Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தை நிறுத்தினால் எமக்கு ஆட்சேபனை இல்லை ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு

Featured Replies

9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை

 

ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு
 நமது நிருபர்

முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரித்து ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள். சரி­ச­ம­னாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் சந்­தித்து உரை­யா­டி­ய­போது இவ் வேண்­டு­கோளை அவர் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில் வரு­மாறு;

கேள்வி: நீங்கள் அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்த போது வடக்கில் உள்ள இரா­ணு­வத்தை எப்­படி அகற்ற முடியும் என்­பது குறித்து தங்­க­ளிடம் ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பி­னாரா? அது குறித்து விளக்க முடி­யுமா?

பதில்: ஆம். முழு இரா­ணு­வத்­தை­யுமே வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­று­மாறு நான் கோரு­வ­தாக என் பேச்சு அமைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி கூறினார். “ஏன்! அதில் என்ன பிழை?” என்றேன். அப்­ப­டி­யானால் எங்கள் இரா­ணு­வத்தை எங்கே கொண்­டுபோய் நிறுத்தச் சொல்­கின்­றீர்கள் என்று கேட்டார். “முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரி­யுங்கள். ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள்” என்றேன். “எல்லா மாகா­ணத்­திலும் சரி­ச­ம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை” என்றேன்.

 கேள்வி: பொலிஸ் பயிற்சிக் கல்­லூரி வடக்கில் அமைய வேண்டும் என்று கேட்­டீர்­களா? அதற்கு ஜனா­தி­பதி கூறிய பதில் என்ன?

பதில்: ஆம். எம் இளைஞர், யுவ­திகள் களுத்­து­றையில் இருக்கும் பொலிஸ் பயிற்சிக் கல்­லூ­ரிக்குச் செல்­வ­தற்குப் பயப்­ப­டு­கின்­றார்கள். தமிழ் மொழிப் பொலிஸ் பயிற்சிக் கல்­லூ­ரி­யொன்று வடக்கில் அமை­வதே சாலச் சிறந்­தது என்றேன். அதற்கு ஜனா­தி­பதி வடக்கில் இருப்­ப­வர்கள் தெற்­கிற்கும் தெற்கில் இருப்­ப­வர்கள் வடக்­கிற்கும் வந்­தால்த்தான் புரிந்­து­ணர்வு ஏற்­படும் என்றார். “எமது அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னையை உடனே தீருங்கள். நாங்கள் யாவ­ருமே தெற்கு நோக்கி வரு­கின்றோம்” என்றேன். அதற்கு ஜனா­தி­பதி உள­மாரச் சிரித்தார்.

 

கேள்வி: வடக்கில் பல போராட்­டங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­பதால் இதற்கு மத்­திய அர­சிடம் தான் தீர்­வுள்­ளது. எனவே, அவர்­களை நேர­டி­யாக சந்­தித்துப் பேச­வ­ரு­மாறு ஜனா­தி­ப­திக்கு அழைப்பு விடுத்­தீர்­களா? 

பதில்: இல்லை. அவ்­வாறு நான் கேட்­க­வில்லை. பல விட­யங்­க­ளையும் நான் எடுத்­து­ரைத்து அவற்­றிற்­கான தீர்வைப் பெறு­வது மிகவும் அவ­சரம் என்றேன். ஜனா­தி­பதி ஒன்­பது மணி­யா­கி­விட்­ட­தாலும் வேறு ஒரு நிகழ்வு தமக்கு இருப்­ப­தாலும் தொடர்ந்தும் கலந்­து­ரை­யாட முடியாமல் இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு விரைவில் வடக்கிற்கு ஒரு நடமாடுஞ் சேவையை நடத்த வருவதாகக் கூறினார். அதன் போது தீர்வு காணா விடயங்கள் அனைத்துக்கும் தீர்வு காணலாம் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை

 

ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு
 நமது நிருபர்

 

பதில்: ஆம். முழு இரா­ணு­வத்­தை­யுமே வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­று­மாறு நான் கோரு­வ­தாக என் பேச்சு அமைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி கூறினார். “ஏன்! அதில் என்ன பிழை?” என்றேன்.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

உண்மைதானே. வடக்கிலோ கிழக்கிலோ பிரச்சனை ஒன்றும் இல்லை.
வட கிழக்கு   அமைதியான பூங்காவாக இருக்கின்றது என உலகத்திற்கு காட்டும் ஜனாதிபதி   முழு ராணுவத்தையும் அம்பாந்தோட்டைக்கே அனுப்ப வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.