Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்''

Featured Replies

''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்''

நா. யோகேந்திரநாதன்-

அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மிகப் பெரும் அமைச்சரவையாக 107 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மந்திரிசபை உருவாக்கப்பட்டுள்ளது அதாவது ஐக்கிய தேசியக்கட்சியின் அதிருப்தியாளர்களுக்கு மந்திரிப்பதவிகள் கிடைக்க அரசாங்கத்திற்கு பாராளுமன்றப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இது தேசிய ரீதியில் ஏற்படுத்திய தாக்கம். ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகியது. இன்னும் சொல்லப்போனாலஇ; தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரு பெரும் கட்சிகளும் இணைக்கப்பாட்டிற்கு வருவது என சர்வதேசத்திற்குக் காட்டப்பட்டு வந்த வெள்ளையானை தானாகவே மரணமடைந்து விட்டது. இரு தரப்புக்களையும் ஏதோ ஒரு தீர்மானத்திற்குக் கொண்டு வந்து அப்படியான ஒரு தீர்மானத்தை தமிழ் மக்கள் மேல் வலிந்து திணிப்பது என சில சக்திகள் கண்டகனவும் நொருக்கப்பட்டுவிட்டது.

அதே வேளையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் அதன் கூட்டமைப்புக்கள்ளும் பெரும் பூகம்பமே வெடித்துவிட்டது. மூத்த அமைச்சர்களான மங்கள சமரவீரஇ அனுராபண்டாரநாயக்கா சிறிபதி சூரியாராச்சி போன்றோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டு விட்டனர். இதே வேளையில் தமது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை வைத்து சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மிரட்டி வந்த ஜே.வி.பி இன்று செல்லாக்காசாகி தெருவுக்கு வந்துவிட்டது. இரண்டு லட்சம் பிரசுரங்களை வெளியிட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்க வேண்டிய அளவுக்கு அவர் இப்போது மீண்டும் இவ்வாறான போராட்டங்களை நடத்தியே நமது நிலையைத் தக்க வைக்குமளவுக்கு அவர்கள் அதிகாரபலம் செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இப்போது மீண்டும் போராட்டங்களை நடத்தியே தமது நிலையைத் தக்க வைக்குமளவுக்கு அவர்கள் பரிதாபகரமான நிலைக்குரியவர்களாகி விட்டனர் அதே வேளையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மேற்குலக நாடுகளின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக விளங்கி வந்தவர். இன்று ஐக்கிய தேசியக்கட்சியினர் பலர் அதிலிருந்து வெளியேறிவிட்ட காரணத்தால் இன்று அவர் பாராளுமன்றத்திலோஇ வெளியிலோ பலங்குன்றியவராக மாறிவிட்டார். இப்படியான ஒரு நிலையில் மேற்குலகம் திரு. ரணில் விக்கிரமசிங்காவை நம்பிக்கைகுரிய இன்னெருவரான மிலிந்த மொறகொட அரசின் பக்கம் இணைந்த நிலை ரணிலின் மேற்குலகச் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சொல்லிவிட முடியாது.

ஒட்டு மொத்தத்தில் 107 பேரைக் கொண்ட அமைச்சரவையின் உருவாக்கம் பல திசைகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள் சந்திரிகா அணியினர்இ ஜே.வி.பி யினர்இ ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்க்pரமசிங்க எனப் பல்வேறு தரப்பினரிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா அணியினர் ரணில்விக்கிரம சிங்காவும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோர் இப்படியான வீழ்ச்சிகளை கடந்த காலங்களில் சுமந்தவர்கள் தான். ஆனால் சுதாகரித்து அவர்கள் மீண்டும் பழைய நிலைமையை அடைந்ததுண்டு. அவர்களின் அரசியலில் வீழ்ச்சியும் எழுச்சியும் மாறி மாறி ஏற்படுவது சாதாரணமானது.

ஆனால் ஜே.வி.பி அரசியல் அப்படிப்பட்டது என்று சொல்லிவிட முடியாது. இவர்களின் வீழ்ச்சியோ அல்லது எழுச்சியோ இலகுவான தாகவோ இழப்புகள் இல்லாதவையாகவோ குறுகிய இடைவெளிகளைக் கொண்டதாகவோ இருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப்போவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

ஜே.வி.பி தன்னை ஒரு புரட்சிகர அமைப்பாக இனம் காட்டி ஆயுதப் போராட்டதின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற இலட்சியத்துடன் சறீலங்காவின் அரசியலில் களமிறங்கியது. இவ்வடிப்படையில் இவர்களால் 1971ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆயதப் புரட்சி தேல்வியில் முடிந்தது மட்டுமன்றி ஜே.வி.பியின் மூலவேரையே ஆட்டம்கான வைத்தது. ஏறக்குறைய ஒரு சில நாட்களுக்குள் இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் இப் புரட்சியின் போது கொல்லப்பட்டனர் இதன் காரணமாக ஒரு போராடும் தலைமுறையின் கணிசமான பகுதி அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜயவீர உட்பட பல தலைவர்கள் சிறையிலிடப்பட்ட நிலையிலும் இன்னும் பலர் கொல்லப்பட்டநிலையிலும் ஜே.வி.பி செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் 1977 ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்;தனா ஜே.வி.பியை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதாக கூறி ஜே.வி.பி தலைவர்களை விடுதலை செய்தார். ரோஹண விஜயவீர ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் 1987இ1988 காலப்பகுதியில் மீண்டும் ஒரு ஆயதப் போராட்ட முயற்சியில் இறங்கி எழுபதினாயிரம் இளைஞர்களை ஜே.வி.பி பலி கொடுத்தது. இந்த இரு காலகட்டங்களிலும் இவர்களின் எழுச்சி பிரமிக்கதக்கதாகவும் வீழ்ச்சி இலகுவில் தலை நிமிர முடியாததாகவுமே இருந்தது.

எனவேஇ இவர்கள் நீண்ட உறக்கத்தின் பின்பு தாங்கள் மீண்டும் ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி விட்டதாகக் கூறிக் கொண்டுஇ 1995ல் பராளுமன்ற அரசியலில் இறங்கினர். எனினும்இ இவர்களால் இவர்களால் சிறீலங்கா அரசியலில் ஒரு காத்திரமான பாத்திரத்தை வகிக்க முடியவில்லை. ஆனால்இ 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படத்திக் கொண்டதன் மூலம் இவர்கள் பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைப் பெற்று சிறீலங்கா அரசியலில் இவர்கள் தம்மை மூன்றாவது சக்தியாக அமைத்துக் கொண்டனா.; அது மட்டுமன்றி அமைச்சரவையிலும் அங்கம் வகித்து அரசாட்சியிலும் பங்காளிகளாகிக் கொண்டனர். இந்த மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மங்கள சமரவீரஇ அனுரா பண்டாரநாயக்கா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டத்தில் ஜே.வி.பி ஒரு கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பதைவிட சிறீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பல வீனப்படுத்தி சிறீலங்காவின் இரண்டாவது அரசியல் சக்தியாகத் தன்னை உருவாக்குவதிலேயே அதிக அக்கறை செலுத்தியது. இவ்விஷயத்தில் திருமதி சந்திரிகாவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே உருவான முரண்பாடுகளை நன்றாகவே பயன்படுத்தியது. இதை மிக நன்றாகவே கணக்கிட்டுக்கொண்ட சந்திரிகா ஜே.வி.பியின் மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்தார். மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்புக்குள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது எனக் கண்டு கொண்ட ஜே.வி.பி தருணம் பார்த்திருந்து சுனாமி நிவாரண பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படுவதைக் காரணம் காட்டி அரசைவிட்டு வெளியேறியது. அவர்கள் ஏற்கனவே தூக்கிப்பிடித்த தங்கள் இனவாத அரசியலை மேலும் மெருகுபடுத்தி சிங்கள மக்களின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அடுத்த கட்டமாக சந்திரிகா அம்மையாரிடம் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற முடியாத ஜே.வி.பி யினர் மகிந்த ராஜபக்சவை பயன்படுத்தத் தீர்மானித்தனர் இவ்வகையில் இறுதியாக இடம் பெற்ற சனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்கு தீவிரமான ஆதரவை வழங்கி அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக பதவியில் ஏற்றினர். பாராளுமன்ற அரசியலில் ஜே.வி.பியின் எழுச்சியின் உயர்ந்த கட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

ஆனால் மகிந்த ராஜபக்சவோ ஜே.வி.பியினரின் ஆட்டிப்படைக்கும் அரசியலை நன்றாகவே கணக்கிட்டுக் கொண்டு வெகு அவதானமாகவே காய்களை நகர்த்தினார். எந்த இனவெறிக் கூச்சலை வைத்து ஜே.வி.பி மகிந்தவை மிரட்ட முயன்றதோ அதே இனவெறியை அவரே கையில் எடுத்துக் கொண்டார். சமாதானத்தைப் பேசிக் கொண்டே யுத்தத்தை தீவிரப்படுத்தி சில பிரதேசங்களை ஆக்கிரமித்து இனவெறியின் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். இந்த நிலையில் ஜே.வி.பி.யின் போர்நிறுத்தக் கண்காணிப்பு குழவக்கு எதிரான கூச்சல்இ ஏகாதிபத்திய தலையீடு என்ற புலம்பல் அத்தனையுமே செல்லாக் காசாக்கப்பட்டு விட்டன.

இப்படி அரசியலில் ஜே.வி.பியின் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காது தன்னை ஒரு வலுவான நிலையில் ஸ்திரப்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசியக்கட்சியின் அதிருதியாளர்களை தன்னுடன் இணைப்பதிலும் வெற்றி கண்டு விட்டார்.

இன்று தான் வீசிய வலைக்குள் மகிந்தரை இறுக்கி வைத்து ஆட்டிப்டைக்க முயன்ற ஜே.வி.பி அந்த நோக்கத்தில் படு தோல்வியடைந்து விட்டது. அது மட்டுமன்றி ஜே.வி.பியின் நண்பர்களான அனுரா பண்டாரநாயக்காஇ மங்களசமரவீர ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டமை ஜே.வி.பிக்கும் மகிந்தர் விட்ட ஒரு பெரும் சவாலகவே கருதப்படுகிறது.

அதாவது சிறீலங்காவின் அரசியலில் 1971ம் ஆண்டைப்போல் 1989ம் ஆண்டைப் போல் தற்சமயம் ஜே.வி.பி மீண்டும் ஒரு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது ஆட்டிப்படைக்கும் அரசியலின் மூலம் தம்மை சிறிலங்காவின் இரண்டாவது சக்தியாக உருவாக்க எடுத்த இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுவிட்டது.

இதைச் சரி செய்ய இனி ஜே.வி.பி எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் போன்ற போராட்டங்களில் இறங்குவது தான். ஆனால் அவற்றில் கூட அவர்கள் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இவர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படும் அவசரகாலசட்டம்இ பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன இவர்களுக்கெதிராகவும் நீளும் என்பதில் சந்தேகப்பட எதுவுமில்லை.

ஏப்படி இருந்த போதிலும் இந்த வலைவீச்சு அரசியல் மூலம் மகிந்த ராஜபக்ச பெற்ற அரசியல் வெற்றி தற்காலிகமாதாக இருப்பினும் ஜே.வி.பி பெற்ற தோல்வி பாரியதும் நீண்ட காலத்திற்கு ஈடுசெய்யப்பட முடியாததும்இ அவ்வமைப்பை மேலும் நெருக்கடிக்கள் தள்ளக்கூடியது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

நன்றி

ஈழமுரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஜேவிபி போட்டுது எண்டு சந்தோசப்பட அடுத்த ஜேவிபி (வெதமாத்தயா விங்) வந்து நிக்குது! என்ன செய்ய?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.