Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்

Featured Replies

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி விண்ணப்பித்துள்ளனர்.

 
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்
 
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு பயிற்சி காலம் தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது.

இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதில் இருந்து கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அவர் நேரடியாக விண்ணப்பித்ததாக கருதப்படுவார்.

இந்த விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன்-1 (இன்று) என பிசிசிஐ அறிவித்திருந்தது. இன்று கடைசி நாள் விண்ணப்பம் பெறப்பட்டதும் யாரெல்லாம் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரராக சேவாக் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் மட்டும்தான் மிகவும் பிரபலமான நபர். இவருடன் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் பைபஸ், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், முன்னாள் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் சேவாக் விண்ணப்பம் செய்துள்ளதுதான் அனைவரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. இவர் இதற்கு முன் பயிற்சியாளர் பணியை செய்ததில்லை. தற்போது முடிந்த ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக மட்டுமே இருந்துள்ளார். பிசிசிஐ-யின் முன்னணி அதிகாரி ஒருவர்தான் சேவாக் விண்ணப்பிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/01201222/1088550/Virender-Sehwag-applies-for-India-coach-post-Moody.vpf

  • தொடங்கியவர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பம்

 
எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனில் கிரெய்க் மெக்டர்மட். | 2013-ம் ஆண்டு. | படம்.|ஆர்.ரவீந்திரன்.
எம்.ஆர்.எஃப். பேஸ் பவுண்டேஷனில் கிரெய்க் மெக்டர்மட். | 2013-ம் ஆண்டு. | படம்.|ஆர்.ரவீந்திரன்.
 
 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பித்துள்ளார்.

ஏற்கெனவே விரேந்திர சேவாக், அனில் கும்ப்ளே, லால்சந்த் ராஜ்புத், டொட்டா கணேஷ், டாம் மூடி உள்ளிட்டோர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணபித்துள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

தலைமைப் பயிற்சியாளராக வேண்டும் என்று கொஞ்ச நாட்களாகவே ஆசை இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஓராண்டு பயிற்சியாளர் பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தேன். இப்போது மீண்டும் கிரிக்கெட்டுக்காக பணியாற்ற விரும்புகிறேன். இந்தியாவில் நான் நிறைய மகிழ்ச்சியான தருணங்களில் இருந்துள்ளேன். எனவே இந்திய கிரிக்கெட்டுக்குச் சேவையாற்றுவதை விரும்புகிறேன்.

வீரர்களுடனும் உதவிப் பயிற்சியாளர்கள், நிர்வாகம் உள்ளிட்டோருடன் சுமுகமான உறவுகளுடன் பணியாற்ற முடியும் என்று ஆழமாக நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் மெக்டர்மட்.

http://tamil.thehindu.com/sports/இந்திய-கிரிக்கெட்-அணியின்-தலைமைப்-பயிற்சியாளர்-பொறுப்பிற்கு-கிரெய்க்-மெக்டர்மட்-விண்ணப்பம்/article9719274.ece?homepage=true

  • தொடங்கியவர்

பயிற்சியாளர் பொறுப்புக்கான சேவாக்கின் வெறும் இரண்டு வரி விண்ணப்பம் : பிசிசிஐ நிர்வாகம் அதிர்ச்சி

 

சேவாக். | படம்.| கே.பாக்யபிரகாஷ்.
சேவாக். | படம்.| கே.பாக்யபிரகாஷ்.

பணபலம், புகழ்பலம் மிக்க இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு சிலர் பக்கம் பக்கமாக சுயவிவரங்களையும் தங்கள் சாதனை விவரங்களையும் அனுபவங்களையும் எழுதி அனுப்பியுள்ள நிலையில் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கும் அதிரடி வீரேந்திர சேவாக் 2 வரியில் விண்ணப்பத்தை அனுப்பி இதிலும் அதிரடி காட்டியுள்ளார்.

விண்ணப்பத்துடன் அவரது சுயவிவரங்களை கேட்டிருந்ததாகவும் ஆனால் அவர் இரண்டே வரி விண்ணப்பத்தை மட்டும் அனுப்பியதாகவும் தெரிகிற்து.

ஆனால் மிகவும் சீரியசாக அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படி 2 வரியில் சேவாக் விண்ணப்பம் அனுப்பிவிட்டாரே என்று பிசிசிஐ, உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகக் குழு ஆகியவை லேசாக அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது, தான் கிங்ஸ் லெவன் பஞ்சப் அணியின் நம்பிக்கை ஆலோசகர் தற்போதைய இந்திய அணி வீரர்களுடன் நல்ல பழக்கம் உள்ளது, என்பது மட்டுமே சேவாக் விண்ணப்பத்தின் தன்னடக்க உள்ளடக்கமாகும்.

கிரிக்கெட் ஆடும் போது களத்தில் ‘பந்தைப் பார்.. அடி’ என்ற கொள்கையுடைய சேவாக் பயோடேட்டா அனுப்புவதிலும் இந்தச் சிக்கன நடைமுறையை கடைபிடித்தது குறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இது மிகவும் விசித்திரமான பயோடேட்டா, நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டாமா? சி.இ.ஓ. ராஹுல் ஜோஹ்ரியை தொடர்பு கொண்டீர்களென்றால் இத் பற்ற்ய விவரம் கிடைக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அன்று விராட் கோலி, தனக்கு கும்ப்ளேவுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறு என்றும் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கலாமே தவிர அதனை ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை, சாதாரணமாக வீடுகளில் நாம் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறோமா, அது போன்ற விஷயமே இதுவும் என்று மிகச் சாதாரணமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் கோலியும், கும்ப்ளேயும் வித்தியாசங்களை மறந்து அணியை மேலும் வழிநடத்த வேண்டும் என்ற சூழலே நல்ல நிலையாகும் என்று சிஓஏ அதிகாரி கூறிய அதே வேளையில், சேவாக் சேவாகாக இருக்கிறார், தன் விண்ணப்பத்தை 2 வரிகளில் எழுதி அனுப்பியுள்ளார், அதனுடன் சுயவிவரம் (பயோடேட்டா) இணைக்கப்படவில்லை என்று ஆங்கில நாளேடுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/பயிற்சியாளர்-பொறுப்புக்கான-சேவாக்கின்-வெறும்-இரண்டு-வரி-விண்ணப்பம்-பிசிசிஐ-நிர்வாகம்-அதிர்ச்சி/article9721120.ece?homepage=true

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்காணல்

 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று நடக்கிறது. ரவிசாஸ்திரி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்காணல்
 
 
மும்பை :

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பொறுப்பில் இருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்திய முன்னாள் வீரர்கள் ரவிசாஸ்திரி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், டோட்டா கணேஷ், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, தென்ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளுஸ்னர், பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ், ஓமன் அணியின் தேசிய பயிற்சியாளர் ராகேஷ் ஷர்மா, வெஸ்ட் இண்டீசின் பிலிப் சிமோன்ஸ், கிரிக்கெட் பின்னணி எதுவும் இல்லாத 30 வயதான இந்திய மெக்கானிக்கல் என்ஜினீயர் உபேந்திரநாத் பிரமச்சாரி ஆகியோர் பயிற்சியாளர் பதவியை குறி வைத்து விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலை இன்று பிற்பகல் 1 மணிக்கு மும்பையில் நடத்துகிறது. தெண்டுல்கர் லண்டனில் இருப்பதால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதில் பங்கேற்பார்.

விண்ணப்பம் அளித்தவர்களில் முதன்மையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 6 பேரிடம் அதாவது ரவிசாஸ்திரி, ஷேவாக், டாம் மூடி, சிமோன்ஸ், பைபஸ், ராஜ்புத் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இ-மெயில் மூலம் ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.

201707100824106384_12post-of-coach._L_st

தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். எனவே அவருக்கு இப்போதைக்கு பயிற்சியாளர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரிடமும் இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு எந்த மாதிரியான திட்டங்கள் வைத்துள்ளர்கள் என்பதே பிரதான கேள்வியாக கேட்கப்படும். அழைக்கப்பட்டுள்ள 6 பேரில் ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 55 வயதான ரவிசாஸ்திரி இதற்கு முன்பு இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றியபோது விராட் கோலியுடன் எந்தவித சர்ச்சைகளும் இன்றி இணக்கமான உறவு வைத்திருந்தார். கோலி மற்றும் சக வீரர்களின் அமோக ஆதரவு சாஸ்திரிக்கு அதிகமாக உள்ளது.

ஆனால் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். கடந்த முறையும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். அப்போது அவரிடம் ‘ஸ்கைப்’ வழியாக நேர்காணல் நடத்தப்பட்ட சமயத்தில் அங்கு கங்குலி இல்லை. இதை ஒரு பெரிய குற்றச்சாட்டாக கிளப்பிய ரவிசாஸ்திரி, வேண்டுமென்றே கங்குலி தன்னை புறக்கணித்ததாக கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த கங்குலி, இவ்வளவு பேசுபவர் நேர்காணலுக்கு நேரில் வந்திருக்க வேண்டாமா? என்று சாடினார்.

இப்படிப்பட்ட சூழலில் கங்குலி மீண்டும் நேர்காணல் நடத்த உள்ளதால் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

201707100824106384_post-of-coach._L_styv

இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக்குக்கு பயிற்சியாளர் அனுபவம் போதிய அளவில் இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில அணிகளின் ஆலோசகராக செயல்பட்டு இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. குறிப்பிடத்தக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது.

இதே போல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட போது, அந்த அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பட்டம் வெல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அதனால் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடிக்கும் கணிசமான முக்கியத்துவம் அளிக்கப்படலாம். ரவிசாஸ்திரி மற்றும் ஷேவாக் மட்டும் நேர்காணலுக்கு நேரில் செல்வார்கள் என்றும் மற்றவர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பதில் அளிப்பார்கள் என்றும் தெரிகிறது.

நேர்காணலுக்கு பிறகு இன்றே புதிய பயிற்சியாளர் யார் என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை பதவியில் தொடருவார். 

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/10082409/1095511/Today-interview-for-the-post-of-coach-of-the-Indian.vpf

  • தொடங்கியவர்

தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி

 

தலைமை பயிற்சியாளர் நியமிப்பது குறித்து கேப்டன் மற்றும் சிலரிடம் பேச வேண்டியிருப்பதால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இன்று இல்லை எனக் கங்குலி கூறியுள்ளார்.

 
தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி
 
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததால், அனில் குமப்ளேயின் பதவிக்காலம் ஓராண்டிற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவரை பயிற்சியாளராக பணியாற்றும்படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால், அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார்.

இந்திய அணி வரும் 26-ந்தேதி இலங்கையுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த தொடருக்கு முன் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலியுடன் லஷ்மண், தெண்டுல்கர்) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 பேரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மாலை புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேர்காணல் முடிந்த பின்னர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை என்று கூறினார்.

201707101827384779_ganguly001-s._L_styvp

புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை. இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இன்று ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் நேர்காணல் நடைபெற்றது.

கேப்டன் உள்பட சிலபேரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. உடனடியாக பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று நினைக்கின்றோம். இலங்கை தொடரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/10182736/1095655/No-announcement-on-India-coach-today-sourav-ganguly.vpf

  • தொடங்கியவர்

புதிய பயிற்சியாளர் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 
புதிய பயிற்சியாளர் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: பிசிசிஐ அறிவிப்பு
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. கிரிக்கெட் ஆலோசனைக் குழு (கங்குலி, லட்சுமண், தெண்டுல்கர்) ரவி சாஸ்திரி, சேவாக், ராஜ்புட், டாம் மூடி உள்பட ஐந்து பேரிடம் நேர்காணல் நடத்தியது. அதன்பிறகு தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவரான கங்குலி, இன்னும் கால அவகாசம் வேண்டும், கேப்டனான விராட் கோலியுடன் ஆலோசிக்க வேண்டும். ஆகையால் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை இன்று அறிவிக்க இயலாது என்று கூறினார்.

இதற்கிடையே வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார்? என்பதை அறிவிக்க வேண்டும் பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

201707111832154109_Ravishastri2-s._L_sty

அப்போதுதான் இன்று மாலை சுமார் நான்கரை மணியளவில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. அனைத்து பத்திரிகைகளும் இதை பெரிய செய்தியாக வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பெயரை அறிவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/11183212/1095836/No-decision-has-been-made-on-appointment-of-new-coach.vpf

  • தொடங்கியவர்

ரவி சாஸ்திரி பயிற்சியாளர்... ஜாகீர் கான் பந்து வீச்சு பயிற்சியாளர்... பி.சி.சி.ஐ அறிவிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Ravi Shastri


கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.


இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. 


இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ-யின் தற்காலிகத் தலைவர் சி.கே. கண்ணா வெளியிட்டுள்ளார். அதேபோல இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இவருவரும் வருகின்ற 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை இந்தப் பதவியில் இருப்பர். 

http://www.vikatan.com/news/sports/95154-ravi-shastri-appointed-next-coach-of-team-india.html

  • தொடங்கியவர்

ரவி சாஸ்திரியும், 36 வருட கிரிக்கெட் பயணமும்! #Infographic #VikatanTimeline

 
 

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்,1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தவர், 2007-ம் ஆண்டுக்கான டி20 மற்றும் 2011-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது அந்த வெற்றியை வர்ணனையாளராக இருந்து அறிவித்தவர், இன்று இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவரின் 36 வருட கிரிக்கெட் வாழ்க்கை இதோ...

 

ரவி சாஸ்திரி

 

 

 

http://www.vikatan.com/news/sports/95240-ravi-shastris-36-year-journey-of-an-indian-cricket-coach.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.