Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தலைமை அமைச்சரது பயணம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கட்டும்

Featured Replies

இந்தியத் தலைமை அமைச்சரது பயணம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கட்டும்

இலங்­கைத் தமி­ழர்­க­ளின் நலன் குறித்த அக்­க­றை­யில் யாழ்ப்­பா­ணம் சென்ற முதல் இந்­தி­யத் த­லைமை அமைச்­சர் நான்தான் என 2016ஆம் ஆண்டு மே மா­தம் ஆறாம் திகதி சென்­னை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் வைத்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறி­யி­ருந்­தார்.

மோடி தமது இலங்­கைக்­கான முதல் பய­ணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் மேற்­கொண்­டி­ருந்­தார். 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் இலங்­கை­யில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்­குப் பின்­னர் இந்­திய அர­சின் தலைமை அமைச்­சர் என்ற ரீதி­யில் அவர் முதன் முத­லாக இலங்­கைக்கு வந்­தி­ருந்­தார். புதிய அர­சுத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தனது முத­லா­வது வெளி­நாட்­டுப் பய­ணத்தை 2015 பெப்­ர­வரி மாதம் 15ஆம் திக­தி­யன்று இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்­டி­ருந்­தார்.

அர­சுத்­த­லை­வர் மைத்­தி­ரி­யின் அழைப்­பினை ஏற்று 2015 மார்ச் மாதத்தில் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இந்­தி­யத்­த­லைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, இரண்டு வரு­டங்­க­ளின் பின்­னர் மீண்­டும் இரண்­டா­வது தட­வை­யா­கத் தனது இலங்­கைக்­கான பய­ணத்தை நாளை வியா­ழ­னன்று மேற்­கொள்­ள­வுள்­ளார்.

அவ­ரது இலங்­கைக்­கான இந்­த­ப் ­ பய­ணம் கொழும்பு மற்­றும் மலை­ய­கத்­து­டன் மட்­டுமே மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கட்­டு­நா­யக்க பன்­னாட்டு மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெ­றும் பன்­னாட்டு வெசாக் தின நிகழ்­வில் முதன்மை அதி­தி­யா­கக் கலந்து கொள்­வ­து­டன் பின்­னர் டிக்­கோயா நகரில் இந்­திய நாட்டு உத­வி­யு­டன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­ய­சா­லை­யை­யும் அவர் திறந்து வைக்­க­வுள்­ளார்.

அத்­து­டன் கண்­டி­யில் உள்ள தல­தா­மா­ளி­கைக்­கும் சென்று வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வ­து­டன், கலா­சார மண்­ட­பம் அமைப்­ப­தற்­கான அடிக்­கல்­லை­யும் நட்டு வைக்­க­வுள்­ளார்.

நரேந்­திர மோடி­யு­டன் இலங்கை அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உட்­பட பல இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் இந்த நிகழ்­வு­ க­ளில் கலந்து கொள்­வார்­கள். தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­ மைப்­பின் முக்­கிய தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­பும் இடம்­பெ­று­மெ­ன­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. புதிய நல்­லாட்சி அரசு பத­விக்கு வந்த பின்­னர் இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரது இலங்­கைப் பய­ணம் தமிழ் மக்­க­ளால் பெரிய அள­வில் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது அத்­த­கைய ஆர்­வ­நி­லையை அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் ஈழத் தமிழர்கள்

நல்­லாட்சி அரசு பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து இன்­று­வரை எமது தமிழ் மக்­கள் பல­வி­த­மான அற­வ­ழிப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். வீதி­யில் இறங்­கிப் போரா­டு­கின்ற நிலைக்கு அவர்­கள் உள்­ளாக்­கப்­பட்டு விட்­ட­னர்.

காணா­மல் போன­வர்­க­ளின் உற­வு­க­ளால் தங்­க­ளது பிள்­ளை­க­ளைக் கண்டு பிடித்­துத்­த­ரு­மாறு கோரி.மேற்கொள்ளப்படும் போராட்டம், ­ படை­யி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்­க­ளது காணி­களை விட்டு விலகி தம்­மைத்­த­மது இடங்­க­ளுக்­குச் சென்று வசிப்­ப­தற்கு வழி­வி­டு­மாறு கோரி நடப்படு­கின்ற போராட்­டம் என்­பவை தமி­ழர்­க­ளின் வாழ்­வில் நிரந்­தரமாகி­விட்ட நிலை­யில் தமி­ழி­னத்­தின் மீதான பிரச்­சி­னைக்கு நல்­லாட்சி அர­சும் நிரந்­த­ர­மான தீர்வு வழங்க முய­லா­மல் காலம் கடத்­து­வ­தை­யும்,ஐ.நா.விடம் அதற்காக மைத்­திரி அரசு இரண்டு வருட கால அவ­கா­சத்தை பெற்­றுக் கொண்­ட­தும் தமிழ் மக்­கள் மத்­தி­யில் அதி­ருப்­தி­யும் எரிச்­ச­லை­யும் எற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த நிலை­யில் இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான மோடி­யின் பய­ணம் தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­ வ­ரை­யில் ஏமாற்­றம் தரு­மொன்­றா­கவே கணிக்­கப்­ப­டு­கி­றது.

இன்­றைய கால­கட்­டத்­தில் ஆளு­மை­மிக்­க­தொரு தலை­வ­ரா­கக் கரு­தப்­ப­டும் நரேந்­தி­ர­மோடி, தமி­ழர்­க­ளின் உணர்­வு­களை மதிப்­ப­வ­ரா­க­வும் கரு­தப்­ப­டு­கி­றார். கடந்த ஜன­வரி மாதம் தமி­ழ­கத்­தில் தமி­ழர்­கள் நடத்­திய ஜல்­லிக்­கட்­டுப் போராட்­டத்­திற்கு மதிப்­புக் கொடுத்து அதற்­கான தடையை ­நீக்­கி­ய­வர் என மதிக்­கப்­ப­டு­ப­வர். ஜல்­லிக் கட்­டுப் போராட் டத்­தின் போது இந்­தி­யத் தமி­ழர்­க­ளுக்கு ஈழத்­த­மி­ழர்­க­ளின் பங்­கும் ஆத­ர­வும் உணர்­வு­க­ளும் மேலோங்கி இருந்­தன. இத­னால் இந்­தி­யப் பிர­த­மர் மீதா­ன­தொரு தனி மதிப்­பும் மரி­யா­தை­யும் ஈழத்­த­மி­ழர்­க­ளி­டையே இருந்து வருகிறது.

இந்­தி­யா­வில் சில மாதங்­க­ளுக்கு முன்­னர் கறுப்­புப் பணத்தை ஒழிக்­கும் முயற்­சி­யில் நடை­மு­றை­யி­லி­ருந்த பழைய நாண­யத்­தாளை ஒழிக்­கும் திட்­டத்தை அதி­ர­டி­யாக நாட்­டில் கொண்டு வந்து வெற்றி கண்ட நரேந்­தி­ர­மோ­டி­யின் தலை­மை­யி­லான பார­திய ஜன­தாக்­கட்சி உத்­த­ரப் பிர­தேச மாநில சட்ட சபைத்­தேர்­த­லில் மாபெ­ரும் வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது.

இந்திய அரசின் இலங்கைக்கான உதவிகள் பலதரப்பட்டவை
இலங்­கை­யின் புதிய ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து, இந்­திய இலங்கை உற­வு­கள் மீதான வர­லாற்று ரீதி­யான மாற்­றங்­களை வலு­வான நிலை­யில் முன்­னோக்கி நகர்த்­து­வ­தற்கான முயற்சி யாக தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோ­டி­யின் இலங்­கைக்­கான இரண்­டா­வது பய­ணம் அமைந்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் தொடக்­கம் காங்­கே­சன்­துறை வரை­யி­லான புகை­யி­ர­தப் பாதை­ நிர்மாணப்பணி 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2ஆம் திகதி ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. அதே­போல் மடு­வீதி தொடக்­கம் திருக்­கே­தீஸ்­வ­ரம் வரை­யி­லான புகை­யி­ர­தப் பாதை புன­ர­மைக்­கப்­பட்டு பரீட்­சார்த்த போக்­கு­வ­ரத்து 2014ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் மேற்­கொண்டு பார்க்­கப்­பட்­டது. வட­ப­கு­திக்­கான புகை­யி­ர­தப்­பாதை நிர்­மா­ணப்­ப­ணி­யில் இந்­தியா ஆற்­றிய பங்­க­ளிப்பு இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் இடை­யி­லான இணைப்­பினை ஊக்­கு­விக்­கும் ஓர் அம்­ச­மா­கும்.

இந்­தியா கல்வி, சுகா­தா­ரம் , போக்­கு­வத்து, விவ­சா­யம் , மீன்­பி­டித்­துறை, கைவி­னைத்­துறை மற்­றும் கலா­சா­ரம் போன்ற துறை­க­ளி­லும் தொடர்ச்­சி­யாக சிறிய அபி­வி­ருத்­தித்­திட்­டங்­க­ளைப் படிப்­ப­டி­யாக இலங்­கை­யில் மேற்­கொண்டு வரு­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு புன­ர­மைக்­கப்­பட்­டமை, மகாத்மா காந்தி ஞாப­கார்த்த நிலை­யம் நிர்­மா­ணிப்பு, யாழ்ப்­பா­ணம்,அம்­பாந்­தோட்­டை­யில் கைவினை கிரா­ மங்­களை அபி­வி­ருத்தி செய்­தல் , மன்­னார் திருக்­கே­தீஸ்­வர ஆலய புன­ர­மைப்பு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்­கான 70 சிறு­வர் அபி­வி­ருத்தி நிலை­யங்­க­ளைப் புன­ர­மைத்­தல், கிளி­நொச்சி விவ­சா­ய­ மற்­றும் பொறி­யி­யல் பீடங்­கள் நிர்­மா­ணிப்பு, யாழ்ப்­பா­ணத்­தில் கலா­சார நிலை­யம் நிர்­மா­ணிப்பு, முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளுக்கு மீன்­பிடி சாத­னங்­கள் விநி­யோ­கம், வட­மா­கா­ணத்­தில் தொழிற்­ப­யிற்சி நிலை­யம் உரு­வாக்­கல் போன்ற அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் இந்­தியா பங்­க­ளிப்பு மேற்­கொண்­டி­ருப்­பி­னும், இந்­தி­யா­வுக்­கான தட்­டிக் கழிக்­காத பொறுப்பு என்று ஒன்­றுள்­ளது.

ஈழத்­த­மி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத்­தீர்­வுக்கு இந்­தியா வழி­வ­குக்க வேண்­டும்.

சுமார் 70 ஆண்­டு­கள் வரை­யில் நாட்­டில் நீடித்­துச் செல்­கின்ற தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண இந்­தி­ய­த­லைமை அமைச்­சர் நரேந்­திர மோடி முன்­வ­ர­வேண்­டும்.

இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா அக்கறை செலுத்தி வந்துள்ளது

இலங்கையின் முன்­னை­நாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜ­பக்ச, தமி­ழர்­கள் மீதான கொடிய போரை வன்­னி­யில் நடத்­திக் கொண்­டி­ருந்த வேளை­யில் 2002 ஆம் ஆண்டு இலங்­கை­யில் நடை­பெற்ற சார்க் மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்­காக அப்­போ­தைய இந்­திய நாட்டு தலைமை அமைச்­ச­ரான மன்­மோ­கன்­சிங் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தார்.

இந்­தி­யா­வின் ஐந்து பிர­த­மர்­க­ளும் இலங்­கைக்கு வந்த போதெல்­லாம் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் சம்­பந்­த­மாக தமிழ்த் தலை­வர்­க­ளுக்­கும் அப்­போ­தைய சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டு­க­ளும் கருத்து மோதல்­க­ளும் இடம்­பெற்­றி­ருந்­தன.

தந்தை செல்வா முதல் அமிர்­த­லிங்­கம் வரை பின்­னர் விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் தொடக்­கம் இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான இரா.சம்­பந்­தன் வரை தமி­ழர் பிரச்­சி­னைக்கு உரிய தீர்வு காண்­ப­தற்கு இந்­தியா உதவ வேண்­டும் எனக் குரல் கொடுத்­த­ப­டியே இருந்துள்ளனர்; இருந்து வரு­கின்­ற­னர்.

புதிய நல்­லாட்சி அர­சில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கின்ற தமிழ் த்தலை­வ­ரான இரா.சம்­பந்­த­னை­யும் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி சந்­திக்­கின்ற வாய்ப்­புள்­ள­த­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யின் முக்­கி­யத்­து­வம் உண­ ரப்­ப­டும் என நம்­ப­லாம்.

இலங்­கைக்கு இரண்­டா­வது தட­வை­யாக பய­ணம் மேற்­கொள்­கின்ற இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான மோடி தமிழ்த் தலை­வர்­க­ளால் நேர­டி­யாக எடுத்­து­ரைக்­கப்­ப­டு­கின்ற தமி­ழர்­கள் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக மைத்­திரி அர­சின்­மீது அழுத்­தத்­தைப் பிர­யோ­கிக்க வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு ஈழத் தமி­ழர்­க­ளி­டம் நிறை­ய­ வுண்டு.

பல இந்­தி­யத் தலை­வர்­களை ஈழத் தமி­ழர்­கள் நம்­பி­ய­தும் ஏமாந்­த­தும் இந்­தி­யாவா ஈழத் தமி­ழர்­க­ளுக்கு இப்­ப­டித் துரோ­க­மி­ழைத்­தது என்­ற­வா­றான வெறுப்­பு­ணர்­வு­க­ளி­லி­ருந்­தா­லும், இன்­றைய கால கட்­டத்­தில் நல்­லாட்சி அர­சும் தமிழ் மக்­களை ஏமாற்ற முய­ல்கின்றது என்ற எண்­ணம் மேலோங்­கியுள்ள நிலை­யி­ல், இரண்டு ஆண்­டு­க­ளில் நல்­லாட்சி பற்றித் தெளி­வா­கப் புரிந்­து­ கொண்­டுள்ள தமிழ் மக்­க­ளின் உணர்­வு­களை இந்திய தலைமை அமைச்சர் மதிக்க வேண்­டும்.

மைத்­தி­ரி­யின் நல்­லாட்­சி­யி­லும் தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யற்ற சூழ­லில் படை­யி­ன­ரின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் போர் முடிந்த பின்­னர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர் என்­பதை இந்­தியா முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும். இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரது இரண்­டா­வது பய­ணம் ஈழத் தமி­ழர்­க­ளுக்கு சாத­க­மா­ன­தொரு நிலையை ஏற்­ப­டுத்­தக் கூடி­ய­தாக அமைய வேண்­டும்.

மே 18 இல் முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழர்­கள் கொன்று குவிக்­கப்­பட்டு இன்­று­வ­ரை­யில் இத­யங்­க­ளி­லி­ருந்து ரண­வலி ஆறாது தவிக்­கின்ற, வேத­னைப்­ப­டு­கின்­ற­ ஈழத் தமி­ழர்­களது துய­ரங்­களை ஆற்ற இந்­திய அரசு வழி சமைக்க வேண்­டும். வல்­லமை படைத்த இந்­தி­யத் தலைமை அமைச்சர் நரேந்­தி­ர­மோ­டி­யின் இலங்­கைக்­கான இரண்­டா­வது பய­ணம் ஈழத் தமி­ழர்­க­ளின் விடி­ய­லுக்கு நன்மை பயக்­குமா?

http://uthayandaily.com/story/2139.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.