Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகிலிருந்து மீட்கப்பட்ட 30 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

படகிலிருந்து மீட்கப்பட்ட 30 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

 

 

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து படகொன்றில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரில் 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

unnamed-_7_.jpg

இதேவேளை, படகோட்டிகளான ஏனைய இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

காங்கேசன்துறையிலிருந்து  12 கடல் மைல் தூரத்தில் வைத்து அத்துமீறி உள்நுழைந்த படகொன்றை கடந்த 30 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 

 

இந்நிலையில் குறித்த படகில் இருந்த மியன்மாரைச் சேர்ந்த 16 சிறுவர்கள் உட்பட 30 பேரையும் இந்தியவைச் சேர்ந்த 2 பேரையும் கைதுசெய்து இன்று காலை யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன் போதே மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

மியன்மார் மக்கள் சார்பாக, யாழ்ப்பாணம் முஸ்லிம் பொதுமக்கள் ஒன்றியத்தின் சார்பில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அகதி அந்தஸ்து கோரி குறித்த மியன்மார் நாட்டு மக்கள் வந்ததால் அவர்களை எதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கு அனுப்பும் வரைக்கும் இலங்கையில் தஞ்சமளிக்குமாறு குறித்த சட்டத்தரணியால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மல்லாகம் நீதிவான்  நீதிமன்றம் 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹானயிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஏனை இரு இந்திய மீனவர்களான படகோட்டிகளையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19626

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.