Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளது கை ஓங்க அரசு இ.டமளித்தல் ஆகாது.

Featured Replies

இனவாதிகளது கை ஓங்க அரசு இ.டமளித்தல் ஆகாது.

 
இளவாதிகளது கை ஓங்க அரசு இ.டமளித்தல் ஆகாது.
 

நாட்­டில் மீண்­டு­மொரு இனக் க­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குச் சிலர் தூபம் இட்டு வரு­ கின்­ற­னர். அமைச்­சர் மனோ­க­ணே­ச­னின் அலு­வ­ல­கத்­துக்­குச் சென்ற ஞான­சா­ர­தே­ரர் இன­வா­தக் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளார்.

அவ­ருக்கு இதற்­கான துணிவு எவ்­வாறு ஏற்­பட்­டது என்­பது ஆரா­யப்­பட வேண்­டிய விட­ய­மா­கும். இந்­தப் பௌத்­த­தே­ரர் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு எதி­ரான கருத்தை வெளி­யி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­றார். ஆனால் அரசு இத­னைக் கண்­டு­கொள்­வ­தில்லை.

இந்த நிலை­யில் குரு­நா­கல் – கண்டி முதன்மை வீதி­யில் அமைந்­துள்ள முஸ்­லிம் வழி­பாட்­டுத் தல­மொன்­றின் மீது அண்மையில் பெற்­றோல் குண்­டுத் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் முஸ்­லிம் மக்­கள் மத்­தி­யில் கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பொது­ப­ல­சேனா அமைப்­பின் தூண்­டு­த­லின் பேரி­லேயே இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருக்­க­லா­மெ­னச் சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

இதே­வேளை எம்­மைக் கைது செய்ய முயன்­றால் மறக்­க­மு­டி­யாத வர­லாற்­றுப் பாடத்­தைக் கற்­பிப்­போ­மென பொது­பல சேனா­வின் பொதுச் செய­லா­ள­ரான ஞான­சா­ர­தே­ரர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அத்­து­டன் சிங்­கள மக்­களை அணி திர­ளு­மா­றும் அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

அர­சுக்­குத் தலை­வலி கொடுத்­து­வ­ரும் சிங்­கள இன­வா­தத் தரப்­பி­னர்

ஞான­சா­ர­தே­ரர் போன்ற இன­வா­தத் தரப்­பி­னரை ஆரம்­பத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தால் இன்று இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்க மாட்­டாது. ஆனால் இன­வா­தி­க­ளின் எதிர்ப்­புக்­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தில் கூட் டாட்சி அரசு கடு­மை­யான சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது. இத­னால் ஞான­சா­ர­தே­ரர் போன்­ற­வர்­க­ளைக் கைது­செய்­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­கின்­றது.

இன­வா­த­மும், மத­வா­த­மும் தலை­தூக்­கும் ஒரு நாட்­டில் அபி­வி­ருத்­தியை எதிர்­பார்க்க முடி­யாது. எமது நாட்­டில் இது­தான் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நாடு குறிப்­பிட்­ட­தொரு இனத்­த­வ­ருக்கே சொந்­த­மா­ன­தெ­னத் திரும்­பத் திரும்­பக் கூறப்­படு­ கின்­றது. சிறு­பான்மை இனத்­த­வர்­கள் இந்த நாட்­டுக்­குத்் தேவை­யற்­ற­வர்­கள் என்ற வகை­யில் பரப்­பு­ரை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இத­னால் இனங்­க­ளுக்­கி­டை­யில் விரி­சல்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இறு­தி­யில் இனக் கல­வ­ர­மா­க­வும் தோற்­றம் பெறக் கூடும். முன்­ன­ரெல்­லாம் நாட்­டின் அனைத்து இடங்­க­ளி­லும் மத வழி­பாட்­டுத் தலங்­கள் அமைக்­கப்­பட்டு வழி­பா­டு­கள் இடம்­பெற்­றன. தென்­ப­கு­தி­யில் முற்­று­மு­ழு­தா­கப் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்­கின்ற அம்­பாந்­தோட்­டை­யில் கதிர்­கா­மக் கந்­த­னின் ஆல­யம் அமைந்­துள்­ளது.

அதே­போன்று தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பௌத்த விகா­ரை­கள் அமைந்­துள்­ளன. இந்த வழி­பாட்­டுத் தலங்­கள் திட்­ட­மி­டப்­பட்ட வகை­யில் அமைக்­கப்­ப­ட­வில்லை. மக்­க­ளும் இவை தொடர்­பா­கச் சந்­தே­கம் கொள்­ள ­வில்லை. ஆனால் போர் ஓய்ந்த பின்­னர் பௌத்த மக்­கள் வாழாத இடங்­க­ளில் எல்­லாம் பௌத்த வழி­பாட்­டுத் தலங்­கள் திடீர் திடீ­ரென அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இத­னால் சிறு­பான்­மை­யின மக்­கள் அச்­ச­ம­டைந்­துள்­ள­னர். எதிர்­கா­லத்­தில் தமது இருப்பு கேள்­விக்­கு­றி­யாக மாறி­வி­டுமோ? என்ற ஐய­மும் இவர்­க­ளி­டம் எழுந்­துள்­ளது. ஏற்­க­னவே பல இடங்­க­ளில் இது­போன்ற சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ள­தால் அந்த மக்­க­ளின் ஐயத்­தில் நியா­யம்் உண்டு.

தமிழ் மக்களது அச்சம் நியாயமானதே

கொடிய போர் ஒன்று ஓய்ந்து மக்­கள் தற்­போ­து­தான் ஓர­ளவு அமை­தி­யான சூழ­லில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். ஆனால் இன­வா­தி­க­ளால் இதைப் பொறுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. இதன் பிர­தி­ப­லிப்­பா­கவே குரு­ணா­கல் பள்­ளி­வா­சல் மீதான தாக்­கு­தல் சம்­ப­வம், இரத்­தி­ன­புரி தீ வைப்­புச் சம்­ப­வம் ஆகி­ய­வற்­றைக் கொள்ள முடி­யும். இந்­தச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் இனம் காணப்­பட்ட போதி­லும் எவ­ருமே இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இதே­வேளை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அடா­வ­டித்­த­னங்­க­ளில் ஈடு­பட்ட பொது பல சேனா­வின் பொதுச் செய­லா­ளர் ஞான­சா­ர­தே­ர­ரை­யும், அவ­ரு­டன் இணைந்து செயற்­ப­டு­கின்­வர்­க­ளை­யும் கைது செய்ய வேண்­டா­மென பொலிஸ் தலை­மைப் பீடம் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் குற்­றம் சாட்­டி­யுள்­ளார். ஆனால் இது கவ­னத்­தில் கொள்­ளப்­ப­டுமா? என்­பது சந்­தே­க­மா­னதே.

உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடான இந்­தி­யா­வில் இன­வா­த­மும், மத­வா­த­மும் தலை­தூக்­கிக் காணப்­ப­டு­வ­தால் அங்கு அமை­திக்­குப் பங்­க­மான காரி­யங்­கள் அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. அத்­து­டன் சொத் துக்­க­ளுக்கு இழப்­புக்­க­ளும் ஏற்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பா­கக் காஷ்மீர் பிரச்­சினை தீராத தலை­வ­லி­யாக அங்கு மாறி­விட்­டது. தின­மும் மோதல்­கள் ஏற்­பட்டு மக்­கள் சாவ­டை­வது அங்கு சாதா­ர­ண­மான விட­ய­மா­கி ­விட்­டது. ஆனால் இத­னு­டன் தொடர்பு கொண்­டி­ருக்­கும் இந்­தி­யா­வும், பாகிஸ்­தா­னும் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பது தொடர்­பா­கச் சிந்­திப்­ப ­தா­கத் தெரி­ய­வில்லை.

இலங்கையின் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தமி­ழர்­க­ளின் தாயக பூமி­யெ­னத் தமி­ழர்­கள் பெரு­மை­ய­டன் கூறிக்­கொள்­வார்­கள். ஆனால் கிழக்கு மாகா­ணம் தமி­ழர்­க­ளின் கைக­ளி­லி­ருந்து நழு­விச் சென்­று­விட்­டது. வடக்­கி­லும் அவ்­வா­றா­ன­தொரு நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது . விரல்­விட்டு எண்­ணக் கூடிய சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப்­பட்ட நாவற்­கு­ழி­யில் பிர­மாண்­ட­மா­ன­தொரு பௌத்த ஆல­யத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

யாழ்ப்­பாண மாநக­ரின் முதன்மை நுழை­வா­யி­லாக நாவற்­குழி காணப்­ப­டு­கின்­றது தென்­ப­கு­தி­யி­லி­ருந்து வரு­ப­வர்­கள் நாவற்­கு­ழி­யைக் கடந்து சென்­று­தான் யாழ்ப்பாண நகரை அடைய முடி­யும். திரு­கோ­ண­மலை நக­ரி­னுள் நுழை­கின்ற நுழை­வா­சல்­க­ளில் சிங்­க­ளக் குடி­யேற்றங்­கள் திட்­ட­மி­டப்­பட்ட வகை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தைப் போன்­ற­தொ­ரு­நி­லை­தான் தற்­போது நாவற்­கு­ழி­யி­லும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எதிர்­கா­லத்­தில் இதன் வி­ளை­வு­கள் தமி­ழர்­க­ளுக்­குப் பாதக­மா­கவே அமை­யப் போகின்­றன.

ஆகவே அரசு நேர்­மை­யு­டன் செயற்­பட்டு அனைத்து இனங்­க­ளுக்­கு­மான பாது­காப்பை உறு­தி­செய்­து­கொள்ள வேண்­டும். கூட்டாட்சி அரசு நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் பார­பச்­ச­மில்­லாத கூட்டாட்சியை வழங்க வேண்­டும். இன­ வா­தி­க­ளின் கரங்­கள் ஓங்­கி­வி­டு­மா­யின் அது இந்த நாட்­டின் எதிர்­கா­லத்­தையே சீர்­கு­லைத்­து­வி­டும்.

http://uthayandaily.com/story/4532.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.