Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம்

Featured Replies

வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம்

வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலை, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகளினால் முற்றுகைப் போர் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கடந்த 71 நாள்களாகப் போராட்டம் நடத்திய, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகள், வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

http://uthayandaily.com/story/1759.html

1-3.jpg

2-5.jpg

  • தொடங்கியவர்

திரும்பிச் சென்றார் சி.எம்.

பட்டதாரிகளின் போராட்டத்தினால், வடக்கு மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்ற முடியாமல் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திரும்பிச் சென்றுள்ளார்.

பட்டதாரிகள் வேலை வாய்ப்புக் கோரி, வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலையிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வடக்கு மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர், கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.

போராட்டம் நடத்துபவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். பேச்சு வெற்றியளிக்கவில்லை. போராட்டக்காரர்கள், முதலமைச்சரை பேரவைச் செயலகத்தினுள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் முதலமைச்சர் திரும்பிச் சென்றார்.

http://uthayandaily.com/story/1768.html

  • தொடங்கியவர்
வட மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு
 
 

article_1494316837-cvk300.jpg-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார்.

இதனால் போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில், சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/196304/வட-ம-க-ண-சப-அமர-வ-ஒத-த-வ-ப-ப-#sthash.ZtSVpO1c.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

போராட வேண்டிய இடம் இங்கில்லை

வடக்கு முதலமைச்சர் பட்டதாரிகளுக்குத் தெரிவிப்பு

பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்புக் கோரி, தலைமை அமைச்சர் அலுவலகத்தின் முன்போ, அரச தலைவர் அலுவலகத்தின் முன்போதான் போராட வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை முன்பாக பட்டதாரிகள் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தமை முழுமையாக வருமாறு,

இன்று காலை9.30 மணியளவில் வடமாகாணசபைக் கூட்டத்திற்கு நான் சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர் யுவதிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள். வடமாகாணசபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றுஅவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கனவே அவர்களுடன் நான் பேசியவிடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவேண்டும் என்று கேட்டார்கள்.

அண்மையில் முதலமைச்சர் மகாநாட்டின் போது ஜனாதிபதி வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்குக் கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.

ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில்நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து விட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டுஞ் சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக்காட்டினேன்.பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.அன்றையதினம் (06.05.2017)முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் ஜனாதிபதி வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக்கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வடமாகாணசபை அவைத்தலைவர் தமக்கு மூன்றுமாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்திஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என்று கேட்டார்கள்.

அதற்குநான் மாகாணஎசபையுடன் தொடர்புடைய யார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனால்த்தான் நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசிவருகின்றோம் என்பதைத்தெளிவுபடுத்தினேன்.

எமதுமாகாணசபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின்மாகாணதிணைக்களங்களில் 329வெற்றிடங்கள் இருப்பதையும்மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலைவாய்ப்பைப் பெறநடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு அவர்களை இணைப்பது பற்றியும் பேசப்பட்டது என்று அறிவித்தேன்.

அத்துடன் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் வெற்றிடங்கள் பல இருப்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் காட்டியபோது அந்த வெற்றிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதாகக் துமிந்ததிசாநாயக்கஇவிவசாயஅமைச்சர் வாக்குறுதிஅளித்தார்.

இவற்றை எல்லாம் இளைஞர் யுவதிகளுக்கு எடுத்துச் சொல்லியும் தமக்கு வேலைகள் கிடைப்பது சம்பந்தமாக எமது உத்தரவாதங்களைப் பெறவே அவர்கள் முயன்றனர். உத்தரவாதங்களை நாம் தரமுடியாதென்றும் மத்திய அரசாங்கமே அவற்றைத் தரமுடியும் என்றபோதுசில இளைஞர்கள் யுவதிகள் அதட்டலாக எம்மை அவ்வாறான உத்தரவாதத்தைத்தருமாறும் இல்லையேல் அவ்விடத்தில் இருந்து அசையமாட்டோம் என்றும் கூறினார்கள். ‘என்னால் கூறக் கூடியதைநான் கூறிவிட்டேன். மிகுதியை ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் பேசியபின் கூற முடியும்’என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் வாயிற் கதவுகளுக்கு அவர்களே சங்கிலிபோட்டு பூட்டும் இட்டுத் திறப்பைஅவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்றுதெரியவந்தது. திறக்குமாறு கேட்டபோது எவரும் முன்வரவில்லை. எனது பாதுகாப்புப்பொலிசார் பூட்டைஉடைத்து உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்டார்கள். அத்துடன் ஒருபொது அலுவலரை தனது கடமைக்குச் செல்லாமல் தடுப்பது குற்றம் என்றும் அது சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்க பொலிஸ’ டிஐஜி க்குத் தொலைபேசியில் தொடர்புகொள்ளவா என்றும் கேட்டார்கள்.

நான் அவர்களைக் கட்டுப்படுத்தி வேலையற்றபட்டதாரிகள் சுமார் இரண்டு மாதகாலமாக வேலை வேண்டும் என்று போராடிவரும் அவர்களின் விடாமுயற்சிக்கும் அவர்களின் உண்மையான பிரச்சனைக்கும் மதிப்பளித்து அங்கிருந்து அகன்று விட்டேன்.

ஆனால் அவர்களின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி காரியாலயத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோதான் நடைபெறவேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வேலைபெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போகும் மத்தியஅரசாங்கமே அதைச் செய்யவேண்டும். அண்மையில் முதலமைச்சர்கள் மாநாட்டின் போதுஎம் பலதரப்பட்ட மக்கள் செய்துவரும் தொடர் போராட்டங்கள் பற்றிபிற மாகாணமுதலமைச்சர்கள் முற்றிலும் அறியாமல் இருந்தமை எந்தளவுக்கு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர வைத்தது. விரைவில் இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் தீர இறைவன் வழி வகுப்பானாக!

http://uthayandaily.com/story/1871.html

பட்டதாரிகள் – அமைச்சர்கள் சந்திப்பு

வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய பட்டதாரிகளுக்கும், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

 

  • தொடங்கியவர்
போராட்டம் கைவிடப்பட்டது
 
 

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (09) வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார்.

இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில், சபையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இதன்போது உள்ளே சென்றிருந்த சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.
இதனையடுத்து, வடமாகாண அமைச்சர்களான, பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நியமனங்கள் மத்திய அரசாங்கத்தாலேயே வழங்கமுடியும். எமது திணைக்களங்களுக்கு உட்பட்டு உள்ள வெற்றிடங்களுக்கான விவரங்களை தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தாம் கைவிடுவதாக தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வடமாகாண சபைக்கு உட்பட்ட வெற்றிடங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் அற்ற நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தனர்.

இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/196316/ப-ர-ட-டம-க-வ-டப-பட-டத-#sthash.RkiKdv0D.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.