Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்

Featured Replies

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

 
 
 
 
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

இந்த லீக் தொடர்களில் சிக்சர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ரன்கள் எடுத்திருந்தார். 63 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்னைக் கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். சீசன் 2017-ல் களமிறங்கினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ரன்னும், டெல்லிக்கெதிராக 6 ரன்னும், மும்பை அணிக்கெதிராக 22 ரன்களும் எடுத்திருந்தார். மூன்று போட்டிகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார்.

201704182119251257_gayle-s._L_styvpf.gif

இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருக்கும்போது 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் 18 சதங்கள், 60 அரைசதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

]]

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Sportler und Text

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நான் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறேன்: 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்ல் நெகிழ்ச்சி

 

கிறிஸ் கெய்ல். | படம்: பிடிஐ.
கிறிஸ் கெய்ல். | படம்: பிடிஐ.
 
 

கிறிஸ் கெய்லை எப்படியாவது அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று ஆர்சிபிக்கு கங்குலி ஆலோசனை வழங்கினார், அது போலவே செய்தார் கோலி, கெய்ல் வந்தார் விளாசினார், ஆர்சிபி வென்றது.

38 பந்துகளில் 77 ரன்கள் என்ற அவரது தொடக்கம் ஆர்சிபி அணியை அசைக்க முடியாத ஒரு நிலைக்கு இட்டுச்சென்று வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு வழிவகை செய்யுமாறு காயமடைந்த டிவில்லியர்சுக்குப் பதிலாக மிகச்சரியாக கிறிஸ் கெய்லை உள்ளே நுழைத்தனர்.

தனது சாதனை, இந்த இன்னிங்ஸ் பற்றி கிறிஸ் கெய்ல் கூறும்போது, “சாதனை குறித்து சாமுவேல் பத்ரீ எனக்கு நினைவூட்டினார். எனவே அது என் மனதில் நிலைபெற்று விட்டது. சாதனையைக் கடந்தவுடன் அடித்து ஆடும் நேரம் என்று நினைத்தேன், அது கைகொடுத்தது. இந்த ரன்களை எடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகப் போனது 10,000 ரன்கள் மைல்கல்லை முதல் வீரராக எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது, ரசிகர்கள் இன்னமும் கிறிஸ் கெய்லுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இந்த உலகின் பாஸ் இன்னும் இங்குதன இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைப்பேன்” என்றார் கெய்ல்

http://tamil.thehindu.com/sports/நான்-இன்னமும்-உயிருடன்தான்-இருக்கிறேன்-10000-ரன்கள்-மைல்கல்லை-எட்டிய-கிறிஸ்-கெய்ல்-நெகிழ்ச்சி/article9647948.ece?homepage=true

  • தொடங்கியவர்

10 போட்டிகளுக்குப் பின் ஃபார்முக்குத் திரும்பிய கொம்பன் கெய்ல்! - 'அட்ரா சக்க' சாதனை

 

டி-20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த கெய்ல்

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுப்பதே கடினம் என்ற நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இந்த ரன்களை அநாயசமாகக் கடந்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இதில் 7 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் 3 ரன்களை எடுத்த போது கெய்ல் டி-20 போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கெய்லுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. முன்னதாக நடந்த ஆட்டங்களில் அவர் முறையே  32, 6, 22 ரன்களே எடுத்திருந்தார். 

தற்போதையை நிலையில், டி-20 போட்டியைப் பொறுத்த வரை, வேறு எந்த வீரரும் 8 ஆயிரம் ரன்களைக் கூட எட்டவில்லை. கெய்லுக்கு அடுத்ததாக நியூசிலாந்து வீரர் பிரண்ன்ட மெக்கலம் அதிகபட்சமாக 7,596 ரன்களை அடித்துள்ளார். மெக்கல்லம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸுக்காக ஆடிவருகிறார். ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹட்ஜ் 7,338 ரன்களையும், சன்ரைசர்ஸ் அணி கேப்டனான ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 7,156 ரன்களையும்  எடுத்துள்ளனர். 

கிரிக்கெட்டைப் பொறுத்த வரை முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய இரு வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 1987ம் ஆண்டு அகமதாபாத்தில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் முதல் வீரராக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். சர்வதேசக் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர். இந்தூரில் சச்சின் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தற்போது டி-20 போட்டியில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் கெய்ல். 

கங்கணம் ஸ்டைல் நடனமாடும் கெயில்

தற்போது 37 வயதான கெய்ல் வெஸ்ட் இன்டீஸ் ஒருநாள் அணியில் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னரும் டி-20 அணியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகும் இடம்பெறவில்லை. வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இதையெல்லாம் பற்றி கவலைப்படாத கெய்ல் உலகம் முழுக்க பயணித்து டி-20 போட்டிகளில் அசத்துகிறார். கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், வங்கதேச பிரீமியர் லீக், இலங்கை பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

சொல்லப் போனால் கெய்ல் எந்த ஒரு டி20 தொடரையும் விட்டு வைப்பதில்லை. டி-20 போட்டிகளில் கெய்லுக்கு அப்படி ஒரு மவுசு. கெய்லை அணிகள் விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஜாலியான மனிதர், கங்னம் ஸ்டைல் டான்ஸில் கில்லி என இவர் ரொம்பவே ஃப்ரெண்ட்லி.  களத்தில் நின்று விட்டால் எதிர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்தான். தேசிய அணிக்காக கிளப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதே இல்லை. அதனால் கிளப் அணிகளைப் பொறுத்தவரை கெய்ல் ஒரு டார்லிங்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 5 சதங்களை அடித்துள்ளார். இதில் 30 பந்துகளில் 100 அடித்த சாதனையும் இருக்கிறது. பிக் பாஷ் தொடரில் 12 பந்துகளில் அரை சதம் விளாசியுள்ளார். தற்போது கிறிஸ் கெய்ல் டி-20 போட்டிகளில் 10,074 ரன்களை அடித்திருக்கிறார். அதில்,18 சதங்களும் 743 சிக்ஸர்களும் அடங்கும்.  நேற்றைய ஆட்டத்துக்கு முன்னதாக 10 ஆட்டங்களில் கெய்ல் சோபிக்கவில்லை. கடைசியாக கராச்சி கிங்ஸ் அணிக்காக 44 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குஜராத் அணிக்கு எதிராக 77 ரன்களை விளாசி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் இந்த டி-20 கிங்!

http://www.vikatan.com/news/sports/86911-chris-gayle-becomes-the-first-batsman-to-score-10000-runs-in-t20-format.html

  • தொடங்கியவர்

கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்

 

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள கிறிஸ் கெய்லை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 
கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட்டின் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். குஜராத் அணிக்கெதிரான போட்டியில் 33 பந்தில் 77 ரன்கள் குவித்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டினார்.

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். இவரது சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கவுதம் காம்பீரும் கிறிஸ் கெய்லை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கிறிஸ் கெய்ல் சாதனைக் குறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் மார்க்கெட்டிங் நபர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் எங்களை போன்றோர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ரன்களைத் தொட்டது குறித்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடையமாட்டார்கள்.

ரன்குவிப்பதற்கான பார்முலாவாக 4-3-2-1 என்பதைத்தான் என்னிடம் ஏராளமான பயிற்சியாளர் சொல்வார்கள். நாம் முதலில் நான்கு ரன்கள், அதன்பின் 3, 2, 1 என தேர்வு செய்வேன். கெய்லோடு இந்த பார்முலாவை பார்த்தால், அவர் 6-6-6 என்றுதான் நினைப்பார். அவர் ஒன்று, இரண்டு, மூன்று ரன்களை வெறுப்பார். ஏராளமானவர்கள் அவருடைய பேட்டின் தடிமன் குறித்து பேசுகிறார்கள். ஆனால், எனக்கு அவருடைய போட்டிக்கான திட்டமிடலை நம்புகிறேன்.

என்னால் பப்பில் அவருக்கு 1 மணிக்குமேல் கம்பெனி கொடுக்க இயலாது. ஆனால், அவர் பேட்டிங் செய்தால், விடியற்காலை 2 மணியாக இருந்தாலும், டி.வி.யை ஆன்செய்வதில் முதல் நபராக நான்தான் இருப்பேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/21214559/1081209/Would-wake-up-at-2-AM-to-watch-Chris-Gayle-play-says.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.