Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்! - மோடியிடம் கோரிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்! - மோடியிடம் கோரிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் Top News 
 
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.   

இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக விபரமாக எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.

குறுகிய சந்திப்பாக நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் மோடி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும், இவை தொடர்பில் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணிலிடம் எடுத்துரைத்ததாகவும் தற்போது ஜனாதிபதியிடமும் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று, பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5.35 மணியளவில், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, புதுடில்லி நோக்கிப் புறப்பட்டார். இந்திய விமானச் சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், அவர் இந்தியா நோக்கிப் புறப்பட்டதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

TNA-met-modi-120517-seithy%20(1).jpg

 

 

TNA-met-modi-120517-seithy%20(2).jpg

 

 

TNA-met-modi-120517-seithy%20(3).jpg

 

 

TNA-met-modi-120517-seithy%20(4).jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

மோடி தமிழ்த் தலைவர்களுடன்.......Bildergebnis für Sad smily

TNA-met-modi-120517-seithy%20(3).jpg

 

மோடி சிங்களத் தலைவர்களுடன்......  Bildergebnis für Happy smily

18426042_254892564979208_502544226_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.