Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

எழுமா எழாதா எழுமென்றால் பண்ணிப்பார் என்று கந்தப்பு சொன்னதி தான் ரிப்பிட்டு,எனி சில பேர் வந்து சொலுவீனம் வாஸ்,முரளி விளையாடாத படியால் தான் தோற்றவை என்று,சரி சரி உங்களின் ஆதங்கம் விளங்குது.

ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஓய்

ஓசி ஓசி ஓசி ஓய் ஓய் ஓய்

ஓசி ஓசி ஒசி ஓய் ஓய் ஒய்

Edited by Jamuna

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆஹா என்ன ஒரு வெற்றி என்ன ஒரு வெற்றி. அருமையான வெற்றீ அவுஸ்ரேலியாவுக்கு.... இப்படி சொல்லனும் எண்டு ஆசைப்பட்டு கிறிக்கட் மச்சை பார்த்தால் விழுந்தது தலையில் இடி. :)

தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கும் 3 (அவுஸ்ரேலியா, நியுசிலாந்த், இலங்கை,) அணிகளின் கனவு, குறிக்கோள் உலக கோப்பை இறுதியில் வெல்வதே அன்றி இன்றைய போட்டியில் வெல்வதோ தோற்பதோ அல்ல.

இன்றைய போட்டி அதிமுக்கியமான போட்டி இல்லை என்று அனைவருக்கும் தெரியும், காரணம் அடுத்த சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. ஆகையால் இன்றைய போட்டியில் வெல்வதாலோ அன்றி தோற்பதாலோ எந்த ஒரு தாக்கத்தையும் அதில் விளையாடிய அணிகளுக்கு ஏற்படுத்தப்போவதில்லை. இதை அறிந்த இலங்கை அணியினர் சாதுரியமான வகையில் தங்களின் முன்னனி வீரர்களான முரளி, வாஸ், மலிங்கா ஆகியோருக்கு ஓய்வு குடுத்துவிட்டு இந்த உலக போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் விளையாட அனுமதித்தார்கள், அணியில் உள்ள வீரர்களை பார்த்த உடனெயே ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ அவுஸ்ரேலியா அணியினருக்கு கொண்டாட்டமே, ஏனெனில் தங்களை வாட்டி எடுக்கும் வீரர்கள் இல்லை என்பதனால்.

ஒரு போட்டியின் போது உண்மையில் துடுப்பாட்ட வீரர்களைவிட பந்து வீச்சாளர்களுக்குத்தான் வேலை பழு அதிகம், அத்துடன் பந்துவீச்சாளர்களுகளைத்தான் காயம், நோ என்ற வியாதிகள் ஆக்கிரமிக்கும். இன்றைய போட்டியில் இலங்கை அணி தனது முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு குடுத்து அவர்களை பாதுகாத்து கொண்டதுடன், விளையாடாத மற்றைய வீரர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கின்றது.

ஆனால் மறுபக்கம் அவுஸ்ரேலியாவினை நோக்கினால் " ஒட்டகம்" மக்ராத், "அலி" பிராக்கன், ஹொக், கிளார்க் உட்பட முக்கியமான வீரர்கள் இன்றைய போட்டியிலும் விளையாடினார்கள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள், அடுத்த சுற்றிலும் இவர்களெ பந்துவீசப்போகிறார்கள், இறுதிப்போட்டிக்கு சென்றாலும் இவர்களே வீசுவார்கள். இதனால் தொடர்ந்து விளையாடிவரும் இவர்கள் இறுதி போட்டியில் தங்களின் வேகத்தை காண்பிப்பார்களா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் இன்றைய போட்டியில் இறுதியாக வந்த இலங்கை அணி வீரர்கள் மக்ராத், ரைட் ஆகிய அவுஸ்ரேலிய வீரர்களின் பந்துவீச்சை நாலா பக்கமும் அடித்து நொறுக்கினார்கள்.

சென்ற மாதம் அதாவது உலக கோப்பை ஆரம்பமாவதற்கு முன்னம் நடைபெற்ற பல போட்டிகளில் அவுஸ்ரேலியா, நியுசீலாந்த், மற்றும் இங்கிலாந்து அணியிடம் மிக மோசமாக தோற்றது யாவரும் அறிந்ததே. இந்த தோல்விக்கு அந்த அணி வீரர்களே தங்களின் நிர்வாகத்தை குற்றம் சுமத்தினார்கள். எவ்வாறெனில் தங்களுக்கு ஓய்வு தராமல் தொடர்ந்து விளையாடினமையாலேயே இந்த தோல்வி வந்தது என்றும் இதற்கு கண்டனத்தை வேறு தெரிவித்தும் இருந்தார்கள். இதனால்த்தான் அவுஸ்ரேலிய முதல் தர வேக பந்துவீச்சாளர் பிரட் லீயை உலகப்போட்டியில் இழக்க செய்தது.

இப்படி தொடர்ந்து விளையாடிவரும் அவுஸ்ரேலிய அணியினர் அடுத்த சுற்றில் நியுசிலாந்த், இலங்கையை மீண்டும் சந்திப்பார்கள், அப்பொழுது தெரியும் தங்கள் பந்துவீச்சாளர்களின் நிலமைமையை.

பந்துவீச்சாளர்கள் இப்படியே சோர்வடைந்து இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டுவிட்டால் பின்பு புலம்புவது அவுஸ்ரேலியாவிற்கு கை வந்த கலை. :P :)

நான் கருத்துக்களத்தில் உலக கிரிக்கெற் கிண்ணம் சம்பந்தமான இந்த பகுதியில் சில காரணங்களினால் தொடர்ந்து பங்களிப்பதில்லை என்று ஒதுங்கியிருந்தவன். உங்கள் கருத்தை பார்த்தபின் மீண்டும் வந்திருக்கிறேன்.

விளையாட்டில் அரசியல் கலப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் விளையாட்டின் உண்மையான அர்த்தம் நேர்மையாக விளையாடுவதுதான். தோற்பதும், வெல்வதும் வேறு விஷயம். திறமையுடன் சற்று அதிஷ்டமும் இருந்துவிட்டால் வென்று விடலாம். ஆனால் ராஜதந்திரம் எல்லாம் விளையாட்டில் வரக்கூடாது என்று நினக்கிறேன்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தனது முழுப்பலத்துடன் விளையாடியிருக்க வேண்டும். அப்படி விளையாடி தோற்றிருந்தாலும் அவமானமில்லை. காலையில் யார் விளையாடுகிறார்கள் என்று பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கத்தான் வெண்டும். அடுத்த போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். லசித் மாலிங்க முதல் போட்டியிலேயே விளையாடாதவர். அவர் கணுக்காலில் காயப்பட்டார் என்று சொன்னார்கள். அதை ஒத்துக்கொண்டாலும் அத்தனை போட்டிகளிலும் விளையாடிய வாஸ், முரளீதரன் இருவரையும் விட்டு விளையாட முனைந்தது Sportsmanship இல்லை. அவர்களும் விளையாடி பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கலாம். சிலவேளை வென்றுகூட இருக்கலாம். விளையாடத்தானே வந்தோம். பிறகென்ன..மறைப்பு..ஒழிப்பு.

லசித் மாலிங்கவை திடீரென்று கொண்டு வந்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது. அவர்கள் லசித் மாலிங்கவின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவில் மிகஆறுதலாக விட்டுப் பார்த்திருப்பார்கள். தங்களை தயார் செய்திருப்பார்கள். போதக்குறைக்கு அவர்களது பந்துவீச்சாளர் Tait இன் பந்துவீச்சும் ஏறக்குறைய மாலிங்கவின் பந்துவீச்சைப் போன்றதுதான். நடந்த போட்டியில் Tait இன் பந்துக்கு இவர்கள் அதிகமான ஓட்டங்கள் எடுக்கமுடிந்ததே மாலிங்கவின் பந்துவீச்சை பயிற்சியில் இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் எதிர்கொண்டு பழகியதினால்தான் என்று நம்புகிறேன். எனவே லசித் மாலிங்க ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியாது.

உலகின் முன்னணி அணியாக சொல்லப்பட்ட தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணியிடமும், நியூசிலாந்து அணியிடமும் தோற்றது. முழுப்பலத்துடன் விளையாடினார்கள். தோற்றார்கள். அதில் அவமானமொன்றில்லை.

இலங்கை அணி சனத் ஜெயசூரியாவைச் சுற்றியே இருக்கிறது என்பது பல தடவைகளில் நிரூபணமாகி விட்டது. அவர் அடித்தால் அனேகமாக வெற்றி. அவர் ஆட்டமிழந்தால் மற்றவர்கள் வரிசையாக தொடர்வதும் சில விதிவிலக்குகள் தவிர தொடர்கதையாகி விட்டது. 195 - 5 என்று இருக்கும். திடீரென்று 209 க்கு சகலரும் ஆட்டமிழப்பார்கள்.

ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள் என்று பலமுறை எழுதினேன். இன்று அதை வாபஸ் (தமிழ்ச் சொல் அல்ல) வாங்கிக் கொள்கிறேன். ஒரு பலம் வாய்ந்த அணிக்கு எதிராக விளையாடும்போது தனது முன்னணி வீரர்களை "துண்டு" காவ வைத்த இலங்கை அணி செய்தது திமிர் மாத்திரமல்ல நேர்மையான விளையாட்டுமல்ல.

இதற்கு நீங்கள் யாரும் பதில் எழுதினாலும் நான் பார்வையாளனாக வந்து பார்ப்பேனே தவிர பதில் எழுத மாட்டேன். அத்தனை கசப்பாக இருக்கிறது. நன்றி.

:)

இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு முரளி, வாஸ், மலிங்க விளையாடவில்லை என்பது காரணம் இல்லை. ஐசிசி கிண்ண போட்டி, உலக கிண்ண போட்டி போன்ற முக்கியம் வாய்ந்த போட்டிகளில் இந்தியா, இலங்கை போன்ற அணிகள் றிக்கி பொன்டிங்கின் தலைமையிலுள்ள அவுஸ்ரேலியா அணியை தோற்கடிப்பது மிக மிக கடினம் கடந்த கால போட்டிகள் இதற்கு சிறந்த உதாரணம். அவுஸ்ரேலியா அணியினர் சாதாரண போட்டிகளில் விளையாடுவதை விட இப்படியான சிறப்பான போட்டிகளில் விளையாடும் போது தமது முழுமையான பலம், அனுபவம் மற்றும் மதிநுட்பத்தை ஒருங்கிணைத்து பிரயோகிக்கின்றனர் அதனால் தான் மற்றைய அணிகளால் வெற்றி பெற முடியாமல் உள்ளது இது தான் அவுஸ்ரேலியா அணியின் வெற்றிக்கு உண்மையான காரணம் ஆனால் மைதானத்தின் தன்மை மற்றும் நடுவர்களின் பிழையான தீர்ப்பு போன்றவற்றினால் சில போட்டிகள் விதிவிலக்காக அமைகின்றன.

மலிங்க என்பவர் நீங்கள் நினைப்பது போல் ஆட்டத்தை மாற்றியமைக்க கூடிய பந்து வீச்சாளர் இல்லை அத்துடன் முரளி, வாஸ் போன்றவர்களின் பந்து வீச்சுக்கு அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சில சமயங்களில் தடுமாறினாலும் பொன்டிங் உட்பட நடுத்தர வரிசை துடுப்பாட் வீரர்கள் எல்லாருமே இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் சிறந்த சராசரி ஓட்ட விகிதங்களை பெற்றுள்ளனர் ஆகவே அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் நேற்று கூட பொன்டிங் மற்றும் சைமன் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

நேற்று இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது அவர்களுடைய நல்ல காலம் என்று தான் சொல்ல வேணும் தட்டி தவறி நேற்று அவுஸ்ரேலியா முதலில் துடுப்பாடி இருந்தால் மொத்த ஓட்ட எண்ணிக்கை 350 இனை தாண்டியிருக்கும் ஏதாவது சாதனைகளும் நிலை நாட்டப்பட்டிருக்கும்.

அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியினை சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது அந்த போட்டியில் கூட இலங்கை அணி வெற்றி பெறுவது சந்தேகம் தான்.

அவுஸ்ரேலியாவை வீழ்த்துவதற்கு எதிரணியின் பயிற்றுவிப்பாளர்கள் பல விதமான உத்திகளை பயன் படுத்துவதும் அதில் தோல்வி காண்பதும் வழக்கமான ஒரு விடயம் அது போல தான் ரொம் மூடி ஏதோ மஜிக் காட்டுவதற்கு முன்ணனி பந்து வீச்சாளர்களை நேற்று களம் இறக்கவில்லை ஆனால் இவருடைய இந்த ஐடியா ஒரு போதும் வெற்றியளிக்க போவதில்லை.

நேற்று இலங்கை அணி தோல்வியடைந்ததும் யாரோ ஒருவர் Grenada மைதானத்தில் கொடியுடன் வலம் வருவதை இந்த படத்தில் காணலாம் இது தழிழீழ தேசியக் கொடி போல தெரிகின்றது.

pulixy6.jpg

(படம்:-கிறிக்இன்போ)

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியின் தலைவர் மகெல ஜயவர்த்தனா, முக்கிய பந்து வீச்சாளர்கள் விளையாடமைக்கான காரணத்தை இவ்வாறு சொல்கிறார்.

The former World Cup winners, Chaminda Vaas and Muttiah Muralitharan, were both omitted along with the injured spearhead Lasith Malinga, although Jayawardene insisted the decision had been taken for fitness reasons, rather than tactical ones.

"Those two guys have been playing throughout," Jayawardene said, "and Murali has had a problem with his groin as well - he played with a strap for the last two or three games. Once we realised we'd got the semi-final spot, we realised we needed to give these guys a break. Obviously they have had [fitness] problems over the last six to 12 months, so we had to give them a break in the best interests of the team."

After touring New Zealand at the end of last year, Vaas, 33, rested a sore hamstring during Sri Lanka's recent tour of India and also missed the team's warm-up matches against Scotland and New Zealand in Barbados. Murali, who turns 35 on Tuesday, has long operated in spite of a shoulder problem. "You have to play at 100% against Australia," Jayawardene said. "To play at 50 or 60% is no good for them or the team. We took the decision, but if you think that's a tactical thing, that's for you to think.

"Up to now we have taken every game very seriously, and this game too. We just had to make a team decision. Obviously Australia haven't [had a chance to see] Vaas and Murali, but we never thought about it like that. We purely wanted to make sure they didn't burn out before the key matches."

Jayawardene said the players could be rested again when they face Ireland on Wednesday. "If they want to have a go at Ireland - maybe it won't be that tough a game - they can easily come back into things," he said. "But if they feel they need another break we will give them one."

நேற்று இலங்கை அணி தோல்வியடைந்ததும் யாரோ ஒருவர் Grenada மைதானத்தில் கொடியுடன் வலம் வருவதை இந்த படத்தில் காணலாம் இது தழிழீழ தேசியக் கொடி போல தெரிகின்றது.

pulixy6.jpg

(படம்:-கிறிக்இன்போ)

இலங்கை அணி தோல்வியடைந்த பின்னரில்லை, போட்டியின் போது, இலங்கை அணிக்கு ஆதராவாகதான் கொடியுடல் காணப்பட்டார் :)

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியினை சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது அந்த போட்டியில் கூட இலங்கை அணி வெற்றி பெறுவது சந்தேகம் தான்.

நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை வருகிற வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால், ஒட்டவிகிதம் பார்க்கப்படும். அதில் நியூசிலாந்து அணியின் ஒட்ட விகிதம் கூட என்றால்(மிகப்பெரிய வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் ஒட்டவிகிதம் கூடும், ஆனால் சாத்தியம் மிக, மிக குறைவு) , அரை இறுதியில் இலங்கையும், அவுஸ்திரெலியாவும் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக அரை இறுதியில் இலங்கை , நியூசிலாந்துக்கிடையிலான போட்டியே நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்தை, இலங்கை தோற்கடித்ததினால் இலங்கை தான் வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரெலியாவை எதிர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகளில் ஒரு நாடு விளையாடும். இங்கிலாந்து அணி , அண்மையில் அவுஸ்திரெலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் ஆரம்பத்தில் நன்றாக விளையடாவிட்டாலும், பிறகு அவுஸ்திரெலியாவை 2 - 0 என்ற நிலையில் தோற்கடித்ததினைப் போல இம்முறை எதாவது அற்புதம் நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. பெரும் பாலன சூதாட்ட அமைப்புக்கள் இறுதிப் போட்டிக்கு இலங்கை, அவுஸ்திரெலியா அணிகளுக்கு இடையில் தான் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தாலும், துடுப்பாட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்பதினால் சற்றுப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணி தோல்வியடைந்த பின்னரில்லை, போட்டியின் போது, இலங்கை அணிக்கு ஆதராவாகதான் கொடியுடல் காணப்பட்டார் :)

அதற்கு சிங்கக்கொடிதானே பிடிக்கவேணும் .ஏன் புலிக்கொடி பிடித்தார்

ஏனைய அணிகளுடன் ஒப்பிடும்போது புரளிதரனின் பந்துவீச்சை அவுஸ்திரேலிய நடுவரிசை வீரர்கள் அனேகமான போட்டிகளில் சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளனர்

அண்மைக்காலம் வரை முரளியின் பெயரில் ஒரு சாதனை இருந்து வந்தது. தென்னாபிரிக்க அணியினரின் 430+ ஓட்டங்கள் பெற்ற ஆட்டத்திலேயே அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.

என்ன சாதனை என்று கேட்கிறீர்களா?

Score Scard ஐப் பாருங்கள்

ODI # 2328

VB Series, 2005-06, 2nd Final

Australia v Sri Lanka

Sydney Cricket Ground (day/night)

12 February 2006 (50-over match)

Result: Australia won by 167 runs

Series: Best-of-3-finals level 1-1

Toss: Australia

Umpires: MR Benson (Eng) and PD Parker

TV Umpire: DJ Harper

Match Referee: JJ Crowe (NZ)

Man of the Match: A Symonds

Australia innings (50 overs maximum) R M B 4 6

+AC Gilchrist c Dilshan b Vaas 0 1 2 0 0

SM Katich lbw b Vaas 1 10 5 0 0

*RT Ponting c Vaas b Perera 124 178 127 9 3

DR Martyn c Jayawardene b Vaas 8 4 5 2 0

A Symonds lbw b Vaas 151 194 127 13 3

MJ Clarke not out 54 46 28 6 0

MEK Hussey not out 23 15 8 3 1

Extras (lb 1, w 4, nb 2) 7

Total (5 wickets, 50 overs, 227 mins) 368

DNB: GB Hogg, B Lee, SR Clark, NW Bracken.

FoW: 1-0 (Gilchrist, 0.2 ov), 2-2 (Katich, 2.1 ov),

3-10 (Martyn, 2.6 ov), 4-247 (Ponting, 40.4 ov),

5-320 (Symonds, 47.1 ov).

Bowling O M R W

Vaas 10 0 56 4 (1nb)

Perera 10 1 72 1 (2w)

Kulasekara 5 0 41 0

Muralitharan 10 0 99 0 (1nb)

Dilshan 2 0 10 0

Jayasuriya 8 0 52 0 (1w)

Bandara 5 0 37 0 (1w)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க வெற்றி பெற்றால் யாழ்வினோ முன்னிலை வகிப்பார். இல்லாது விட்டால் மணிவாசகன் முன்னிலை வகிப்பார். இருவரும் தென்னாபிரிக்கா தான் வெற்றி பெறும் என்று அறிவித்து இருந்தாலும், தென்னாபிரிக்கா வெல்வதால் அது அரை இறுதிக்கு தெரிவாகி விடும். அரை இறுதிக்கு தெரிவான நாடுகளில் மணிவாசகன் தென்னாபிரிக்காவைக் குறிப்பிடவில்லை. ஆனால் யாழ்வினோ குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு சிங்கக்கொடிதானே பிடிக்கவேணும் .ஏன் புலிக்கொடி பிடித்தார்

இலங்கை அணிக்கு ஆதரவாக இல்லை இலங்கை அணிக்கு எதிராக இல்லை இலங்கையில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக இல்லை தனி தமிழீழத்திற்க்கு ஆதரவாக :)

சந்தேகமில்லை புலிக்கொடியே தான்

post-3557-1176795903_thumb.jpg

நன்றி வானவில்

தமிழீழம் கிடைத்து தமிழீழத்திற்க்கு கிரிக்கட் அணி உர்வானால் நான் விளையாடத் தயார், யார் எங்கூட வாறீங்கள்...........? :)

தமிழீழம் கிடைத்து தமிழீழத்திற்க்கு கிரிக்கட் அணி உர்வானால் நான் விளையாடத் தயார், யார் எங்கூட வாறீங்கள்...........? :)

நானும் வாரேன்

:P :o

நானும் வாரேன்

:P :)

இருவரும்தான் ஆரம்ப பந்து வீச்சாளர் மற்றும் துடுப்பாட்டம்

இருவரும்தான் ஆரம்ப பந்து வீச்சாளர் மற்றும் துடுப்பாட்டம்

அம்பயர் யார் தலை

:)

அம்பயர் யார் தலை

:o

ரிக்கி பொண்டிங் கிறாம் சிமித் தேட் அம்பயர் :) பிளமிங் :blink:

ரிக்கி பொண்டிங் கிறாம் சிமித் தேட் அம்பயர் :) பிளமிங் :o

ஓ அதுவும் நல்லது தான் கப்டன் நீர் வைஸ் கப்டன் நான் எங்களுடைய மிச்ச ஆட்கள் யார்?

:blink: :P

அரையிறுதிக்குத் தகுதி பெறும் நாலாவது அணி எது இன்று நடைபெறும் போட்டியே தீர்மானிக்கும்

-இங்கிலாந்து - தென்னாபிரிக்கா மோதுகின்றன

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி ஏறக்குறைய அரையிறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை அணிகள் அதற்கு அச்சாரம் போட்டு விட்டன.

ஆனால், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய ஜாம்பவான்களின் நிலை தான் கேள்விக்குறியாகவுள்ளது.

ஒவ்வொரு உலகக் கிண்ணத்திலும் ஏதாவது ஒருவகையில் பரிதாபமாக வெளியேறும் தென் ஆபிரிக்கா இம்முறை பங்களாதேஷிடம் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வி அதற்குக் காரணமாகிவிடலாமென்று அஞ்சத் தோன்றுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை நியூஸிலாந்திடம் பெற்ற தோல்வி அந்த அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ள தென்னாபிரிக்காவுக்கு அரையிறுதி வாய்ப்பு மப்பும் மந்தாரமுமாக உள்ளது.

பார்படோஸில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டம் தென்னாபிரிக்க அணிக்கு கடைசி லீக் ஆட்டம் மட்டுமல்லாது தலைவிதியையும் தீர்மானிக்கும் ஆட்டமாகவும் அமைந்துள்ளது. தென்னாபிரிக்கா இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வியுற்றால் நாடு திரும்ப வேண்டியது தான்.

இது ஒருபக்கம் இருந்தாலும் புள்ளிவிபரம் கூறும் கருத்து வேறாகவுள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணிக்குத் தான் அரையிறுதி வாய்ப்பு அதிகம் என்கிறது. காரணம் அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை தென்னாபிரிக்காவிடம் இங்கிலாந்து இன்றைய போட்டியில் தோல்வியுற்றால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 21 ஆம் திகதி நடைபெறும் ஆட்டம் சம்பிரதாயமான ஆட்டமாகவே இருக்கும்.

ஆதலால், தென்னாபிரிக்க அணியின் துணைக் கப்டன் ஜக் கலிஸ் கூறும், `அரையிறுதி தலைவிதி எங்களது கையில் தான்' உள்ளது என்ற கருத்து அடிபட்டு போகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பின் இவ்வாறு கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து வரும் 2 போட்டிகளும் எங்களுக்கு அரையிறுதி, இறுதி ஆட்டமாகவே இருக்கும் என்கிறார்.

இந்தக் கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் தென்னாபிரிக்காவின் இந்தச் சிரமத்துக்கு காரணம் யார் என்றால் நிற்னியும் பொலக்கும் தான் என்கின்றனர் ஆர்வலர்கள். இருவரும் அதிகமான ஓட்டங்களைக் கொடுத்துவிட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றாததே அணியின் பின்னடைவுக்குக் காரணம் என்கின்றனர்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணி முதலில் ஆடுகிறது

England team

IR Bell, MP Vaughan, AJ Strauss, KP Pietersen, PD Collingwood, A Flintoff, RS Bopara, PA Nixon, SI Mahmood, JM Anderson, MS Panesar

South Africa team

GC Smith, AB de Villiers, JH Kallis, HH Gibbs, AG Prince, MV Boucher, JM Kemp, SM Pollock, AJ Hall, A Nel, CK Langeveldt

தென்னாபிரிக்காவின் சவாலை சந்திக்க இங்கிலாந்து அணி தயாராக உள்ளது

[17 - April - 2007] [Font Size - A - A - A]

-பயிற்சியாளர் கூறுகிறார்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மிகப்பெரிய சவாலை சந்திக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்துப் பயிற்சியாளர் பிளட்சர் கூறியுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. வாழ்வா? சாவா? நிலையில் இன்று இரு அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெற்றால் தான் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்புக் கிடைக்கும். தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறிவிடும். 4 ஆவது அணியாக தென்னாபிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இங்கிலாந்து அணி 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் இதுவரை அரையிறுதிக்கு தகுதிபெற்றது கிடையாது.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவுடன் மோதல் குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறியதாவது:

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும். அவர்கள் உலகின் நம்பர் வன் அணியாக இருந்தார்கள். அத்துடன், தென்னாபிரிக்கா வலுவான அணியாகும். அவர்களின் சவாலை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். எங்களது அணி இளம் வீரர்களைக் கொண்டது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தை வீழ்த்தினோம். எந்த அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும்.

நாங்கள் நிலையாக, நல்ல ஆட்டத்தை அளிப்பதாக நினைக்கவில்லை. சில ஆட்டங்களில் நன்றாக ஆடுகிறோம். சில ஆட்டங்களில் சறுக்கலைச் சந்திக்கிறோம். எல்லா வீரர்களும் தங்களின் திறமையை நன்கு வெளிப்படுத்தினால், எங்களது அணி சிறந்த அணியாக உருவாகும்.

அவுஸ்திரேலியா அணிபோல் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் நன்றாக ஆடினால், அது பந்துவீச்சாளர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார்.

தினக்குரல்

இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதலாவது விக்கெட் விழுத்தபட்டுள்ளது

9/1

இயன் பெல்லுக்கு பெல் அடித்து அனுப்பி விட்டார்கள் 7 ஓட்டங்களுடன்

இங்கிலாந்து 12 ஓவர் முடிவில் 37 ஓட்டங்கள் ஒரு விக்கட் இழப்புக்கு

இப்போது அடுத்த விக்கேட்டையும் இழந்துள்ளது இங்கிலாந்து அணி 37 ஓட்டங்களுக்கு 2விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி

37/2

ஆமாம் இங்கிலாந்து அணி தலை வோகன் 17 ஓட்டங்களுடன் புட்டுகிட்டாரு :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.