Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபுலத்தின் சிலைகளும் வரலாறுகளும்

Featured Replies

வடபுலத்தின் சிலைகளும் வரலாறுகளும்

 

வரலாறும் இலக்­கி­யமும் வெவ்­வேறு நோக்கம் கொண்­டவை. உள்­ளதை உணர்ச்சிக் கலப்­பின்றி கூற­மு­யல்­வது வர­லாறு. உணர்ச்­சியும் கற்­ப­னையும் கலந்து அமை­வது இலக்­கியம். எனது பண்­டா­ர­வன்­னியன் நாடகம் இலக்­கி­ய­மே­யன்றி, வர­லாறு அல்ல. இதை விமர்­ச­கர்கள் மனதில் கொள்ள வேண்டும். முல்­லை­மணி வே.சுப்­பி­ர­ம­ணியம் 2015 ஆம் ஆண்டு ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லக முத்­தெழில் சஞ்­சி­கைக்­கான ஆசிச்­செய்தி.

இலங்­கையின் தமிழ்ப் பிர­தே­சங்­களில் மகாத்­மா ­காந்தி, விவே­கா­னந்தர், சேக்­கிழார், கம்பர், திரு­வள்­ளுவர் மற்றும் ஆல­யங்­களில் சமயக் குர­வர்­களின் சிலைகள் ஆகி­யன நிறு­வப்­பட்­டுள்­ளன. இவற்­றிற்­கெல்லாம் முறை­யான ஆதா­ரங்­க­ளுடன் வர­லா­றுகள் குறிக்­கப்­பட்டு வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் இலங்­கையின் தமிழ் பிர­தேச வர­லா­று­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளாக வட­பு­லத்தைச் சேர்ந்த பர­ரா­ச­சே­கரன், சங்­கி­லியன், பண்­டா­ர­வன்­னியன் போன்­றோ­ருக்­கான சிலைகள் நிறு­வப்­பட்­டுள்­ளமை பெரு­மை­தரும் விட­ய­மாகும். இதில் பண்­டா­ர­வன்­னியன் வர­லாற்றில் குழப்­பங்கள் உள்­ளதை அனை­வரும் அறிவர்.

இலங்கை அர­சினால் பண்­டாரவன்­னி­யனார் இரண்டு முறை தேசிய வீர­னாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளவர். இவ­ரு­டைய வர­லாற்றுக் குறிப்­புகள் கல்விப் பிரி­வி­னரின் பாட­வி­தா­னத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது. என்ன கார­ணமோ தெரிய­வில்லை. தற்­போது அந்த விப­ரங்கள் நீக்­கப்­பட்டு விட்­டன. சுமார் 225 வரு­டங்­க­ளுக்கு முன் னர் ஒல்­லாந்­த­ரு­டைய கடைசி காலத்­திலும், ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆரம்ப காலத்­திலும் வன்­னி­யனார் பதவி வகித்த பண்­டாரவன்­னி­ய­னா­ரு­டைய வர­லாறு சிதைக்­கப்­பட்டு சீர­ழிக்­கப்­பட்டுக் கொண்டு இருப்­பது கவ­லையைத் தரு­கி­றது.

வன்­னி­யனார் என்ற அதி­காரி பதவி வகித்­த­வ­ராக இருந்­தாலும், அந்­நி­யர்­க­ளுடன் ஏற்­பட்ட கருத்து மோத ல்கள் கார­ண­மாக அவர்­க­ளுக்­கெ­தி­ராக போர்க்­கொடி உயர்த்­தி­யவர். இவர் கடைப்­பி­டித்த போர்த் தந்­தி­ரங்கள் ஒல்­லாந்­த­ரையும் ஆங்­கி­லே­ய­ரையும் சிம்ம சொப்­ப­னத்­திற்கு உள்­ளாக்­கின. பண்­டாரவன்­னி­யனார் இந்தப் பிர­தே­சத்தில் வாழ்ந்த காலத்தில் விவ­சா­யத்­தைப் பெருக்க நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தார். அவ­ரு­டைய பெயரில் இரண்டு முக்­கி­ய­மான குளங்கள் இருக்­கின்­றன. அலை­கல்­லுப்­போட்­ட­குளம் என்ற பெய ரில் இருந்த குளம் பண்­டா­ரக்­குளம் என அழைக்­கப்­ப­டு­கி­றது. 1800 களில் இலுப்­பைக்­குளம் என்­றி­ருந்த பெயர் ஆங்­கில நிர்­வா­கத்தின் அனு­ம­தி­யுடன் பண்­டார இலுப்­பைக்­குளம் எனவும் பெயர் மாற்றம் பெற்­றதைக் குறிப்­பி­டலாம். அத்­தோடு நுவ­ர­க­லா­வெவ சிங்­களப் பிர­தேச நிர்­வா­கி­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வ­ரா­கவும் உற­வி­ன­ரா­கவும் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

பண்­டார வன்­னி­யனார் அறி­முகம்

கற்­சி­லை­ம­டுவில் காணப்­பட்ட நடு­கல்­லொன்றை ஆதா­ர­மாக வைத்து 1963 –- 1964 களில் பண்­டா­ர­வன்­னியன் நாட­கத்தை எழு­தி­யவர் எமது ஆசா­னான முல்­லை­மணி அவர்­க­ளாகும். வச­திகள் மிகவும் குறை­வாக இருந்­த­மை­யினால் அதனை ஒரு நாடக இலக்­கி­ய­மாக மட்டும் அமைத்­த­தாக தனது நாடகக் குறிப்­பு­களில் தெரிவித்­துள்ளார். இந்த விடயம் சம்­பந்­த­மாக அவர் அளித்­தி­ருந்த விளக்கம் மிகவும் முக்­கி­ய­மா­னது. உணர்ச்­சியும் கற்­ப­னையும் கலந்து அமை­வது இலக்­கியம். எனது பண்­டா­ர­வன்­னியன் நாடகம் இலக்­கி­ய­மே­யன்றி வர­லாறு அல்ல. இதை விமர்­ச­கர்கள் மனதில்கொள்ள வேண்டும் என்று தனது நாட­கத்­திற்கு விளக்கம் கூறி­யுள்­ளமை அவ­ரது எழுத்துப் புனி­தத்தை காட்­டி­யுள்­ளது என்று கூறலாம்.

 

பண்­டா­ர­வன்­னியன் அலை

தற்­போது வட­பு­லத்தில் பண்­டார வன்­னி­ய­னா­ருக்கு சிலை அமைக்­கப்­ப­டு­வது மிகவும் மும்­முர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இதன் பின்­னணி நோக்­கத்தை ஆய்வுசெய்­வது எனது நோக்­க­மல்ல. ஆனால் வட­பு­லத்தின் சிறந்த வீர­னாக மதிக்­கப்­பட்டு மத்­திய அரசின் தேசிய வீரன் பட்டம் பெற்ற ஒரு­வரை இழி­வு­ப­டுத்­து­வது போல அவ­ரு­டைய வர­லாற்றை திரித்துக் கூறு­வது, அவ­ரையும் அவரை அறி­மு­கப்­ப­டுத்­திய முல்­லை­மணியையும் இழிவுபடுத்­து­வ­து­போல அமைந்­துள்­ளது. 1964 களின் பின்னர் பேர­லை­போல பர­விய பண்­டா­ர­வன்­னியன் நாடகம் அன்­றைய காலத்தின் தேவை­யாக இருந்­தது. நாட­கத்துக்கு சுவை­யூட்டி இரசி­கர்­களின் மனதை சென்­ற­டை­வ­தற்­காக பல காட்­சிகள் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. இதற்­காக வன்­னியை ஆண்ட கடைசி மன்னன் பண்­டார வன்­னி­யனார் என்று ஆக்­கப்­பட்­டது. ஆனால் அவர் வன்­னி­யனார் பதவி வகித்த அதி­கா­ரி­யாகும். அவர் ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக எடுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஆங்­கி­லே­யர்கள் பண்­டார வன்­னி­ய­னா­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி விளக்கம் கேட்டு அவ­ருக்கு தூக்குத் தண்­டனை விதித்­தார்கள். கற்­சி­லை­ம­டுவில் தூக்­கி­ல­ிடப்­பட்டார் என்ற விட­யத்தை உணர்வுபூர்­வ­மாக சித்­திரிக்க மேடைக்­காட்­சிகள் அமைக்­கப்­பட்­டன. வன்னிப் பிர­தே­சத்தில் இருந்த அனைத்து வன்­னி­ய­னார்­க­ளு­டைய பெயர்­களும் கால­வே­று­பாட்டை கவ­னிக்­காமல் நாட­கத்தின் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு வைக்­கப்­பட்டு நாடகம் எழு­தப்­பட்­டி­ருந்­தது. உல­க­ளா­விய ரீதியில் இலங்கைத் தமி­ழர்­களின் அடை­யா­ள­மாக பண்­டா­ர­வன்­னியன் நாடகம் ஆயி­ரக்­க­ணக்­கான தட­வைகள் மேடை­யேற்­றப்­பட்டு வெற்­றியும் கண்­டது. இலங்கைத் தமி­ழர்­க­ளு­டைய வர­லா­று­களில் கற்­ப­னை­யான பல விட­யங்கள் வர­லா­றாக மாற்றம் பெற்­றி­ருப்­பதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இதற்குப் படித்த சமூ­கமும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்கு ஏதா­வது உள் நோக்கம் இருக்­கலாம். தற்­போது வட மாகா­ணத்­திற்­காக தனி­யான நிர்­வாக அலகு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் இலங்­கையின் சுதந்­திரப் போராட்­டத்தில் வட­பு­லத்தின் பங்­க­ளிப்­புப்­பற்றி பேச வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது.

பண்­டாரவன்­னி­யனார் சிலை   

1983 களில் பண்­டாரவன்­னி­ய­னா­ருக்கு வவு­னி­யா வில் சிலை அமைக்­கப்­பட்­டது. அதேநேரம் தற்­போது வன்னிப் பிர­தேச பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பண்­டா­ர­வன்­னியன் சிலையை நிறுவ நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. பண்­டா­ர­வன்­னியன் சிலை அமைப்பைப் பற்­றியும் சில விமர்­ச­னங்­களும் தெரிவிக்­கப்­பட்­டன.

மீண்டும் பண்­டாரவன்­னி­ய­னா­ருக்கு சிலை அமைக்­கப்­பட வேண்டும் என்ற உறுப்­பி­னர்­களின் கோரிக்­கைகள் வட­மா­காண சபை­யினால் ஏற்றுக்கொள்­ளப்­பட்­டது. வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் மற்றும் விளை­யாட்டுத் துறை அமைச்சின் நிதியில் இதற்­கென நிதி ஒதுக்­கப்­பட்­டது. வட­மா­கா­ண ­சபை முல்­லைத்­தீ­விலே பண்­டார வன்­னி­ய­னா­ருக்கு சிலை அமைத்து அண்­மையில் திறப்பு விழாவும் நடத்­தப்­பட்­டது.

 

பண்­டாரவன்­னி­யனார் வர­லாற்றுச் சுருக்கம்

போர்த்­துக்­கே­ய­ரு­டைய நிர்­வா­கத்தில் பனங்­கா­மத்தில் (பாணன்­கமம்) வன்­னி­ய­னா­ராக கயிலை வன்­னி­யனார் இருந்தார். இவர் 1644 தொடக்கம் 1658 வரை போர்த்­துக்­கே­ய­ரு­டைய நிர்­வாக அழைப்­பு­களை நிரா­க­ரித்து வந்தார். இதனால் அவரை பத­வியில் இருந்து அகற்ற போர்த்­துக்­கேயர் நேரம் பார்த்­தி­ருந்­தனர். இதே­வேளை கி.பி.1658 களில் இலங்கை ஒல்­லாந்தர் வச­மா­கி­யது. கயி­லை­வன்­னி­யன் ­பற்றி போர்த்­துக்­கே­ய­ரு­டைய குறிப்­பு­களில் இருந்து தெரிந்துகொண்ட ஒல்­லாந்தர், கி.பி. 1678 இல் கயிலை வன்­னியன் கால­மா­கும் ­வரை காத்­தி­ருந்­தனர். கயிலை வன்­னி­ய­னா­ருக்குப் பின்னர் பரம்­பரை நிய­ம­ன­மாக காசி­யனார் நிய­மிக்­கப்­பட்டார். இவரை பத­வி­யி­லி­ருந்து விலக்­கிய ஒல்­லாந்தர், பூந­கரி, கரைச்­சிப் ­ப­குதி வயல்வெளி­களில் விவ­சாயச் செய்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­வரும், அந்­நியர் ஆட்­சியில் முறை­த­வ­றாமல் திறை செலுத்தி வரு­பவர் என்ற பெரு­மை­யு­மு­டை­ய­வ­ரான டொன் பிலிப் நல்ல மாப்­பாண முத­லி­யாரை 1679 இல் பாணன்­க­மத்­திற்கு வன்­னி­ய­னா­ராக நிய­மித்­தனர்.

மாப்­பாண குலத்­த­வர்­களின் ஏக­போக நட­வ­டிக்­கையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக மடப்­பளி வேளாள குலத்தைச் சேர்ந்த டொன் கஸ்பர் இலங்கை நாரா­யண முத­லியை, பூநகரி யானை பிடிக்கும் தளத்­திற்கு பொறுப்­பாக ஒல்­லாந்தர் நிய­மித்­தனர். இதனால் கல­வ­ர­ம­டைந்த டொன் பிலிப் நல்ல மாப்­பாணர் தனது மூத்த சகோ­த­ரியை இலங்கை நாரா­ய­ண­ருக்கு மணம் முடித்து வைத்தார். அதற்குப் பின்னர் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மாப்­பாண வெள்ளாளரும் மடப்­பளி வெள்ளாள பரம்­ப­ரை­யி­னரும் நீண்ட காலம் வன்னிப் பிர­தே­சத்தை நிர்­வ­கித்து வந்­தனர். நல்ல மாப்­பாணர் பரம்­ப­ரையில் வந்­த­வர்­க­ளுக்கு எந்­த­வித தகு­தியும் பாராமல் வன்­னி­யனார் பத­விகள் வழங்­கப்­பட்­டன. அந்­நி­ய­ருக்கு முறை­யாக திறை செலுத்தி வந்­த­மையும் வர­லாற்றில் குறிக்­கப்­பட்­டுள்­ளது.

1679 களில் கரு­நா­வல் ­பற்­றிற்கும் கரை­யோரப் பிர­தே­சங்­க­ளுக்கும் வன்­னி­ய­னா­ராக நிய­மிக்­கப்­பட்டு இருந்த டொன் தியோகு புவி­நல்ல மாப்­பாண வன்­னி­யனார் பனங்­காம நல்­ல­மாப்­பாண வன்­னி­ய­னா­ரு­டைய சகோ­த­ரியை திரு­மணம் செய்­தி­ருந்தார். இந்தத் தம்­ப­தி­யி­ன­ரு­டைய மக­னான டொன் தியோகு அழ­கேசன் (அகி­லேசன்) புவி நல்ல மாப்­பாண வன்­னி­யனார், தனது முறை மாம­னான பனங்­காமம் டொன் பிலிப் நல்ல மாப்­பாண வன்­னி­ய­னா­ரு­டைய கடைசி மக­ளான குழந்­தை­நாச்­சனை திரு­மணம் செய்தார். அந்தத் தம்­ப­தி­யி­ன­ருக்கு சின்­ன­நாச்சன் என்ற பெண்­பிள்­ளையும் பண்­டாரம் என்ற பெயரில் ஆண் பிள்­ளையும் இருந்­தனர். டொன் தியோகு புவி நல்ல மாப்­பாண வன்­னி­யனார் உயி­ரி­ழந்­ததும், அவ­ரது மக­னான டொன் தியோகு அகி­லேசன் (அழ­கேசன்) புவி நல்­ல­மாப்­பாணர் கி.பி. 1742 களில் வன்­னி­ய­னா­ராகப் பதவி ஏற்றார். வன்­னி­ய­னார்கள் பலர் யானைத் ­தி­றையை செலுத்­தாது இருந்த கார­ணத்தால் கரு­நா­வல்­ பற்­றி­லி­ருந்த டொன் தியோகு அகி­லேசன் (அழ­கேசன்) புவி நல்­ல­மாப்­பாண வன்­னி­யனார் அநே­க­மான பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்டார். கரை­யோரப் பிர­தே­சங்கள் மேலும் பிரிக்­கப்­பட்­ட­போது கரிக்­கட்டுமூலைக்கு அவர் பொறுப்­பான வன்­னி­ய­னா­ராக நிய­மிக்­கப்­பட்டார். 1767 இல் அழ­கேசன் புவி நல்­ல­மாப்­பண வன்­னி­யனார் கால­மா­னதும், அவ­ரது மூத்த மக­ளான சின்­ன­நாச்சன் பரம்­பரை வன்­னிச்­சி­யா­ரகப் பொறுப்­பேற்றார்.

1783களில் வன்னி முழு­வ­தையும் தமது நிர்­வா­கத்தின் கீழ் கொண்­டு­வர ஒல்­லாந்த நிர்­வாகம் தீர்­மா­னித்­தது. இதற்­கென வன்னிப் பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பாக கப்ரன் தோமஸ் நாகெல் 1784 இல் நிய­மிக்­கப்­பட்டார். அவர் முல்­லைத்­தீவில் கோட்டை ஒன்றைக் கட்­டினார். வன்­னிச்­சி­மாரும் வன்­னி­ய­னார்­களும் கல­வ­ரங்­களை விளை­வித்­தனர். இந்தத் தாக்­கு­த­ல்­களை முறி­ய­டிக்க ஒல்­லாந்தர் சார்பில் உடுப்­பிட்­டியைச் சேர்ந்த கைப்­பித்தான் சந்­தி­ர­சே­கர முத­லியார் நடத்­திய எதிர்த் தாக்­கு­த­லுக்கு முகம்கொடுக்க முடி­யாமல் முல்­லைத்­தீ­வி­லி­ருந்து நுவ­ர­க­லா­வெ­விற்கும், பனங்­கா­மத்­தி­லி­ருந்து செட்­டி­கு­ளத்­திற்கும் வன்­னிச்­சிமார் தப்பியோடினர். கி.பி. 1785 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி வன்னிப் பிர­தேசம் முழு­வதும் ஒல்­லாந்த நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வரப்­பட்­டது. தப்­பி­யோடிய வன்­னி­ய­னார்கள் மற்றும் வன்­னிச்­சிமார் அனை­வரும் ஒல்­லாந்த நிர்­வா­கத்­திற்கு திறைசெலுத்த ஒப்­புக்­கொண்­ட­தினால் 1785 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி அவர்­க­ளுக்கு ஒல்­லாந்த நிர்­வா­கத்­தி­னரால் பொதுமன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. நுவ­ர­க­லா­வெ­வ­லி­ருந்து கரிக்­கட்­டு­மூ­லைக்கு திரும்­பிய சின்­ன­நாச்சன் வன்­னிச்­சியார் அதே ஆண்டு நுவ­ர­க­லா­வெவ திசா­வையின் மூத்த மக­னான குமா­ர­சிங்க திசா­வையை திரு­மணம் செய்துகொண்டார். சின்­ன­நாச்சன் வன்­னிச்­சியார், புகுந்த வீடான நுவ­க­லா­வெவ செல்ல அவ­ரது தம்பி பண்­டாரம் பரம்­பரை நிய­ம­ன­மான வன்­னி­யனார் பத­வியைப் 1785 இல் பெற்றுக்கொண்டார்.

ஒல்­லாந்த கப்ரன் தோமஸ் நாகெல் நிர்­வா­கி­யாக இருந்த காலத்தில் வன்னிப் பிர­தே­சத்தில் தேச­வ­ழமைச் சட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, அரச காணி­க­ளுக்கு அடை­யாளம் காணும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இதற்கு பண்­டாரவன்­னி­யனார் எதிர்ப்புத் தெரிவித்­த­தோடு திறை­செ­லுத்­து­வ­தையும் தாம­தப்­ப­டுத்­தினார். இதனால் கருத்து வேறு­பா­டுகள் அதி­க­ரித்­தன. அப்­போது கண்டி இரா­ஜ­தா­னியில் நிய­மனம் சம்­பந்­த­மான குழப்­பங்கள் ஏற்­பட்­டன. கண்டி இரா­ஜ­தா­னியின் கீழி­ருந்த நுவ­ர­க­லா­வெவ திசா­வை­மா­ருக்கு உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டன. அப்­போது முல்­லைத்­தீவு பிர­தே­சத்தின் உரிமை வன்­னி­ய­னா­ரான குமா­ர­சிங்க (திசாவை), பண்­டார வன்­னி­ய­னா­ரு­டைய உத­வி­யுடன் முல்­லைத்­தீவுக் கோட்­டையைத் தாக்க நட­வ­டிக்கை எடுத்தார். இந்தத் தாக்­குதல் தோல்வி அடைந்­தது. அதனால் பண்­டா­ரத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த வன்­னி­யனார் நிய­மனம் இரத்து செய்­யப்­பட்­டது.

கி.பி.1795 களில் இலங்­கையில் ஆங்­கி­லே­ய­ரு­டைய நிர்­வாகம் ஆரம்­பித்­தது. 1800 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநரான நோர்த், ஒல்­லாந்­த­ருக்கு எதி­ராகப் போரா ட்டம் நடத்­தி­ய­வர்­க­ளுக்கு திரும்­பவும் நிய­ம­னங்­களை வழங்­கினார்.

அப்­போது பனங்­காம நிர்­வாகப் பிரி­விற்கு அரு­கி­லி­ருந்த இலுப்­பைக்­குளம் என்ற சிறிய குளத்­திற்கும் வயல் வெளிக்கும் பொறுப்­பான வன்­னி­ய­னா­ராக பண்­டாரம் நிய­மிக்­கப்­பட்டார். இதற்குப் பின்னர் இலுப்­பைக்­குளம் பண்­டார இலுப்­பைக்­குளம் என்று பெயர் மாற்றம் பெற்­றது. அவர் குளத்தை திருத்­திய கார­ணத்­தினால் பனங்­காம பாரம்­ப­ரி­யத்­தின்­படி அவ­ருக்கு வவு­னியன் என்ற பதவிப் பெயரும் வழங்­கப்­பட்­டது. திரும்­பவும் கண்டி இரா­ஜ­தா­னியில் ஏற்­பட்ட குழப்­பங்கள் கார­ண­மாக ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் கரை­யோரப் பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­ வேண்டும் என உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. நுவ­ர­க­லா­வெவ நிர்­வா­கத்தின் ஆலோ­ச­னைக்­க­மைய பண்­டார வன்­னி­யனார் 1803 களில் நுவ­ர­க­லா­வெவ திசா­வை­யுடன் சேர்ந்து ஆங்­கி­லே­யரால் நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்த முல்­லைத்­தீவுக் கோட்­டையை தாக்கி கைப்­பற்­றி­யி­ருந்தார். கப்ரன் வொன் டிறிபேர்க் தலை­மையில் முல்­லைத்­தீவில் இருந்த சிறிய படைப்­பி­ரி­வினர் யாழ்ப்­பா­ணத்­திற்கு தப்­பி­யோ­டினர்.

தனது மைத்­து­ன­ரான குமா­ர­சிங்க திசா­வை­யிடம் முல்­லைத்­தீவுக் கோட்­டையின் பொறுப்பை ஒப்­ப­டைத் தார். ஆனை­யி­றவுப் பகு­தியில் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக ஒட்­டு­சுட்டான்-, கற்­சி­லை­ம­டு­விற்குச் சென்று பண்­டார வன்­னி­யனார் தங்­கி­யி­ருந்தார் என்­பது வர­லாறு. இந்தப் போராட்டம் கார­ண­மாக அவ­ருக்கு வழங்­கப்­பட்ட வன்­னி­யனார் பதவி மீண்டும் ஆங்­கி­லே­யரால் இரத்துச்செய்­யப்­பட்­டது. அதற்குப் பின்னர் பரம்­ப­ரை­யாக வன்­னி­யனார் பத­விகள் வழங்­கு­வதை ஆங்­கில நிர்­வாகம் நிறுத்திக்கொண்­டது. அதனால் பண்­டா­ரத்­திற்கு வவு­னியன் என்ற பதவிப் பெயர் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­தது. இந்தப் பிர­தே­சத்தில் முத­லியார் என்ற பதவி முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. கல்வித் தகை­மைக்கு ஏற்ப கற்­ற­வர்கள் பலர் முத­லி­யார்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர். முத­லியார் நிய­ம­னங்­க­ளுக்கும் பரம்­ப­ரை­யாக வன்­னி­யனார் பத­வி­களைப் பெற்­ற­வர்­க­ளுக்கும் இடையே மேலும் எதிர்ப்­பு­ணர்கள் அதி­க­ரிக்க இந்த நடை­முறை வழி­கோ­லி­யது. கற்­சி­லை­ம­டுவில் தங்­கி­யி­ருந்த பண்­டா­ரத்தை ஆங்­கி­லேயர் மும்­மு­னை­க­ளில் தாக்க திட்­ட­மிட்­டனர். தாக்­குதல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆங்­கி­லேய கடற்­ப­டை­யினர் முல்­லைத்­தீவுக் கோட்­டையைத் தாக்­கினர். அங்­கி­ருந்த குமா­ர­சிங்க வன்­னியன் (திசாவை) தனது படை­க­ளுடன் ஆங்­கி­லே­யரின் பீரங்­கிக­ளையும் இழுத்து கொண்டு பத­வியா ஊடாக நுவ­ர­க­லா­வெவ சென்­ற­டைந்தார். ஆனை­யி­றவு ஊடாக வந்த படை­யினர் பல இடங்­களை அழித்­த­தோடு அங்­கி­ருந்த கால்­ந­டை­க­ளையும் கைப்­பற்றிச் சென்­றனர். முல்­லைத்­தீ­விலி­ருந்து தப்­பி­யோ­டிய கப்ரன் டிறிபேர்க் மன்னார் ஊடாக கற்­சி­லை­ம­டுவில் தங்­கி­யி­ருந்த பண்­டாரவன்­னி­ய­னாரை கைதுசெய்ய வந்தார்.

பண்­டாரவன்­னி­யனார் அங்­கி­ருந்து பண்­டா­ர­ இ­லுப்பைக் குளத்­திற்கு தப்பிச் சென்றார். அதற்குப் பின்னர் பண்­டார இலுப்­பைக்­கு­ளத்தில் பண்­டாரம் வவு­னியன் என்ற பதவிப் பெய­ருடன் இருந்து கொண்டு சுமார் எட்டு வரு­டங்கள் சிறிய அள­வி­லான தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்தார். இந்தத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற காலத்தில் பண்­டா­ரத்­தி­னு­டைய நட­மாட்­டத்தை மேல்­பற்று கிழக்கில் இருந்த கதி­காம சேகர முத­லியார் மற்றும் செட்­டி­குளம் முத­லியார் ஆகியோர் ஆங்­கி­லே­ய­ருக்கு எழுத்து மூலம் தக­வல்­களை வழங்கி வந்­தனர். இத­னால்தான் பண்­டா­ரத்­தினால் எந்த தாக்­கு­த­லையும் வெற்றிகொள்ள முடி­ய­வில்லை. 1811 ஆம் ஆண்டு பண்­டா­ர­ இ­லுப்­பைக்­கு­ளத்தில் அவர் உயி­ரி­ழந்தார்.

இதன்­படி பண்­டாரவன்­னி­யனார் 1785 – 1794 ஆம் ஆண்டு வரை 9 ஆண்­டுகள் கரிக்­கட்டுமூலை­யிலும், பின்னர் 1800 தொடக்கம் 1803 ஆம் ஆண்­டு­ வரை 3 ஆண்­டுகள் பண்­டார இலுப்­பைக்­கு­ளத்­திலும் மொத்தம் 12 ஆண்­டுகள் வன்­னி­ய­ன­ராகப் பதவி வகித்­தி­ருந்தார். முல்­லைத்­தீவுக் கோட்டை தாக்­கப்­பட்டு 100 வரு­டங்­களின் பின்னர் அதா­வது 1903 – -1904 களில் முல்­லைத்­தீ­வி­லி­ருந்த ஆர்.ஏ.வெஸ்ரிங் என்ற உதவி அர­சாங்க அதி­ப­ருக்கு கிடைத்த தக­வ­லுக்­கி­ணங்க கற்­சி­லை­ம­டுவில் பண்­டா­ர­வன்­னி­யனார் தோற்­க­டிக்­கப்­பட்­டதை நினைவு கூரும் வகையில் நினைவுக் கல் ஒன்றை நாட்­டினார். அப்­போது பண்­டாரம் இறு­தி­யாக வகித்த வவு­னியன் என்ற பத­வியை நினை­வுக்­கல்லில் பொறிக்கத் தவ­ற­வில்லை. இதனால் கற்­சிலைமடுவில் உள்ள நினை­வுக்­கல்லில் HERE ABOUTS CAPTAIN VON DRIBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCT 1803 என்று பொழி­யப்­பட்­டுள்­ளது.

 

கற்­சி­லை­மடு நினைவுச் சின்னம்

(இந்த வர­லாறு மிகவும் சுருக்­க­மாக தரப்­பட்­டுள்­ளது. மேல­திக விப­ரங்கள் என்னால் எழு­தப்­பட்ட அடங்­காப்­பற்று வன்னி வர­லாறு பாகம் 2 பண்­டா­ர­வன்­னியன் என்ற நூலில் விப­ர­மாக தரப்­பட்­டுள்­ளன. இந்த நூலை 01-.02.-2003 இல் வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரி­யிலும், 13.-02.-2003 முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்தாக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற அறி­மு­க­ வி­ழாவில் அப்­போது முல்­லைத்­தீ­வு­வ­லயக் கல்­விப் ­ப­ணிப்­பா­ள­ராக பதவி வகித்த க.குரு­கு­ல­ராஜா வெளியீட்­டு­ரையை நிகழ்த்­தி­யி­ருந்தார். 07-.03.-2003 இல் கொழும்பில் தமிழ்ச் சங்­கத்­திலும், பின்னர் கற்­சி­லை­ம­டு­விலும், 13-.09-.2003 லண்டன் கன­க­துர்க்கை அம்மன் ஆல­யத்­திலும், மீண்டும் 25-.03.-2006 இல் லண்டன் வெம்­பிளி சென்.மைக்கேல் ஆலய மண்­ட­பத்­திலும் வெளியீட்டு விழாவும் அறி­முக விழாக்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன). மேலே குறிப்­பி­டப்­பட்ட வர­லாற்றில் எந்த இடத்­திலும் காக்­கை­வன்­னியன் என்ற கதா­பாத்­திரம் குறிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது அர­சியல் மேடைகளில் காட்டிக் கொடுக்கும் காக்கை வன்­னி­யர்கள் வன்னிப் பிர­தே­சத்தில் தற்­போதும் இருக்­கி­றார்கள் என்றும் பேசப்­பட்டு வரு­வது தவ­றான வர­லாற்றுத் தக­வ­லாகும். இங்கே முல்­லை­மணி தனது நாட­கத்தை நாடக இலக்­கி­யமே ஒழிய வர­லா­றல்ல என்று குறிப்­பிட்­டுள்­ளதை திரும்­பவும் ஞாப­க­மூட்­டு­கிறேன்.

 

யார் இந்தக் காக்­கை­வன்­னியன்

1915 ஆண்டில் ஆ.முத்­துத்­தம்­பிப்­பிள்ளை எழுதி வெளியிட்ட யாழ்ப்­பாணச் சரித்­திரம் என்ற நூலில் 64 ஆம் பக்கம் தொடக்கம் 72 ஆம் பக்­கம் ­வரை காக்­கை­வன்­னியன் பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காக்­கை­வன்­னியன் துரோகம், என்ற தலைப்பில் அவ­ரைப் பற்றி பல விப­ர­ங்கள் தரப்­பட்­டுள்­ளன. காக்­கை­வன்­னியன் ஊர்­கா­வற்­று­றையில் வன்­னி­ய­னா­ராக இருந்­தவர். 1624 களில் போர்த்­துக்­கேயர் யாழ்ப்­பா­ணத்தில் கோட்டை கட்ட முயற்­சித்­த­போது, யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்த சங்­கி­லியன் என்ற அரசன் அதற்கு எதி­ராகப் போராட்டம் நடத்­தினான்.

சங்­கி­லியை தோற்­க­டிப்­ப­தற்­காக போர்த்­துக்­கேயர் ஊர்­கா­வற்­று­றையில் இருந்த காக்­கை­வன்­னி­யனை நாடி, சங்­கி­லி­யனைக் காட்டிக்கொடுக்­கும்­படி பய­மு­றுத்திக் கேட்­டனர். அதன்­படி சங்­கி­லி­யனைக் காட்­டிக்­கொ­டுத்­தவர் ஊர்­கா­வற்­று­றையில் நிர்­வாகம் செலுத்­திய காக்கை வன்­னி­ய­னாகும் என்று தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. இறு­தி­யாக காக்­கை­வன்­னி­ய­னையும் போர்த்­துக்­கேயர் கொலைசெய்து விட்­டார்கள். இதனைக் கேள்­வி­யுற்ற காக்­கை­வன்­னி­ய­னு­டைய மனைவி தீக்­கு­ளித்து உயிர் துறந்தாள் என்றும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

1923 ஆம் ஆண்டு வெளியி­டப்­பட்ட Notes on Jaffna என்ற ஆங்­கில நூலின் 3 ஆம் பக்­கத்தில், இந்த எதிர்ப்பு நட­வ­டிக்கை 1627இல் இடம்­பெற்­ற­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 1915 இல் முத்­துத்­தம்­பிப்­பிள்ளை யாழ்ப்­பாணச் சரித்­தி­ரத்தை எழுதி சுமார் 40 வரு­டங்­களின் பின்னர், 1964 களில் முல்­லை­மணி கற்­ப­னை­யாக பண்­டா­ர­வன்­னியன் நாட­கத்தை எழு­தினார். அதிலே காக்­கை­வன்­னியன் என்ற கதா­பாத்­தி­ரத்தின் பெய­ரையும் சேர்த்­தி­ருந்தார். அந்த நாடகம், நாடக இலக்­கி­யமே ஒழிய வர­லாறு அல்ல என்று முல்­லை­ம­ணியே தெரிவித்­தி­ருக்­கிறார்.

 

காக்கை வன்­னி­யனும் மாகாண சபையும்

 அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் சிலை திறப்பு விழாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பண்டார வன்னியனாரைப் பற்றியும் காக்கைவன்னியனைப் பற்றியும் பேசிய பேச்சு வீரகேசரிப் பத்திரிகையில் முழுமையாக வெளிவந்திருந்தது. அவரது பேச்சிலே பண்டாரவன்னியனாருடைய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று பேசியிருந்தமை வரவேற்கத்தக்கது. இதிலே அவர் குறிப்பிட்டுள்ள காக்கை வன்னியன் பற்றிய விடயங்கள், ஊர்காவற்றுறையில் நிர்வாகம் செலுத்தி, சங்கிலியனைக் காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனைப் பற்றியதா? அல்லது கற்பனையாக வன்னிப்பிரதேசத்தில் எழுதப்பட்ட பண்டாரவன்னியன் நாடகத்தில் குறிப்பிடப்படும் காக்கைவன்னினைப் பற்றியதா? என்பதைத் தெரிந்துகொள்ள வன்னிப் பிர தேச மக்கள் ஆர்வம் கொள்வதில் தவறில்லை தானே.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், பனங்காமத்தில் வன் னியனார் பதவி வகித்தவருமான டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலி வன்னியனாருடைய பேரன் பண் டாரம் கரிக்கட்டுமூலையில் 1785 தொடக்கம் பரம்பரை வன்னியனாராக கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரிடம் சங்கிலியனை 1627 இல் காட்டிக் கொடுத்து, சுமார் 170 வருடங்களின் பின்னர், ஊர்கா வற்றுறையில் வாழ்ந்த காக்கைவன்னியன் பரம்பரையி னர், அங்கிருந்து வன்னிக்கு வந்து பண்டாரவன்னிய னாரைக் காட்டிக் கொடுத்தார்களா? அவர்கள் இப்போ தும் வன்னிப் பிரதேசத்தில் எஞ்சி இருக்கிறார்களா?

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் - ஆறாதே நாவினாற் சுட்ட வடு

1803 இல் கற்சிலைமடுத் தாக்குதலுக்குப் பின்னர் வன்னியனார் பதவியை இழந்த பண்டாரத்தைப் பற்றி ஆங்கிலேயருக்கு தகவல் கொடுத்து காட்டிக்கொடு த்தவர் மேல்பற்று கிழக்கில் முதலியார் பதவி வகித்த யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த கதிர்காமசேகர முதலியாராகும். இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண பண்டாரவன்னியானாருடைய வரலாறு முறையாக எழுதப்படவேண்டும். நாடக இலக்கியத்தை வரலாறாக எடுத்து மேடைகளில் பேசுவதை நிறுத்த வேண்டும். மகாண சபையின் நிதியைக் கொண்டு சிலைகளைக் கட்டிவிட்டு, தவறான வரலாறுகளை மக்கள்முன் கூறுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பது வடமாகாண கலாசார அமைச்சின் முக்கிய பொறுப்பா கும். செய்வார்களா? 

அருணா செல்லத்துரை

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.