Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் :

Featured Replies

கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் :

 

IMG_8889.jpg
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு புதிதாக இன்று 01-06-2017  வலயக் கல்விப் பணிப்பாளராக திருஞானம் ஜோன் குயின்ரஸ் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

மடு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் தற்போது கிளிநொச்சியின்  கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

1988 ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக கல்வித்துறைக்குள் பிரவேசித்த அவர்  பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், கலைப் பட்டதாரியாகவும் காணப்பட்டார். தொடர்ந்து பண்பாட்டியல், தமிழ், மற்றும் கல்வி ஆகிய மூன்று துறைகளில் முதுமானி பட்டத்தை பெற்ற இவர் இலங்கை கல்வி நிர்வாகச் சேவை தரம் இரண்டைச் சேர்ந்தவராவர்.

இன்று கிளிநொச்சி கல்வி வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவித்த போது

அரசியல் என்பது எல்லா இடங்களிலும் காணப்படுகிறது எனவே அரசியலை ஒரு பக்கம் வைத்து கடமைகளை சரியாக செய்தால்  அரசியல் ஒரு பிரச்சினையாக இருக்காது. தவறானதை செய்கின்றவர்கள்தான் அரசியலை நாடுகின்றார்கள். அரசியல்வாதிகளுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள்  அமைதியாகிவிடுவார்கள்.

தீpவகத்தில் பணியாற்றிய காலத்திலும்  அரசியல் இருந்தது ஆனாலும் சிறப்பாக பணியாற்றியிருந்தேன். அதுபோலவே மடுவிலும் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய போது அங்கு கல்வித்துறையில் அரசியல் தலையீடு இல்லை என்றே கூறவேண்டும், அந்தளவுக்கு நிலைமை இருந்தது அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பட்டதாரிகளாக, சட்டத்தரணிகளாக இருந்தனர். அவர்கள் ஒரு போதும் இப்படி செய்யுங்கள் என்று கட்டளை பிறப்பித்தது இல்லை. ஆனால் கேட்பார்கள் சேர் இப்படி கேட்கிறார்கள் என்ன செய்யலாம் என்று. அதற்கு நாங்கள் பதில் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள் எனத் அவர் தெரிவித்தார்.

பல்பரிமான கலை கலாசார சூழ்நிலைகளுக்குள் மாணவர்களை கல்வியில் நாட்டம் கொள்ள வைப்பதுதான் இன்றை காலக்கட்டத்தின் தேவையாக இருக்கிறது. கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் தனியே ஆசிரியர்கள் மாத்திரமல்ல  மாணவர்கள் பெற்றோர்கள், சமூகத்தினர் என அனைவரினதும் கூட்டு உழைப்பு அவசியமாகிறது. ஒரு கூட்டு உழைப்பின் ஊடாகவே கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் இதனை மடு கல்வி வலயத்தில் செய்திருக்கிறேன்.

எனவே கிளிநொச்சி கல்வியை அனைவரினதும் கூட்;டு உழைப்பின் மூலமும் ஒத்துழைப்பின் மூலமும் முன்னோக்கி கொண்டு செல்வேன் எனவும் தெரிவித்தார்

https://globaltamilnews.net/archives/28649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.