Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

இலங்கை ரசிகர்கள் நிதானமானவர்கள் வீரர்களின் வீடுகளைத் தாக்க மாட்டார்கள்

* சங்ககாரா கூறுகிறார்

இந்திய அணி மீது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பே தோல்விக்கு காரணம் என இலங்கையின் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது குறித்து சங்ககாரா அளித்த பேட்டியில்,

"இந்திய அணி மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களது எதிர்பார்ப்பு இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இந்திய, பாகிஸ்தான் அணிகளில் நான் இடம்பெறாதது அதிர்ஷ்டம். இலங்கை ரசிகர்கள் சற்று நிதானமானவர்கள். தோல்வி குறித்து விமர்சனங்கள் எழும் ஆனால் வேறு எதுவும் நடக்காது.

வீரர்களது வீடுகள் மீது தாக்குதல் எதுவும் நடக்காது. எங்களது பாதுகாப்பு விடயத்திலும் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. உலகக் கிண்ணத் தொடருக்காக இந்திய அணியினர் போதிய பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது அவர்களது உடல் அசைவுகளில் நன்றாக தெரிந்தது.

இந்திய அணி வெளியேறியதால் `சுப்ப-8' சுற்று போட்டிகளுக்கு அவ்வளவாக ரசிகர் கூட்டம் இல்லை" எனவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/3/31/...s_page24336.htm

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

நள்ளிரவில் நாடு திரும்பிய இந்திய அணி வரவேற்க எவருமே இருக்கவில்லை

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் தோல்வியுற்ற இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாடு திரும்பினார்கள். விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் வீடுகளுக்கு விரைந்தனர்.

9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ், இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்து `சுப்ப-8' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.

மோசமான ஆட்டத்தால் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. வீரர்களின் கொடும்பாவிகள், படங்கள் அவமரியாதைக்கும், அக்னிக்கும் ஆட்பட்டன. சில வீரர்களின் வீடுகள் தாக்குதலுக்கும் உள்ளாகின.

ரசிகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் தனித்தனியாக அதிகாலையில் தங்கள் ஊருக்கு வந்தனர்.

மேற்கிந்தியாவிலிருந்து லண்டன் வந்த இவர்கள் அங்கிருந்து தனித்தனி குழுக்களாக பிரிந்து தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

வீரேந்திர ஷேவாக், தோனி ஆகியோர் புதன்கிழமை நள்ளிரவில் டில்லி வந்தடைந்தனர். அவர்கள் இருவரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறினார்கள். காத்திருந்த பத்திரிகையாளர்களை அவர்கள் சந்திக்கவில்லை.

டெண்டுல்கர், அகர்கார், இர்பான் பதான், பட்டேல், பயிற்சியாளர் கிரேக் சப்பல் ஆகியோர் அதிகாலை மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய கிரிக்கெட் சபைச் செயலாளர் நிரஞ்சன் ஷா, நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் வீரர்களை வரவேற்றனர்.

கப்டன் ராவிட், கும்ப்ளே, ரொபின் உத்தப்பா ஆகியோர் அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூர் வந்தடைந்தனர். அவர்கள் 3 பேரும் வி.ஐ.பி. வாசல் வழியாக பொலிஸ் பாதுகாப்புடன் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். ராவிட்டை வரவேற்க அவரது மனைவி டாக்டர் விஜேதா வந்திருந்தார்.

பெங்களூர் வந்திறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அங்கிருந்து விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அவர் பொலிஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். அவரை அவருடைய மாமா மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கங்குலி மட்டும் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்தில் தங்கியிருக்கும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் கொல்கத்தா திரும்புவார் என்று தெரிகிறது.

வீரர்கள் வருகையையொட்டி விமான நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரசிகர்கள் வழக்கமாக அணியை வரவேற்க அதிக அளவில் வருவார்கள். அவர்கள் எவரும் வரவில்லை. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.

http://www.thinakkural.com/news/2007/3/31/...s_page24338.htm

ஒஸ்ரேலியா - பங்களதேசம் நாடுகளுக்குடையே மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் நடந்த போட்டியில் பங்களதேச அணியை ஓஸ்ரேலியா அணி 10 விக்கட்டுக்களால் வென்றது.

விபரம் :

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாட பங்களதேசத்தை அழைத்தது,

22 ஒவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை மட்டுமே பங்களதேச அணியினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

105 ஓட்ட இலக்கைக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஒஸ்ரேலிய அணி 13.5 ஓவர்களில் விக்கட் இழப்பு ஏதும் இல்லாமல106 ஒட்டங்களைப் பெற்று இலக்கை வெகு இலகுவாக அடைந்தது வெற்றி பெற்றது. இவர்கள் சராசரி ஓட்ட எண்ணிக்ககை 7.66 ஆகும்.

ஜானா

உங்கட பங்களாதேசை யாரப்பா குறைத்து மதிப்பிட்டது நான் எனக்கு பிடித்த அணியினை கூட்டி மதிப்பிட்டன் அவளவு தான்.

யாழ் வினோ. வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஞாபகமிருக்கட்டும்..

:P

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா பந்து வீச்சாளர் கிளன் மக்கிராத் புதிய சாதனை நிலை நாட்டினார்.

உலக கிண்ண போட்டிகளில் 55 விக்கெற்றுக்களை கைப்பற்றி உலக கிண்ண போட்டிகளின் வரலாற்றில் அதிகம் விக்கெற்றுக்களை கைப்பற்றியவராக முன்னைய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் வஷீம் அக்ரம் இருந்து வந்தார். இவரது இந்த சாதனையை நேற்றைய ஆட்டத்தின் போது கிளன் மக்கிராத் முறியடித்துள்ளார் நேற்றைய பங்களாதேஸ் உடனான ஆட்டத்தின் போது மக்கிராத் 3 விக்கெற்றுக்களை கைப்பற்றியதனால் உலக கிண்ண போட்டிகளில் அவர் தற்போது மொத்தம் 57 விக்கெற்றுக்களை கைப்பற்றி வஷீம் அக்ரம் இனது சாதனையை முறியடித்துள்ளார்.

miczh9.jpg

நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணியினர் 10 விக்கெற்றுக்களினால் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

gilliak1.jpg

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இன்று இலங்கை - மேற்கிந்திய அணிகள் போட்டி.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது சுற்று ஆட்டங்களில் இன்று 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை- மேற்கிந்தியத் தீவு அணிகள் கயானா மைதானத்தில் போட்டியிடுகின்றன.

2 ஆவது சுற்று ஆட்டங்களில் மே. இந்தியத் தீவு அணி இதுவரை 2 போட்டிகளில் பங்குபற்றி தோல்விகளையே தழுவிக் கொண்டது. 1 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் 103 ஓட்டங்களினாலும், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 7 விக்கெட்டுகளினாலும் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி இதுவரை ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் போட்டியிட்டு ஒரு விக்கெட்டினால் இறுதி நேரத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில்தான் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க பண்டார 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கை, மேற்கிந்தியத் தீவு அணிகளிடையே இன்று நடைபெற இருக்கும் ஆட்டம் பலத்த பலப்பரீட்சையாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய போட்டியின் வெற்றி இவ்விரு அணிகளுக்கும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

-Thinakkural-

[உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது சுற்று ஆட்டங்களில் இன்று 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை- மேற்கிந்தியத் தீவு அணிகள் கயானா மைதானத்தில் போட்டியிடுகின்றன. ]

இதுநேரம் வரை விளையாட்டு ஆரம்பிக்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் மழை.. மழை..

ஆட்டங்கள் 20 ஓவர், 15 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டம் என்று தினமும் இதே கதை தான்.

இதற்கு மட்டுப்படுத்தபட்ட ஓவர் உலகக்கப் என்று பெயர் வைக்கலாம் போலிருக்கிறது.

கூட்டமே இல்லை.. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால் இப்படியா கூட்டம்வரும் -- அதுவும் சுப்பர் 8 வந்துவிட்ட பின்னரும்..

ICC நன்றாக யோசிக்கட்டும்.. 100 டொலர் ரிக்கற்றாம்.. உள்நாட்டுக்காரர். வருவது மிகக்குறைவு.. இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறியதினால் அமெரிக்காவில் இருந்து வரும் அவர்களது ஆதரவாளர்கள் வராமல் போனதும் ஒரு காரணம்.

Lara சொல்கிறார். தங்கள் நாட்டில் நடக்கின்ற போட்டிகளுக்கு தங்கள் நாட்டவரே வரவில்லை என்று.

ICC யினரே இம்முறையோடு நிறுத்திகொண்டாலும் ஆச்சரியமில்லை..

:D:rolleyes::huh:

கூட்டமே இல்லை.. -- அதுவும் சுப்பர் 8 வந்துவிட்ட பின்னரும்..

Lara சொல்கிறார். தங்கள் நாட்டில் நடக்கின்ற போட்டிகளுக்கு தங்கள் நாட்டவரே வரவில்லை என்று.

என் கூற்றை வாபஸ் பெறுகிறேன்.. ந்ல்ல கூட்டம்.. மேற்கிந்திய தீவுகளுக்கு ஆதரவாக வந்திருந்தார்கள்..

இலங்கை 303-5 - 50ஓவர் முடிவில்

சனத் ஜெயசூரிய 115 (அருமையான சிக்சர்களுடன்)

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசூர்யாவின் அதிரடி மூலம் மீண்டும் ஒரு விறுவிறுப்பு அதிரடி ஆட்டத்தை ரசிக்க முடிந்தது.

ஜெயசூர்யா 15 ஓவர்கள் தாக்கு பிடித்துவிட்டால், எதிரணிக்கு திண்டாட்டம் இப்படி கூறியது தென்னாபிரிக்க முன்னாள் கப்டனும், அமரருமான கன்சி குரோஞ்ஜி, அவர் சொன்னது பல வருடங்களுக்கு முன்னர், ஜெயசூர்யாவுக்கு தற்போதைய வயசு 37, 1996இல் எப்படி விளையாடினரோ எப்படிப்பட்ட சொட்களை அடித்தாரோ அதையே தான் இப்பொழுது பின்பற்றுகிறார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினால்தான் 250 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியும் என்ற கூற்றினை முறியடித்தார் ஜெயசூர்யா, இன்று நடைபெற்ற போட்டியினை நோக்கினால், ஆட்டம் தொடங்கமுதல் பெய்த மழையினால் வேகபந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது பிச், அதனால் முதலில் ஜெயசூர்யாவும் தரங்கவும் வெஸ்ரிண்டீஸ் பந்துவீச்சாளர்களை சமாளிக்க கஸ்ரப்பட்டார்கள், தரங்கவும், சங்கக்காரவும் பெரிய ஓட்டங்களை எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள், ஜெயசூர்யா 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்றால் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 12,13 ஓவர்களுக்கு 100ஐ தாண்டிவிடும், ஆனால் நிலமை இன்று வேறு, 15 ஓவர்களில் வெறும் 60, 70. அதன் பின் அதிரடியாக ஆடவெளிக்கிட்ட ஜெயசூர்யா 20வது ஓவரில் 90 ஓட்டங்களை எடுக்க உதவினார், 4, 6 என்று பந்து பறந்தது.

நான் பார்த்த வீரர்களில் கஸ்ரப்படாமல் சிக்ஸ் அடிக்கும் வீரர் ஜெயசூர்யாவே.

பெரும்பாலும் 95% விகிதம் அவுஸ்ரேலிய இலங்கை அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும், அடுத்த சுற்றில் அவுஸ்ரேலிய, இலங்கை, நியுசிலாந்த், தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கை இந்த உலக கிண்ணத்தை கைப்பற்ற நிறைய வாய்ப்புக்கள் அதிகம்.

வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும், முரளி, டில்சான் போன்றோரின் களத்தடுப்பும், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, டில்சான், சில்வா, சங்கக்காரா ஆகியோரின் துடுப்பாட்டமும், அவுஸ்ரேலியாவையே பயமுறுத்துகிறது. பிரட்லீ இல்லாததினால் அவுஸ்ரேலியாவுடன் நடைபெறப்போகும் போட்டியில் ஜெயசூர்யாவுக்கு வேட்டைதான். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தோன்றுகின்றது.

அவுஸ்ரேலியாவுக்கு தலையிடி குடுக்க கூடிய அணி இலங்கை அணி என்று சொன்னால் மிகையாகாது!

Edited by Danklas

நேற்று இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியினரின் மிக மோசமான களத்தடுப்பு தான் காரணம் என்பது நேற்றைய ஆட்டம் பார்த்த எல்லாருக்கும் தெளிவாக தெரியும். இவளவு நாளும் நடை பெற்ற ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது நேற்றைய தினம் மிகவும் மோசமான களத்தடுப்பில் மேற்கிந்திய அணியினர் ஈடுபட்டனர் அதன் விளைவாகத் தான் இலங்கை அணியினர் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.

வெட் - 13 ஓட்டங்கள்

நோ போல் - 05 ஓட்டங்கள்

லெக் பைஸ் - 07 ஓட்டங்கள்

ஓவர் துரோ பவுன்டறி - 03 X 04 = 12 ஓட்டங்கள்

மொத்தம் 37 உதிரி ஓட்டங்கள்.

இது மட்டும் இல்லை நேற்று மேற்கிந்திய அணி வீரர்கள் எத்தனையோ ரண் அவுட் வாய்ப்புக்களை நழுவ விட்டார்கள் அத்துடன் பல பிடிகளையும் தவற விட்டார்கள். இப்பபடி மிக பெரிய தவறுகளை அவர்கள் விட்ட காரணத்தால் தான் நேற்று அவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தவறுகளை அவுஸ்ரேலியா அணி வீரர்கள் ஒரு போதும் விடமாட்டார்கள் ஏன் என்றால் பொன்டிங்கின் தலமைத்துவம் மிகவும் சிறந்தது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெறுவது மிகவும் கடினம் அத்துடன் மழை வாராமல் ஆட்டம் ஒழுங்காக நடை பெற்றால் இலங்கை அணியால் அவுஸ்ரேலியா அணியை ஒரு போதும் வெல்ல முடியாது.

யாழ்களப்போட்டியில் 11 போட்டியாளர்கள் இலங்கை மேற்கிந்தியா அணியினை வெற்றி பெறும் என்று சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். ஒரு போட்டியாளர் இப்போட்டியில் கேள்வியைச் சரியாகப் பார்க்காமல் பாகிஸ்தான் வெற்றி பெறும் எனப் பதில் அளித்திருந்தார். தவறாகப் பதில் அளித்திருந்தாலும் தொடர்ந்தும் யாழ் வினோ முதல் இடத்தில் இருக்கிறார். மணிவாசகன், மது,ஈழவன்,கந்தப்பு, ரமா, வெண்ணிலா ஆகியோர் முறையே 7ம்,8ம்,9ம்,13ம்,14ம்,15ம் இடத்தில் இருந்து முறையே 6ம்,7ம்,8ம்,11ம்,12ம்,13ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=279490

நேற்று இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியினரின் மிக மோசமான களத்தடுப்பு தான் காரணம் என்பது நேற்றைய ஆட்டம் பார்த்த எல்லாருக்கும் தெளிவாக தெரியும். இவளவு நாளும் நடை பெற்ற ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது நேற்றைய தினம் மிகவும் மோசமான களத்தடுப்பில் மேற்கிந்திய அணியினர் ஈடுபட்டனர் அதன் விளைவாகத் தான் இலங்கை அணியினர் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.

வெட் - 13 ஓட்டங்கள்

நோ போல் - 05 ஓட்டங்கள்

லெக் பைஸ் - 07 ஓட்டங்கள்

ஓவர் துரோ பவுன்டறி - 03 X 04 = 12 ஓட்டங்கள்

மொத்தம் 37 உதிரி ஓட்டங்கள்.

quote -

ஹலோ யாழ் வினோ.. நீர் Lara சொல்லாதைக்கூட சொல்கிறீர். 113 வித்தியாசத்தில் 36ஐக் கழியும். தெரியும்.

விட்டால் ஜெயசூரியா சிக்சர் அடித்திருக்கவிட்டால் 300 தாண்டியிருக்கமாட்டர்கள் என்றும் சொல்வீர் போலிருக்கிறது. இருந்து பாரும்..

:lol:

Edited by Ponniyinselvan

ஜெயசூர்யாவின் அதிரடி மூலம் மீண்டும் ஒரு விறுவிறுப்பு அதிரடி ஆட்டத்தை ரசிக்க முடிந்தது.

ஜெயசூர்யா 15 ஓவர்கள் தாக்கு பிடித்துவிட்டால், எதிரணிக்கு திண்டாட்டம் இப்படி கூறியது தென்னாபிரிக்க முன்னாள் கப்டனும், அமரருமான கன்சி குரோஞ்ஜி, அவர் சொன்னது பல வருடங்களுக்கு முன்னர், ஜெயசூர்யாவுக்கு தற்போதைய வயசு 37, 1996இல் எப்படி விளையாடினரோ எப்படிப்பட்ட சொட்களை அடித்தாரோ அதையே தான் இப்பொழுது பின்பற்றுகிறார்.

நான் பார்த்த வீரர்களில் கஸ்ரப்படாமல் சிக்ஸ் அடிக்கும் வீரர் ஜெயசூர்யாவே.

பெரும்பாலும் 95% விகிதம் அவுஸ்ரேலிய இலங்கை அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும், அடுத்த சுற்றில் அவுஸ்ரேலிய, இலங்கை, நியுசிலாந்த், தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கை இந்த உலக கிண்ணத்தை கைப்பற்ற நிறைய வாய்ப்புக்கள் அதிகம்.

வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும், முரளி, டில்சான் போன்றோரின் களத்தடுப்பும், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, டில்சான், சில்வா, சங்கக்காரா ஆகியோரின் துடுப்பாட்டமும், அவுஸ்ரேலியாவையே பயமுறுத்துகிறது. பிரட்லீ இல்லாததினால் அவுஸ்ரேலியாவுடன் நடைபெறப்போகும் போட்டியில் ஜெயசூர்யாவுக்கு வேட்டைதான். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தோன்றுகின்றது.

அவுஸ்ரேலியாவுக்கு தலையிடி குடுக்க கூடிய அணி இலங்கை அணி என்று சொன்னால் மிகையாகாது!

Danklas நிங்கள் சொன்னது மெத்தச்சரி..

:lol::o:o

Danklas நிங்கள் சொன்னது மெத்தச்சரி..

untitled1bp0.jpg

:lol::o

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.10 Bet

South Africa 5.00 Bet

Sri Lanka 5.00 Bet

New Zealand 5.50 Bet

England 17.00 Bet

West Indies 51.00 Bet

Bangladesh 201.00 Bet

Ireland 1001.00 Bet

ஜெயசூர்யாவின் அதிரடி மூலம் மீண்டும் ஒரு விறுவிறுப்பு அதிரடி ஆட்டத்தை ரசிக்க முடிந்தது.

ஜெயசூர்யா 15 ஓவர்கள் தாக்கு பிடித்துவிட்டால், எதிரணிக்கு திண்டாட்டம் இப்படி கூறியது தென்னாபிரிக்க முன்னாள் கப்டனும், அமரருமான கன்சி குரோஞ்ஜி, அவர் சொன்னது பல வருடங்களுக்கு முன்னர், ஜெயசூர்யாவுக்கு தற்போதைய வயசு 37, 1996இல் எப்படி விளையாடினரோ எப்படிப்பட்ட சொட்களை அடித்தாரோ அதையே தான் இப்பொழுது பின்பற்றுகிறார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினால்தான் 250 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியும் என்ற கூற்றினை முறியடித்தார் ஜெயசூர்யா, இன்று நடைபெற்ற போட்டியினை நோக்கினால், ஆட்டம் தொடங்கமுதல் பெய்த மழையினால் வேகபந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது பிச், அதனால் முதலில் ஜெயசூர்யாவும் தரங்கவும் வெஸ்ரிண்டீஸ் பந்துவீச்சாளர்களை சமாளிக்க கஸ்ரப்பட்டார்கள், தரங்கவும், சங்கக்காரவும் பெரிய ஓட்டங்களை எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள், ஜெயசூர்யா 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்றால் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 12,13 ஓவர்களுக்கு 100ஐ தாண்டிவிடும், ஆனால் நிலமை இன்று வேறு, 15 ஓவர்களில் வெறும் 60, 70. அதன் பின் அதிரடியாக ஆடவெளிக்கிட்ட ஜெயசூர்யா 20வது ஓவரில் 90 ஓட்டங்களை எடுக்க உதவினார், 4, 6 என்று பந்து பறந்தது.

நான் பார்த்த வீரர்களில் கஸ்ரப்படாமல் சிக்ஸ் அடிக்கும் வீரர் ஜெயசூர்யாவே.

பெரும்பாலும் 95% விகிதம் அவுஸ்ரேலிய இலங்கை அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும், அடுத்த சுற்றில் அவுஸ்ரேலிய, இலங்கை, நியுசிலாந்த், தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கை இந்த உலக கிண்ணத்தை கைப்பற்ற நிறைய வாய்ப்புக்கள் அதிகம்.

வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும், முரளி, டில்சான் போன்றோரின் களத்தடுப்பும், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, டில்சான், சில்வா, சங்கக்காரா ஆகியோரின் துடுப்பாட்டமும், அவுஸ்ரேலியாவையே பயமுறுத்துகிறது. பிரட்லீ இல்லாததினால் அவுஸ்ரேலியாவுடன் நடைபெறப்போகும் போட்டியில் ஜெயசூர்யாவுக்கு வேட்டைதான். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தோன்றுகின்றது.

அவுஸ்ரேலியாவுக்கு தலையிடி குடுக்க கூடிய அணி இலங்கை அணி என்று சொன்னால் மிகையாகாது!

டண் சரியாக சொன்னீர்கள் , 37வயதில் ஒருவர் ஜெயசூரியாவைபோல் விளையாட முடியுமா........? இப்பொழுதுள்ள இளம் வீரர்களின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக விளையாடுகிறார், ஓட்டத்தை ஓடி எடுக்கும் அவர்து வேகத்திற்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது, நேற்று பொறுப்பான முறையுல் துடுப்பெடுத்தாடினார், என்னைப் பொறுத்தவரை 96ம் ஆண்டு உலக கிண்ணத்தை விட தற்போது அவரது துடுப்பாட்டம் சிறப்பாகவுள்ளது என்றே கூறுவேன், இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் வீரர்களின் ஒற்றுமை என்றே கூறலாம்.

இலங்கை அணி புள்ளியில் இரண்டாவதாகவும், நெட் ரன் ரேட்டில் முதலாதாகவும் இருக்கின்றது, அனேகம்மாக டண் சொனதை போல இலங்கை, அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்க, நியூசிலாந்து அணிகளே பெரும் பாலும் அரையிறுதிக்கு செல்லும்

இந்த டண் இதிலமட்டும்தன் உருபடியா எழுதிறான் பாவி :o

அவுஸ்ரேலியாவுக்கு தலையிடி குடுக்க கூடிய அணி இலங்கை அணி என்று சொன்னால் மிகையாகாது!

அவுசிக்கு தலை இடி கொடுக்க ஒரு அணியும் இன்னும் பிறக்கல்ல

நேற்று இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியினரின் மிக மோசமான களத்தடுப்பு தான் காரணம் என்பது நேற்றைய ஆட்டம் பார்த்த எல்லாருக்கும் தெளிவாக தெரியும். இவளவு நாளும் நடை பெற்ற ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது நேற்றைய தினம் மிகவும் மோசமான களத்தடுப்பில் மேற்கிந்திய அணியினர் ஈடுபட்டனர் அதன் விளைவாகத் தான் இலங்கை அணியினர் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.

வெட் - 13 ஓட்டங்கள்

நோ போல் - 05 ஓட்டங்கள்

லெக் பைஸ் - 07 ஓட்டங்கள்

ஓவர் துரோ பவுன்டறி - 03 X 04 = 12 ஓட்டங்கள்

மொத்தம் 37 உதிரி ஓட்டங்கள்.

இது மட்டும் இல்லை நேற்று மேற்கிந்திய அணி வீரர்கள் எத்தனையோ ரண் அவுட் வாய்ப்புக்களை நழுவ விட்டார்கள் அத்துடன் பல பிடிகளையும் தவற விட்டார்கள். இப்பபடி மிக பெரிய தவறுகளை அவர்கள் விட்ட காரணத்தால் தான் நேற்று அவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தவறுகளை அவுஸ்ரேலியா அணி வீரர்கள் ஒரு போதும் விடமாட்டார்கள் ஏன் என்றால் பொன்டிங்கின் தலமைத்துவம் மிகவும் சிறந்தது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெறுவது மிகவும் கடினம் அத்துடன் மழை வாராமல் ஆட்டம் ஒழுங்காக நடை பெற்றால் இலங்கை அணியால் அவுஸ்ரேலியா அணியை ஒரு போதும் வெல்ல முடியாது.

இருங்க ராசா ஆஸி சிரிலங்க மட்ச்ல தெரியும் ராசா எல்லாம்

அதையும் பார்ப்போம்

:P :o

அதையும் பார்ப்போம்

:P :D

வீரப்பா பாசையில் சொல்வதானால் ...ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...... சரியான போட்டி..

:lol::lol: :P

அதையும் பார்ப்போம்

:P :lol:

வெயிட் அன்ட் சீ கண்ணு

வெயிட் அன்ட் சீ கண்ணு

ஜம்மு கவுன்டவுண் ஸ்டாட்

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்: இந்த டண் இதிலைமட்டுந்தான் உருப்படியா எழுதிறான் பாவி. :lol:

மிஃடர் டண்: யு ஆர் லக்கி. :lol::D

" வசிட்டர் வாயால் பிரம்மரிசி "

எனக்கும் கிரிக்கட் மிகவும் பிடிக்கும். யாழ்.இந்துக்கல்லூரி. ஆனால் கணணி மு_லம்விளையாட்டை சரியாகத் தரத் தெரியவில்லை.. ஆனால் களம் வெரி சுப்பர். இன்னும் கவனிக்கிறேன். :D:D

74026cj9.jpg

இந்திய அணித்தலைவர் ஏப்ரல் 2ந்திகதி கேரளத்தின் கோவளம் கடற்கரையில், -- அவர் அதிஷ்டம் யாரும் அவரை கவனிக்கவில்லை..

:P :P :P

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அடம் கில்கிறிஸ்ற் அடிக்கும் சொட்டுக்கும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியா அடிக்கும் சொட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

gilli122qt5.jpg

jeypc3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.