Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி

Featured Replies

கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி
 

article_1494592273-tna.jpg

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு  நேற்று (11) மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இன்று (12) சந்தித்தார்.

இதில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும்  கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/196523/க-ட-டம-ப-ப-ச-சந-த-த-த-ர-ம-ட-#sthash.orhCjqwu.dpuf
  • தொடங்கியவர்

அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம் கூட்டமைப்பிடம் மோடி

 

01-4.jpg

இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுடன், இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துணை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே செல்கின்றது. 2016ஆம் ஆண்டிற்குள் தீர்வு வருமென்று எதிர்பார்த்திருந்தோம். இந்த வருடத்திற்குள்ளாவது ஒரு தீர்வு வரவேண்டும். வடகிழக்கு தமிழர்கள் பாரம்பரியமாக, பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள். இங்கு சமஸ்டி அமைப்பின்கீழ் ஒரு நியாயமான தீர்வு வரமுடியும். அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கூறப்போனால் ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் எடுக்கும் நிலைமையையே காணமுடிகின்றது. ஆகவே, குறைந்தது இந்தியாவில் இருக்கக்கூடிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களாவது இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் போனவர்கள் விடயம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை என்பன தொடர்பில் எடுத்துக் கூறியதோடு, இந்தியா பிரத்தியேகமாக வடக்கு கிழக்குக்கு பெரியளவில் முதலீடுகளைச் செய்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்துக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இவைகள் சம்பந்தமாக நாம் ஏற்கனவே அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம். அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் தாமதித்துக் கொண்டிருந்தால் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுக்கும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் உதவ இருக்கின்றோம். இது சம்பந்தமாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கதைத்துள்ளேன். அத்துடன் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுமீது அழுத்தங்களைக் கொடுத்து அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிக்கின்றோம் என்றார்.

02-2.jpg03-4.jpg04-2.jpg2017-05-12-PHOTO-00001134.jpg

 

https://globaltamilnews.net/archives/26679

  • தொடங்கியவர்

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மோடி

 

 

நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளு க்கு காலம் கடத்தாது விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையி லான தேசிய அரசாங்கத்திடம் அழுத்தமாக கூறியுள்ளேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

C_oY3IpU0AEdkPY.jpg

இதேநேரம் ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கமுடியாது. தமிழ் பேசும் மாகாணங்களான வடக்கு, கிழக்கை இணைத்து அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் மோடியிடம் தனது நிலைப்பாட்டினை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் இறுதி அம்சமாக பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முக்கிய சந்திப்பொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ஜெய்சங்கர், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

40 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தாவது,

இந்திய பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்திருந்தது. அவர் இறுதி நேரத்தில் நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் எம்முடன் பொறுமையாக கலந்துரையாடினார்.  

இதன் போது சம்பந்தன் ஜயாஇ தற்போது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதவற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடமே அரசியலமைப்பு இடைக்கால வரைபொன்று வெளியிடப்பட்டு முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த விடயங்களில் பிரதான கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற கருத்தியல் தொடர்பிலான வேற்றுமைகள்இ கட்சி சார்ந்த விடயங்கள் தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக புதிய அரசியல் சாசன செயற்பாடுகள் காலதாமதமாகி செல்கின்றன. எம்மை பொறுத்த வரையில் ஐக்கிய இலங்கைக்குள் பிளவு படாத பிரிக்க முடியாத நாட்டினுள் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இந்த அதிகார பகிர்வு ஒற்றையாட்சிக்குள் நிச்சயமாக மேற்கொள்ள முடியாது. சமஷ்டி அடிப்படையிலேயே அந்த அதிகார பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எட்டு மாவட்டங்களை கொண்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நிலத்தொடர்ச்சியான அந்த பூமி ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அதிகார பகிர்வு விடயத்தில் சட்டம் ஒழுங்கு, காணி பொலிஸ் போன்ற விடயங்கள் இந்திய பிராந்தியங்களுக்கு காணப்படும் அதிகாரத்தை ஒத்தாக இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டார். 

அதனை தொடர்ந்து சம்பந்தன் ஐயா வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன காணி மீட்பு போராட்டங்கள் வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொண்டார்.

அத்துடன் இந்தியா பாரிய உற்பத்திஇ விற்பனைச் சந்தையை கொண்டிருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. ஆகவே விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து  முதலீடுள் செய்வதற்கு முன்வர  வேண்டும்.

இதன் மூலம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு .வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அத்துடன் அரசியல் கைதிகள் மற்றும் வாழ்வாதார தேவைப்பாடுகள் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் குறித்தும் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரினார்.

இச்சமயத்தில் பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை நாங்கள் அவதானித்தோம். அந்த விடயங்கள் கடந்த வருடமே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு வருகை தந்திருந்த போது இலங்கையின் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.

அதன் போது இந்த விடயங்களை முழுமையாக முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன். தற்போதும் கூட அரசியலமைப்பு விடயம் உட்பட ஏனைய விடயங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன்.

பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாது கால தாமதம் தொடருமாக இருந்தால் சவால்களை சந்திக்க நேரிடும் என்பதையும் அவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளேன். 

அதேபோன்று வடக்குஇ கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா தொடர்ந்தும் தன்னாலான உதவிகளையும் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றது. இந்தியா தொடர்ந்தும் உங்களுடனையே இருக்கும் என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பின் தலைவரை பார்த்து நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொறுமையாக கையாள்கின்றீர்கள் உங்களது தலைமைத்துவம் அவர்களுக்கு தொடர்ச்சியாக அவசியம் உங்களின் அணுகுமுறை செயற்பாடுகளை நாம் பாராட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/19944

  • தொடங்கியவர்

மோடிக்கு அன்பு அழைப்பு நேற்று விடுத்த சம்பந்தன்

இலங்­கைக்கு அடுத்த தடவை வரும் போது, திரு­கோ­ண­மலை கோணேஸ்­வ­ரர் ஆல­யத்­திற்­கும் மோடி வருகை தர­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் அன்­பான வேண்டுகையை முன்வைத்தார் நேற்று.

தான் இந்தியா திரும்புவதற்குச் சற்று முன்னதாக கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் கூட்டமைப்பினரைச் சந்தித்தார் மோடி. சந்திப்பு மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்தித்து மோடியுடன் என்ன பேசுவது என்பது தொடர்பில் ஆராய்ந்தனர்.

சந்திப்பின் ஆரம்பத்தில், இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, கூட்டமைப்பினருக்கு கைலாகு கொடுத்தார். கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனே சுமார் 12 நிமிடங்கள் வரையில் பேசினார். அப்போதே கோணேஸ்வரர் கோவிலுக்கும் கட்டாயம் மோடி வரவேண்டும் என்கிற அழைப்பை அன்பாக விடுத்தார்.

‘‘இறைவன் சித்தம் இருந்தால் அது நடக்கும்’’ என்று மோடி அதற்குப் பதிலளித்தார்.

http://uthayandaily.com/story/2609.html

  • தொடங்கியவர்

உடல் நலன் கவ­னம் சம்­பந்­த­ரி­டம் நேற்று மோடி உருக்­கம்

‘‘உடல் நலத்­தைப் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்’’ என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம் பந்­த­னி­டம் உருக்­க­மா­கத் தெரி ­வித்­தார். இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி.

இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி, கூட்­ட­மைப்பு இடை­யி­லான சந்­திப்பு நேற்று கட்­டு­நா­யக்கா வானூர்தி நிலை­யத்­தில் நடந்­தது. அப்­போதே மோடி இத­னைக் கூறி­னார்.

‘‘நீங்­கள் (சம்­பந்­தன்) இன்று தமிழ் மக்­க­ளுக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யுள்­ளீர்­கள். உங்­க­ளது பொறு­மை­யான இந்த அணு­கு­மு­றையை நாங்­கள் வெகு­வாக மெச்­சு­கின்­றோம்; வர­வேற்­கின்­றோம். உங்­க­ளு­டைய உடல் நலத்தை கவ­ன­மா­கப் பார்த்­துக் கொள்­ளுங்­கள்’’ – என்­றார்.

http://uthayandaily.com/story/2625.html

  • தொடங்கியவர்

தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மோடி வலியுறுத்து

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு உடன் முற்­றுப்­புள்ளி வைக்­கு­மாறு கொழும்­பி­டம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி.

வெசாக் தினக் கொண்­டாட்­டத்துக்காக நேற்­று­முன்­தி­னம் மாலை கொழும்பை வந்­த­டைந்­தார் மோடி. அவர் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அரச தலை­வர் மைத்தி­ரி­பால சிறி­சேன ஆகி­ யோ­ரு­டன் பேசி­னார். நேற்று மாலை­யில் இந்­தியா புறப்­பட்ட அவர், அதற்குச் சற்று முன்பாக கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில், மாலை 6 மணிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார்.

கொழும்பு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளில் காலதாமதமின்றித் தீர்வைக் காணுமாறு மே◌ாடி மைத்திரி, ரணில் ஆகியோரிடம் வலியுறுத்தினார். இது குறித்து அவரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எடுத்துக் கூறினார்.

“நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அண்மையில் புதுடில்லிக்கு வந்த இலங்கைத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எமது இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தோம். தற்போது நான் இங்கு வந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்குமாறும், காலதாமதமின்றி தீர்வைக் காணுமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்’’ என்று மோடி எம்மிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மோடியுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு கடந்த வருடமே எட்டப்படும் என்று தாம் நினைத்திருந்தபோதும் அது நடைபெறவில்லை என்பதை இலங்கை அரசின் கவனத்துக்குத் தாம் கொண்டு வந்தார் என்பதையும் மோடி வெளிப்படுத்தினார் எனச் சுமந்திரன் தெரிவித்தார்.

http://uthayandaily.com/story/2615.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

‘‘நீங்­கள் (சம்­பந்­தன்) இன்று தமிழ் மக்­க­ளுக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யுள்­ளீர்­கள். உங்­க­ளது பொறு­மை­யான இந்த அணு­கு­மு­றையை நாங்­கள் வெகு­வாக மெச்­சு­கின்­றோம்; வர­வேற்­கின்­றோம். உங்­க­ளு­டைய உடல் நலத்தை கவ­ன­மா­கப் பார்த்­துக் கொள்­ளுங்­கள்’’ – என்­றார்.

ஆமா ஆமா.. சிங்களவன் மாதிரி.. சீனாவிடமும் ஓடி.. அமெரிக்கனிடமும் ஓடி.. ரஷ்சியனிடமும் ஓடி.. பயங்காட்டி பயங்காட்டி..ஹிந்தியனை தன்ர வீட்டுப் பூனை மாதிரி தன் காலடியில் சுற்றி வர வைக்காமல்.. ஹிந்தியன் காலடியே சரணமுன்னு..ஹிந்தியன் காலடியை சுற்றி வரும் பூனையாக சம்பந்தன் உள்ளாரில்ல. அதுபோக.. சிங்களவனையும் சாந்தமா வைச்சிருக்காரில்ல. அதுபோதும்.. ஹிந்தியன் சம்பந்தரின் உடல் நலனில் அதீத அக்கறைப்பட. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழ் மக்களின் இருப்பை இலங்கைத் தீவில் சிதைத்ததை விட வேறு எதுவும் அவர்களுக்கு வழங்கவில்லை. அதுபற்றி ஹிந்தியனுக்கோ.. சிங்களவனுக்கோ.. அமெரிக்கனுக்கோ.. சீனனுக்கோ... ரஷ்சியனுக்கோ.. ஏன் கவலை வரப் போகுது. அவங்க வியாபாரம்.. தானே முக்கியம் அவங்க அவங்களுக்கு.  tw_blush::unsure:

சம்பந்தரும் தான் ஒவ்வொத்தரும் வர வர ஓடி ஓடிப் போய் பூனை மாதிரி காலை தடவிக்கிட்டு வாறார்.. அவரின் வசதி வாய்ப்புக்கள் பெருகினது தான் மிச்சம். தமிழ் மக்களுக்கு வெறுவாயும்.. வாய்க்கரிசியும் தான்..! இதெல்லாம்.. தமிழ் மக்களின் தலைமை?????! ஹிந்தியனுக்கு சிங்களவனுக்கு வசதியான தலைமை. tw_blush:

........

 

Edited by நியானி
தணிக்கை

  • தொடங்கியவர்

சம்பந்தனை மெச்சிய மோடி

 

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டி மெச்சியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இருதரப்பு கலந்துரையாடலின் ஈற்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் (சம்பந்தன்) மிகவும் பொறுமைசாலி அமைதியாக விடயங்களை கையாளுகின்றீர்கள். தமிழ் மக்களுக்கு கிடைத்த அதி உன்னத தலைவராக இருக்கின்றீர்கள். உங்களுடைய பொறுமையை நாம் வெகுவாக பாராட்டுகின்றேன். உங்களுடைய அனுபவ ரீதியான அணுகுமுறைகளையும் பாராட்டுகின்றேன். உங்களுடைய உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் கையாளக்கூடிய ஒரு தலைவர் நீங்களே. நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம் என்று கூறி சந்திப்பை நிறைவு செய்துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-13#page-2

  • கருத்துக்கள உறவுகள்

கதைச்சது 12 நிமிடங்கள். சம்பந்தர் மோடியை திருகோணமலைக்கு வரச் சொல்லி அழைப்பு விட்டதும். மோடி சம்பந்தரின் உடல்நலன் பற்றி விசாரிப்பதும் பரஸ்பர கைகுலுக்கலுக்கும் போய்விட்டு வாறேன் என்று விடைபெறுவதற்கும் போன நேரத்தைக் கழிச்சா மிகுதி 5 நிமிசத்துக்குளள அறுபது வருட கால தமிழ்மக்களின் பிரச்சினை பற்றி என்ன கதைச்சிருப்பினம்????

  • தொடங்கியவர்

பயன்தருமா பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம்?

 
 

மோடி இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கமே இந்தியா - இலங்கை இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, இந்தியாவும், இலங்கையும் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டுசென்றதாகத் தெரிவித்தார். இந்தியாவில் புத்தர் முதன்முதலில் பேசிய வாரணாசிக்கும், கொழும்பிற்கும் இடையே வரும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து இந்தியா திரும்புவதற்காக, விமான நிலையத்திற்கு அவர் சென்றபோது, வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்கள் அளித்த வரவேற்பால் அவர் நெகிழ்ந்து போனார். தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த இலங்கை மக்களுக்கு, காரில் இருந்தவாறே பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்தியாவுக்குப் புறப்படும் முன், மத்திய மாகாணத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா உதவியுடன் மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது இலங்கையில் நான்காயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவுடனான இலங்கையின் சமூக - பொருளாதார நல்லுறவுகள் மேலும் வலுப்படும் வகையில், அப்பகுதி மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்றும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் மிகக் கடும் சோதனைகளை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி இலங்கை பயணம்இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைத்தார். இலங்கையில் இரண்டுநாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் டெல்லி திரும்பினார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடான இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது என்றும் மோடி குறிப்பிட்டார். இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்திக்கொள்ள அண்டை நாடான சீனா தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாதான் மிக நெருக்கமான நாடு என்பதை பறைசாற்றும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்தது என்றே கூறலாம். 

 

என்றாலும், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் அங்கு வாழும் தமிழர்களுக்கு நன்மையைக் கொண்டுவருமா என்பது சந்தேகமே என இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மோடியின் இந்தப் பயணத்தால், இந்தியா - இலங்கை இடையே நல்லுறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதேவேளையில். அங்குவசிக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பிரதமராகப் பதவியேற்ற பின் இலங்கைக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டது இது இரண்டாவது முறையாகும். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மோடி, கடந்த 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/89249-will-modis-visit-help-srilankan-tamils.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.