Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவைச் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி; பொருளாதாரம் குறித்து மைத்திரி, ரணிலுடன் கலந்துரையாடல்

Featured Replies

மஹிந்­தவைச் சந்­திக்கவுள்ள பிர­தமர் மோடி; பொரு­ளா­தாரம் குறித்து மைத்­திரி, ரணி­லுடன் கலந்­து­ரை­யாடல்

Sp38-0245f21098a57bd52c83a69b912b841360ed9f7a.jpg

 

இந்து சமுத்­திர பிராந்­திய நாடுகளின் இணைச்­செ­ய­லாளர் சஞ்ஷே பாண்டா தெரி­விப்பு

(பா.ருத்­ர­குமார்)

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­திக்கவுள்ளதா­க வும் அச்­சந்­திப்பில், இந்­தியா    இலங்­கையின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­கள்­மீது அக்­கறை கொண்­டுள்­ள­மைக்கு மஹிந்த ராஜ­பக் ஷ பாராட்டு தெரி­வித்­த­தா­­கவும் இந்­தியப் பிர­த­மரின் இந்து சமுத்­திர பிராந்­திய நாடு­களின் இணைச்­செ­ய­லாளர் சஞ்ஷே பாண்டா தெரி­வித்தார்.  

மேலும் நேற்­றி­ரவு நடை­பெற்ற இராப்­போ­ஷன விருந்தில் இலங்­கையின் அபி­வி­ருத்தி தொடர்பில் முக்­கி­ய­மான பல உத்­தி­யோ­க­பூர்வ­மற்ற கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், இரு­நாட்டு ஒத்­து­ழைப்பு மூலம் அபி­வி­ருத்தி வளர்ச்­சிப்­ப­ாதைக்கு கொண்டு செல்ல இந்­தியப் பிர­தமர் அதிக ஆர்வம் காட்­டு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்­றி­ரவு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு இலங்­கையில் சிறப்­பான வர­வேற்பு கொடுக்­கப்­பட்­டது. நரேந்­திர மோடிக்கு பிர­த­மரை ரணில் விக்­ர­ம­சிங்க விமான நிலை­யத்தில் வர­வேற்­ற­துடன் பின்னர் கங்­கா­ராம விகா­ரையில் நடை­பெற்ற சர்­வ­தேச வெசாக் தின வழி­பா­டு­க­ளிலும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றி­ரவு (நேற்­றி­ரவு) இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு இராப்­போ­சன விருந்து கொடுத்தார். இந்­நி­கழ்வில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா சம்­பந்தன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன், அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ, ரவி­ க­ருணா­நா­யக்க , மலிக் சம­ர­விக்­ரம, நிமல் ­சி­றி­பா­ல டி சில்வா, இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் எம் பெளஸி ஆகி­யோர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் பெளத்த மதம் முக்­கிய இணைப்பு பால­மாக உள்­ளது. இந்­தியப் பிர­தமர் ஒருவர் இலங்­கைக்கு இரண்டாம் முறை விஜயம் மேற்­கொள்­வது இதுவே முதற்­த­ட­வை­யாகும். அது போல இலங்கை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­துள்­ளனர். கடந்த வாரம் இந்­தி­யா­வினால் விண்­ணுக்கு ஏவப்­பட்ட தெற்­கா­சி­யா­வுக்­கான செயற்­கைக்கோள் ஏவப்­ப­டு­வ­தற்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காணொ­ளி­யூ­டாக இந்­தியப் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

மேலும் இந்­தியப் பிர­தமர் ஒருவர் மலை நாட்­டுக்கு விஜயம் செய்யும் முதற் தடவை இது­வாகும். உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எவ்­வித ஒப்­பந்­தங்­களும் ஏற்­பா­டாகி இருக்­கா­த­போதும் இராப்­போ­சன விருந்தின் போது இலங்கை இந்­திய கூட்டு அபி­வி­ருத்தி தொடர்பில் அதிக கவனம் செலத்­தப்­பட்­டது. இதன்­போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் இருக்கும் புரிந்­து­ணர்வு தொடர்பில் இந்­தியப் பிர­தமர் மன­ம­கி­ழ்ந்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

அபி­வி­ருத்­தியில் இந்­தி­யாவின் பங்கு எப்­போதும் இருக்கும் எனவும் பெளத்த மத அபி­வி­ருத்தி, சுற்­று­லாத்­துறை, வங்­காள விரி­குடா ஒத்­து­ழைப்பு போன்ற வற்றில் அதிக கவனம் செலுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

கேள்வி :

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜ­யத்­தின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் குறிப்பிட்டீர்கள். அச்சந்திப்பின்போது குறிப்பிடத்தக்க ஏதேனும் விடயப் பரிமாற்றல்கள் இடம்பெற்றிருந்தனவா

பதில் :

இச்சந்திப்பு உத்தியோகபூர்வமானதல்ல. முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் அவரைச் சந்தித்தார். இதன்போது இந்தியா இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் காட்டும் ஆர்வத்தையிட்டு தான் மகிழ்ச்சியடைவாதகக் குறிப்பிட்டிருந்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.