Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் நில நீர் மாசு: மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு

Featured Replies

சுன்னாகம் நில நீர் மாசு:  மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு

 


சுன்னாகம் நில நீர் மாசு:  மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு
 

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடையக் காரணமான மின் உற்பத்தி நிலையத்தின் பொறுப்பாளர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளமை சுற்றாடல் அதிகார சபையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் இயங்கும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில், நீர் மாசடைவிற்குக் காரணமான மின் உற்பத்தி நிலையம் குறித்து விசாரணை நடத்தி அதன் பொறுப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கையின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையத்தைச் சூழ 2 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிலத்திற்கடியில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் கிரீஸ் என்பன வடக்கு நோக்கி நகர்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சுன்னாகத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் கிணறுகளில் நீர் மாசடையுமாயின் உடனடியாக சுற்றாடல் அதிகார சபையூடாக அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/05/சுன்னாகம்-நில-நீர்-மாசு-ம/

  • தொடங்கியவர்

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய அதிகாரியை கைது செய்ய உத்தரவு

 

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய அதிகாரியை கைது செய்ய உத்தரவு

 

 
 
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் எந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்புபட்டுள்ளதோ அந்த மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.


சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் ஒயில் கழிவுகளானது வடக்கு திசையை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தாம் பாதிக்கப்பட்டதாக அப் பகுதியில் உள்ள மக்கள் சந்தேகித்தால் அது தொடர்பாக சுற்று சூழல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு பொதுமக்களால் தெரிவிக்கப்படும் முறைப்பாட்டை சுற்றுச் சூழல் அதிகார சபையானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து பொதுச் சுகாதர வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் பரிசிலித்து அது தொடர்பில் அம்மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.


மேலும் சுன்னாகம் பிரதேசத்தில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், இதில் எந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கிறீஸ் மற்றும் ஒயில் கழிவுகள் வெளிவருகின்றன என சுற்று சூழல் அதிகாரசபை ஆய்வு செய்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக அந்நிறுவன அதிகாரியை கைது செய்து அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் முற்படுத்த வேண்டும்.

இவ்வாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவிட்டதுடன் இவ் வழக்கை எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=91973

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.