Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வடக்கு, கிழக்கில் நாளை பூரண ஹர்த்தால்

Featured Replies

காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வடக்கு, கிழக்கில் நாளை பூரண ஹர்த்தால்

p10-e0e19a8f50b71263ef65122ed3385e33a1411935.jpg

 

அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என பல தரப்புக்களும் ஆதரவு

(ஆர்.ராம்)

காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் வடக்கு, கிழக்கில் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களின் நியா யமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாளைய தினம் வடக்கு, கிழக்  கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை, சமத்துவம், சமுக நீதிக்கான மக்கள் அமைப்பு, சிவில் மற்றும் பொது அமைப்புக்கள், வர்த்தக அமைப்புக்கள், பல்கலைக்கழக சமுகத்தினர், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினர், தொழிற்சங்கங்கள், மீனவ அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.  

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வலிந்து காணமலாக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு என்ன நடந்து? அவர்கள் எங்கே உள்ளனர்? யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் தொடர்பாக ஒரு பதிலை வழங்குவதற்கு தாமதமேன்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து தமது உறவினர்களை கண்டறிவதற்காக போராட்டமொன்று கிளிநொச்சி மாவட்ட காணமலாக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சொற்ப கால இடைவௌியில் வவுனியாவிலும் வடமராட்சி மருதங்கேணியிலும், திருகோணமலையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இப்போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு சரசாரியாக இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் இவ்வறவழிப்போராட்டங்களுக்குரிய பதிலை எந்தவொரு தரப்பினரும் வழங்காத நிலையிலும் இப்போராட்டங்கள் குறித்து அரசாங்கம் எவ்விதமான கரிசனைகளை செய்யாதிருக்கின்ற நிலையிலும் தமது நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உரிய பதிலொன்று வழங்கப்படவேண்டியது அவசியம் என்பதை மேலும் அழுத்திக் கோரும் வகையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 27ஆம் திகதி முழு அளவிலான கதவடைப்பு போராட்டமொன்றை முன்னெடுக்குமாறு காணலாக்கப்பட்ட உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் ஏனைய மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணமலாக்கப்பட்ட உறவினர்களும் ஏககாலத்தில் தமது போராட்டங்களுக்கும் வலுச்சேர்த்து உதவுமாறு கோரிக்கை விடுத்தன. 

இந்நிலையிலேயே வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் நாளை 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு பல தரப்புக்கள் ஆதரவு வௌியிட்டுள்ளன. அவ்விபரங்கள் வருமாறு, 

கூட்டமைப்பு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், காணமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களுக்கான நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த விடயத்தில் நாம் மக்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதோடு குறித்த பூரண ஹர்த்தாலுக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றோம் என்றார். 

இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் தமது பூரண ஆதரவை வௌிப்படுத்துவதாகவும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளன. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கூறுகையி்ல், வலிந்து காணமலாக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு வழங்கி நிற்பதோடு மட்டுமன்றி அந்த உறவுகளுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் பதிலளிக்க வேண்டும். அதிலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முடியாது என்றார். 

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் தமது கட்சி காணாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் நியாயமான போராட்டத்திற்கு உரிய தீர்வை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளதோடு நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் பூரணமான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்கள் பேரவை ஆதரவு

காலாகாலமாக, வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிவரும் இந்த மக்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை தனது புரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து அவ்வமைப்பின் இணைத்தலைவர் ரி.வச்தராஜா விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறும் புரண ஹர்த்தாலின்போது தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். 

மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் அதனை வலியுறுத்தியும் வந்துள்ளது. அத்தோடு இந்த மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு அனைத்து மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவேண்டும். 

இம்மக்களின் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தம்மாலான பங்களிப்பை வழங்கி, எம் மக்களின் நீதிக்கான குரல் மேலும் உறுதிப்படவும் சர்வதேசத்தின் காதுகளை எட்டவும் நாம் செயற்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது புரண ஆதரவைத் தெரிவித்து வௌியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களில் இயல்பு நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக பல்வேறு விட்டுக் கொடுப்புகளையும், தியாகங்களையும் எமது இனம் சார்ந்த கட்சிகளும், மக்களும் செய்த பின்னரும் எதுவுமே நடைபெறவில்லை.

ஆயுதப் போராட்டம் அறவழிப் போராட்டமாக மாறி அனைத்துத் தரப்பினரும் வீதியில் நாள்கணக்காக, மாதக்கணக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது. எதையும் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. இத்தகைய நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் அறவழிப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். 

வடக்கு, கிழக்கில் வாழுகின்ற அனைத்து மக்களும் சிறப்பாக கல்விப்புலம் சார்ந்த அனைவரும் சேர்ந்து நாளை வியாக்கிழமை நடைபெறும் முழு அடைப்புக்கு புரண ஆதரவை வழங்குவதோடு இதுபோன்ற முனைப்புக்களைத் தொடர்ந்தும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.

கடையடைப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவுகளை வழஙகவேண்டும் எனக் கோரி வீணாகான குருமார் பீடம் சார்பில் சிவசிறீ சபா வாசுதேவக் குருக்கள் விடுத்துள்ள அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை வியாழக் கிழமை நடத்த ஏற்பாடாகியுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் பேசும் வடக்கு - கிழக்கு தாயக மக்கள் அனைவரும் தமது மேலான ஆதரவை வழங்குமாறு குருமார் சந்நிதானம் வேண்டிக் கொள்கின்றது.

அரசாங்கத்தினுடைய கவனிப்பு அற்று நீண்ட நாள்களாக போராடிக் கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடாத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் கருத்து முரண்பாடுகள் அற்ற வகையில் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்துக் குருமார்களும் ஆலய சமூகத்தினரும் ஆன்மீக வலுச்சேர்க்க தமது ஒத்துழைப்புக்களை வழங்கும் முகமாக அன்றையதினம் இறைசந்நிதானங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகின்றோம் என்றுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவருமான அருட்தந்தை வ.சக்திவேல், காணாமலக்கப்பட்டோரின் உறவினர்களினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இதனோடு முன்வைக்கின்றோம் என்று தெரிவித்தார்.

சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார், காணமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலை அரசாங்கம் தமதிக்காது வௌிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதோடு உறவுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமது அமைப்பும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கவதாக குறிப்பிட்டார்.

முஸ்லிம் சிவில் சமூகம் ஆதரவு

வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் தவிசாளர் எம்.எம்.எம்.றமீஸ், செயலாளர் ஜனாபா ஜென்ஸிலா மஜீத் ஆகியோரின் விடுத்துள்ள அறிவிப்பில், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கடந்த 8 வருடங்களுக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களும், அரசியல் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், சர்வதேச சமூகமும் பல்வேறு அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற சந்தர்ப்பத்திலும் இதுவரை மக்கள் திருப்திப்படும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையினையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இது ஒரு துரதிஷ்டமான நிலைமையாகும். 

இவ்வாறான நிலையில் 2017 ஆம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் மக்கள் பொறுமையிழந்து வீதிகளுக்கு இறங்கி தொடர் மக்கள் போராட்டங்களே இதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்பி போராட்டங்களைத் தொடக்கியிருக்கின்றார்கள், மக்கள் என்ற ரீதியில் அவர்களால் முடியுமான மிகப்பெரிய ஆயுதம் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களேயாகும். 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நிலவிடுவிப்பு தொடர்பில் அரசின் நிலைப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் தன்னுடைய முழுமையான ஆதரவை வௌிப்படுத்தி நிற்கின்றது என்றுள்ளது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன்பேணும் அமைப்பின் செயலாளர் ஐ.எல்.எம்.பாருக் விடுத்துள்ள அறிவிப்பில், வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் நாளை வியாழக் கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் ஆதரவு வழங்குகின்றோமமக்களின் உரித்துக்களுக்கான - உரிமைக்கான போராட்டங்கள் என்றும் வெற்றி பெற வேண்டும் என்றுள்ளது.

அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் விடுத்துள்ள அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தேடுகின்ற நீண்ட - நெடிய போராட்டத்தை, கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்கின்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் நடத்தும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. 

அதேநேரம், வவுனியா மாவட்ட நகர சிறுவியாபாரிகள் சங்கத் தலைவர் யுகைப் கான் வவுனியா மாவட்ட சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஷ்ணன் வடமாகாண அழககங்களின் சங்களின் சம்மேளனத் தலைவர் க.நாகராஜா யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம், இளைஞர் திறன் விருத்தி அமையம், வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட உள்ளுார் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஆகியனவும் இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக உத்தியோக பூர்வமான அறிவிப்புக்களை விடுத்துள்ளன. 

அம்பாறையிலும் ஆதரவு

கடை­ய­டைப்பு நிகழ்­விற்கு அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள பல அமைப்­புக்­களும் தங்­க­ளது ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன.

அந்­த­வ­கையில்

கல்­மு­னையில் உள்ள மாணவர் மீட்பு பேர­வை­யா­னது அதற்­கான முழு ஆத­ர­வி­னையும் தெரி­விப்­ப­தா­கவும் எதிர்­வரும் நாட்­களில் இது­தொ­டர்­பாக இன்னும் பல அமைப்­புக்­க­ளுடன் தாங்கள் உரை­யா­ட­வுள்­ள­தா­கவும் பின்னர் அவர்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு இந்த தங்­க­ளது முழு ஆத­ர­வி­னையும் வழங்­க­வி­ருப்­ப­தாக அந்த அமைப்பின் தலை­வரும் பொறி­யி­ய­லா­ள­ரு­மான கணேஸ் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது அமைப்பின் தலைவி தம்­பி­ராச செல்­வ­ராணி இது தொடர்­பாக தனது கருத்­தினை பதிவு செய்யும் போது..

பல நாட்­க­ளாக தங்­க­ளது உற­வு­களை இழந்­த­வர்கள் தங்­க­ளுக்­கான நீதி­யினை வேண்டி வட­மா­கா­ணத்­திலே அமை­தி­யான போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­றார்கள் அதே போன்று நாங்­களும் எங்­க­ளது அம்­பாறை மாவட்­டத்­திலே முன்பு பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்தோம் எதற்கும் இந்த அரசு பதி­ல­ளிக்­க­வில்லை அதன்­கா­ர­ண­மாக எமது உற­வுகள் தற்­போது போராட்­டங்­களை வட­மா­கா­ணத்தில் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றார்கள்.

அத­னொரு கட்­ட­மாக எதிர்­வரும் 27 ஆம் திகதி அவர்­க­ளது போராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகையில் எமது அம்­பாறை மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்க அமைப்­பா­னது பூரண ஆத­ர­வினை வழங்கும் எனவும் கூறினார்.

கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் தவ­ராசா கலை­ய­ரசன் இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கையில்..

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் தங்­க­ளது உற­வு­களை எம்­மிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் அல்­லது அதற்­கான சரி­யான பதிலை கூற­வேண்டும் என்று பல நாட்­க­ளாக அவர்­க­ளது போராட்­ட­மா­னது தொடர்ந்து கொண்டு செல்­கின்­றது.

இந்த விடயம் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பேசப்­பட்டு வந்­தது ஆனால் அதற்­கான சரி­யான, உறு­தி­யான எந்­தத்­தீர்­வி­னையும் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் முன்­வைக்­க­வில்லை இன்று காணாமல் ஆக்­கப்­பட்டோர், கொலை செய்­யப்­பட்­டோ­ரது உற­வுகள் அவர்­களை தேடி அலைந்து இது­வரை எந்­தத்­தீர்வும் கிடைக்­காத கார­ணத்­தினால் வீதி­களில் உட்­கார வேண்­டிய ஒரு துர்ப்­பாக்கி நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்­டிலே ஆங்­காங்கே வேறு மாகா­ணங்­களில் ஒரு சில நிகழ்­வுகள் நடந்­தி­ருந்­தாலும் உண்­மை­யிலே வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் அதிகளவானோர் காணாமலாக்கப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் இருக்கின்றார்கள் ஆகவே காணாமல் ஆக்கப்பட்டோர் எதிர்வரும் 27 ஆம் திகதி எடுக்விருக்கும் நடவடிக்கைக்கு தாங்கள் பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும் கூறினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-26#page-1

  • தொடங்கியவர்

 

வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த உறவுகளின் நீதிக்கான போராட்டம் வெல்லட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.