Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்? சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

Featured Replies

சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்?

சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

மாவட்­டச் செய­ல­ரால் பொது­மக்­கள் பாது­காப்பு தொடர்­பா­க­வும் சட்ட ஒழுங்கு தொடர்­பா­க­வும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள முடி­கி­றது. அதே­போன்று மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னால் சட்ட ஒழுங்கு தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளு­டன் ஏன் கலந்­து­ரை­யாட முடி­ய­ வில்லை?

இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யில் கேள்­வி­யெ­ழுப்­பி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் உறுப்­பி­னர் லிங்­க­நா­த­னால், வடக்­கி­லி­ருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்கு பசு மாடு­கள் கடத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க அவற்­றைக் கொண்டு செல்­வ­தற்­கான அனு­ம­தியை நிறுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­திப் பிரே­ர­ணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்­தப் பிரே­ரணை மீதான் விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற் றும் போதே எதிர்க்­கட்­சித் த­லை­வர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

“வடக்கு மாகா­ணத்­தின் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் பங்­க­ளிப்பை வழங் கும் பசு மாடு­கள் வெளி மாவட்­டங்­க­ளுக்­குக் கடத்­திச் செல்­லும் நிகழ்­வு­கள் அண்­மைக்­கா­ல­மாக தொடர்ச்­சியாக இடம்­பெ­று­கின்­றன. வடக்கு மாகா­ணத்­தின் தேவை­க­ளுக்கு ஏற்ப அதனை பயன்­ப­டுத்­து­வ­தை­வி­டுத்து மாகா­ணத்­துக்கு வெளியே அவற்­றைக் கொண்டு செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றது.

மாவட்­டச் செய­லா­ளர்­கள், பிர­தேச செய­லா­ளர்­கள் மற்­றும் வடக்கு மாகாண கால்­நடை உற்­பத்தி சுகா­தார திணைக்­கள பணிப்­பா­ளர் ஆகி­யோ­ரின் அனு­ம­தி­யு­டன் கால்­ந­டை­கள் வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன.

அவற்றை வடக்­குக்கு வெளியே கொண்டு செல்­வ­தற்கு வழங்கப்­ப­டும் அனு­ம­தியை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும்” என்று உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன் தனது பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்­தார்.

“குறை­வான அதி­கா­ரங்­க­ளைக் கொண்ட அரச அதி­கா­ரி­யான மாவட் டச் செய­லர், மாவட்­டத்­தின் சட்ட ஒழுங்கு தொடர்­பி­லும் பொது­மக்­க­ளின் பாது­காப்­புத் தொடர்­பா­க­வும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளை அழைத்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­கின்­றார். அதி­கா­ரங்­க­ளைக் கொண்­டுள்ள மாகாண முத­ல­மைச் ச­ரால் இதனை ஏன் செய்ய முடி­யா­துள்­ளது?

மாகா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரம் என்­பது வேறு, சட்­டம், ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது வேறு.எனவே இதனை நடை ­மு­றைப்­ப­டுத்த முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருக்­கின்­றது.முத­ல­மைச்­சர் இன்­று­வரை அவ்­வா­றான கூட்­டங்­களை கூட­டி­ய­தாக இல்லை.ஆகவே சபை­யில் முன்­வைத் துள்ள விட­யங்­கள் சட்­டம், ஒழுங்கு சம்­பந்­தப்­பட்ட விட­ய­மா­கும். இதனை ­யாக ஏற்­க­மு­டி­யாது” என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ ராசா தெரி­வித்­தார்.

உறுப்­பி­னர் லிங்­க­நா­த­னால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­யில் மாற் றங்­க­ளைச் செய்து அடுத்த அமர்­வில் முன்­மொ­ழி­யு­மாறு அவைத் தலை­வர் அறி­வித்­தார்.

http://uthayandaily.com/story/2013.html

  • தொடங்கியவர்

வடமாகாண அதிகாரிகள் நியமனத்தில் முதலமைச்சர் தேவையற்ற தலையீடு

எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

“வடக்கு மாகா­ணத்­துக்­குத் தேவை­யான அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் மாகாண விவ­சாய அமைச்­ச­ரும் தடை­யா­க­வுள்­ள­னர். அவர்­கள் இரு­வ­ரும் இர­வோடு இர­வாக மாகாண ஆளு­ந­ரைச் சந்­தித்து வடக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரின் நிய­ம­னத்தை நிறுத்­தி­விட்­ட­னர்” இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா குற்­றஞ்­சாட்­டி­ னார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் உறுப்­பி­னர் அ.பரஞ்­சோ­தி­யால், மாகா­ணத்­தின் நிர்­வாக சேவை­க­ளுக்கு பொருத்­த­மான அதி­கா­ரி­க­ளை­நி­ய­மிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி கவ­ன­வீர்ப்­பு­ பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்­தார்.

“கடந்த மாதம் 21ஆம் திகதி வடக்கு மாகா­ ணத்­தின் செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட உயர் அதி­கா­ரி­கள் மட்­டத்­தில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. அதில் கொழும்பு அர­சி­லி­ருந்து வடக்கு மாகா­ணத்­தின் சம்­ம­தத்­து­டன் மாற்­ற­லா­கிய உயர் அதி­கா­ரி­க­ளுக்கு உரிய பத­வி­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. 4 மாதங்­க­ளுக்கு மேலாக அவர்­கள் வஞ்­சிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இலங்கை நிர்­வாக சேவை தரம் 1 ஐ சேர்ந்த மோகன்­ரா­ஸூக்கு வழங்­கப்­பட்ட பத­வியை ஏற்­க­வி­டாது அவ­ரைத் தடுத்­த­து­டன் வேறு பொருத்­த­மான பதவி வழங்­கு­வ­தி­லும் மாகாண நிர்­வா­கம் கரி­சனை எது­வும் காட்­ட­வில்லை. அத்­து­டன் இதே காலப்­ப­கு­தி­யில் மாகா­ணத்­தில் இணைத்­துக் கொள்­ளப்­பட்ட திரு­மதி அ.சாந்த சீல­னை­யும் நீண்ட இழு­ப­றி­யின் பின்பு கூட்­டு­றவு ஆணை­யா­ளர் பதவி வழங்­கப்­பட்­டது. எனி­னும் அவ­ரை­யும் அந்­தப் பத­வியை ஏற்க விடா­மல் தடை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆகவே இந்­தச் செயற்­பா­டு­கள் ஊடாக பாதிக்­கப்­பட்­டுள்ள அனைத்து அதி­கா­ரி­க­ளுக்­கும் பொருத்­த­மான பத­வி­களை வழங்க அமைச்­ச­ரவை உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று தனது பிரே­ர­ணை­யில் உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி முன்­மொ­ழிந்­தார்.

மாகா­ணத்­தின் உயர் பத­வி­க­ளுக்கு பொருத்­த­மான அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தில் முத­ல­மைச்­ச­ரும் மாகாண அமைச்­சர்­க­ளும் இழு­ப­றிப்­ப­டு­கின்­ற­னர். மாகா­ணத்­தில் நிய­மிக்­கப்­ப­டும் தகு­தி­யான உயர் அதி­கா­ரி­களை நிய­மிக்க விடாது ஆளு­நர் ஊடாக அவர்­கள் தடுக்­கின்­ற­னர்.

அத்­து­டன் தங்­க­ளுக்கு தேவை­யான ஆள்­களை மட்­டும் அவர்­கள் நிய­மித்து வரு­கின்­ற­னர்” என்று வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் குற்­றஞ்­சாட்­டி­னார்.

http://uthayandaily.com/story/2028.html

தவராசாவுக்கு பழைய வியாதி மீண்டும் வந்திருக்கு போலுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.