Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்முறை குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு போர்க்குற்றவாளியை அனுப்பிய இலங்கை

Featured Replies

பாலியல் வன்முறை குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு போர்க்குற்றவாளியை அனுப்பிய இலங்கை

 
 
பாலியல் வன்முறை குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு  போர்க்குற்றவாளியை அனுப்பிய இலங்கை
 

 

இயற்கை உருவாக்கியுள்ள கொடுமைக்கு மத்தியில் முக்கியமானதொரு செய்தி பலரின் கண்பார்வையிலிருந்து தவறியிருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கைச் சிப்பாய்கள் மீது முன்வைக்கப்பட்ட பாலி யல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது குறித்த விசாரணை நடைபெற்ற விதம் தொடர்பானதே அந்தச் செய்தி. ஏபி செய்திச்சேவை அதனை வெளியிட்டிருந்தது.

இலங்கையின் படைச்சிப்பாய்கள் மீது முன்வைக்கப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசுகள் எவ்வாறு கண்துடைப்பு விசாரணைகளை நடத்தி யுள்ளன என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரம் அந்தச் செய்தி.

இலங்கையின் அமைதிப்படைச் சிப்பாய் ஒருவரால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக ஹெய்ட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குற் றஞ்சாட்டியதைத் தொடர்ந்து போர்க்குற்றச் சாட்டு களுக்குள்ளான இரா ணுவ அதிகாரி ஜகத் டயஸை இலங்கை அரசு விசா ரணைக்காக அனுப்பிவைத்தது என ஏபி தெரிவித் துள்ளது.

மேஜர் ஜகத் டயஸ் மீது கடுமையான போர்க்குற் றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின்னரே அவரை முன்னைய அரசு பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு அனுப்பிவைத்துள்ளது.

தனது படைப்பிரிவிலுள்ளவர்கள் தமிழ்ப் பெண்களை மிகமோசமான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்து வதற்கு அனுமதித்த ஒருவரை இலங்கை அரசு பாலி யல் வன்புணர்வு குறித்து விசாரிப்பதற்காக அனுப்பி வைத்துள்ளது.ஜகத் டயஸ் குறிப்பிட்ட போர்ச்சிப்பாயை விசாரணை செய்த விதமும் முக்கியமானது.

‘‘குற்றஞ்சாட்டப்பட்ட சிப்பாயையோ பாதிக்கப்பட்ட பெண்ணையோ நான் சந்திக்கவில்லை. அந்த இராணு வச் சிப்பாய் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலி ருந்து அவரை விடுவித்தேன்’’ என்று அவர் மிகவும் சாதாரணமாக ஏபிக்கு பதிலளித்துள்ளார்.

பாலியல் வன்முறைகள் குறித்த அவரது பதில்களும் அந்த இராணுவ அதிகாரியின் மனோநிலை எவ்வாறு அடிப்படை நீதிக்குப் புறம்பானது என்பதை வெளிப் படுத்தியுள்ளது. ஆதாரங்கள் இல்லாவிட்டால் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது என அவர் தெரி வித்துள்ளார்.

இலங்கை அரசு உள்நாட்டுப் பொறிமுறையொன்றை ஏற்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்கும் பட்சத் தில் அவ்வாறான விசாரணைகள் எவ்வாறானதாக அமையும் என்பதை புலப்படுத்துவதற்கு ஹெய்ட்டி குறித்த அதன் விசாரணைகள் மிகச்சிறந்த உதாரண மாகும்.

குற்றமிழைத்தவர்களே விசாரணைகளை முன்னெடுக் கலாம் – குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். இவை எல்லாம் சாத்தியமே என்பதை ஏபியின் அந்தச் செய்தி புலப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைப் படையினர் குற்றமிழைத்தால் அவர்க ளைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை எப்படி யாவது அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனோபாவம் நிறைந்தவையே இலங்கை அரசுகள். தற்போதைய அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

http://uthayandaily.com/story/4537.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.