Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

சிக்ஸ் என்றால் சிக்ஸ் தான். அது பவுண்டரி எல்லையில் போய் விழுகின்றதா அல்லது ஸ்டேடியத்துக்கு வெளியால் போய் விழுகின்றதா என்பதல்ல முக்கியம்! 06 ஓட்டங்கள் கிடைக்கின்றதா என்பது மட்டுமே முக்கியம்! :blink:

கயிற்றில் பட்டாலும் 06 தான் மைதனத்தை தாண்டி தெருவால் போய்கொண்டிருபவரிம் மேல் விழுந்தாலும் 06தான் :)

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிக்ஸ் என்றால் சிக்ஸ் தான். அது பவுண்டரி எல்லையில் போய் விழுகின்றதா அல்லது ஸ்டேடியத்துக்கு வெளியால் போய் விழுகின்றதா என்பதல்ல முக்கியம்! 06 ஓட்டங்கள் கிடைக்கின்றதா என்பது மட்டுமே முக்கியம்! :)

அடிக்கின்ற சிக்ஸர்கள் போய் மைதானத்துக்கு வெளியில் விழுந்தால் அது பந்து வீச்சாளருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தம் அதன் பின்னர் அவரால் நேர்த்தியான முறையில் பந்து வீச முடியாது கடந்த உலக கிண்ண இறுதி போட்டியிலும் அப்படி தான் நடந்தது ஹர்பயன் சிங் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெற்றுக்களை கைப்பற்றி இருந்த சமயத்தில் தான் பொன்டிங் சிக்ஸ் மழை பொழிந்தார் அதன் பின்னர் ஹர்பயன் சிங் பந்து வீச முடியாமல் திணறினார் அத்துடன் அவர் வீசிய 10 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். :blink:

வினோ உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் மற்றவரைப் பற்றிக் கதைப்பான்? நானும் கீரிக்கட்டு விளையாடியுள்ளேன். எனது அனுபவத்திலிருந்து நான் சொல்லக்கூடியது என்னவென்றால், நான் பந்து வீசும் போது ஒருவன் சிக்ஸ் அடித்தால் அவனது விக்கட்டை எனது அடுத்த பந்தில் எப்படியாவது புடுங்க வேண்டுமென்று நினைப்பேனேயொழிய, அவன் அடித்த சிக்ஸ் ஸ்டேடியத்துக்கு வெளியில் போய் விழுந்ததை நினைத்து அடுத்த பந்தை, பந்துப் பரிமாற்றங்களை நான் செய்யும் போது பயப்படமாட்டேன். ஆனால் ஹர்பஜன் சிங் போன்றவர்களோ Professional Cricket Players. இவர்கள் இவ்வாறு உளவியல் ரீதியாக இவர்களின் பந்து வீச்சுக்கு சிக்ஸ் அடிக்கும் போது பாதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அதாவது துடுப்படி வீரன் அடித்து, விளாசுவது என்று மனதில் தீர்மானித்துவிட்டால் அவனை தடுத்து நிறுத்துவது அவனை ஆட்டமிழக்கச் செய்தால் மட்டுமே உண்டு. இல்லாவிட்டால் அவன் தன் பாட்டுக்கு சிக்சும், பவுண்டரியுமாய் அடிக்கத் தொடங்கிவிடுவான்!

வினோ உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் மற்றவரைப் பற்றிக் கதைப்பான்? நானும் கீரிக்கட்டு விளையாடியுள்ளேன். எனது அனுபவத்திலிருந்து நான் சொல்லக்கூடியது என்னவென்றால், நான் பந்து வீசும் போது ஒருவன் சிக்ஸ் அடித்தால் அவனது விக்கட்டை எனது அடுத்த பந்தில் எப்படியாவது புடுங்க வேண்டுமென்று நினைப்பேனேயொழிய, அவன் அடித்த சிக்ஸ் ஸ்டேடியத்துக்கு வெளியில் போய் விழுந்ததை நினைத்து அடுத்த பந்தை, பந்துப் பரிமாற்றங்களை நான் செய்யும் போது பயப்படமாட்டேன். ஆனால் ஹர்பஜன் சிங் போன்றவர்களோ Professional Cricket Players. இவர்கள் இவ்வாறு உளவியல் ரீதியாக இவர்களின் பந்து வீச்சுக்கு சிக்ஸ் அடிக்கும் போது பாதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அதாவது துடுப்படி வீரன் அடித்து, விளாசுவது என்று மனதில் தீர்மானித்துவிட்டால் அவனை தடுத்து நிறுத்துவது அவனை ஆட்டமிழக்கச் செய்தால் மட்டுமே உண்டு. இல்லாவிட்டால் அவன் தன் பாட்டுக்கு சிக்சும், பவுண்டரியுமாய் அடிக்கத் தொடங்கிவிடுவான்!

மாப்பு நீர் அவன் விக்கட்டைத்தன் புடுங்கப் பாப்பீர்கல். நான் அப்படி இல்லை அவனை வீட்டுக்கே அனுப்பத்தான் பார்ப்பேன் :blink:

  • தொடங்கியவர்

உளவியல் தாக்கம் என்பது ஜதார்த்தமான ஒன்று அது எனக்கும் இருக்கும் உங்களுக்கும் இருக்கும். :blink:

நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது

பாகிஸ்தான் அணி தென் ஆபிரிக்காவை வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி 48.3 ஓவர்களில் 199 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

200 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பாக். அணி தனது இலக்கை 3 விக்கட் இழப்பிற்கு 44.3 ஓவர்களில் அடைந்தது.

யூனுஸ் கான் 79 ஓட்டங்களையும் மொஹமட் ஹபிஸ் 49 ஒட்டங்களையும் பெற்றார். பாக் அணி 7 விக்கட்டுக்களினால் வென்றது.

இந்தியா மேற்கிந்திய தீவுகள்.

மே. தீவுகள் 50ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா 18.3 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 86 ரன்களைப் பெற்று வெற்றி பெற்றது.

பட்டேல் 6 ஓவர்களில் 10 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

பத்தான் : 6 - 2- 25 - 3

நியுயூசிலாந்து அணியும் சிரிலங்காவும் மோதிக் கொண்டதில்

50 ஓவர்களில் 285 ஓட்டங்களைப் பெற்றது.

286 ஓட்ட இலக்காகக் கொண்டு ஆடிய சிரிலங்கா 267 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும பரி கொடுத்து மண்கவ்வியது. :P

ஓஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் ஓஸ்ரேலியா வெற்றி பெற்றது.

இங்கிலாந்த 197 ஓட்டங்களுக்கு 48.3 ஓவர்களில் சகல விக்கட் இழப்பிற்கு பெற்றது.

ஒஸ்ரேலியா அணி 49.5 ஒவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 200 ரன்கள் பெற்று இங்கிலாந்து அணியை வென்றது.

ஜானா

Edited by Janarthanan

ஜனா... உஸ்ஸ்ஸ்ஸ்.... மெல்லமாகக் கதையுங்கோ, சிறீ லங்கா தோற்ற செய்தியைக் கேட்டு நம்மட பிரசு சரியாக் கவலைப்பட்டு மனமுடையப் போறான். பெடி பள்ளிக்கூடத்தில சோதனைக்கு வேற படிக்குது. இப்படியான செய்திகளால் பிரசின் மனம் பாதிக்கப்பட்டு சோதனைக்கு குண்டு அடித்து விடக்கூடாது என்ற கவலையில்தான் சொல்கின்றேன். யாழ்வினோவும் இந்தச் செய்தியால் சரியாக் கவலைப்பட்டு மனம் உடையைபோகின்றார். என்ன செய்வது?

பிரசு, வினோ; "வாழ்க்கை என்றால் தோல்வியும், வெற்றியும் மாறி, மாறி வரும். அதற்காக மனம் உடைந்து போகக்கூடாது. தைரியமாக இருக்கவேணும்! ஓகேயா?" :lol::D:icon_mrgreen: :P

சிறீ லங்கா முதல்சுற்றுலேயே இந்தியாவிடமும், பங்களாதேசிடமும் நல்லா வாங்கிக்கட்டி மண்கவ்வினால் சூப்பராக இருக்கும்.

Edited by மாப்பிளை

எனது ஆசை பங்காளதேசத்திடமும் பெர்மூடாவிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு தலையில் துண்டப் போட்டுக் கொண்டு நாடு திரும்ப வேணும் என்பது தான். பிரசு கவலையை விட்டுட்டுப் படியுங்கோ. அடுத் முறை நம்மட டீமில உங்களுக்கு இடமிருக்கு.

ஜானா

  • தொடங்கியவர்

மாப்பு, நான் இலங்கை அணியின் ஆதரவாளர் என்று எப்போதாவது சொன்னேனா?? நான் மட்டும் அல்ல எங்கட Remote Village இல் இருக்கிற யாருமே இலங்கை அணிக்கு சப்போட் இல்லை. :lol:

பிரசு எந்த அணிக்கு சப்போட் என்று யாருக்குமே தெரியாது ஏன் என்றால் இரு தினங்களுக்கு முன்னர் கென்யா கமோன் கமோன், சிம்பாவே கமோன் கமோன் என்றார் நேற்று பங்களாதேஸ் கமோன் கமோன் என்றார் இன்று யாருக்கு கமோன் சொல்லப்போறாரோ பொறுத்திருந்து தான் பார்க்க வேணும். :D

ஆனால் இலங்கை அணியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் யாழ் களத்தில் இருக்கிறார் அவர் தான் வடிவேலு. அவர் புலத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் உடனே நாடுகடத்தி அலரி மாளிகைக்கு பக்கத்தில் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேணும். :icon_mrgreen:

Edited by யாழ்வினோ

அலரிமாளிகைக்குப் பக்கத்தில வீடு வாங்கினா நாளைக்கு பூசாவில தான் போய் சந்திக்க வேண்டிவரும். இங்க நிலைமை அப்பிடி.

ஜானா

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணத்தில் சேதம்.

உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டிநாளை மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா கொண்டு செல்லப்பட்ட உலகக் கிண்ணம் லேசாக சேதமடைந்துள்ளது.உலக கிண்ண தொடரில் சாம்பியனாகும் அணிக்கு வழங்கப்படும் கிண்ணம் தற்போது இந்தியாவுக்கு பார்வைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 11 கிலோ எடை கொண்ட இந்த கிண்ணம் 60 சென்றிமீற்றர் உயரம் உடையது. வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உலகக் கிண்ணம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காலை கல்கத்தாவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை அங்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பார்வைக்காக வைப்பதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கிண்ணத்தை தூக்கி வைக்க முயன்ற போது கீழ் பகுதியில் உள்ள தங்க வளையம் வெளியே வந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியதுடன் உடனே ஏற்பாட்டாளர் மீண்டும் அதனை பொருத்தினார்.ஆனால் கிண்ணம் சேதமடையவில்லை என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சேதமடைந்துள்ள பகுதியை திருத்துவதற்காக உலகக் கிண்ணத்தை இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை மேற்கிந்தியத்தீவுகளில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டியின் தொடக்க விழாவுக்காக கிண்ணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சேதம் அடைந்துள்ள இந்த கிண்ணம் ஐ.சி.சி.யினால் தயாரிக்கப்பட்ட அசல் உலகக் கிண்ணமாகும். வெற்றி பெறும் அணிக்கு இந்த கிண்ணம் புகைப்படத்துக்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது.

பின்னர் அதேபோன்று ஒரு கிண்ணம் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் இந்த வழக்கம் 1999 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

-Virakesari-

Edited by யாழ்வினோ

எனது ஆசை பங்காளதேசத்திடமும் பெர்மூடாவிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு தலையில் துண்டப் போட்டுக் கொண்டு நாடு திரும்ப வேணும் என்பது தான். பிரசு கவலையை விட்டுட்டுப் படியுங்கோ. அடுத் முறை நம்மட டீமில உங்களுக்கு இடமிருக்கு.

ஜானா

மாப்பு, நான் இலங்கை அணியின் ஆதரவாளர் என்று எப்போதாவது சொன்னேனா?? நான் மட்டும் அல்ல எங்கட Remote Village இல் இருக்கிற யாருமே இலங்கை அணிக்கு சப்போட் இல்லை. :unsure:

பிரசு எந்த அணிக்கு சப்போட் என்று யாருக்குமே தெரியாது ஏன் என்றால் இரு தினங்களுக்கு முன்னர் கென்யா கமோன் கமோன், சிம்பாவே கமோன் கமோன் என்றார் நேற்று பங்களாதேஸ் கமோன் கமோன் என்றார் இன்று யாருக்கு கமோன் சொல்லப்போறாரோ பொறுத்திருந்து தான் பார்க்க வேணும். :D

நான் இலங்கை அணியின் தீவீர ஆதரவாலந்தான், கிரிக்கட்டில் மட்டும்தான், என்னை பொறுத்தவரை விளையட்டு வேறை, ராச மாரே வாங்கிக் கட்டும் போது பாத்துக்குகுங்க அப்புக்களே :P :P

விளையாட்டு வேற அரசியல் வேற தானப்பு இருந்தாலும் நாங்கள் வழங்குற ஆதரவால ஜெயிச்சிட்டு அதால கிடைக்கிற பரிசு பணத்த அள்ளிக் கொண்டு வந்து எங்கட தலையில குண்டா விழுத்துறன். அது தான் பொறுக்கேலாம கண்டதுகளுக்கும் கமோன் என்டு சொல்லுரம் அப்பு. இன்னும் ஒரு கிழமையில பாக்கத் தானே போரோம் யார் வங்கிக் கட்டுரது என்டு. :unsure: :P

ஜானா

உலகக் கிண்ணம் இலங்கைக்கு கிடைக்குமா?

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டி என்பவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பிரமாண்டமான விளையாட்டு திருவிழாவாகக் கருதக்கூடியது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது போட்டி, மேற்கிந்திய தீவுகளில் மார்ச் மாதம் 13 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் ஆரம்பமாகிறது.

`முட்டாள்களின் விளையாட்டு' என பெர்னாட்ஷாவினால் வர்ணிக்கப்பட்டபோதும் தற்போது உலகம் முழுவதும் கோடிக் கணக்கான இரசிகர்களைக் கொண்டு விளங்குகிறது கிரிக்கெட்.

பல பெரிய தலைகள் இன்று தீவிர ரசிகர்களாக உள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி, முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் ஜோன் மேஜர், அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவார்ட்.

உதைபந்தாட்டம், ரக்பி போன்ற விளையாட்டுகளுக்கு "உடல் வலிமையே" முக்கியத்துவம் பெறும். தெற்காசிய நாடுகள் மேற்கூறிய விளையாட்டுகளில் உலக தரத்துக்கு முன்னேறுவது கடினமானதொன்றாகவே இருந்து வருகின்றது. ஆனால், கிரிக்கெட்டில் வெற்றிபெற மனோவலிமை, நிதானம், சிந்திக்கும் ஆற்றல் என்பன தேவைப்படுகின்றன. இதனாலேயே, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை தட்டிக்கொள்ளக் கூடியதாக இருந்துள்ளது.

இலங்கை அணி சமீப காலங்களில் சிறப்பாக ஆடிவருவதால் இலங்கை அணி தொடர்பான எதிர்பார்ப்புகள் உயர்நிலையில் உள்ளன. இந்திய அணியின் முன்னாள் தலைவர் `கபில்தேவ்' இலங்கையணிக்கு கிண்ணத்தை வெல்ல 50 சதவீத வாய்ப்புகள் உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சையத் கிர்மானியும் பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அப்துல் காதிரும் இலங்கையணி அரையிறுதியாட்டத்துக்கு தகுதி பெறுமெனக் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக் காலத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள அவுஸ்திரேலிய அணியே இன்னமும் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மார்க்டெயிலர் "சுழல்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளமொன்றில் இலங்கை போன்ற அணி முதலில் துடுப்பெடுத்தாடி 250 - 260 ஓட்டங்களை குவிக்குமாயின் அவுஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முடியும்"என்கிறார்.

இலங்கையணி 1996 இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் என முதலில் எதிர்வு கூறியவர் நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரிச்சட் ஹாட்லி. தற்போதைய அணியை விட 1996 ஆம் ஆண்டின் அணி சிறந்தது என்கிறார் முரளிதரன். அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 96 அணியின் பலம் துடுப்பாட்டம் என்று சொல்லலாம். முதல் 15 ஓவர்களில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் சனத் ஜெயசூரிய, ரொமேஷ் களுவிதாரன (இவர்கள் இடதுகை, வலது கை துடுப்பாட்ட வீரர்கள் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு நேர்த்தியாகவும் துல்லியமாகவும் பந்து வீசுவது சிரமமாக இருந்தது) இவர்களைத் தொடர்ந்து ஆடவரும் அசங்க குருசிங்க நிலைத்து நின்று நிதானமாக ஆடக் கூடியவர். நான்காவதாக களமிறங்கும் அரவிந்த டி சில்வா உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். எந்த வகையான பந்துவீச்சுக்கும் மிக இலகுவாக முகங்கொடுத்து ஆடக்கூடியவர். அடுத்து இறங்கியவர் தலைவர் அர்ஜுன ரணதுங்க. இவர் களத்தில் தடுக்கும் வீரர்களுக்கிடையிலான இடைவெளியில் பந்தை அடித்து 1,2 என மிக வேகமாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்.

1996 இல் அணியின் பந்துவீச்சு மிகப்பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி பந்துவீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இருந்தனர். 96 இன் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக் கெதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களை பிரமோதய விக்கிரமசிங்கவும் சமிந்த வாஸும் தமக்கிடையே பகிர்ந்து 13 ஓவர்களையே வீசியிருந்தனர். ஏனைய 37 ஓவர்களையும் வீசியது சுழல்பந்து வீச்சாளர்களான முரளிதரன், அரவிந்த டி சில்வா, குமார் தர்மசேன, சனத் ஜயசூரிய ஆகியோராவர். இவர்களில் துடுப்பாட்ட வீரராகவே நோக்கப்படும் அரவிந்த டி சில்வா 42 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம், சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மைதானங்களில் இடம்பெற்றமை இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்த இன்னுமொரு விடயமாகும். அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு பெற்ற 241 ஒட்டங்களை இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றியீட்டியது. பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜுன ரணதுங்க நாணய சுழற்சியில் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக்கொண்ட போது ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உட்பட தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர்கள் ரணதுங்க மிகப் பெரிய தவறிழைத்து விட்டதாகவே கூறினர்.

அவர்களின் கூற்றை மெய்ப்பிப்பது போல் ஜயசூரியவும் களுவிதாரணவும் குறைந்தளவிலான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மகுடம் சூடக் கூடிய இனிங்ஸை (Lifetime Innings) அரவிந்த டி சில்வா ஆடினார். அவர் 107 ஓட்டங்களைக் குவித்து இலங்கையணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவருக்கு பக்கபலமாக அசங்க குருசிங்க (65 ஓட்டங்கள்), அர்ஜுன ரணசிங்கவும் (ஆட்டமிழக்காது 47 ஓட்டங்கள்) ஆகியோர் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1996 அணியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய அணி துடுப்பாட்டத்தில் சற்றுப் பலம் குறைந்ததெனக் கூறவேண்டும். இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலவீனங்களையும் பலங்களையும் பார்ப்போம்;

பலவீனங்கள்

*திடீரென சடுதியாக ஆட்டமிழக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.

*அண்மைக் காலமாக அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் ஆட்டம் நிலையானதாக இல்லை. (Out of form)

*ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்துவிடின் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாத பலமற்ற மத்திய துடுப்பாட்ட வரிசை.

(இந்திய சுற்றுலாவில் மத்திய துடுப்பாட்ட வரிசை ஓரளவு சோபித்திருக்கிறது. அது நீடிக்குமா என்பது தெரியவில்லை.)

*கடைசி 10 பந்துப் பரிமாற்றங்களில் அதிகளவு ஓட்டங்களைக் குவிக்கத் தவறுதல்.

பலங்கள்

*15 பந்துப் பரிமாற்றங்களுக்கு களத்தில் நின்றால் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எதிரணியின் வெற்றிக்கான வாய்ப்பை வேகமாகப் பறித்தெடுக்கக்கூடிய அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய.

*நிதானமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர் சங்கக்கார.

*300 ஓட்டங்கள் என்ற இலக்கையும் துரத்திப்பிடிக்கக்கூடிய துடுப்பாட்ட வரிசை.

பந்துவீச்சின் பலவீனங்களும் பலங்களும் பலவீனங்கள்

*வைட்போல், நோபோல் என சரமாரியாக உதிரிகளை எதிரணிக்கு கொடுக்கும் லசித் மலிங்க, டில்ஹார பெர்னாண்டோ.

*சமிந்த வாஸ், முரளிதரன் தவிர்ந்த பந்துவீச்சாளர்களின் பந்து துடுப்பாட்ட வீரர்களால் சரமாரியாக பறக்கவிடப்படுகின்றன.

*கடைசி 10 பந்துப் பரிமாற்றங்களில் சிலசமயம் சொதப்புவது. பலங்கள்

*அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்.

*ஆட்டத்தின் நடுப்பகுதியில் வீசப்படும் பந்துவீச்சுகளில் ஓட்டங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்டுகளையும் சரிக்கக்கூடிய முத்தையா முரளிதரன்.

*சனத் ஜயசூரியவுடன் இணைந்து சில பந்துப் பரிமாற்றங்களை குறைந்த ஓட்டங்களைக் கொடுத்து வீசக்கூடிய பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான திலகரத்ன டில்சான், ரசல் ஆனோல்ட் அதிவேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க.

*பந்துத் தடுப்பைப் பொறுத்தவரையில் இலங்கையணி உயர் மட்டத்திலிருக்கிற தென்றே சொல்ல வேண்டும். குறிப்பிட்ட நாளில் மோசமான களத்தடுப்பையும் மேற்கொள்ளக்கூடியவர்கள் என்பது பலவீனம்.

96 அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவையும் மஹேல ஜெயவர்தனவையும் ஒப்பிட முடியாது. 96 இல் ரணதுங்க பாரிய அனுபவத்தைப் பெற்றிருந்தார். ஆனால், ஜயவர்தன கடந்த ஒரு வருடமாகவே தலைவராக பணியாற்றி வருகிறார். ரணதுங்க களத்தில் கலவரப்படாமல் காணப்படுவார் என்பதால் `கப்டன் கூல்" என அழைக்கப்பட்டவர். ஜயவர்தனவோ ஆட்டம் கைநழுவிப் போகும்போது கலவரப்படக் கூடியவர். களத்தடுப்பில் ரணதுங்கவும், ஜயவர்தனவும் அபாரமாக வியூகம் அமைக்கக் கூடியவர்கள். பந்துவீச்சாளர்களை கையாளும் திறமை இருவரிடமும் உள்ளது. மஹேல ஜெயவர்தன அபாரமான அணித்தலைவர் என்பதை மறுப்பதற்கில்லை. இதனாலேயே இவர் சர்வதேச கிரிக்கெட் சபையினால் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உலகக் கிண்ண அணிகளின் விக்கெட் காப்பாளர்களில் சிறந்த விக்கெட் காப்பாளர் - துடுப்பாட்ட வீரர் (ஙிடிஞிடுஞுணா ஓஞுஞுணீஞுணூ ஆச்ணாண்ட்ச்ண) குமார் சங்கக்கார என்பதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லை.

மேற்கிந்திய தீவு ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களை ஒத்தது என அறியக் கூடியதாகவுள்ளது. அப்படியாயின் - முரளிதரனுக்கும் ஜயசூரியவுக்கும் நிறைய வேலை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையணி இந்தியா, பங்களாதேஷ், பெர்முடா அணிகளுடன் `பி' குழுவில் இடம்பெறுகின்றது. மொத்தமாக 4 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு அணியிலும் அதிக புள்ளிகளைப் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றான "சிறப்பான 8" (சுப்பர் 8) இற்குள் செல்லும்.

குழுவில் முதலாவது இடத்தைப் பெறும் அணி இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கெதிராக வெற்றி பெற்றிருப்பின் அப்புள்ளிகள் அதன் இரண்டாவது சுற்றுக் கணக்கில் வைப்பு செய்யப்படும். இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் அணி ஏனைய 3 குழுக்களிலிருந்து வரும் 6 அணிகளுடன் `சிறந்த 8' சுற்றில் மோத வேண்டும். இச்சுற்றில் முதல் நான்கு இடங்களையும் பெறும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்குத் தகுதிபெறும்.

`சிறந்த 8' சுற்றில் முதலாவது இடத்தைப் பெற்ற அணி நான்காமிடத்தைப் பெற்ற அணியுடனும் இரண்டாவது இடத்தைப் பெற்ற அணி மூன்றாவது இடத்தைப் பெற்ற அணியுடனும் அரையிறுதி ஆட்டங்களில் மோதும். அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் இறுதியாட்டத்துக்கு தகுதிபெறும்.

இலங்கையணி உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் கனவு.

வங்கத்தின் வளர்ச்சியும் வேகமும் கிரிக்கட் ஆய்வாளர்களிடையே ஒரு தாக்காத்தை ஏற்றபடுத்தியுள்ளது. புதிய அணிகளில் இவ்வணி இம் முறை சாதனை படைக்கலாம். சிரிலங்கா ரசிகர்களின் கனவு கனவாகவே போகப் போகின்றது.

ஜானா

  • தொடங்கியவர்

Opening Ceremony Of The 2007 World Cup

44214713sq3.jpg

97370621wk8.jpg

Edited by யாழ்வினோ

ஒன்பதாவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜமேக்காவில் நேற்று கோலாகலமாக ஆரம்பம்

[12 - March - 2007] [Font Size - A - A - A]

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நாளை 13 ஆம் திகதி தொடங்குகிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி, ஜமேக்காவில் டிராலானி ஸ்ரேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் கரி சோபர்ஸ் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இம்முறை போட்டியில் 16 நாடுகள் கலந்துகொள்கின்றன. அவற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்தை பெறாத 6 நாடுகளும் பங்கேற்கின்றன. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, கென்யா, பெர்முடா, கனடா ஆகியன டெஸ்ட் அந்தஸ்த்தை பெறாத அணிகளே இவை.

16 அணிகளும் 4 பிரிவாக லீக் முறையில் விளையாடுகின்றன.

`ஏ' பிரிவில் அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன. `பி' பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், பெர்முடா, இலங்கை இடம்பெற்றுள்ளன. இப்பிரிவில் 3 ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

"சி" பிரிவில் இங்கிலாந்து, கென்யா, நியூஸிலாந்து, கனடா ஆகியனவும், `டி' பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகியனவும் இடம்பிடித்துள்ளன.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 11 கிலோ எடையுள்ள வெற்றிக் கிண்ணமும் 20 கோடி ரூபாவும் பரிசாக வழங்கப்படும்.

முன்னர் நடைபெற்ற போட்டிகளை விட இம்முறை வழங்கப்படவுள்ள பரிசுத் தொகை இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டிலிருந்து 2003 வரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மேற்கிந்தியத் தீவுகள் 3 முறையும், அவுஸ்திரேலிய அணி 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணம் வென்றுள்ளன.

கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் (1999, 2003) அவுஸ்திரேலியா சம்பியன் கிண்ணத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இம்முறையும் மகுடம் சூடினால் அவுஸ்திரேலிய அணிக்கு அது "ஹெட்ரிக்" சாதனையாக அமையும்.

1975 முதலே இப்போட்டியில் பங்குபற்றிவரும் இலங்கை அர்ஜுன ரணதுங்க தலைமையில் 1996 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றுள்ளது.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை அணி இறுதி போட்டிக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், தற்போது இலங்கை அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் முழுமையான பலம்வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, துடுப்பாட்டமும் களத்தடுப்பும் ஏனைய நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

`விடுமுறை நாட்களின் சொர்க்கம்' என்று வர்ணிக்கக்கூடிய கரீபியன் தீவுகளில், உலகக் கிண்ணப் போட்டிக்காக கடந்த ஒரு வாரமாகவே உலக ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

போட்டி நடைபெறும் இடங்களில் உள்ள ஹோட்டல்கள், விடுமுறை விடுதிகள், குடில்கள் என எங்கும் ரசிகர்கள் கும்மாளம் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

http://www.thinakkural.com/news/2007/3/12/...s_page23103.htm

180 ஆயிரம் கோடி ரூபாவரை சூதாட்டம்; அதிக சிக்சர் அடிப்பது யாரென்றும் பந்தயம்

உலகக் கிண்ணத்தில் சிக்சர் மழை பொழிவது யார்? என்று பெருந்தொகை பணத்திற்கு சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டி நாளை தொடங்குகிறது. அதற்குள் சூதாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் மட்டும் 120 ஆயிரம் கோடி ரூபாவிலிருந்து 180 ஆயிரம் கோடி ரூபா வரை பணம் விளையாடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார் என்பது பற்றிய சூதாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி மீதே அதிகம் பேர் பணம் கட்டினார்கள். ஆனால் இப்போது அவுஸ்திரேலியா பின்தங்கி வருகிறது. தென் ஆபிரிக்கா மீது பணம் கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கிந்தியா, இலங்கை, இந்திய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

அதிக சிக்சர் அடிக்கப் போவது யார் என்பதில் இலங்கை வீரர் ஜெயசூரிய மேற்கிந்திய வீரர் கெய்ல் ஆகியோர் மீது அதிகம் பேர் பந்தயம் கட்டியுள்ளனர். இந்தியாவின் தோனி, அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து வீரர் பீற்றர்சன் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

சிறந்த சகலதுறை வீரர் யார் என்பதில் தென் ஆபிரிக்க வீரர் கலிஸ் முதலிடத்திலும், சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்பதில் அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் முதலிடத்திலும் உள்ளனர்.

வேகமாக சதம் அடிப்பது யார்? என்பதில் கில்கிறிஸ்ட், கெய்ல், ஜெயசூரிய ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார் என்பதில் இலங்கை வீரர் முரளிதரன், தென் ஆபிரிக்க வீரர் நிற்னி, நியூஸிலாந்து வீரர் ஷேன் பொண்ட், அவுஸ்திலேிய வீரர் பிராக்கன், மேற்கிந்திய வீரர் டெய்லர், இலங்கை வீரர் மலிங்க ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.

http://www.thinakkural.com/news/2007/3/12/...s_page23108.htm

இலங்கை, இந்திய அணிகளுக்கு எச்சரிக்கை மணியடிக்கும் பங்களாதேஷ்

]

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள 8 வலிமையான அணிகளும் முதல் பயிற்சிப் போட்டியில் கத்துக் குட்டிகளை சந்தித்தன. இதில் தென் ஆபிரிக்க அணி மட்டும் அயர்லாந்திடம் துடுப்பாட்டத்தில் திணறியது. இருந்தாலும் வலிமையான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் போராடி வென்றது.

இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கத்துக்குட்டிகளை பந்தாடின. நியூசிலாந்து, பங்களாதேஷ் போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் எதிர்பார்த்த முடிவு தான் கிடைத்தது. நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய சப்பல்-ஹாட்லி தொடரில் அவுஸ்திரேலியாவை 3-0 என முழுமையாக வீழ்த்தி பெருமையுடன் உலகக் கிண்ணத்தில் நுழைந்தது.

ஆனால், எவரும் எதிர்பாராத விதமாக பங்களாதேஷிடம் தோல்வியடைந்தது. அணியின் மோர்டசா கடைசியில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். இந்திய, இலங்கை அணிகளுடன் `பி' பிரிவில் இருக்கும் பங்களாதேஷ் இந்த இரு அணிகளுக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இந்திய, இலங்கை அணிகள் உலகக் கிண்ணத்தில் லீக் தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக கவனத்துடன் விளையாட வேண்டும். வென்றால் மட்டுமே இந்த இரு அணிகளும் சுப்ப -8 சுற்றுக்குள் நுழைய முடியும். இல்லையென்றால் இரண்டில் ஒன்று வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

அன்டிகுவா, பார்படோஸ் போட்டிகளில் முன்னாள் வீரர்களை கௌரவிக்க முடிவு

அன்டிகுவா மற்றும் பார்படோஸில் நடைபெறும் போட்டிகளின் போது முன்னாள் வீரர்கள் பலரை கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை.

மேற்கிந்திய தீவுகள் இரு முறை கிண்ணத்தைப் பெறுவதற்கு முக்கிய காரணமாயிருந்த ரிச்சர்ட்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்டிகுவாவில் உள்ள ஸ்ரேடியத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர்களை கௌரவப்படுத்த அன்டிகுவா மற்றும் பார்படோஸ் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

முன்னாள் கப்டன்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், ரிச்சி ரிச்சர்ட்சன், அன்டி ரொபர்ட்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் கேர்ட்லி அம்ரோஸ், பெஞ்சமின், விக்கிட் கீப்பர் ரெட்லி ஜேக்கப் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலககிண்ணம்

72684.jpg

Edited by ganesh

  • தொடங்கியவர்

ஜனா, உங்கட இடத்தில எந்த சனலில் மச் வருகின்றது?? உங்க பொதிகை சனல் வராது என்று நினைக்கிறன்.

Edited by யாழ்வினோ

கலக்கப் போகும் பேட்ஸ் மேன்கள்

உலக கோப்பை போட்டியில் ஜொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் பேட்ஸ்மேன்கள் பற்றி விவரம் வருமாறு:-

மைக்கேல் ஹுசே (ஆஸ்திரேலியா)

ஐ.சி.சி. தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இவர் மிகச் சிறந்த மிடில் ஆக்டர் பேட்ஸ்மேன். 2004ம் ஆண்டு தான் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 61 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1739 ரன் எடுத்துள்ளார். அதிக பட்ச ரன் 109 ஆகும். சராசரி 66.68 ஆகும்.

2 சதம், 10 அரை சதம் அடித்துள்ளார். சமீப காலமாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த உலக கோப்பையில் முத்திரை பதிப்பார் என்று கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பல முறை இவரது ஆட்டம் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.

டோனி (இந்தியா)

`மேட்ச் வின்னர்' என்று அழைக்கப்படும் இவர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். முதல் முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார். ஐ.சி.சி. தர வரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். 2004ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிராக அறிமுகம் ஆனார். 25 வயதான டோனி 66 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார். 1958 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.61 ஆகும். 2 சதம், 12 அரை சதம் அடித்துள்ளார். அதிக பட்சமாக 183 ரன் எடுத்தார்.

6-வது வீரராக இறங்குவது அவருக்கு மைனஸ் பாயிண்ட். அதிக சிக்சர் அடிக்கும் வீரர்களில் இவரையும் ஒருவராக சூதாட்டக்காரர்கள் கணித்துள்ளார். வாய்ப்பு கிடைப்பதை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடுவதில் கெட்டிக்காரர்.

பீட்டர்சன் (இங்கிலாந்து)

ஐ.சி.சி. தர வரிசைப் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் இவர் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ் மேனாக கருதப்படுகிறார். 2004ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2005ம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக தேர்வு பெற்றார்.

மேலும் அதே ஆண்டில் விஸ்டன் விருதும் பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எததிராக ஆட்டங்களில் இவர் முத்திரை பதித்தார். 42 போட்டியில் விளையாடி 1582 ரன் எடுத்துள்ளார். சராசரி 56.50 ஆகும். அதிக பட்சமாக 116 ரன் குவித்தார். 3 சதம், 11 அரை சதம் அடித்துள்ளார். மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் இவர் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

சிறந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர். தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இவர் நிலைத்து நின்று ஆட ஆம்பித்தால் எதிர் அணிக்கு கஷ்டம் தான். அனுபவம் வாய்ந்த தொடக்க பேட்ஸ்மேனான கெய்ல் 159 போட்டியில் விளையாடி 5696 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.74 ஆகும். 15சதமும், 29 அரை சதமும் அடித்துள்ளார். அதிக பட்ச ரன் 153. இரண்டாவது முறையாக உலக கோப்பையில் விளையாடும் இவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்.

சங்ககரரா (இலங்கை)

ஐ.சி.சி. தர வரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இவர் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். விக்கெட் கீப்பரான இவர் சமீபத்தில் நிïசிலாந்து, இந்திய சுற்றுப் பயணத்தில் வெளுத்து வாங்கினார். நிதானத்துடனும் அதே நேரத்தில் அதிராக விளையாடுவதாலும் கெட்டிக்காரர். நல்ல நிலையில் இருக்கும் அவரது பேட்டிங் இலங்கையின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். 189 போட்டியில் விளையாடி 5,476 ரன் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 132 ஆகுëம். 6 சதமும், 36 அரை சதமும் அடித்துள்ளார்.

முகமது ïசுப் (பாகிஸ்தான்)

உலகின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இவரும் ஒருவர். பாகிஸ்தான் வெற்றிக்கு இவரது ஆட்டம் பலமுறை முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் அபாரமாக ஆடக்கூடிய திறமை படைத்தவர். கடந்த ஆண்டு டெஸ்டில் அதிக சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். 32 வயதான அவர் 233 போட்டியில் விளையாடி 7853 ரன் எடுத்துள்ளார். சராசரி 41.77 ஆகும். 12 சதமும், 42 அரை சதமும் அடித்துள்ளார். அதிக பட்சமாக 1413 ரன் குவித்துள்ளார். ஐ.சி.சி. தர வரிசைப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் அவர் மூன்றாவது முறையாக உலக கோப்பை பங்கேற்கிறார்.

கிரேமி சுமித் (தென் ஆப்பிரிக்கா)

ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க கேப்டனான இவர் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராவாÖர். 2002ம் ஆண்டு தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனால். 2-வது முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கும் சுமித் 104 ஆட்டத்தில் 3683 ரன் எடுத்துள்ளார். அதிக பட்ச ரன் 134 ஆகும். 6 சதமும், 22 அரை சதமும் அடித்துள்ளார்.

ஸ்டீபன் பிளமிங் (நிïசிலாந்து)

அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக திகழும் இவர் தர வரிசையில் 24-வது இடத்தில் இருக்கிறார். 270 ஆட்டத்தில் விளையாடி 7684 ரன் எடுத்துள்ளார். அதிக பட்சமாக 134 ரன் குவித்துள்ளார். 7 சதமும், 46 அரை சதமும் அடித்துள்ளார். 4-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் இவர் நிïசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ் மேனாக திகழ்கிறார்.

ரிக்சி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் வெற்றி மிகவும் உறுதுணையாக இருந்து வருபவர் ரிக்கிபாண்டிங். ஸ்டீவ் வாக்குக்கு பிறகு சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். இவரது தலைமையில் கடந்த கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

உலக தர வரிசை பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் அவர் 269 ஆட்டத்தில் விளையாடி 9856 ரன் எடுத்துள்ளார். 22 சதமும், 58 அரை சதமும் அடித்துள்ளார். அதிக பட்சமாக 164 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.48 ஆகும். 4-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறார்.

டிராவிட் (இந்தியா)

நிலைத்து நின்று நிதாகமாக விளையாடுவதில் வல்லவர். சமீப காலங்களில் அதிரடியாகவும் விளையாடுகிறார். இந்தியாவின் தூனாக கருதப்படுகிறார். கேப்டன் பதவியேற்ற பிறகு அவரது ஆட்டத்திறன் அதிகரித்துள்ளது. 310 போட்டியில் விளையாÖடி 10,044 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.01 ஆகும். அதிகபட்சதமாக 153 ரன் எடுத்துள்ளார்.

கேப்டனாக உலக கோப்பையில் ஆடுவது முதல் முறையாகும். தர வரிசைப்பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார்.

ஜேக்காலிஸ் (தென்ஆப்பிரிக்கா)

சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் இவர் எதிர் அணி பேட்ஸ் மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். தர வரிசையில் 18-வது இடத்தில் உள்ளார். 247 போட்டியில் விளையாடி 8520 ரன் எடுத்துள்ளார். சராசரி 44.37 ஆகும். 14 சதமும், 59 அரை சதமும் அடித்துள்ளார். அதிக பட்ச ரன் 139 ஆகும்.

ஜெயசூர்யா (இலங்கை)

1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை கைப்பற்றி முக்கிய காரணமாக இருந்தவர். தொடக்க வீரர் அதிரடியாக ஆடும் புதிய நுனுக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. 379 போட்டியில் விளையாடி 11,538 ரன் எடுத்துள்ளார். அதிக பட்சமாக 189 ரன் குவித்துள்ளார். 23 சதம், 62 அரை சதம் அடித்துள்ளார்.

(தெண்டுல்கல், யுவராஜ்சிங், (இந்தியா), கில்கிஸ்ட், சைமண்ட்ஸ் (ஆஸ்திரேலியா), லாரா, சர்வான் (வெஸ்ட் இண்டீஸ்) இன்ஜமாம், ïனுஸ்கான் (பாகிஸ்தான்), பிளின்டாப், காலிங்வுட் (இங்கிலாந்து) ஆகியோரும் முத்திரை பதிக்கும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் உள்ளனர்.)

Malaimalar

இல்லை யாழ் வினோ இங்கு ஐ சனலில் காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இன்றைய போட்டி மேற்கிந்தி தீவுகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இங்கு நேரம் மாலை 7 மணியிலிருந்து காட்ட ஏற்பாடாகி உள்ளது.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.