Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள்பேரணி.

Featured Replies

தமது பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள்பேரணி.

 

IMG_8601.jpg

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்;ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்குசெல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(29-05-2017) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம்  திகதி க இரணைமாதாநகரில் ஆரம்பித்திருந்தனர் இந்த நிலையில் அவர்களது போராட்டம் 29 ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்த போதும் அதுவும் நடைபெறவில்லை எனவேதான்  மக்கள் தாங்கள் இரணைமாதா நகரிலிருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை மேற்கொண்டுள்ளனர். என போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும், இரணைத்தீவில் நிரந்தரமாக குடியமர்ந்து தொழில் செய்யும் உரிமை வேண்டும், எமது காணிகள் கால்நடைகள் பராமரிக்க வேண்டும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிகச் சிறந்த இவ்விடம் வேண்டும், எமது தீவு எம்மைவிட்டுப் பறிபோகும் அபாயத்திலிருந்து காப்பற்றப்பட வேண்டும், தீவின் வளங்கள் அந்நியர்களால் சூறையாடப்படும் நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தீவை ஆக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

IMG_8602.jpgIMG_8608.jpgIMG_8611.jpgIMG_8614.jpgIMG_8617.jpgIMG_8618.jpgIMG_8627.jpg

 

 

http://globaltamilnews.net/archives/28342

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.