை வைத்தால், “தேசத்தின் ‘பேலன்ஸ் ஷீட்’ சிதைந்துவிடும்” என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல். ஆனால், இவர்களில் யாருமே பெருநிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரிகள் ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படுவதைக் குறித்து வாய் திறப்பதே இல்லை. இதுகுறித்து யாரேனும் அழுத்தமாகக் கேள்வி எழுப்பினால், “உள்நாட்டு உற்பத்தியில் பெரும் நிறுவனங்கள் பெரும்பங்காற்றி இருக்கின்றன” என்று கதை அளப்பார்கள். ஆனால், தேசத்தின் வளர்ச்சிக்கு விவசாயம் பங்காற்றியது குறித்துப் பேச மறுப்பார்கள்.

p6a.jpg

மறைந்த விவசாய சங்கத் தலைவர் சிவசாமியுடன் சில ஆண்டுகளுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்தபோது, “சாலைகளை வளர்ச்சி என்கிறார்கள், பெருங்கட்டடங்களை வளர்ச்சி என்கிறார்கள். ஆனால், விவசாய உற்பத்தி, வளர்ச்சியாகப் பொது புத்தியில் பதிய ஏன் மறுக்கிறது? சாமன்ய மக்களைக் குற்றம் சொல்லவில்லை. அரசுகள் அந்த அளவுக்குத் திட்டமிட்டு செயல்படுகின்றன” என்றார். இவை சத்தியமான வார்த்தைகள்.

 ஜந்தர் மந்தரில் போராடும் விவசாயிகளிடம் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம், நதிகள் இணைப்பு எனப் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இந்தக் கோரிக்கைகளை எல்லாம் கடந்து, அவர்கள் அறிய விரும்பியது... இந்த அரசு தங்களை மதிக்கிறதா என்பதைத்தான். ஆம், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசியபோது அவர்கள் இவ்வாறாகச் சொன்னார்கள்... “கடன், தற்கொலை என்று தமிழக விவசாயி சிக்கித் தவிக்கிறான். முழுவதுமாக நம்பிக்கை வற்றிய பின்னர்தான், டெல்லிக்கு வந்தோம். எங்கள் போராட்டம் தொடங்கிய ஓரிரு நாள்களில் மத்திய அமைச்சர்கள் எங்களைச் சந்தித்துப் பேசுவார்கள்; பிரதமர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்கள் குறைகளைக் கேட்பார்; எங்கள் வலிகளுக்கு எல்லாம் மருந்திடுவார்; ‘உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையைத் தருவார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எங்கள் நம்பிக்கை சிதைந்துவிட்டது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பி.ஜே.பி., எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நம்பிக்கை தரும் அரசு இல்லாமல் நிர்வாணமாக உணர்கிறோம்” என்றனர். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் இந்த அம்மணப் போராட்டம்.

 நாடாளுமன்றத்தின் எதிரில் நின்று நம் குடியானவர்கள் தங்கள் ஆடைகளைத் துறப்பது, அவர்களின் அவமானம் அல்ல... நிச்சயம் அது தேசிய அவமானம்!

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

 

நிர்வாணமாய் நிற்கும் மத்திய அரசு

  • தொடங்கியவர்

 

டெல்லியில் தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டம்....நேரலை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.