Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி விடுவிப்புக்கு கால அவகாசம்

Featured Replies

காணி விடுவிப்புக்கு கால அவகாசம்

Sp02-5715db8a7377de384bf370af3674a0a6da403d17.jpg

 

தொடர்ந்தும் கோரிய படைத்தரப்பு; நிலைமை தொடரக்கூடாதென விசனம்

(ஆர்.ராம்)

வடக்கு, கிழக்கில் காணி­களை விடு­விப்­ப­தற்கு படைத்­த­ரப்பு தொடர்ந்தும் கால அவ­கா­சத்­தினை கோரி­யுள்­ளது. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லாத வகையில் பொது­மக்­களின் காணி­களை மீளக் கைய­ளிப்­ப­தற்கு தாம் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் அத்­த­ரப்பு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை வடக்கு, கிழக்கில் பொது­மக்­களின் காணி­களை படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்­ளமை தொடர்­பாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தாம் விரி­வாக எடுத்­து­ரைத்­துள்­ள­தாகத் சுட்­டிக்­காட்­டிய வடக்கு கிழக்கு மக்கள் பிர­தி­நி­திகள் கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்­தை­களின் பின்னர் காணப்­பட்ட அர்த்­த­மற்ற செயற்­பா­டுகள் போன்று எதிர்­கா­லத்­திலும் நிலை­மைகள் தொட­ரக்­கூ­டாது என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம் அளிக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் வலியுறுத்தியுள்ளனர்.  

வடக்கு கிழக்கில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து அத்­த­ரப்­பி­ன­ரு­ட­னான விசேட கூட்டம் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தலை­மையில் நேற்று திங்கட் கிழமை பாது­காப்பு அமைச்சில் நடை­பெற்­றது.

இந்தக் கூட்­டத்தில் பாது­காப்பு தரப்பில் பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­தன, பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி, இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டினன் ஜெனரல் கிஷாந்த டி சில்வா, கடற்­ப­டைத்­த­ள­பதி வைஷ் அட்­மிரல் ரவீந்­திர விஜேய குண­ரட்ன, உட்­பட முப்­ப­டை­களின் உயர் அதி­கா­ரி­களும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

வடக்கு கிழக்கு மக்கள் பிர­தி­நி­திகள் சார்பில் சிறுவர் இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சிவ­மோகன், சிவ­சக்தி ஆனந்தன், ஈ.சர­வ­ண­பவன், செல்வம் அடைக்­க­ல­நாதன், வியா­ழேந்­திரன், கோடீஸ்­வரன், ஸ்ரீநேசன், யேகேஸ்­வரன், வடக்கு முதல்வர் சார்பில் மாகாண கல்வி அமைச்சர் குரு­கு­ல­ராஜா ஆகி­யோரும் மன்னார் மாவட்ட குரு­மு­தல்வர் விக்டர் சோசையும் பங்­கேற்­றனர்.

முற்­பகல் 11.30இற்கு ஆரம்­ப­மான இக் கூட்­டத்தில் முதலில் பாது­காப்புச் செய­­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி காணி விடு­விப்பு குறித்து படைத்­த­ரப்பின் நிலைப்­பாட்டை வௌிப்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். குறிப்­பாக தேசிய பாது­காப்­பினை கருத்திற் கொண்டு அதற்கு பாத­க­மில்­லாது காணி­களை விடு­விப்­ப­தற்கு தாங்கள் தயா­ரா­க­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

முள்­ளிக்­குளம் காணிகள்

அத­னை­ய­டுத்து மன்னார் மாவட்­டத்தில் கடற்­ப­டை­யி­ன­ரி­டத்தில் உள்ள முள்­ளிக்­குளம் காணி விவ­காரம் தொடர்­பாக கலந்­து­ரை­யாடல் ஆரம்­ப­மா­னது. வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் இது தொடர்­பான கேள்­வியை கேட்­டனர்.

இச்­ச­ம­யத்தில் அக்­க­டற்­ப­டைத்­த­ளத்தின் அவ­சியம் அது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் வழங்­கிய பதில் போன்­ற­வற்றை மையப்­ப­டுத்தி கடற்­ப­டைத்­த­ள­பதி தனது பதிலை வழங்­கினார்.

இருப்­பினும் அக்­காணி பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மா­னது என்­ப­தையும் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து மக்கள் எவ்­வாறு வௌியே­றி­னார்கள் என்­பது குறித்தும் சார்ள்ஸ் எம்.பி குறிப்­பிட்டுக் கூறினார்.

அவ­ரை­ய­டுத்து மன்னார் மாவட்ட குரு முதல்­வரும் அக்­கா­ணி­களை விடு­விக்க வேண்­டிய அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தலைச் செய்­த­தோடு மன்னார் மாவட்­டத்தில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விக்க வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினார்.

இதன்­போது அமைச்சர் சுவா­மி­நாதன் குறக்­கீடு செய்து அக்­க­ணி­களை விடு­விப்பதற்கு உரிய இடத்தை கடற்­ப­டைத்­த­ள­பதி பார்­வை­யிட வேண்டும். மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். இந்த கலந்­து­ரை­யா­டலை நட்பு ரீதியில் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

தொடர்ந்து இரு­த­ரப்பு பரஸ்­பர கருத்­துக்­க­ளுக்குப் பின்னர் அடுத்த இரு வாரங்­களில் மன்னார் முள்­ளிக்­குளம் கடற்­ப­டைத்­த­ளத்­திற்கு கடற்­ப­டைத்­த­ள­பதி நேரில் விஜயம் செய்­வ­தெ­னவும் அச்­ச­ம­யத்தில் அமைச்சர் சுவா­மி­நாதன், மற்றும் ஏனைய அப்­பி­ர­தேச மக்கள் பிர­தி­நி­தி­களும் நேரில் விஜயம் செய்து அது குறித்து அடுத்த கட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் அத்­துடன் மன்னார் மறை­மா­வட்ட ஆய­ரையும் இச்­ச­ம­யத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கேப்­பா­பு­லவு காணிகள்

தொடர்ந்து கேப்­பா­பு­லவில் உள்ள காணிகள் விடு­விப்பு குறித்து வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் கேள்­வி­களை தொடுத்தார். குறிப்­பாக இரர்­ணு­வத்­தளம் அமைந்­துள்ள மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை எப்­போது விடு­விப்­பீர்கள். இரா­ணுவ முக­ரைமை மாற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எப்­போது எடுக்­கப்­படும். மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என க் கேள்­வி­களைத் தொடுத்தார்.

இதன்­போது இரா­ணு­வத்­த­ள­பதி நாம் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு தயா­ரா­கவே உள்ளோம். அதனை ஏற்­க­னவே கூறி­விட்டோம்.எமது முகாமை இட­மாற்றிச் செல்­வ­தற்கு மாற்­றுக்­கா­ணிகள் அவ­சி­ய­மா­க­வுள்­ளன. அவை கிடைத்­த­வுடன் முகாமை மீள நிர்­மா­ணிப்­ப­தற்­கு­ரிய நிதி வச­திகள் கிடைத்­த­வுடன் நாங்கள் அதனை மக்­க­ளி­டத்தில் கைய­ளிப்போம். அதற்கு எமக்கு சொற்ப கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது என்றார்.

இந்­நி­லையில் கேப்­பா­பு­லவு இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள காணி­களை மக்­க­ளி­டத்தில் மீளக் கைய­ளிப்­ப­தற்கு ஆறு வார­கா­ரங்­களில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­தெ­னவும் இரா­ணுவ முகாமை மாற்­று­வ­தற்­கு­ரிய நிதி ஏற்­பா­டு­களை விரைந்து மேற்­கொள்­வ­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது.

செட்­டிக்­குளம் காணிகள்

வவு­னியா செட்­டிக்­கு­ளத்தில் 6348ஏக்கர் காணிகள் இரா­ணு­வத்­தி­ன­ரி­டத்தில் உள்­ளன. இது மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள். இக்­கா­ணி­களை மக்கள் துப்­பு­ரவு செய்து மீளக்­கு­டி­யேற முற்­பட்ட தரு­ணத்தில் அவர்கள் அங்­கி­ருந்து விரட்­டப்­பட்­டுள்­ளனர் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் பாது­காப்பு அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்தார்.

இச்­ச­ம­யத்தில் அவை அனைத்தும் அரச காணிகள் என பது­காப்புத் தரப்­பினர் குறிப்­பிட்­ட­போது பதி­லு­ரைத்த சிவ­சக்தி எம்.பி அதில் அரச காணிகள் காணப்­பட்­டா­லும அங்கு பொது­மக்கள் வாழ்ந்­துள்­ளனர். 1977 ஆம் ஆண்டு இந்­திய வம்­சா­வளி மக்கள் அங்கு குடி­யேறி வாழ்ந்­துள்­ளனர்.

அவர்கள் அங்கு வாழ்ந்­த­மைக்­கான சான்­றுகள் உள்­ளன. அது­மட்­டு­மன்றி அங்கு தனி­யா­ருக்கு சொந்­த­மான காணிகள் உள்­ளன. அவற்­றினை விடு­விப்­பது குறித்து பொருத்­த­மான பதில் வழங்க வேண்டும் என்றார்.

அத்­துடன் காணிகள் தொடர்­பாக பல்­வேறு தரு­ணங்­களில் பேசி­விட்டோம். அண்­மைக்­கா­லத்தில் கூட நான்கு தட­வை­க­ளுக்கு மேல் பேசப்­பட்டு விட்­டது. இது வரையில் உரிய தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆர­சியல் தலை­வர்­க­ளுடன் பேசும்­போது அதி­கா­ரிகள் தடை­யாக உள்­ள­தாக கூறு­கின்­றனர்.

அதி­கா­ரிகள் காணி­களை விடு­விப்­ப­தற்கு தாங்கள் தயா­ரா­க­வுள்­ள­தாக கூறி­கின்­றனர். உண்­மையில் யார் காணி விடு­விப்­புக்கு தடை­யாக உள்­ளனர் என்­பது எங்­க­ளுக்கு தெரி­யா­துள்­ளது எனவும் சிவ­சக்தி எம்.பி இதன்­போது பிரஸ்­தா­பித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த விடயம் சம்­பந்­த­மான உரிய கவனம் செலுத்­தப்­படும் என பாது­காப்­புத்­த­ரப்­பி­னரால் தெரி­விக்­கப்­பட்­டது.

பலாலி காணிகள்

தொடர்ந்து பலாலி படைத்­த­லை­மை­யத்­தினை அண்­மித்­துள்ள பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் அனைத்தும் பல ஆண்­டு­க­ளாக இரா­ணு­வத்­தி­ர­னரின் பிடிக்குள் உள்­ளன. அவற்றை மீளக் கைய­ளிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என சிறுவர் விவ­கார இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கோரினார்.

இதன்­போது விமா­னப்­ப­டைத்­த­ள­பதி 1982ஆம் ஆண்டி குறித்த காணிகள் சுவீ­க­ரி­கப்­பட்டு விட்­டன. தற்­போது விமா­னத்­தள விஸ்­த­ரிப்பு குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது எனக் குறிப்­பிட்டார்.

அச்­ச­ம­யத்தில் குறுக்­கீடு செய்த விஜ­ய­கலா மகேஸ்­வரன், பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் மீளவும் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அதுவே எமது நிலைப்­பாடு. விமான நிலைய விஸ்­த­ரப்பை காரணம் காட்டி பொது­மக்­களின் காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வதை ஏற்க முடி­யாது என உறு­தி­யாக குறிப்­பிட்டார்.

அது மட்­டு­மன்றி மயி­லிட்டி துறை­முக விடு­விப்பு குறித்து நிலவும் தாம­தங்­க­ளையும் அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு வலைஞர் மடம், தெல்­லிப்­பளை, வலி.வடக்கின் ஏனைய பகு­திகள், யாழ்ப்­பா­ணத்தில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள ஏனைய தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணிகள் அனைத்தும் மக்­க­ளிடத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். அந்த நிலைப்­பாட்டில் எவ்­வி­த­மான மாற்­ற­மு­மில்லை. அவை அனைத்­துமே தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணிகள் எனச் சுட்­டிக்­காட்­டினார்.

அச்­ச­ம­யத்தில் பலாலி காணி விவ­காரம் தொடர்­பாக தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­வ­தாக தெரி­வித்த பாது­காப்புத் தரப்பு, மயி­லிட்டி துறை­முக த்தை விரை­வாக விடு­விப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

பலாலி விமான நிலைய காணிகள் விடு­விப்பு குறித்த அமைச்­சரின் கோரிக்­கையின் போது அதே கருத்­தினை கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சர­வ­ண­ப­வனும் ஏக காலத்தில் முன்­வைத்­தி­ருந்தார்.

இர­ணை­தீவு காணிகள்

இரணை தீவு காணிகள் ஒரு­ப­குதி விடு­விக்­கப்­பட்­டுள்ள போதும் ஏனைய பகு­திகள் விடு­விக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­ற­மையால் அத்­தீவில் வாழும் மக்கள் பலத்த பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர் என இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா இச்­ச­ம­யத்தில் சுட்­டிக்­காட்­டினார்.

அது­கு­றித்து கருத்­து­ரைத்த கடற்­ப­டைத்­த­ரப்பு இந்­திய ரோலர்கள் வரு­கையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நாம் அப்­ப­கு­தியில் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அங்கு தொழில்­நுட்ப நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் குறிப்­பிட்­டது.

எனினும் அப்­ப­கு­தியில் கடற்­ப­டை­யினர் தங்­கி­யி­ருப்­பதால் இர­ணை­தீவு மீனவ மக்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர் என மீண்டும் இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா சுட்­டிக்­காட்­டி­ய­தோடு மாற்­று­வ­ழி­யினை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் கேட்­டுக்­கொண்டார்.

கிழக்கு மாகாண

காணி­வி­வ­காரம்

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை தவிர்ந்த மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களில் படைத்­த­ரப்­பி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி­களின் விப­ரங்­களை அம்­மா­வட்ட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­க­ளான ஸ்ரீநேசன், வியா­ழேந்­திரன், யேகேஸ்­வரன், மற்றும் கோடீஸ்­வரன் ஆகியோர் படைத்­த­ரப்­பினர் முன்­னி­லையில் தௌிவு படுத்­தினர்.

சிறு­சிறு பகு­தி­யாக ஆங்­காங்கே தமது நிலங்கள் படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளை­மை­யையும் அங்கு முகாம்கள் மற்றும் படைத்­த­ரப்­பி­னரின் நட­மாட்­டங்­களால் தமது மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளையும் தௌிவாக எடுத்­து­ரைத்­தனர்.

அவற்றை கவ­னத்­திற்­கொள்­வ­தாக தெரி­வித்த படைத்­த­ரப்பு முதற்­கட்­ட­மாக கிராண் முறக்­கட்­டஞ்­சேனை பகு­தியில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள 20ஏக்கர் நிலத்தை விடு­விப்­பது குறித்து உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­க­ப­டு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­திரன் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள காணி விடு­விப்பு குறித்து தமது உறுப்­பி­னர்கள் அனை­வரும் வலி­யு­றுத்­திய விட­யங்கள் தொடர்­பாக கூறு­கையில், கிழக்கு மாகா­ணத்தில் தற்­போது 19 இடங்­களை படைத்­த­ரப்பு ஆக்­கி­ர­மித்­துள்­ளது. இவை அனைத்தும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணிகள். கிரான் முறக்கட்டஞ்சேனை, புச்சங்கேணி, வவுணதீவு போன்ற இடங்களில் 20ஏக்கர், 10ஏக்கர் காணிகளை படைத்தரப்பு கையகப்படுத்தி வைத்துள்ளது.

இந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி மாவட்ட அபிவிருத்திக் குழு் கூட்டங்களில் 2016ஆம் ஆண்டு தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் இதுவரையில் அது குறித்து எந்தவிமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக கிராண் முறக்கொட்டஞ்சேனை பகுதியில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் அந்த பகுதிக்கான பாடசாலை அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்குகின்றது. மக்கள் சொந்த இடங்களின்றி அல்லல்படுகின்றனர். இந்த நிலைமைகள் தொடர்வதற்காக ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை.

ஆகவே காணிகள் விடுவிப்பு குறித்து காத்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். கடந்த கூட்டங்கள் போன்று இந்த கூட்டமும் அமைந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தினோம் என்றார்.

முதலமைச்சரின் ஆவணம்

கூட்டத்தின் இறுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சார்பில் கலந்து கொண்ட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கில் படைத்தரைப்பினரிடத்தில் உள்ள காணிகள், இராணுவத்தினர் கையாளும் வளங்கள், குறிப்பாக விவசாய நிலங்கள், நீர் வழங்கல் போன்றவை தொடர்பான விடயங்களை விரிவாக குறிப்பிட்டு ஆவணமொன்றை வாசித்துக்காட்டியதோடு அந்த ஆவணத்தை அமைச்சர் சுவாமிநாதனிடத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.