Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை

Featured Replies

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை

 

 
 

அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

 
 
 
 
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை
 
சென்னை:

அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசியல் பரபரப்பு 8 மாதங்களாக நீடித்து வருகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி பெயரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

201704201142229527_leaf._L_styvpf.gif

இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்க இணைந்து செயல்பட தயார் என்று இரு அணி தலைவர்களும் அறிவித்தனர்.

அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் என்று சொன்ன அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய நிபந்தனையாக தினகரன் குடும்பத்தை கட்சியிலும், ஆட்சியிலும் தலையீடு செய்ய விடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

201704201142229527_Dinakar._L_styvpf.gif

இதில் தினகரனை ஒதுக்கி வைக்கும் நிபந்தனையை அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இது தங்களது தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்தார்.

இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய வி‌ஷயங்கள், நிபந்தனைகள் பற்றி இரு அணி தலைவர்களும் ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்து பல கட்ட பேச்சு நடத்தினார்கள். இன்று 2-வது நாளாகவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

201704201142229527_edappadi._L_styvpf.gi

இரு அணியிலும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தனித்தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியில் கே.பி.முனுசாமி தலைமையிலும் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் இடம் பெற்று இருக்கும் நிர்வாகிகள் விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சு வார்த்தையை தொடங்குகிறார்கள். தலைமைக் கழகத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக இரு அணியைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும், அதுவரை 7 பேர் கொண்ட குழு அமைத்து கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும், ஓ.பன்னீர் செல்வத்தை முதல்-அமைச்சராக்கி எடப்பாடி பழனிசாமியை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும். மாபா.பாண்டியராஜன் மற்றும் சிலருக்கு அமைச்சரவையில் இடம், மத்திய பா.ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் விரும்புகிறார்கள்.

201704201142229527_poes-garden._L_styvpf

இதில் போயஸ் கார்டனை நினைவிடமாக்குவது, அமைச்சரவையில் ஓ.பி.எஸ். அணிக்கு இடம் அளிப்பது ஆகிய கோரிக்கைகளை ஏற்க எடப்பாடி பழனிசாமி அணியினர் சம்மதித்து விட்டனர்.

முதல்-அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் மட்டும் தான் சிக்கல் நீடிக்கிறது. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது அவரால் முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்று அவரது அணியினர் விரும்புகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனால் மத்திய அரசிடம் இணக்கமாக செல்லும் நிலை ஏற்படும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அவரை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நடுநிலை வகித்தாலும் அவர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்ற பெயர்தான் இருக்கும், எனவே ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சராகவும் ஆட்சியை வழி நடத்தலாம் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் இதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். தங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே 3 முறை முதல்-அமைச்சராக இருந்து விட்டார், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி 2 மாதம்தான் ஆகிறது.

அதற்குள் அவரை விலகச் சொல்வது சரியாக இருக்காது. எனவே எடப்பாடி பழனிசாமியே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொது செயலாளராக வழி நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என்பதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.

அவருக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இருக்கிறார். எனவே மாற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தம்பித்துரை கூறினார்.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘கட்சியை விட்டு தினகரன் வெளியேறி விட்டதாக கூறி இருக்கிறார். எனவே முதலில் இரு அணியினரும் இணைய வேண்டும். அதன்பிறகு மற்ற நிபந்தனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’’ என்றனர்.

இரு அணியினரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நாளைக்குள் முடிவு எட்டப்படும் என்று தெரிய வருகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/20114209/1080873/AIADMK-Teams-join-OPS-3-Important-Condition.vpf

  • தொடங்கியவர்

சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்பார்ப்பு?

 

 
 
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
 
 

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியை டிடிவி.தினகரனும் முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்ப்பார்பு எனக் கூறுகிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக டிடிவி தினகரன் அறிவித்து விட்டதால் அதன் இரு அணிகளும் இணைவதில் இருந்த தடைகள் நீங்கிவிட்டனவா என்று கேட்டால் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தரப்பில் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய இரண்டு மூத்த தலைவர்கள் கூறியதாவது:

"தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என தமிழக அமைச்சர்கள் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

அந்த அறிவிப்புக்கு ஏற்றபடி செயற்திட்டத்துடன் அதிமுக அம்மா அணியினர் எங்களை அணுகுவார்கள் என எதிர்பார்த்திருக்கிறோம்.

தினகரன் குடும்பத்தாரை ஒதுக்கிவைப்பது என்பது இப்போதைக்கு அறிவிப்பு என்ற அளவிலேயே இருக்கிறது. இதற்கு முழுவடிவம் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் இருவரும் தத்தம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதனால், இரு அணிகள் இணைவதில் ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறாரா ஓபிஎஸ்?

அதேவேளையில், இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே அந்த அணியின் முக்கிய நிபந்தனையாக இருக்கும் என்று அந்த அணியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வராக்கவும் ஓபிஎஸ் அணி தயாராக இருக்கிறது என அந்த அணியைச் சேர்ந்த மற்றுமொருவர் நம்மிடம் கூறினார்.

ஆனால், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில் கோரிக்கைகள், நிபந்தனைகளுக்கு இடமேது" என்று ஓபிஎஸ். முதல்வராக திட்டமிடுவதாக சலசலக்கப்படும் தகவல்களை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

'ஓபிஎஸ் நிபந்தனைகள்' என்ற பெயரில் தகவல்கள் உலாவரும் வேளையில்தான் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, "முதல்வராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார். அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு அளித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையையும் அவர் நிரூபித்திருக்கிறார்" எனக் கூறினார்.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை குழு ஏதும் அமைக்கப்படவில்லை என்றும் ஓபிஎஸ் அணிகள் நிபந்தனைகள் விதித்திருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய சூழலில் க்ரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-தினகரன்-ராஜினாமா-ஓபிஎஸ்-அணியின்-அடுத்த-எதிர்பார்ப்பு/article9651310.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஜனநாயகம் வாழ்க‌

  • தொடங்கியவர்

இணைய வேண்டுமானால்..! பழனிசாமி அணியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகள்!

 

4a_15252.jpg

சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தினகரனை ஒதுக்கி வைக்கிறோம் என்று சொன்னதால் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளோம். தினகரன் ஒதுங்கியதை வரவேற்கிறோம்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும்.  அதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.  ஆட்சியில் இருப்பவர்கள், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும். சசிகலா,தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.  கட்சியில் இருந்து இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

சசிகலா குடும்பத்தில் உள்ள 30 பேரையும் நீக்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் இணைவோம்.  இல்லையென்றால், பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டோம். நாங்கள் முதல்வர் பதவியோ, பொதுச்செயலாளர் பதவியோ கேட்கவில்லை.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறி அமைச்சர்கள் தான்தோன்றி தனமாகக் கூறி வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்றுக் கூறி அழைப்பு விடுத்து, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவமானப்படுத்தி வருகின்றனர்.  விரும்பினால் நீங்கள் தனியே செல்லுங்கள். பேச்சுவார்த்தை என்று இப்படி நடந்து கொள்வது நல்லதல்ல. தினகரனை வெளியேற்றிவிட்டதாக நாடகமாடுகின்றனர்.

கருணாநிதியின் வெற்றிடத்தை பன்னீர்செல்வம் நிரப்புவார். மக்கள் செல்வாக்கு இல்லாமல் சசிகலா அணியினர் உள்ளனர். தேர்தல் நடந்தால், பன்னீர்செல்வம்தான் வெற்றி பெறுவார். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். பன்னீர்செல்வத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.  பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர். சசிகலா தயவால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி எப்படி செயல்பட முடியும்?

 

யாரோ ஒருவரின் பாதுகாப்பில் விஜயபாஸ்கர் இருந்து வருகிறார். மிரட்டல் விடுத்ததால்தான் எம்.எல்.ஏக்கள் அங்கு உள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/87037-panneerselvam-teams-two-condition-to-edappadi-palaisami.html

  • தொடங்கியவர்

 

கோரிக்கை நிறைவேற்றாமல் பேச்சு இல்லை: முனுசாமி பேட்டி

 

சென்னை: ஜெயலலிதாவின் இறப்பிற்கு சிபிஐ வி்சாரணை கேட்க வேண்டும்; சசி குடும்பத்தை மொத்தமாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். மக்களை சந்திக்க தயாராக உள்ளதாக ஓ.பி.எஸ்., ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் முனுசாமி கூறுகையில்,
ஜெயலலிதா ஆன்மா அமைதி பெற வேண்டும் என ஓ.பி.எஸ்., தர்ம யுத்தம் துவக்கினார். அதில், பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: ஜெயலலிதா மர்ம மரணத்தை சி.பி.ஐ., வாயிலாக விசாரணை நடத்த வேண்டும். சசி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என தர்ம யுத்தம் துவக்கப்பட்டது. பல நிகழ்வுகளுக்கு பின்பு ஆட்சியில் இருப்பவர்கள் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கிவைக்கிறோம் என்றனர். சிலர் இவர்களை வெளியேற்றுகிறோம் என சொன்னார்கள். இதன் அடிப்படையில் ஓ.பி.எஸ்., நாங்கள் வைத்த கோரிக்கைகளில் முதல் வெற்றி பெற்றிருக்கிறோம் என சொன்னார். முதல் வெற்றி தொடர் வெற்றியாக இருக்க வேண்டும்

 

நிபந்தனை:

சசியுடன் சேர்ந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனக்கூறினோம். சசி பொது செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். சசி, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.இதனை அறிக்கையாக தர வேண்டும்.. இதனை செய்தால் நாங்கள் வைத்த கோரிக்கையில் முழுமையாக வெற்றி என்ற கருத்துக்கு வருவோம். ஜெ., மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

 

தம்பிதுரை, ஜெயக்குமார் மீது தாக்கு:


இந்த சூழ்நிலையில், அவர்கள் தான்தோன்றிதனமாக கருத்து கூறுகின்றனர். தம்பிதுரை, இடைப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என கூறினார். இதனை அவரிடம் யார் கேட்டது. நாங்கள் முதல்வர் பதவி, பொது செயலாளர் பதவி கேட்கவில்லை. மக்களின் சந்தேகங்களையும், தொண்டர்களின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய சிபிஐ விசாரணை கேட்டோம். சசிகலா குடும்பத்தை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்றுதான் கூறினோம்.தம்பிதுரையை யாரும் மதிப்பதில்லை.அவர் தனியாக தான் வருகிறோர். கேட்காத ஒரு பொருளை அவர் ஏன் பேசினார். ஜெயக்குமார் பக்குவமில்லாத அரசியல்வாதியாக உள்ளார். அவர் அங்கு தலைவராக உள்ளார். இப்படி பேசி கொண்டிருந்தால், எப்படி பேச்சு நடத்த முடியும். அவமானபடுத்திவிட்டு எப்படி பேச முடியும்..

ஓபிஎஸ்சை உயர்ந்த நிலையில், சட்டசபை முன்னவராகவும், நிதியமைச்சராகவும் வைத்து ஜெயலலிதா அழகு பார்த்தார். ஓபிஎஸ், ஜெ.,விடம் விசுவாசமானவராக, உண்மையானவராக செயல்பட்டிருந்தால், தொடர்ந்து உச்சத்தில் வைத்திருப்பார். ஜெயக்குமார் மூன்றாம் தரமாக கருத்து கூறுகிறார். இப்படி பேசும்போது அவருடன் பேச முடியும்

மக்கள் ஆதரவில்லாத இவர்கள் தொண்டர்களை இழுக்க முயற்சி செய்கின்றனர். தொண்டர்கள் தெளிவாக உள்ளார்கள். தொண்டர்கள் ஊழலில் திழைத்துள்ள அவர்களுடன் சேர்ந்துவிடாதீர்கள் என்கிறார்கள். வயது முதிர்வு காரணமாக கருணாநிதி ஓய்வில் உள்ளார். இதனால் வெற்றிடம் உருவாகி கொண்டுள்ளது. அதனை நிரப்ப ஓபிஎஸ் வந்து கொண்டுள்ளார். அவரை தலைவராக ஏற்று கொண்டுள்ள நீங்கள் ஊழல் சாம்ராஜ்யத்தோடு பேச வேண்டாம் என வற்புறுத்துகின்றனர்.

பழனிசாமி, சசி தயவால் முதல்வராகியுள்ளார். அவர் உண்மையான அதிமுக முதல்வராக இல்லை. சசி குடும்பத்தின் முதல்வராக உள்ளார்.
சசி மிரட்டலால் இடைப்பாடியை முதல்வராக தேர்வு செய்தனர். சசி குடும்பத்தில் உள்ள குடுமிப்பிடி சண்டையால் தினகரன் முன்னிலைக்கு வந்தார்.
சசி, நடராஜன், திவாகரன், அவர்களை பகடையாக பயன்படுத்தி தினகரனை வெளியேற்றி நாடகத்தை அரங்கேற்றி கொண்டுள்ளனர். இதை அரங்கேற்றி,தொண்டர்களின் முதுகில் குத்த பழனிசாமி உடந்தையாக இருக்க கூடாது. தொகுதிக்கு சென்றால் எம்எல்ஏக்கள் போலீஸ் பாதுகாப்போடு செல்கின்றனர் . தனியாக இருக்க வேண்டும் என விரும்பனால் பழனிசாமி தரப்பு தனியாக இருக்கலாம். குற்ற வழக்குகளுக்கு பயந்து தினகரன் ஒதுங்கியுள்ளார்.
நாங்கள் தனித்து சென்று விடுவோம் என ஜெயக்குமார், சண்முகம் பேசுகின்றனர். எப்போது தேர்தல் நடந்தாலும் ஓபிஎஸ் முதல்வராக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாங்கள் மக்களை சந்தித்து கொள்கிறோம். மக்கள் கருணாநிதி, ஸ்டாலினுக்கு கூட ஓட்டுப்போட மாட்டார்கள். இந்த போட்டியில் ஸ்டாலின் இல்லை. பேச்சுவார்த்தை தொடங்கினால், ஓபிஎஸ் முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும். பேச்சுவார்த்தைக்கு சில அமைச்சர்கள் தடை ஏற்படுத்துகின்றனர்.

எங்கள் கோரிக்கை முதல்வர் பதவிஅல்ல. முதல்வர் பதவி பற்றிகேட்கவில்லை. சசிகலா குடும்பம் ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதிமுக பொது செயலாளராக ஓபிஎஸ் வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். நாங்கள் முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மடடுமே பேச்சுவார்த்தைக்கு செல்ல இயலும். கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை எப்படி நடக்கும்.அவமானபடுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குஅழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1755435

  • தொடங்கியவர்

'இரட்டை இலைக்கு மட்டும்தான் பன்னீர்செல்வம்!' - கொதிக்கும் 'கொங்கு லாபி'

 
 

எடப்பாடி பழனிசாமி

.தி.மு.க அணிகள் இணைப்பில் தொடக்கத்திலேயே முட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினர். "ஆட்சி அதிகாரத்தை பன்னீர்செல்வம் கையில் ஒப்படைக்க வேண்டிய அவசியமே எழவில்லை. இதுகுறித்து, பா.ஜ.க தலைமையின் கவனத்துக்கும் தெரியப்படுத்திவிட்டோம்" என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கி வைத்த பிறகு, இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளன. அதற்குள்ளாகவே, ' பன்னீர்செல்வத்தை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ' தினகரன் ஒதுங்கியதை வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர் எனத் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர். இதனை வாபஸ் பெற வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறி அமைச்சர்கள் தான்தோன்றித்தனமாகக் கூறி வருகிறார்கள். பேச்சுவார்த்தை என்று கூறி அழைப்பு விடுத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவமானப்படுத்தி வருகின்றனர்.  தினகரனை வெளியேற்றிவிட்டதாக நாடகமாடுகின்றனர். கருணாநிதியின் வெற்றிடத்தை பன்னீர்செல்வம் நிரப்புவார். மக்கள் செல்வாக்கு இல்லாமல் சசிகலா அணியினர் உள்ளனர். தேர்தல் நடந்தால், பன்னீர்செல்வம்தான் வெற்றி பெறுவார். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். பன்னீர்செல்வத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.  பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர். சசிகலா தயவால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் எப்படி செயல்பட முடியும்? எனக் கொதித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்பார்த்தே காத்திருந்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

பன்னீர்செல்வம்" ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி நன்றாக செயல்பட்டு வருகிறார். பெரும்பான்மை உள்ள அரசு என்று நிரூபித்துவிட்டுத்தான் பதவியில் அமர்ந்திருக்கிறார். சசிகலா எதிர்ப்பு என்ற பிளஸ்ஸில்தான் பன்னீர்செல்வம் அரசியல் செய்து வந்தார். நாங்களோ, சசிகலா ஆதரவு என்ற மைனஸால் பாதிக்கப்பட்டோம். மக்கள் மத்தியில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்பட்டோம். தற்போது பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. அவரிடம் அவருடன் சேர்த்து 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அங்கு உள்ளனர். இப்படி இருக்கும்போது, எதை வைத்துக் கொண்டு பதவி கேட்கிறார் பன்னீர்செல்வம்? சசிகலாவையும் தினகரனையுமே கட்சியை விட்டு ஒதுக்கியது நாங்கள்தான். யாராலும் செய்ய முடியாத ஒன்றை எடப்பாடி பழனிசாமி சாதித்தார். நாங்கள் போர்வீரர்கள் கிடையாது. ஆனால், நேரம் வரும்போது எப்படி வீழ்த்த வேண்டும் என்பதும் தெரியும்.

' தினகரனை ஒதுக்கியது எடப்பாடி பழனிசாமிதான்' என்பது தெரிந்தும், தினகரனால் எதுவும் பேச முடியவில்லை. அமைச்சர்களைப் பேசவிட்டு ஒதுங்கிட்டார். இதுதான் கொங்கு மண்டல ஸ்டைல். சி.எம் பதவியை பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்தால், 'மீண்டும் வருமான வரித்துறை என்ற ஆயுதத்தை பயன்படுத்துவார்' என்ற அச்சமும் சில அமைச்சர்களுக்கு இருக்கிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்காவிட்டால், பிரச்னை என்று சொன்னதால் அதையும் சாதித்தார் பழனிசாமி. அவர்களே ஒதுங்கிப் போன பிறகு பன்னீர்செல்வம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அமைச்சரவைக்கு எந்த பாதிப்பும் இல்லாதபோது பன்னீர்செல்வத்தின் தயவும் தேவையில்லை. ஒன்றுபட்டால் இரட்டை இலை கிடைக்கும் என்பதால்தான் பழனிசாமி அமைதியாக இருக்கிறார்" எனக் கொதித்தார். 

நேற்று இளவரசி மகன் விவேக் ஜெயராமன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கமெண்ட் ஒன்றில், ' கழகம் சுக்குநூறாக சிதறப் போகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். 'அதை நோக்கியே எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பயணிக்கிறார்கள்' என்கின்றனர் சசிகலா குடும்ப உறவுகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/87057-we-need-ops-just-to-regain-two-leaves-symbol-as-per-kongu-mlas.html

  • தொடங்கியவர்
gallerye_232759455_1755524.jpg

சென்னை:'அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்க வேண்டுமானால், ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும்; அவர்களது நியமனம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும்' என, பன்னீர் அணியினர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

 

Tamil_News_large_1755524_318_219.jpg

இதையெல்லாம் செய்ய முன்வராமல், பழனிசாமி அணியினர் நாடகம் ஆடுவதாகவும், பன்னீர் அணியினர் பகிரங்க புகார் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற் கான நடவடிக்கைகளை, இருதரப்பினரும் துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலை மையில், அவரது அணியினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:

ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும், கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை.அதன் அடிப் படையில், ஆட்சியில் உள்ளவர்கள், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்' என, கூறினர்; அதை நம்ப முடியவில்லை. ஆட்சி யில் இருப்பவர்கள், சசிகலா பொதுச் செயலர் எனக்கூறி, தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் கொடுத்துள்ளனர். அதே போல, துணை பொதுச் செயலர் தினகரன் என்றும், பிரமாண பத்திரம் தந்துள்ளனர்.

அந்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும். அதன்பின், சசிகலா, தினகரன்
ஆகியோரிடம், ராஜினாமா கடிதம் பெற வேண்டும். பின், ஜெ., செய்வதை போல, சசிகலா, தினகரன் குடும்பத்தினரை வெளி யேற்றுவதாக, அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்வராக உள்ள பழனி சாமி, ஜெ., மர்ம மரணத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும், முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால்,அவர்கள் தரப்பில், தான் தோன்றித்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மூத்த அரசியல் வாதியான தம்பிதுரை, 'முதல்வராக பழனிசாமி தான் இருப்பார்' என்கிறார். நாங்கள் முதல்வர் பதவி, பொதுச்செயலர் பதவிகேட்கவில்லை.நாங்கள், கோடிக் கணக்கான மக்களின், தொண்டர்களின்

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, சி.பி.ஐ., விசாரணை கேட்டோம். கட்சியை அழிக்கும் நிலையில் உள்ள, சசிகலா குடும்பத்தை வெளி யேற்ற வேண்டும் என்று தான் கேட்டோம். தம்பிதுரை, எதற்கு இப்படி கூறுகிறார் என, தெரியவில்லை.
 

கிண்டலடிக்கிறார்


தினகரன், பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்ப தால், அவரை காப்பாற்ற, சசிகலா குடும்பம், இவர்களை பயன்படுத்துவதாக தகவல் வருகி றது. தினகரன் விலகுவதாக அறிவித்தது, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என, கூறி னோம். அதை, அமைச்சர் ஜெயகுமார் கிண்டல டிக்கிறார். 'அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதும், நான் சொன்னதால் தான் என கூட, பன்னீர்கூறுவார்'என்கிறார்.

பக்குவமில்லாதவராக பேசுகிறார். இப்படி அவ மானப்படுத்திவிட்டு, எப்படி பேச்சுக்கு கூப்பிட முடியும்? மூன்றாம் தர அரசியல்வாதி போல, ஜெயகுமார் பேசுகிறார். பேச்சுக்கு தயார் எனக் கூறி, மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக உள்ளவர்கள், தொண்டர்களை இழுக்க முயற்சிக்கின்றனர்.

'ஏற்கனவே ஊழலில் மலிந்துள்ள, அவர்களோடு சேர்ந்து விடாதீர்கள்' என, எங்களிடம் தொண்டர் கள் கூறுகின்றனர். தற்போது, ஜெ., இல்லை. கருணாநிதி, வயது முதிர்ச்சி காரணமாக, அரசியல் ஈடுபாடு இல்லாமல் உள்ளார்.

இத்தகைய சூழலில், தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவி வருகிறது. வெற்றிடத்தை நிறைவேற்றக் கூடிய நிலையில், பன்னீர் செல் வம் வந்து கொண்டிருக்கிறார். அதனால், ஊழல் சாம்ராஜ்யத்தோடு பேச்சு நடத்த வேண்டாம் என, தொண்டர்கள் வற்புறுத்துகின்றனர்.

பழனிசாமி, சசிகலா தயவால் முதல்வரானார். சசிகலா குடும்பத்தின் முதல்வராகவே உள்ளார். எங்களுக்கு எழும் சந்தேகம், சசிகலா குடும்பத்திற்குள் உள்ள குடுமிப்பிடி சண்டை யில், தினகரன் முதலாவதாக வந்தார். அவரை வெளியேற்ற, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, இவர்களை பகடை காயாக்கி, நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
 

பேச்சு நடக்காது


இந்த அரங்கேற்றம் மூலம், அ.தி.மு.க., தொண்டர்கள் முதுகில், சசிகலா குடும்பம் குத்துவதற்கு, பழனிசாமி உறுதுணையாக இருந்துவிடக் கூடாது. நாங்கள், மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள், எப்போது தேர்தல் நடந்தாலும், முதல்வராக, பன்னீர் செல்வத்திற்கு ஓட்டளிக்க தயாராகிவிட்டனர்.

எனவே, கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பேச்சு நடைபெறாது. அவர்களுக்கு பயம் வந்து விட்டது. பேச்சு நடத்தினால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும், 'பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும்' எனக்கூறி விடுவர்; அனைத்து,

 

எம்.எல்.ஏ.,க்களும் இங்கு வந்துவிடுவர். ஜெய குமார், முதல் நாளில் கூறும் போது, தினகரன் குடும்பத்தை நீக்கி வைப்பதாகக் கூறினார். ஆனால், சசிகலா பெயரை கூறவில்லை. எங்க ளுக்கு வரும் செய்திகள், தற்போது நடப்பது நாடக மாக இருக்குமோ என்றசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 

வாய்ப்பை இழக்கின்றனர்


தர்ம யுத்தம் துவங்கிய போது வைத்த கோரிக் கைகளை நிறைவேற்றினால், இருதரப்பு பேச்சு உறுதியாக நடைபெறும். இல்லையென்றால், அவர்கள் தான் வாய்ப்பை இழக்கின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத போது, குழு அமைக்க முடியாது.வருமான வரி சோதனை காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரோ ஒருவர், இவர்களை இயக்கிக் கொண்டி ருக்கிறார். அதனால், முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

'எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை!'


பன்னீர் அணி நிபந்தனைகள் குறித்து, மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமிதலைமையில் ஆலோசனை நடத்தினர். அதன்பின், எம்.பி., வைத்திலிங்கம் கூறியதாவது:

எங்கள் தரப்பில், பேச்சு நடத்த குழு அமைக்கப் பட்டு உள்ளது. பேச்சுக்கு தயாராக உள்ளோம். நாங்கள், எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களுடைய ஒரே எண்ணம், அனைவரும் ஒன்றிணைந்து, ஜெ., ஆட்சியை, நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும்; கட்சியின் சின்ன மான, இரட்டை இலையை திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றுபட்டு செயல்பட, பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஜெ., மரணத்தின் போது, பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவர் நினைத் திருந்தால்,விசாரணை கமிஷன் அமைத்தி ருக்கலாம்.இது தொடர்பான, பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த தும், அதை செயல்படுத் துவோம். எங்கள் மத்தி யில், எந்த குழப்பமும் இல்லை. சிலர் பேசும் போது, சில வார்த்தைகள் தவறாக வந்திருக் கலாம்; அதை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது.

தேர்தல் கமிஷனில், முதலில் வழக்கு போட்டது அவர்கள் தான். எனவே, அவர்கள் தான் வாபஸ் பெற வேண்டும். எந்த நாடகமும் இல்லை. அவர்களை விலகும்படி வற்புறுத்தி னோம். மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் அறிவித்துவிட்டார். பொதுச் செயலர், துணை பொதுச் செயலர் நியமனம்தொடர்பான, அத்தனை கேள்வி களும், தேர்தல் கமிஷனில் நிலுவை யில் உள்ளன. தேர்தல் கமிஷனில் முடிவு காணப்பட்டதும், அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1755524

  • தொடங்கியவர்

பன்னீர் அணியின் பயத்துக்கு இது தான் காரணம்!

 
 

O.Panneerselvam

இரண்டு நாளில் இணைப்பு நடந்துவிடும் என்ற நிலையில் பன்னீர் தரப்பு எழுப்பிய சந்தேகப் பட்டியல்களால் இணைப்புக்கு இடையூறு வந்துவிட்டது.

"'சசிகலாவின் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும், டெல்லி தேர்தல் ஆணையத்தில் கொடுக்கபட்ட மனுவை திரும்ப பெற வேண்டும்” என  அடுத்தடுத்து நிபந்தனைகளை அடுக்கியுள்ளது பன்னீர்செல்வம் தரப்பு. இரண்டு அணிகள் இணைவது குறித்து பன்னீர்செல்வம் வீட்டில் அவரது அணியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனைக்கு பிறகுதான் முனுசாமி செய்தியாளர்களிடம்  பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நிபந்தனைகளை அடுக்கினார். 

ஆட்சியில் இருப்பவர்களே இறங்கி வரும் நேர்த்தில் பன்னீர் அணியினர் முரண்டு பிடிப்பதற்கு காரணம் என்ன என அந்த அணியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “இரண்டு நாள்களுக்கு முன் அவர்கள் நடைமுறைக்கும் இப்போதைய நடைமுறைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக தினகரனினை கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக சொன்னார்களே தவிற சசிகலாவின் குடும்பத்தினரை பற்றி அவர்கள் வாய் திறக்கவே இல்லை. 

அவர்கள் அணியில் இருந்தே எங்களுக்கு வந்த தகவல் தான் அதிர்ச்சியாக இருந்தது. தினகரன் தள்ளிவைப்பின் பின்னணியில் திவாகரன் இருக்கிறார். அவர் தான் அமைச்சர்களிடம்  தினகரனை தள்ளி வையுங்கள் மத்திய அரசின் கோபமும் குறையும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் வந்துவிடும். ஒ.பி.எஸ் அணியும் இணைந்துவிடுவார்கள். நாங்கள் பின்னால் இருந்தே கட்சியை இயக்குகிறோம் என்று சொல்லியுள்ளார்கள். செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் அமைச்சர் ஒருவர் இதற்கும் ஓ.கே.சொல்லியுள்ளார். இந்த தகவல்கள் எங்களுக்கு வந்தபிறகு தான் ஒட்டு மொத்த சசிகலா குடும்பத்தையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று  நிபந்தனை விதித்துள்ளோம். ஆனால், அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இணைந்துவிடக் கூடாது என்பதில் இரண்டு அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு தான் இணைய மறுக்கின்றார் என்று மீடியாவில் செய்தியை கசியவிடுகிறார்கள். 

முன்னால் உறவையும், பின்னால் குழியை நோண்டும் வேலையும் அந்த தரப்பில் சிலர் செய்துவருவதால் தான் நாங்கள் எங்கள் நிபந்தனையை கடுமையாக அவர்களிடமும் மக்களிடமும் சொல்லவேண்டி வந்தது”என்கிறார். இரண்டு நிபந்தனைகளையும் செயல்படுத்தாத வரை இணைப்பு பற்றி பேச்சு இல்லை என்ற முடிவில் பன்னீர் அணியினர் உள்ளார்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/87095-this-is-the-reason-for-fear-of-panneerselvam-camp.html

  • தொடங்கியவர்

ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைப்பு

 

 
கோப்புப் படம்
கோப்புப் படம்
 
 

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி சார்பில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், வீரமணி, தங்கமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தமிழக அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியிலிருந்து டிடிவி தினகரனை ஒதுக்கிவைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை ஓபிஎஸ் அணி வரவேற்றது. இதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த தினகரனும் ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன் எனத் தெரிவித்தார்.

விரைவில் இணைப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை), வழக்குகளில் சிக்கியுள்ள டிடிவி தினகரனை வெளியேற்ற சசிகலா குடும்பத்தினர் நாடகம் நடத்தி வருவதாகவும், அதற்காக அமைச்சர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்றும் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

இதனால் இரு அணிகள் இணைப்பில் பின்னடைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. இத்தகைய சூழலில்தான் இன்று காலை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையின் அடிப்படையில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டிடிவி.தினகரனை அவரது இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஓபிஎஸ்-அணியுடனான-பேச்சுவார்த்தைக்கு-7-பேர்-கொண்ட-குழு-அமைப்பு/article9655679.ece?homepage=true

  • தொடங்கியவர்

'பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே நடப்பது நாடகம்!" - கொதிக்கிறார் நிர்மலா பெரியசாமி

 
 

நிர்மலா பெரியசாமி

ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிளவுபட்டது. இதற்கிடையில் சசிகலா அணிக்குத் தாவுவதும், ஓ.பி.எஸ் அணிக்கு மாறுவதுமாக அரசியல் காட்சிகள் சாதாரண மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சி அதிக பணம் தரும் என்கிற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி, இறுதியில் தேர்தலையே நிறுத்த காரணமாகிவிட்டார்கள் ஒட்டுமொத்த அதிமுக அணியினர். இச்சூழலில் பிரிந்து போன பன்னீர்செல்வத்தோடு சேருவதற்கான முயற்சிகளை எடப்பாடி அணியினர் மேற்கொண்டதன் விளைவு... கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் தினகரன். நடப்பதெல்லாம் நாடகமா, ஒரிஜினலா என்று அடிக்கிற வெயிலில் மண்டை காய வைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

தினகரன் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமியிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே மனுஷி கொதிப்பாகிவிட்டார்.

'' ஓ.பி.எஸ் அணியுடன், எடப்பாடி  அணி பேச்சுவார்த்தை என்பது தினகரன் நடத்தும் நாடகம். இரண்டு புறமும் உட்கார்ந்து பேசினால்தானே பேச்சுவார்த்தை என்பதெல்லாம் நடக்கும். ஆனால் இதுவரை எங்கள் (ஓ.பி.எஸ். அணி) அணியுடன் யாரும் பேசவில்லை என்பதுதான் நிஜம். இரண்டு அணியும் இணைந்தால் வரவேற்கிறோம்.

ஓ.பி.எஸ் இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒன்று ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த  வேண்டும். மற்றொன்று சசிகலாவின் ஒட்டு மொத்தக் குடும்பமும் சட்டபூர்வமாக கட்சியை விட்டு விலக வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பார்த்ததும், தினகரன் விலகுவதாக அறிக்கை விடுகிறார். பெயருக்கு விலகிவிட்டு இரண்டு அணிகளும் சேர்ந்ததும், இரட்டை இலைச் சின்னம் கைப்பற்றப்பட்ட பின்னர், ஆட்சியை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதே அக்குடும்பத்தினருடைய திட்டம். அந்தத் திட்டத்தை பக்காவாகச் செயல்படுத்திவருகிறார் தினகரன்.

ஓ.பி.எஸ்க்கு மக்கள் மற்றும் தொண்டர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பயன்படுத்திக்கொள்ள தினகரன் தீட்டும் புதிய திட்டம்தான் இப்போது நடக்கும் அரசியல் காமெடி. இச்சூழலால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் குழம்பிப்போகிறார்கள். அவர்களுக்கான திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்தவர்மீது நமக்கு சந்தேகத்தின் நிழல் விழுந்திருக்கக்கூடாது. ஆனால், அதற்குக் காரணமாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர் சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும். தற்போது  ஜெயலலிதா மரணத்தின் மீதான சந்தேகம் ஆலமரம் போல் வளர்ந்துள்ளது. அம்மா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் யாருமே  உள்ளே நுழைந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வலிமையான சக்தியாக சசிகலா குடும்பம் செயல்பட்டது. கவர்னர்கூட பார்க்க முடியவில்லை. அந்த வலிமையான சக்தியே, அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்தியது. அச்சமயத்தில் எல்லோரும் வெளியில் புலம்பிக் கொண்டு சசிகலா அணியினர் சொல்கிறபடி, உள்ளே சென்று கையெழுத்திட்டதைக்  கண்கூடாக நான் பார்த்தேன். அந்த சக்தியின் கட்டுப்பாட்டில்தான் அண்ணன் ஓபிஎஸ்ஸும் இருந்தார் என்பது எனக்குத் தெரியும். 

அம்மா இட்லி சாப்பிட்டாங்க. உப்புமா சாப்பிட்டாங்க எனச்  சொல்லிச்சொல்லி மற்றவர்களை திசை திருப்பினார்கள். பதவிக்காக அந்தர்பல்டி அடிக்கும் இவர்கள் அம்மாவையும் பலத்தக் கட்டுப்பாட்டில்தான்  வைத்திருந்தார்கள் என்பதை உணரும்போது வேதனையாக உள்ளது. அம்மாவின் உண்மையான விசுவாசிகளாக அமைச்சர்கள், எம்.பி.க்கள் இருந்திருந்தால்.. அம்மாவின் உண்மையான விசுவாசி ஓ.பி.எஸ் ஜெயித்திருப்பார். 

 

மத்திய அரசு ஓ.பி.எஸ்ஸை இயக்குவதாக தினகரன் கூறுவதெல்லாம்  வடிகட்டிய முட்டாள்த்தனம். தினகரன் தப்பான படுகுழியை தனக்குத்தானே படுவேகமாக தோண்டிக் கொண்டே போகிறார்.  ஒட்டுமொத்தக் கட்சியும் 'வெளியே போ' எனச் சொல்லிய பின்னும், தான் தியாகச் செம்மலைப் காட்டிக்கொள்கிறார் தினகரன். தன்னுடன் இருக்கும் ஜால்ராக்களை பெரிய சக்தியாக நினைத்துக்கொள்கிறார்.   வாய்வார்த்தை சொல்லி அரசியல் செய்தவர்கள் போதும். இனி புது அரசியல் ஓ.பி.எஸ் தலைமையில் வெகுசீக்கிரம் அமையும். அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுப்போம். நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய , மக்கள் விரும்புகின்ற அரசியலாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று சொல்லி முடித்தார் நிர்மலா பெரியசாமி.

http://www.vikatan.com/news/viral-corner/87130-the-so-called-dealing-between-edapadi-and-ops-is-just-a-drama-slams-nirmala-periyasamy.html

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தைக்கு கே.பி.முனுசாமி தலைமையில் குழு: ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு

அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
பேச்சுவார்த்தைக்கு கே.பி.முனுசாமி தலைமையில் குழு: ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு
 
சென்னை:
 
அ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்கு நடந்த முயற்சியில் இரு அணிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கொடுத்த பேட்டிகளால் சர்ச்சை எழுந்ததால் பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பே முட்டுக்கட்டை விழுந்தது.
 
இதனையடுத்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
 
அதன்பிற்கு அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி இன்று பிற்பகலில் தெரிவித்தார்.
 
பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்குமாறு அதிமுக அம்மா அணியிடம் இருந்து முறையான அழைப்பு வந்ததாகவும், இரவுக்குள் தங்கள் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
 
இதனையடுத்து, பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மைத்ரேயன், மாபா. பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து ஓ.பி.எஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டுள்ளது.
 
201704212126162892_OPS12._L_styvpf.gif
 
இதுதொடர்பாக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், மைத்ரேயன் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
 
201704212126162892_OPS-Team4._L_styvpf.g
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கே.பி.முனுசாமி தலைமையேற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவார். பேச்சுவார்த்தைக்கு முன்பாக நிபந்தனைகளை சொல்வது சரியாக இருக்காது. விரைவில் நல்லது நடக்கும்” என்று தெரிவித்தார்

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/21212600/1081206/For-dialogue-7-member-team-headed-by-KPMunusamy-OPS.vpf

  • தொடங்கியவர்
gallerye_235558411_1756221.jpg

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும், முன் வைத்த நிபந்தனைகளில் பின்வாங்காமல், பேச்சு நடத்துவது என்பதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது அணியினரும் உறுதியாக உள்ளனர்.

 

Tamil_News_large_1756221_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது.
இதன் காரணமாக, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்க, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி துவங்கியுள்ளது.அதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியை விட்டு விலக்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் அணி தெரிவித்தது. அதை ஏற்று, தினகரன் குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர். கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக, தினகரனும் தெரிவித்தார்.
 

மவுனம் சாதித்தனர்


ஆனால், துணை பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதே போல, பொதுச் செயலர் பதவி வகிக்கும் சசிகலா குறித்தும், அமைச்சர்கள் மவுனம் சாதித்தனர். இது, பன்னீர் அணியினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா; துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்ட தாக, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப் பட்டுள்ள, பிரமாண வாக்குமூலங்களை வாபஸ் பெற வேண்டும்;'அவர்கள் இருவரிடமும், ராஜினாமா கடிதம் பெற வேண்டும்; ஜெ.,

மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணைக்கு, மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்' என, பன்னீர் அணியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவல கத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என, முதல்வர் தெரிவித்து உள்ளார். ஜெ., ஆட்சியும், கட்சியும் நுாறாண்டு நிலைக்க வேண்டும். தொண்டர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடிவு செய்துள்ளோம்.எங்கள் தரப்பினர், மிகவும் பொறுமையாக பேசினர். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; கட்சி சின்னத்தை மீட்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். அமைப்பு செயலர் வைத்திலிங்கம், 'யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்' என, கூறினார்.

பன்னீர் அணியுடன் பேச்சு நடத்த, வைத்தி லிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகத்திற்கு, தினமும் அமைச்சர்கள் வருவர்; பன்னீர் தரப்பினர் வந்தால் பேசத் தயார். அனைவரும் ஒற்றுமை யாக இருந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
 

அவகாசம்

 

அமைச்சர், சி.வி.சண்முகம் கூறியதாவது:


இன்றைக்கு கூட பேச தயாராக உள்ளோம். தேர்தல் கமிஷன், ஆவணங்கள் சமர்ப்பிக்க, கால அவகாசம் வழங்கி உள்ளது. பேச்சுக்கு பின் தான், எதுவும் கூற முடியும். நாங்கள் வெளிப் படையாக இருக்கிறோம்; எந்த நிபந்தனையும் கிடையாது. நாங்கள் அனைவரும், ஒன்றாக பணிபுரிந்தவர்கள். தற்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதை ஒன்றாக அமர்ந்து பேசினால், களைய முடியும்.

பேச்சுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், எந்த வார்த்தையையும் பேச, நாங்கள் தயாராக

 

இல்லை. கட்சி ஒன்றாக இணையவேண்டும்; இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்; தொடர்கள் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதை யடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:

எங்கள் அணி சார்பில், இரண்டு கருத்தை முன்வைத்தோம். அதன் தொடர்ச்சியாக, வைத்திலிங்கம் தலைமையில், பேச்சுக்காக, ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தொண்டர்கள் நலன் கருதியும், நாட்டு மக்கள் நலன் கருதியும், நாங்களும் பேச்சு நடத்த, ஒரு குழுவை அமைக்க உள்ளோம். அந்த குழுவில், யார் யார் அங்கம் வகிப்பர் என்பது, பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரு அணிகளும் குழு அமைப்பதால், ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தாங்கள் முன்வைத்த நிபந்தனைகளில் பின் வாங்காமல், பேச்சை நடத்துவது என்பதில், பன்னீர் அணியினர் உறுதியாக உள்ளனர்.
 

தலா ஏழு பேர்


பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி தலைமையில், ஏழு பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக் குழுவில், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், விஸ்வநாதன், எம்.பி., மைத்ரேயன், முன்னாள், எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ., பாண்டியராஜன், முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சசி அணி சார்பில், எம்.பி., வைத்திலிங்கம் தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்
பட்டு உள்ளது. இக்குழுவில், அமைச்சர்கள் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பன்னீர்செல்வம் கூறுகையில், ''பேச்சு நடை பெற, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பேச்சு நடத்துவர்; நல்லது நடக்கும்,'' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1756221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.