Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது

Featured Replies

பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது

 

ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன.

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது.

இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்களும் நான்கு முக்கிய வேட்பாளர்களில் உள்ளடங்குவர்.

இவர்களின் முக்கிய எதிரணி வேட்பாளரான பழமைவாத தலைவரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான பிரான்சுவா ஃபியோங் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல அமைச்சரவை பதவிகளை வகித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் அதிபர் தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்களான இந்த நால்வரில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கும் சூழல் தற்போது இல்லை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முன்னணியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இறுதி போட்டி மே 7-ஆம் தேதியன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-39683462

  • தொடங்கியவர்

முதல் சுற்று ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் வேட்பாளர்கள் - ஒரு பார்வை

 
 
ஐந்து முக்கிய வேட்பாளர்கள் ஃபிரான்ஸ்வா ஃபியோங், பென்வா அம்மூங், மரைன் லி பென், இமானுவேல் மக்ரோங் மற்றும் சாங்லுக் மெலாங்ஷாங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐந்து முக்கிய வேட்பாளர்கள் ஃபிரான்ஸ்வா ஃபியோங், பென்வா அம்மூங், மரைன் லி பென், இமானுவேல் மக்ரோங் மற்றும் சாங்லுக் மெலாங்ஷாங்

இன்று , ஞாயிற்றுக்கிழமை (23 ஏப்ரல்) நடைபெறவிருக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 11 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அதில் 4 பேர் போட்டியில் முன்னணி வேட்பாளர்கள், ஆனால் அதில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையில், முன்னிலை பெரும் இரண்டு பேருக்கான போட்டி மே 7 ஆம் தேதியன்று நடைபெறும்.

மரைன் லி பென்னை வேட்பாளராக களமிறக்கி, கடந்த 15 வருடங்களில் முதல்முறையாக தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெரும் வாய்ப்பை அதிகமாக பெற்றுள்ளது; இருப்பினும் மத்தியவாதக் கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரூங், கருத்துக் கணிப்புகளில் மரைன் லி பென்னிற்கு நிகராக இருக்கிறார்.

புகழ்பெற்ற முன்னாள் மத்திய வலதுசாரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங், பொது நிதியில் கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ள போதும் வேட்பாளர் போட்டியில் அவரும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தீவிர இடது சாரி கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் சாங்லுக் மெலாங்ஷாங்கிற்கு திடீரென ஆதரவு பெருகியுள்ளது.

மோசமான தரவீடுகளை பெற்றதால், நவீன ஃபிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர், ஃபிரான்ஸ்வா ஒல்லாந்த் இரண்டாம் முறையாக தேர்தலில் போட்டியிடவில்லை.

மரைன் லி பென் - தேசிய முன்னணி கட்சி

ஜனவரி மாதம் 2011 ஆம் ஆண்டில் தனது தந்தையிடமிருந்து கட்சி தலைமையை பெற்றார் மரைன் லி பென். அதற்கு அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

மரைன் லி பென்படத்தின் காப்புரிமைAFP

இமான்வேல் மக்ரோங்குடன் இவர் சரிசமான நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன இருப்பினும் இரண்டாம் சுற்றில் அவரை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரில் 13,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஃபிரான்ஸ் பொறுப்பல்ல என தவறாகக் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தினார்.

48 வயதாகும் மரைன் லீ பென் ஒரு வழக்கறிஞர் ஆவார்; கட்சியின் சட்ட துறைக்கு தலைமை வகித்தவர். இரண்டு முறை விவாகரத்து பெற்றுள்ளார் ;மேலும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

2010ல் கட்சித் தலைமைக்கு வரும் முன்னர், மரைன் லீ பென், பிரான்சில் முஸ்லீம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவதை, பிரான்ஸை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்கள் ஆக்ரமித்த சம்பவத்துடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஆனால், 2011லிருந்து அவரது தனது தொனியை சற்று மென்மைப்படுத்தியுள்ளார். அவரது கட்சியும் யூதர்களுடன் இணக்கத்தைக்காண முயன்று வந்திருக்கிறது.

லெ பென்னின் வாக்குறுதிகள்

சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் ;மேலும் ஆண்டிற்கு 10,000 குடியேறிகள்தான் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவார்கள்.

பிரான்சில் மசூதிகள் இடிக்கப்பட்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ,குறிப்பாக சமூக நலத்திட்டங்களின் கீழ், வீடுகள் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.

இமானுவேல் மக்ரோங்

39 வயதாகும் இவர் வெற்றி பெற்றால் ஃபிரான்ஸின் மிக இளம் வயது அதிபர் என்ற சிறப்பை பெறுவார்.

முதலீட்டு வங்கிசார் படிப்பை பயின்றுள்ள இவர், 2014 ஆம் ஆண்டு பொருளாதார அமைச்சர் என்ற பதவிக்கு முன்னர் அதிபர் ஒல்லாந்தின் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.

இமானுவேல் மக்ரோங்படத்தின் காப்புரிமைAFP

ஞாயிறன்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் மற்றும் தொழிற்துறைகளில் சிலவற்றை ஒழுங்குப்படுத்தும் "மக்ரோங் சட்டம்" என்ற சர்ச்சைக்குரிய சீர்த்திருத்த மசோதாவை கொண்டு வந்தார்.

மிதவாத கட்சியை சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதி, ஃபிராங்ஸ்வா பைரூ மற்றும் சோஷியலிச கட்சியின் முன்னாள் பிரதமர் மானுயெல் வால்ஸ்ஸின் பெரும் ஆதரவை இவர் பெற்றுள்ளார்.

வாக்குறுதிகள்

ஃபிரான்ஸில் வேலையில்லாதவர்களின் சதவீதத்தை 9.7 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைப்பது, மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை தந்துள்ளார்.

ஃபிரான்ஸ்வா ஃபியோங்

62 வயதாகும் இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். மத்திய வலது சாரி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை தோற்கடித்து பெரும் ஆதரவை பெற்றார்.

ஃபிரான்ஸ்வா ஃபியோங்படத்தின் காப்புரிமைAFP

தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு முறைகேடாக அரசு பணத்திலிருந்து சம்பளம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது; மேலும் அதுகுறித்து சட்டப்பூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் வேட்பாளாராக களமிருங்க மாட்டேன் என தெரிவித்திருந்த இவர் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டார். மேலும் தன்மீது சுமத்துப்பட்ட குற்றச்சாட்டு ஒரு அரசியல் சதி எனவும் தெரிவித்திருந்தார்.

சொத்து வரியை ரத்து செய்வதாகவும், ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை தகர்த்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பை வீழ்த்த சிரியாவிற்கு உதவப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஷான் லூக் மெலாங்ஷாங்

தீவிர இடது சாரி கட்சியை சேர்ந்த இவருக்கு 65 வயதாகிறது; இவர் தனது கூரிய நகைச்சுவை உணர்வால் தொலைக்காட்சி விவாதங்களில் மக்களை கவர்ந்துள்ளார்; மேலும் ஆறு நகரங்களில் ஒரே சமயத்தில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் தனது உருவத்தை கொண்டு வந்து மக்களை அசத்தியுள்ளார். கருத்து கணிப்புப்படி முன்னிலையில் உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர்.

ஷான் லூக் மெலாங்ஷாங்படத்தின் காப்புரிமைAFP

2008 ஆம் ஆண்டு சோசலிசக் கட்சியை விட்டு விலகி இடதுசாரி கட்சியை தொடங்கினார். அனைவருக்கும் வீடு மற்றும் சுகாதார சேவைகளுக்கு நிதி வழங்குதல் ஆகிய வாக்குறுதிகளை இவர் அளித்துள்ளார்.

பென்வா அம்மூங்

சோஷலிச கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் மானுவேல் வேல்ஸை தோற்கடித்து கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாளில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

பென்வா அம்மூங்படத்தின் காப்புரிமைAFP

இவரது தேர்தல் அறிக்கையில் கவர்ந்திழுக்கும் பல திட்டங்கள் உள்ளன. மனிதர்களை வேலையிழக்கச் செய்யும் ரோபோக்களை வைத்து இயங்கும் தொழில்களுக்கு வரி, போதைப் பொருளான, கானபிஸ் பயன்பாட்டை சட்டரீதியாக்குவது போன்றவை அவை.

2025 ஆம் ஆண்டுவாக்கில், மின்சாரத்தில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்படும் மற்றும் 2050 ஆம் ஆண்டு வாக்கில், அணு சக்தி சார்பிலிருந்து பிரான்ஸ் முற்றிலுமாக விலகும் என வாக்குறுதியளித்துள்ளார். இரண்டாயிரம் யூரோக்களுக்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் வகையில் அடிப்படை வருவாய் திட்டம் ஆகிய வாக்குறுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

பிற ஆறு வேட்பாளர்கள்

46 வயதாகும் ஃளோராங் சாட்டோ, 59 வயதாகும் ஃபிராங்ஸ்வா அஸ்லினோ, 75 வயதாகும் சாக் ஷெமினாட், 55 வயதாகும் நிகோலா குபோங் என்யாங், 61 வயதாகும் சாங் லசல், 50 வயதாகும் ஃபிலிப் புட்டு, ஆகியோரும் 2017 ஆம் ஆண்டிற்கான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

http://www.bbc.com/tamil/global-39683452

  • தொடங்கியவர்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

Fr-elections-composite.jpg

பிரான்ஸ் ஜனாதிபதி  தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளின்படி   எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மிதமான வலதுசாரியான  ஈமானுவல் மேக்ரோன் 23.7% வாக்குகளையும்,   அதிதீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் 21.7%  வாக்குகளையும் பெற்று முதற் சுற்றில் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க உள்ளனர்.

 

https://globaltamilnews.net/archives/24788

  • தொடங்கியவர்

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மையவாத மக்ரோங், லெ பென் தேர்வு

 
 

நேற்று நடைபெற்ற ஃபிரான்ஸின் அதிபர் தேர்தலில், மையவாத கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரைன் லெ பென்னை எதிர்கொள்ளவுள்ளதாக, தேர்தலின் ஏறக்குறைய இறுதி முடிவுகள் தெரிவிக்கின்றன.

 
 

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது.

இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடிப்பதாக அது அமையும்.

வெற்றிக்கு பிறகு பேசிய மக்ரோங்

ஆதரவாளர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய அவர், "ஒரு வருடத்தில் ஃபிரான்ஸின் அரசியலை மாற்றியுள்ளதாகவும், மக்கள் அனைவரும் தேசியவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அதிபர் ஒல்லாந்தின் பொருளாதார அமைச்சர் பதவியை விடுத்து புதுக் கட்சியை தொடங்கினார்.

இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. இவர் வெற்றி பெற்றால் நாட்டின் இளம் வயது அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

ஐரோப்பாவிற்கு ஆதரவான கொள்கையை கடைபிடிக்கும் இவர், ஃபிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும், பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொது முதலீட்டு திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளார்.

"வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி"

"தன்னை மக்களின் வேட்பாளர்" என்றிய கூறிய லெ பென் , "ஃபிரான்ஸின் நிலை மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும்" தெரிவித்தார்.

அதற்கான முதல்படி எடுக்கப்பட்டுவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்புமிக்கவை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்கள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும், தேசியவாத முன்னணி கட்சியின் தலைவர் மரைன் லெ பென். தனது கட்சியின் தொனியை சற்று மென்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு 2015 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய தேர்தலில் வெற்றிகளை பெற்று தந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஃபிரான்ஸின் உறவை மாற்றி அமைக்க நினைக்கும் லெ பென், ஒன்றியத்திலிருந்து வெளியேற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.

குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மற்றும் "கடும் போக்கு" மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39689765

  • தொடங்கியவர்

பிரான்ஸில் வரலாற்று மாற்றம் : ஜனாதிபதி தேர்தலில் அரசியல் அனுபவமில்லாத மக்ரோன் வெற்றி..!

 

 

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில் அரசியல் பிரச்சார அனுபவமில்லாதவரும், இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட எம்மானுவேல் மக்ரோன் அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

201704241039273963_francois2._L_styvpf.g

பிரான்ஸின் 24ஆவது ஜனாதிபதியாகவுள்ள பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம், இம்மாதத்துடன் நிறைவடைவதனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்ற நிலையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு மொத்த வாக்காளர்களில் சுமார் 80 சதவீதமான வாக்காளர்கள் தாமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

2017-04-23T203640Z_2108662430_RC15AAF0B3

மேலும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் பிலான், ஜீன் மெலன் சோன் மற்றும் பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்ட நிலையில், முதலாவது பெண் வேட்பாளர் மற்றும் வலதுசாரி தலைவர் மரின் லீ பென் மற்றும் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, கடந்த 60 வருடங்களாக ஆதிக்கத்திலிருந்து இரு பாரம்பரிய கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்துள்ளனர்.

201704241039273963_France-Fillon-concede

இந்நிலையில் முதல்கட்ட தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரான பிரான்கோயிஸ் பில்லான் போட்டியிலிருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் மே 7 திகதி இடம்பெறும். மேலும் அதிக ஆதரவை பெரும் வேட்பாளர் எதிர்வரும் மே 14 ஆம் திகதி பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/19345

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Brigitte Macron ist die starke Frau an der Seite Emanuel Macrons, des französischen Wahlsiegers vom Sonntag

 

Gemeinsam ging das Paar am Sonntag ins Wahllokal

பாலகனே! உனக்கு 39 எனக்கு 64....நான் சொல்லுறை கேள் ராசா ....

 

images?q=tbn:ANd9GcQBKhlcHewEDm0Tmd9g5guxEZYBzUQDxgLYywVmAu2x5430TIWA0g

விசுகருக்கு ஒரு எச்சரிக்கை...
உந்த லீ பென் எண்டவ சனாதிபதியாய் வந்தால் நீங்கள் ஜேர்மனிக்கு வாறதெண்டாலும் விசா எடுக்க வேண்டி வரும்.:grin:

மற்றது சுவியர்! கும்பாபிசேகமில்லை தீர்த்த திருவிழாவுக்கும் வாறதெண்டாலும் விசா எடுக்கணும் தெரியுமெல்லே..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.