Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்!

Featured Replies

யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

library.jpg

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளின் நள்ளரவில் (01.05.1981) யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள்.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ் நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை, பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அது.

தெற்காசியாவில் மிகப் பெரும் நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97ஆயிரம் அரிய புத்தகங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டது. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்டது.

யாழ் நூலக எரிப்பு என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உரமூட்டியது.

யாழ்நூலக அறிவழிப்பு வன்முறை ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்தது. ஒரு அறிவற்ற, பிற்போக்குத் தனமான கொடிய இந்தச் செயல் – இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிரச்சிக்குள்ளாக்கியது. இன மேலாதிக்கத்தின் அசீங்கமான வெளிப்படாகவும் கொடிய இன வெறி, அறிவுக்கு எதிரான வெறி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள்.

யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க, அறிவுடைய, சிந்தனையுடைய மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீககக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு – தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட அத்தனை அரசுகளும் அழித்துள்ளன.

போரின்போது பாடசாலை நூலகங்களின் புத்தங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது,1981இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் சரித்திரத்தை, பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மாத்திரமின்றி தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொக்கிளாயில் தற்போது நிறுவப்படும் புத்த விகாரையைக் குறிப்பிடலாம். ஆக, அறிவழிப்பு, சரித்திர அழிப்பு, பண்பாடழிப்பு வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கிறது என்பதே மிகவும் அதிர்ச்சியூட்டும் கொடூரம். இதுவே, இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, நூலெரிப்பு வன்முறை இன்னமும் புரிந்துகொள்ளப்படாதிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/28514

  • தொடங்கியவர்

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்கி இன்றுடன் 36 வருடங்கள்

 


தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்கி இன்றுடன் 36 வருடங்கள்
 

யாழ். நூலகம் தீக்கிரயைாகி இன்றுடன் 36 வருடங்கள் ஆகின்றன.

கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை, வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகரமுடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக்கீற்றை இன்று போன்றதோர் நாளின் நள்ளிரவு வேளை, காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப்பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933 ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெருவிருட்சமாய் அறியாமை இருள் களையும் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

1800 களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மைவாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கரையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தைப் பற்றின.

1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

பற்றிய எப்பொருளுக்கும் தன் வடிவம் கொடுக்கும் தீ அறிவுப் பசிக்கு விருந்தாகும் புத்தகங்களை உண்டு தன்பசி தணித்தது.

சுமார் ஒரு இலட்சம் புத்தகங்கள் நிறம்மாறி, மணம்மாறி உருச்சிதைந்து சாம்பராயின.

“புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட
பலம்வாய்ந்த ஆயுதங்கள் புத்தகங்களே”

-விளாடிமிர் லெனின்-

http://newsfirst.lk/tamil/2017/05/தெற்காசியாவின்-அறிவுக்-க/

  • தொடங்கியவர்

யாழ்.நூலக எரிப்பு 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்:-

 

 

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் முன்பாக நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது அதன் போது நூலக முன்றலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்ட செய்தியினை கேள்வியுற்று மாரடைப்பால் மரணமடைந்த தமிழ் பற்றாளர் வண.பிதா . தாவீது அடிகள் மற்றும் நூலக நிறுவுனர் செல்லப்பா ஆகியோரின் உருவப்படங்களுக்கும் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்க்கட்சி உறுப்பினரான சி.தவராசா , ஆளும் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் , அனந்தி சசிதரன் , பா.கஜதீபன் , விந்தன் கனகரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்

2-1.jpg 2-2.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் நிகழ்வு.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை பொது நூலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் , கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

kk.IMG_6859.jpgkk.IMG_6890.jpgkk.IMG_6892.jpgkk.IMG_6913.jpg

 

https://globaltamilnews.net/archives/28677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.