Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள்

Featured Replies

''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள்

 
 

கருணாநிதி 91-வது பிறந்தநாள்

2015-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, அதிகாலை 4 மணி. தமது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஐ.டி காலனி இல்லத்தில், மரக்கன்று ஒன்றை நடுகிறார் அவர். அருகிலிருந்த ராஜாத்தியம்மாள், சிறிய பாட்டிலில் பிடிக்கப்பட்ட  தண்ணீரை அந்த கன்றுக்கு ஊற்றுகிறார். இதைக்கண்டு, ''பாத்துமா... ரொம்ப சிந்திடப்போகுது'' என்று கிண்டல் செய்கின்றனர் குழுமியிருந்த சீனியர் தலைவர்கள். அப்போது, ''தண்ணீர் சிந்தினால் தவறில்லை. கண்ணீர் சிந்தினால்தான் பிரச்னை'' என வெளிப்படுகிறது ஒரு கரகரத்த குரல். அனைவரும் அமைதியாக அடுத்த வார்த்தையை எதிர்பார்த்திருக்க, சில நொடி இடைவெளிக்குப் பிறகு, ''கருணாநிதி வீட்டில் பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்பார்களே'' என்கிறார் குறும்புடன். ஆம், கன நேரத்தில் எந்த இடத்தையும் தன்வயப்படுத்தும் சொல்நயம் கொண்ட அந்தக் குறும்புக்காரரின் பெயர்தான் மு.கருணாநிதி!

 ஜூன் 3-ம் தேதியான இன்றைய தினம் 94-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மு.கருணாநிதி, தமது சட்டமன்றப் பயணத்திலோ 60-ம் ஆண்டை நிறைவு செய்கிறார். இதையொட்டி தேசிய அளவிலான பெரும் தலைவர்களை அழைத்து வந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைரவிழாவாகக் கொண்டாடுகிறது தி.மு.க! இது தி.மு.க-வினருக்கு இரட்டைத் திருவிழா மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபுறம் அவர்கள் முகத்தில் சோக ரேகைகள் இழையோடுவதைப் பார்க்க முடிகிறது. காரணம், 'கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பிறந்தநாளன்று, அவரை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதே அவருக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு' என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்திருப்பதுதான். 

கருணாநிதி

தொண்டர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் :

"கட்சிக்காரங்களுக்கு பொங்கல், தீபாவளி கொண்டாடுறதை விட, தலைவரோட பிறந்தநாளைக் கொண்டாடுறதுதான் உச்சபட்ச மகிழ்ச்சி. ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, முத்தமிழ் விழா என்று வீதிதோறும் நடத்த ஆரம்பிச்சிடுவோம். அவர் பிறந்தநாள் அன்னைக்கு காலையில வெளியே வருகிற, அவரைப் பாக்குறதுக்காக முதல்நாள் இரவே, அவர் வீட்டு முன்னாடி திரண்டிடுவோம். வீட்டுல இருந்து தன்னுடைய கைகளை அசைத்தபடி வெளியே வரும் அவரைப் பார்க்கும்போது எங்களுக்கு ஏற்படுற சிலிர்ப்பு அலாதியானது. இப்போ அதை நாங்க மிஸ் பண்றது வருத்தம்தான். ஆனாலும் தலைவரோட உடல்நிலை காரணமான்னு சொல்றதால ஏத்துக்கிறோம். அவர் நல்லாருந்தா அதுவே போதும்" என்கிறார்  சென்னை பாபு.

வழக்கமான பிறந்தநாள் நடைமுறை :

மேற்கு மாவட்டத்திலிருந்து வந்த சட்டக் கல்லூரி மாணவர்  நேரு, "வழக்கமா பிறந்தநாள் அப்போ சி.ஐ.டி காலனியிலுள்ள கனிமொழி வீட்டில்தான் தலைவர் கருணாநிதி தங்குவார். விடியற்காலையிலேயே எழுந்து மரக்கன்று நடுவாரு. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் செய்துட்டு வர்றாரு. பின்பு கோபாலபுரம் வீட்டுக்குச் செல்வார். அங்க செயல் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தோடு வந்து வாழ்த்துவார். பொதுவா எப்போதுமே அவர் பிறந்தநாள் அன்று, அதைக் குறிப்பிடும்படி ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள். அவர் வயதைக் குறிப்பிடும்படி பழம், மலர்கள் வைத்து பசுமை வரவேற்பை இரண்டாண்டுக்கு முந்தைய பிறந்தநாளின்போது செய்திருந்தாங்க. அப்புறம் சீனியர் தலைவர்கள் திரள கேக் வெட்டி கொண்டாடுவார் கருணாநிதி. அதன்பின் மிகச் சீக்கிரமாகவே அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவாரு. அங்கே வண்ண வண்ண உடைகளில் பெண்களும், ஆண்களும் திரண்டு மலர்த் தூவி வரவேற்கும் காட்சி, கலர்புல் கண்காட்சியா இருக்கும். அங்க ஆசிரியர் கி.வீரமணி புத்தகங்களைப் பரிசளிப்பார். இந்த நிகழ்வு முடிந்தபின், கோபாலபுரம் வீட்டுக்குத் திரும்புவார். அங்க குவிந்திருக்கிற, உறவுகளின் வாழ்த்துகளை ஏத்துக்குவாரு. பிறகு சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு தொண்டர்களைச் சந்திக்க அண்ணா அறிவாலயம் போவாரு. அங்க உடன்பிறப்புகள் வரிசைகட்டி நிற்போம். குணா படத்துல 'பார்த்த விழி' பாட்டு பாடிக்கிட்டு  கமல் போவாரே... அப்படி, மேடையில தலைவரைப் பார்க்க நாங்க பரவசத்தோடு போவோம். சிலர் பரவச உச்சத்தில் காலில் விழுந்து கும்பிட, 'யாரும் கால்ல விழக்கூடாது'ன்னு ஸ்டாலின் சொல்லிக்கிட்டே இருப்பாரு. அறிவாலயம் முன்னாடி இருக்கிற பூங்கா வரைக்குமே வரிசை நிக்கும். பொறுமையா எல்லோரையும் பார்த்துட்டு, வீடு திரும்புவார் தலைவர் கருணாநிதி. மாலை பொதுக்கூட்டம் நடக்கும். அந்தநாளே திருவிழா போல இருக்கும். ஆனால் அவர் உடல்நிலை காரணமா இந்தப் பரவசங்களை இந்த முறை நாங்க தியாகம் செய்றோம். 

தொண்டரின் முக்கியக் கோரிக்கை :

தலைவர் வைர விழா மலரைப் பார்வையிடுகிற வீடியோவை வெளியிட்டாங்க. அதுபோல தலைவர் பிறந்தநாள் கேக் வெட்டுற மாதிரி அல்லது எங்களைப் புன்னகையோடு பாக்குற மாதிரி வீடியோ வெளியிடணும். முடிஞ்சா, அந்த வீடியோவை மாலை நடக்குற வைரவிழாவுல வெளியிடணும். தொலைக்காட்சிகள்ல அப்பப்போ ஒளிபரப்பணும். அறிவாலயத்து பூங்கா வாசல்ல டி.வி வச்சு இதை ஒளிபரப்பணும். அது தலைவரை எதிர்பார்த்து வர்றவங்களுக்கு ஒரு சின்ன சந்தோசமா இருக்கும்" என்றார் ஏக்கத்தோடு.

'டா' போட்டு அழைக்கும் கருணாநிதி :

ரேகா பிரியதர்ஷினி''நான் 26 வயசுலயே சேலம் மேயரா பொறுப்பேற்றேன். முதன்முதல்ல தலைவரைச் சந்திச்சு வாழ்த்து வாங்க போனபோது, 'என்னம்மா, குழந்தைய மேயராக்கிட்டோமோ' என்று வேடிக்கையா சொன்னாரு. 'சின்ன வயசுல நல்ல பொறுப்புக்கு வந்திருக்க, அதை மறக்காம பணியாற்றணும்' என்றும் வாழ்த்தினார் தலைவர்'' என்கிறார் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி. தொடர்ந்து பேசும் அவர், ''தலைவரைப் பார்க்க எப்பப் போனாலும் அரசியல் பேசுவதற்கு முன்பாக, 'என்னடா குழந்தை, ஏற்காடு எப்படி இருக்கு?' திருமணிமுத்தாறு எப்படியிருக்கு? அதை மறுபடியும் தூய்மையான நீரோடும் ஆறா மாத்தணும்'ன்னு எங்க சேலத்தைப் பத்தியே பேசுவாரு. மாடர்ன் தியேட்டர்ல பணி புரிந்த அனுபவத்தை உணர்வுபூர்வமா பகிர்வாரு. அத கேட்கும்போது எழுத்து மேல எவ்வளவு உயிர்ப்பா இருக்காருன்னு புரிஞ்சுப்பேன். எத்தனை முறை சந்திச்சாலும் அவர் பிறந்தநாள் அன்னைக்கு அவரைச் சந்திக்கிறதுல கிடைக்கிற சந்தோஷமே தனி.'' என்றார் உணர்வுபூர்வமாக.

போராடுவதே பெண்ணினத்தின் அடையாளம் :

உமாராணி செல்வராஜ் பேசும்போது, "நான் சேலம் எம்.பி தேர்தல்ல தோல்வியைச் சந்திச்சேன். அதன்பிறகு தலைவரைப் போயி பார்த்தேன். 'என்னடா நீ ஜெயிப்பன்னு நினைச்சேன். சரி பரவாயில்ல. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்தில, பெண்கள் இந்தளவு முன்னேறி வந்ததுக்குப் பெரியார், அண்ணா கொள்கைகள் மட்டுமல்ல, பெண்களோட போராட்டக் குணமும்தான் காரணம். தோல்வியைக் கண்டு துவளாதே... தொடர்ந்து போராடு. அதுதான் பெண்ணினத்தின் அடையாளம்'ன்னு தலையில கைவைத்து ஆசிர்வதிச்சாரு. அவரோட உரையாடுற ஒவ்வொரு கனமும் நமக்கு ஏதோ க்ளுகோஸ் குடிச்ச மாதிரி ஒரு பவர் கிடைக்கும். பிறந்தநாள் அன்னைக்குப் புத்தகங்கள் பரிசளிப்போம். அதுவும் வரிசையில நின்னு தலைவரைச் சந்திக்கிறது தனி ஆனந்தம். இந்தமுறை தலைவரை நேர்ல பார்க்கமுடியாதுன்னாலும் பிறந்தநாள் அன்னைக்கு சென்னையில இருக்கணும்ன்னு கிளம்பி வந்துட்டேன். வைரவிழாவை ஜமாய்க்கணும்" என்றார் உற்சாகமாக.

'10 ரூபாய்' எங்களுக்குச் சொத்து பத்திரம் :

திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசும்போது, "பொதுவா தலைவர் கருணாநிதியை, அடிக்கடி சந்திக்கிறஉமாராணி வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். பிறந்தநாள் அப்போ சந்திக்கப் போவேன். ஒருமுறை, 'உன்னை அடிக்கடி சந்திக்க முடியும். ஆனா தொண்டர்கள் என்னைப் பாக்க இன்னைக்கு ரொம்பத் தொலைவில் இருந்து வந்திருக்காங்க. அதனால அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு' என்றார் வேடிக்கையாக. அவரைப் பொறுத்தவரை மூத்த நிர்வாகிகள், சாதாரண தொண்டர்கள் என்ற பேதமில்லை. எல்லோருமே ஒரே தராசில் சமமாக நிறுத்தப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள்தான். எப்போதுமே தைப்பொங்கல் தமிழர் திருநாள் அன்று எல்லோருக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டு கொடுப்பார். எனக்கு ஒருமுறை அவரோட பிறந்தநாள் அன்னைக்கே கொடுத்தாரு. அதைச் சொத்து பத்திரம் மாதிரி பத்திரமா வச்சிருக்கேன்" என்றார் பரவசத்தோடு.

 

கருணாநிதியின் எழுத்து, சொல்நயம், அரசியல், என அவரின் பன்முகத்தன்மையின் மீதான பந்தமே தொண்டர்களுக்கும் அவருக்குமான  ஆன்மப் பூர்வ உறவாகும். 'மற்ற நாள்களில் வாய்ப்பு அமையுமோ, இல்லையோ... பிறந்தநாள் அன்று கருணாநிதியைக் கட்டாயம் சந்திக்க முடியும்' என்ற நம்பிக்கை தி.மு.க தொண்டனுக்கு உண்டு. ஆனால், தற்போது அதில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும், அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுமையாக அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் அவரின் உடன்பிறப்புகள். 'தமிழக அரசியலில் தந்தைப் பெரியார் ஒரு கருத்தியல் திருப்புமுனை! அந்தக் கருத்தியல் களத்தில், பேரறிஞர் அண்ணா, ஓர் அரசியல் போர்முனை! அந்தப் போர்முனையில் கடந்த 80 ஆண்டுகளாக கருத்தியல் வீச்சுடன் களமாடும் முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு விடியல் வாள்முனை!' என்று கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். வாய் திறந்து பேசாவிடினும் கருணாநிதி எனும் வாள்முனையின் கூர்மை இன்னும் மழுங்கிவிடவில்லை.

http://www.vikatan.com/news/coverstory/91182-party-should-release-kalaignar-birthday-function-photo-party-cadres-urge.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கருணாநிதி 60: சட்ட மன்றத்தில் முதல் நாள்!

 

 
karuna_3171127f.jpg
 
 
 

சட்ட மன்றத்தில் நுழைந்து முதன் முதலாக 4-5-57 அன்று கவர்னர் ஜான் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன். அதுதான் என்னுடைய முதல் சட்ட மன்றக் கன்னிப் பேச்சு. அன்று, விவாதத்தில் கலந்துகொண்டபோது, என்னுடைய சிந்தனையை, கவனத்தை, அவசிய உணர்வை, ஆட்கொண்டிருந்தது கவர்னர் உரையோ, சட்ட மன்றக் கட்டுத்திட்டங்களோ, ‘கன்னிப் பேச்சு’ ஆனதால் கவனமாகப் பேச வேண்டுமே என்பதோ அல்ல. என்னுடைய தொகுதியில் அப்போது நடைபெற்றுவந்த விவசாயிகள் பிரச்சினை ஒன்றுதான் என் கவனத்தை ஆட்கொண்டிருந்தது!

அந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது சட்ட மன்ற விவாத அந்தஸ்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் மேலோங்கியிருந்தது. ஆம்; நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நாளில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையும் ஆர்வமும் நான் முதன்முதலாக சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, என் குளித்தலைத் தொகுதியில் விவசாயப் பெருங்குடி மக்கள் - அத்தனை பேரும் ஆதிதிராவிடப் பெருங்குடி மக்கள் - பெருநிலச்சுவான்தாரர்களிடம் பட்ட பாட்டினையும், அனுபவித்த பசி-பட்டினிக் கொடுமைகளையும் கண்ணாரக் காண்பதற்குக் கிடைத்த அனுபவமே காரணமாகும்.

குளித்தலைத் தொகுதி பொதுவாகப் பிற்பட்ட பகுதியாக இருந்தாலும், அங்கு நிலச்சுவான்தார்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த நிலச்சுவான்தார்களுக்கு, விவ சாயிகள்-விவசாயக் கூலிகள் என்பவர்கள் பேரில் இருந்த துவேஷத்துக்கும் அலட்சியத்துக்கும் அப்போது பஞ்சமே இல்லை.

நங்கவரம் பண்ணை என்ற பெரு நிலக்கிழார் ஒருவருக்கு ஏராளமான நிலங்கள் உண்டு. அதிலும் மற்ற விவசாயப் பகுதிகளில் இல்லாத விசித்திரமான முறையாகக் ‘கையேர் வாரம்’, ‘மாட்டேர் வாரம்’ என்று சாகுபடியில் பங்கு பிரிக்கும் வார முறையும் அங்கு உண்டு. நங்கவரம், திம்மாச்சிபுரம் நிலச்சுவான்தார்கள் தங்களிடமிருந்த விவசாயக் கூலிகளிடமும், பரம்பரையாக ஒரே நிலத்தில் பாடுபட்டு வயிறு வளர்த்து வந்த குத்தகைதாரர்களிடமும் தகராறும் பிணக்கும் செய்துகொண்டிருந்தனர். இது அந்தத் தொகுதியில் நான் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பிருந்தே புகைந்துகொண்டிருந்தது. களத்து மேட்டில் நெல்மணிக் குவியல்களையும், தங்கள் வீட்டில் புகையாத அடுப்புகளையும், தங்கள் மனைவி, மக்களுடைய ஒட்டிப்போன வயிறுகளையும் பார்த்துப் பார்த்து விவசாயப் பாட்டாளி மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர்.

அந்தத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் இதைத் தீர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதுவரையில் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் நான் செய்த முயற்சி எதுவும் பலனளிக்காமல் போயின. அன்று நான் கவர்னர் உரையின் பேரில் விவாதத்தில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, மற்ற எல்லாவற்றையும்விட நங்கவரம் விவசாயிகளின் பிரச்சினைதான் எனக்கு நினைவில் நின்றது.

அன்று நான் பேசியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை சட்ட மன்றத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்டபோதும் என் நினைவில் சுழன்றுகொண்டிருந்தது.

“இந்தப் பகுதிகளில் ‘கையேர் வாரம்’, ‘மாட்டேர் வாரம்’ என்று இரு வகையான விவசாயம் உண்டு. இந்த இருவகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தினர், சட்டங்களின் மூலம் பலனடையவில்லை என்பது மட்டுமல்ல, பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர் களுக்கு நியாய வாரம் கிடையாது. அவர்கள் சட்டப்படி நியாய வாரம் பெற முடியாது… இந்தப் பெருமக்கள் வயிற்றிலோ பசிப் புயல் குமுறிக் கொண்டிருக்கிறது… சர்க்கார் எந்த வகையில் இவர்களுக்கு வாழ்வளிக்கப் போகிறது?” என்று நான் பேசிக்கொண்டே போனேன்.

எதிரே இருந்த சபாநாயகரோ அமைச்சர்களோ எனக்குத் தெரிய வில்லை. நங்கவரம் களத்துமேடு, அங்கு யாருக்கும் பயன்படாமல் குவிந்திருக்கும் கதிர்மணிகள், அதனையே ஏக்கத்தோடு பார்த்துப் பசித்த வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொள்ளும் விவசாயப் பாட்டாளிகள், அவர்களுக்கும் நெற் கதிர்களுக்கும் இடையே வேலிபோல் காவல் காக்கும் காவல் துறையினர், வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே பெருமிதம் பொங்க விஷமச் சிரிப்புச் சிரிக்கும் நிலச்சுவான்தாரர்கள் - என் கண் முன் அப்போது தெரிந்தன, தெரிந்தனர். என்னுடைய கன்னிப் பேச்சு என் கண்ணீர்ப் பேச்சாக அமைந்தது.

எனக்கு அடுத்து, இரண்டொரு நாட்களுக்குப் பிறகு 6-5-57 அன்று முதன் முதலாகச் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எழுந்த அறிஞர் அண்ணா, நான் பேசியதைத் தொடர்ந்து, நிலச் சீர்திருத்தத்தைப் பற்றிய கருத்துக்களை மழை போல் பொழிந்தார். “உண்மையில் சர்க்காருக்கு நிலச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை இருக்குமானால், அவற்றை உடனடியாகச் சட்டமாக்குவதற்குத் தயங்குவானேன்? யாருக்காக இந்தச் சர்க்கார் பயப்படுகிறது? ‘நிலச் சீர்திருத்தம் செய்யப் போகிறோம்’ என்று பேசிக்கொண்டே காலம் தாழ்த்தி வருகிறது. இதனை மறைப்பதற்கு ஒரு திரையாகவே வினோபாவையும் அவருடைய பூதான இயக்கத்தின் பெயரையும் சர்க்கார் பயன்படுத்துகிறது”. அறிஞர் அண்ணா இப்படிப் பேசியது, இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பேசியதை உறுதிப்படுத்துவதாகவும், விரிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்தது. நான் பெருமையால் பூரித்துப் போனேன்!

-கருணாநிதியின் சுயசரிதமான ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகத்திலிலுள்ள ஒரு கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

கையில்லாத ஊமையின் நிலையிலுள்ள மாநில சர்க்கார்!

தன்னுடைய சட்ட மன்ற முதல் உரையிலேயே தமிழகத்தில் நிலவும் உணவுப் பற்றாக்குறை தொடர்பிலும் பேசினார் கருணாநிதி. மக்களுடைய பசியைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத அரசைக் கடுமையாக அதில் அவர் சாடியிருக்கிறார். அதன் ஒரு பகுதி:

“எங்கு பார்த்தாலும் உணவு விலை விஷம்போல் தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள பெருவாரியான உபரி அரிசி தமிழகத்துக்குப் பயன்படாமல், வட நாட்டில் கோரப் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள கோதுமையைக் கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற்குப் பதிலாக, ஆந்திரத்திலுள்ள உபரியான அரிசியைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படாத வகையில் எடுத்துச் சென்றதானது, இங்கு விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.

இதைப் பற்றி கவர்னர் அவர்களுடைய உரையில் எந்தவிதமான குறிப்பும் காணப்படவில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்க எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை. உணவு நிலைமையைச் சமாளிப்பதற்குச் சர்க்கார் உணவுப் பெருக்கத்திற்குத் திட்டங்கள் செய்ய வேண்டும். இந்த சர்க்கார் கையில்லாத ஊமையின் நிலைமையில்தான் இருக்கிறது. தங்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல் ஊமையாக இருந்து சுட்டிக்காட்டுவதற்கும் கையற்ற முறையில் இருந்துகொண்டிருந்தால் உணவு நிலை பற்றாக்குறை இதுபோன்றே எப்பொழுதும் நீடித்துக்கொண்டே இருக்கும்.

இத்தகைய நிலைமைகளிலிருந்து திராவிடம் விடுபட்டு, திராவிடம் தனித்து, செழித்து நின்று, வளம்பெற, வாழ, நல்ல முறையில் திட்டங்கள் தீட்ட வேண்டும். அதற்கு குறிப்பாக உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். குடகனார் திட்டம் தேவை என்ற முயற்சி ஒன்று குளித்தலைத் தொகுதியில் 1952-ம் ஆண்டு முதற்கொண்டே இருந்துவருகிறது. அதைப் பற்றி அடிக்கடி எடுத்துச் சொல்லப்பட்டும் வந்திருக்கிறது. அழகாபுரி என்கிற இடத்தில் ஒரு அணை கட்டினால் அதன் மூலமாக சுமார் பத்தாயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை, நஞ்சையாக மாற்றக்கூடிய வசதி இருக்கிறது. அதற்கு 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நல்ல திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுவதைப் பற்றியெல்லாம் கவர்னர் அவர்கள் தன்னுடைய உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்!

அந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது சட்ட மன்ற விவாத அந்தஸ்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் மேலோங்கியிருந்தது.

http://tamil.thehindu.com/opinion/columns/கருணாநிதி-60-சட்ட-மன்றத்தில்-முதல்-நாள்/article9718907.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

கருணாநிதி: அறுபதாண்டு அரசியல் தமிழ்!

 

 
karuna1_3171126f.jpg
 
 
 

சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கிய மானவர்களில் ஒருவரான ஷோபா சக்தி தன்னுடைய ‘கண்டிவீரன்’ சிறுகதைத் தொகுப்பின் சமர்ப்பணம் பகுதியில் குறிப்பிடும் வார்த்தைகள் இவை: “என் கிராமத்துத் திருவிழாக்களின்போது உயரிய பனைமரங்களில் கட்டப் பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து குணசேகரனாகவும், மனோகரனாகவும், செங்குட்டுனாகவும் எனக்குத் தமிழ் ஏடு தொடங்கி வைத்த கலைஞர். மு.கருணாநிதிக்கு!”

இது மிகை அல்ல. ஒரு காலகட்டத்தின், சில தலைமுறைகளின் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையோடு பொருந்தக்கூடிய வார்த்தைகள் இவை. தமிழ் மொழியைப் பேசுவதில், எழுதுவதில் பெருமிதம் கொள்ளக்கூடிய எவருக்கும் இன்றும் கருணாநிதியின் பேச்சும் எழுத்தும் பிரிக்க முடியாத ஒரு பந்தம். அரசியல் தமிழ் என்று தமிழைப் பகுத்து அதில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டால் தமிழ் அரசிய லுக்கு எவ்வளவு பெரிய கொடையை கருணாநிதி வழங்கியிருக்கிறார் என்று அறியலாம். கருணாநிதி தன்னுடைய சட்ட மன்ற உரையிலும், மேடைப் பேச்சிலும், உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்திலும் அரசியலைப் பேசவில்லை.

மாறாக அரசியலைப் பாடமாக நடத்தினார். இன்றும் “திமுககாரன்கிட்ட பேச முடியாது. சட்டம் பேசுவானுவோ” என்று பேசுவார்கள். இப்படிப் பேசுவதற்கான தகுதியை இன்றுவரை தக்கவைத்திருப்பவர் கருணாநிதிதான். ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது” என்று அவர்தான் சொன்னார். அது இப்போது எதிர்க் கட்சிக்காரர்களும் பயன்படுத்துகிற வாக்கியமாக இருக்கிறது. ‘ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?’ என்று அவர் கேட்ட ஒரு கேள்வி இந்தியாவையே அதிரவைத்தது. “யாப்பின்றி போனாலும் போகட்டும், நம் நாடு, மொழி, மனம், உணர்வெல்லாம் காப்பின்றிப் போகக் கூடாதெனும் கொள்கை” என்று சொன்னார்.

இதைவிட எப்படிக் கொள்கையின் முக்கியத்துவத்தை ஒரு கட்சித் தொண்டருக்கு எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல முடியும்? ‘முரசொலி’யில் கட்சியின் கடைமட்டத் தொண்டர்களுடன் உரையாட அவர் தேர்ந்தெடுத்த வடிவமான ‘நானே கேள்வி நானே பதில்’ என்பது போன்ற ஒரு உத்தியையே எடுத்துக்கொள்வோம். சாமானியர்களிடம் அரசியலை எடுத்துச் செல்வதற்கான மிக எளிய இந்த உத்தி எவ்வளவு வெற்றிகரமானது, நுட்பமானது!

ஒரு திமுககாரரிடம் கருணாநிதியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், “கலைஞரின் தமிழ்” என்று சொல்வார். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கே ட்டாலும் பெரும்பாலும் இதே பதிலைத் தான் சொல்வார்கள். கருணாநிதியின் தமிழ் யாருக்குத்தான் பிடிக்காது! மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிற எழுத்தாளனாக அவரைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன்: தன்னுடைய சட்டசபை உரையாக இருந்தாலும், மேடைப் பேச்சு, இலக்கியப் படைப்பு, சினிமா வசனம், உடன் பிறப்புக்கு எழுதிய கடிதம், அறிக்கைகள் என்று எதுவாக இருந்தாலும், தான் பேசுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எழுதுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு புதிய சொல்லை, ஒரு புதிய வாக்கியத்தை ஒரு சொல்லை அவர் எவ்வளவு நுட்பமாக, ஆயுதமாகக் கைக் கொள்கிறார் என்பதற்கான உதாரணம், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’ என்ற வாக்கியத்தில் இருக்கிறது.

கருணாநிதியின் பொதுக்கூட்ட உரைகளைத் தொடர்ந்து கேட்டவர்களுக்குத் தெரியும், அந்த உரையின் நீண்ட முன்னுரை கிட்டத்தட்ட இந்த ஒரு வாக்கியத்துக்கான முன்னோட்டம்தான். இதற்காகத்தான் கூட்டம் காத்திருக்கிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர்போலவே அதற்காக நீண்ட பீடிகையை அவர் போடுவார்.

கூட்டத்தின் ஆவல் உச்சம் தொடும் நேரத்தில் அதை உடைப்பார், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” உடைத்துக்கொண்ட பெருவெள்ளம்போல உற்சாகமும் ஆர்ப்பரிப்பும் கூட்டத்தில் பொங்கும். உடன்பிறப்பு - இந்த ஒரு சொல்தான் கருணாநிதி காலத்தின் திமுக. தமிழ் இந்த ஒரு சொல்தான் அவருடைய மகத்தான அரசியல் ஆயுதம்!

http://tamil.thehindu.com/opinion/columns/கருணாநிதி-அறுபதாண்டு-அரசியல்-தமிழ்/article9718914.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

மாற்றுக்கட்சியினர் பார்வையில் கருணாநிதி

 

 
வேலாயுதன், ஹெச்.வி.ஹண்டே, ரவிகுமார் (மேல்) பீட்டர் அல்போன்ஸ், கே. சுப்பராயன், பாலபாரதி (கீழ்) - இடமிருந்து வலமாக
வேலாயுதன், ஹெச்.வி.ஹண்டே, ரவிகுமார் (மேல்) பீட்டர் அல்போன்ஸ், கே. சுப்பராயன், பாலபாரதி (கீழ்) - இடமிருந்து வலமாக
 
 

எல்லோர் குரலுக்கும் மதிப்பளிப்பவர்!

ஹெச்.வி.ஹண்டே:

சட்ட சபையில் கடுமையாக, காட்டமாகப் பேசினால்கூட வாய்ப்பு மறுக்கப்படும் சூழலை உருவாக்க மாட்டார் கருணாநிதி. 1970-ல் ஒருமுறை நான் பேசும்போது, “உங்கள் ஆட்சி பாஸிஸ்ட் ஆட்சி” என்றேன். அதை கருணாநிதி “பாசயிஸம்” என்று திருத்தினார். அதேபோல, “இது மூன்றாம் தரமான ஆட்சி” என்று நான் சொன்னதாகக் கூறிவிட்டு, “இது நான்காம் தரமான - சூத்திரர் ஆட்சி” என்றார் இன்னொரு முறை. இதெல்லாம் அவருக்கே உரிய சாமர்த்தியம். ஆனால், ஜனநாயகமும் இதில் இருக்கிறது! எங்கள் கட்சிக்காரர் பரமசிவனை - பின்னாளில் அமைச்சராக இருந்தவர் - போலீஸார் தாக்கிவிட்டார்கள். இது எம்ஜிஆர் காதுக்கு வந்தது. சட்ட சபையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக் கொண்டுவரச் சொன்னார் எம்ஜிஆர். இதையறிந்த கருணாநிதி என்னை அழைத்தார். விஷயத்தைக் கேட்டவர், “ஒத்திவைப்புத் தீர்மானம் எதற்கு? விஷயம் உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார். கையோடு, ஐஜி அருளை அழைத்தார். விசாரித்தார். விஷயம் உண்மை என்றார் அருள். ‘உடனே இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்யுங்கள்’ என்றார் கருணாநிதி. அப்புறம் நான் எம்ஜிஆரைச் சந்தித்தேன். “கருணாநிதியிடம் எனக்குப் பிடித்த விஷயம், பல சமயங்களில் எதிர்க்கட்சிக்காரன் என்று யாரையும் அவர் உதாசீனப்படுத்துவதில்லை!” என்றார். ஜனநாயகம் என்பது அதுதானே!

- ஹெச்.வி.ஹண்டே, அதிமுக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

மிகச் சிறந்த ஜனநாயகவாதி!

பீட்டர் அல்போன்ஸ்:

சட்ட மன்றம் கூடும் நாட்களில் காலை 8.50 மணிக்கு சபாநாயகர் அறையில் அமர்ந்திருப்பார். ‘பூஜ்ய நேரம்’ என்று சொல்லப்படும் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்ப நினைக்கின்ற பிரச்சினைகள், ஒத்திவைப்பு தீர்மானங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்று அத்தனை கோரிக்கைகளையும் கூடுமானவரை ஏற்றுக்கொள்வார். அப்படிப் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் செயலாளரையும் அவரே நேரில் அழைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணச் சொல்வார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்ததும் அதனை அவரே சட்ட மன்றத்தில் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினரின் பெயரைச் சொல்லி, அவர் வைத்த கோரிக்கை என்று எடுத்துச் சொல்லி அந்த சட்டமன்ற உறுப்பினரின் பணிகளை அங்கீகாரம் செய்வார். காலையில் சட்டமன்றத்திற்கு வந்த உடன் சபாநாயகரிடம் அன்றைய தினம் விவாதத்தில் பங்கேற்கின்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பார்ப்பார். தகுந்த தயாரிப்புடன், பயனுள்ள விவாதங்களை முன்வைக்கின்ற உறுப்பினர்களின் பெயரை எதிர்க்கட்சியின் வரிசையில் பார்த்தால், ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரை நீக்கிவிட்டு அந்த நேரத்தையும், அந்த எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கச் சொல்வார். . நம் காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த ஜனநாயகவாதி அவர். நீடூழி அவர் வாழ வேண்டும்!

- பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கொறடா, சட்ட மன்ற உறுப்பினர்

இந்துத்வத்தைப் பற்றியும் பேச அனுமதித்தவர்!

வேலாயுதன்:

1996. பத்மநாபபுரத்தில் வென்றேன். அதுவரை தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏகூட கிடையாது. என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார் கருணாநிதி. சட்ட மன்றத்தில் அலுவல் ஆய்வுக் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்தார். இந்தக் கூட்டம் 10 மணி நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும், தாமதமாகத்தான் தொடங்கும். “மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி இருக்கலாமா?” என்று கேட்டுவிட்டேன். எல்லோருக்கும் அதிர்ச்சி. கருணாநிதி கோபப்படாமல், “நான் 10 மணிக்கே வந்துவிட்டேன். அனைவரும் வரும் வரை என் அறையில் இருந்தேன்” என்றார் அமைதியாக. அதன் பிறகு கூட்டம் சரியான நேரத்தில் நடத்தப்படுவதை உறுதிசெய்தார். நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது அவருக்குத் தெரியும்.

ஒருமுறை இந்துத்வத்தின் சிறப்பைப் பற்றி சட்ட மன்றத்தில் பேசினேன். பலரும் குறுக்கிட்டனர். கருணாநிதி அவர்களைத் தடுத்தார். நீண்ட நேரம் குறுக்கீடு இன்றி பேச வழிவகுத்தார். ஜனநாயகவாதி அவர். குமரி இணைப்புக்குப் பாடுபட்ட 172 தியாகிகளுக்கான ஓய்வூதியம், மாம்பழத் துறையாறு அணை என என் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றினார். 1998-ல் நான் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது, மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பண்பட்ட மனிதர். நூறாண்டு காலம் அவர் வாழ வேண்டும்!

- வேலாயுதன், பாஜக, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

வகுப்புவாதிகளின் கொடுங்கனவு!

ரவிகுமார்:

2006 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதி உறுப்பினராக சட்ட மன்றத்தில் நுழைந்தேன். நான் முன்வைத்து அவர் நிறைவேற்றிய கோரிக்கைகளையே பெரிய பட்டியலிடலாம். நரிக் குறவர், திருநங்கைகள், புதிரை வண்ணார் உள்ளிட்ட ஆறு நல வாரியங்கள் எனது கோரிக்கையின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டன. ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த பணக் கொடையை இரு மடங்காக உயர்த்தினார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் செய்யாத வகையில் மின்னணுக் கழிவுக் கொள்கையை உருவாக்கினார். 22 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கான 'கலைஞர் வீடு வழங்கும் திட்ட'த்தை அறிவித்தார். ஒரு ஆலோசனையை எவர் சொன்னாலும் அது மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் அவர் சார்ந்திருக்கும் கட்சி எது என்று பார்க்காமல் அதை நிறைவேற்றத் தயங்காதவர் கருணாநிதி என்று உணர்த்துவதற்காகத்தான். அதுதான் அவரைத் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவராக மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் ஆக்கியிருக்கிறது. சமூகப் பாகுபாட்டின் வலி என்னவென்று ஆழமாக உணர்ந்தவர் அவர். அதனால்தான், வகுப்புவாதிகளுக்கு அவர் இப்போதும் ஒரு கொடுங்கனவாகவே திகழ்கிறார்! நூறாண்டு காலம் அவர் வாழ வேண்டும்!

- ரவிகுமார், விசிக, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

போராட்டக்காரர்களிடமே செல்பேசியில் பேசியவர்!

பாலபாரதி:

சட்ட மன்றத்தில் மட்டும் அல்ல; வெளியிலும் அவரைச் சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசலாம். மன்றத்தில் கோபமாக விவாதிக்கிறோம் என்பதால், வெளியே பகைமை காட்டுகிறவர் அல்ல அவர். 2006 சட்ட மன்றம். அந்தச் சமயத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை அறிவித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினரை அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து மறியலில் ஈடுபட்டோம். போலீஸார் கைதுசெய்தனர். முதல்வர் கருணாநிதி நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செல்பேசி மூலம் எங்களைத் தொடர்புகொண்டு, “உங்களது கோரிக்கைகள் என்ன?” என்று கேட்டார். “முறைகேடுகள் உள்ளதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்றோம். உடனடியாக உத்தரவிடுவதாகச் சொன்னவர், எங்களை விடுவிக்கவும் உத்தரவிட்டார். எதிர்க்கட்சியினரிடம் செல்பேசியில் இப்படி நேரடியாகப் பேசும் நிலையில் இருந்தார். அருந்ததியர் மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றோம். நிறைவேற்றினார். பெண்கள் ஆணையத்துக்கான சட்ட அந்தஸ்து அவரால்தான் கிடைத்தது!

-பாலபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

ஒரு ஆட்டோ செலவில் வந்தது கல்லூரி!

கே.சுப்பராயன்:

1996. திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். உள்நாட்டு பனியன் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனை வரியை நீக்க வேண்டும் என்று பேசினேன். உடனடியாக நிறைவேற்றினார். திருப்பூரில் பெண்கள் கல்லூரி தொடங்க கிறிஸ்தவ சிறுபான்மையினர் அரசிடம் மனு அளித்து முயற்சி மேற்கொண்டனர். வட்டத்துக்கு 45 கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அது சாத்தியமாகவில்லை. இதுதொடர்பாக என்னைச் சந்தித்த இருவரை மட்டும் ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றேன். கிராமப்புற பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள், சிறுபான்மையினர் நடத்துகிறார்கள் என்றேன். கோரிக்கை உடனடியாக நிறைவேறியது. ஆட்டோவில் சென்றது மட்டும்தான் அதற்கு ஆன செலவு! பல சம்பவங்களைச் சொல்லலாம். சேர்ந்து பணியாற்ற அருமையான மனிதர் அவர்!

- கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

http://tamil.thehindu.com/opinion/columns/மாற்றுக்கட்சியினர்-பார்வையில்-கருணாநிதி/article9718922.ece?homepage=true&theme=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழனையும் அவன் நாடுகளையும் சீரழிச்சது போதும்.. சீக்கிரமா வெட்டிட்டு.. கிளம்பிடுங்க.. ஆத்தா.. ஜெ அழைக்கிறா. tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்

கருணாநிதி பிறந்தநாள்: கனிமொழியின் உருக்கமான கவிதை!

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், இன்று மாலை பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் ஏராளமான தொண்டர்கள், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

kanimozhi_17236_11279.jpg


இந்நிலையில், கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'மெளனம்' என்ற தலைப்பில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.  

அதில், "பேசுவதை நிறுத்திக்கொண்டாய். உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம், சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எஜமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்... வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுனிந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறு கரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச் சென்றது யார்?

1_%281%29_11006.jpg

உன் நாற்காலி உருளும் சத்தம்... வண்டியிலிருந்து இறங்கி, நீ வீசும் சினேகப் புன்னகை... அதற்குப் பின்னால், எப்போதும் ததும்பும் நகைச்சுவை... மேடையில் இருந்து, "உடன் பிறப்பே" என்று அழைக்கும்போது, ஒரு கோடி இதயங்கள் ஒரு வினாடி உறைந்து துடிக்குமே அந்தக் கணம்... இதற்கு மாற்றாய் எதைத் தருவாய், நாளை முதல் சூரியன் உதிக்காது என்றால், இந்த பூமி எப்படி சுழலும்.. எங்களது கேள்வியாய், தேடும் பதிலயாய், சிந்தனையாய், சிந்தனை ஊற்றாய், மொழியாய், மொழியின் பொருளாய்,  செவிகளை நிறைத்த ஒலியாய், குரலாய் இருந்தது நீ. எங்களோடுதானே எப்போதும் இருப்பாய்... இருந்தாய், திடீர் என்று எழுந்துபோய் கதவடைத்துக் கொண்டால் எப்படி?

உனது நாவை எங்களுக்கு வாளாக வடித்துக் கொடுத்தாய். அதை புதுப்பொழிவு மாறாமல் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இருண்மையும் எதிரிகளும் சூழ்ந்த நேரத்தில், எங்களது தோள்களின் மீது ஏறி படை நடத்திடக் காத்திருக்கிறோம்... நீயோ, போதி மரத்து புத்தனைப் போல் அமைதி காக்கிறாய்.

KaniMozhi

 


உன் ஆளுமையைத் துவேஷித்தவர்கள், வசை பாடியவர்கள், தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம் நீயே காரணம் என்றவர்கள் எல்லோரும் இன்று காத்திக்கிடக்கிறார்கள் எங்களோடு. புழுதிக் காற்று வீசும் திசையறியா காட்டில், தெளிந்து தடம் காட்டும் உனது சில வாக்கியங்களுக்காக.. நீ பேசுவதில்லை. ஆனால், நாங்கள் உன்னைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருக்கிறோம் வா. வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது, நீ வருவாய் என்ற நம்பிக்கை... நீயின்றி இயங்காது எம் உலகு" என்று முடித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91211-kanimozhi-posted-poetry-for-karunainidhis-birthday.html

  • தொடங்கியவர்

கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான்!- நக்கீரன் கோபால்

 

 
karuna_samas_3171172f.jpg
 
 
 

கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான் என திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து பின்வருமாறு:

முத்தமிழறிஞர் கலைஞர், தன் வாழ்வில் சதமடிக்க இன்னும் ஆறு ஆண்டுகளே இருக்கின்றன. 94-ம் ஆண்டில் வெற்றித் திருமகனாக அடியெடுத்து வைக்கும் அவரை உளமாற வாழ்த்துகிறோம்.

கலைஞர் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அவர் மீது எங்களுக்கு மதிப்பு அதிகம். அதோடு பத்திரிகைத் துறை மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் அவர் காட்டுகிற கரிசனம், வியந்து நெகிழவைக்கிறது.

பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் அவரது பரிவும் கனிவும் பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு நக்கீரனே அனுபவ சாட்சியாக இருக்கிறோம்.

சந்தன வீரப்பன், கர்நாடக வனத்துறை ஊழியர்கள் 9 பேரைக் கடத்தியபோது, இரு மாநில முதல்வர்கள் விருப்பப்படி, இரு மாநிலங்களின் தூதுவராக நாங்கள் வீரப்பன் காட்டுக்குச் சென்றோம். 40 நாட்கள், வீரப்பனோடு பேச்சுவார்த்தை நடத்தி, மிகவும் போராடித்தான் அவர்களை மீட்க முடிந்தது.

மீட்டு வந்தபோது கலைஞர் எங்களிடம் மீட்டுவந்த நீங்களே அவர்களைக் கர்நாடக அரசிடம் ஒப்படையுங்கள் என்றார். அவர்களை மீட்டதற்கான அங்கீகாரத்தையும் பெருமையையும் எங்களுக்கே கொடுக்க விரும்பிய கலைஞரின் அந்தப் பெருந்தன்மையை இப்போது நினைத்தாலும் நெகிழ்ந்து போகிறோம்.

அந்த வன ஊழியர்களை மீட்டெடுப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்கு, அப்போதைய கர்நாடக முதல்வர் பாட்டில் அவர்களே, தலைமைச் செயலகம் வந்தார். அந்தநேரத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்ற சந்திப்பிலும், அவர்களுக்குச் சமமாக என்னையும் அழைத்து கெளரவித்தார் கலைஞர். இப்படியொரு கவுரவத்தை வேறு எந்த மாநில முதல்வரிடமாவது ஒரு பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்க முடியுமா?

இதே போல் 2000-ல் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரையும் வீரப்பன் கடத்தினான். இதனால் கர்நாடகமே கொந்தளித்தது. அந்த நேரத்தில் அவனோடு தமிழ்த் தீவிரவாதிகளும் கை கோர்த்திருந்தனர். அதனால், இது சிக்கலான விவகாரம் என்று நாங்கள் ஒதுங்க முயன்றோம். வீரப்பன் வேறு, தன் டிமாண்டை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்ததால், நாங்கள் ரிஸ்க் எடுக்க பயந்தோம். எனினும் எங்களை எப்படியாவது காட்டுக்கு அனுப்பி, ராஜ்குமாரை மீட்கவேண்டும் என்று அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கலைஞரிடம் வந்தார்.

ரஜினியும், பத்து தடவைக்கு மேல் என்னைத் தொடர்புகொண்டு , கோபால் உங்களால் தான் ராஜ்குமாரை மீட்க முடியும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். சிவாஜி சாரும் என்னைத் தொடர்பு கொண்டு உடனே சென்று ராஜ்குமாரை காப்பாற்றி வா என்று கேட்டுக் கொண்டார். அப்போது கலைஞர் என்னிடம் காவிரி நீர் நமக்குப் பிரச்சினை இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது கோபால் என்றார். மாநில முதல்வர்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தண்ணீர் பிரச்சினை எற்படாமல், கலைஞர் பரிபாலனம் பண்ணிவருவதை அப்போது தான் உணர்ந்தோம்.

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதால் கர்நாடகத்தில் வாழும் ஏறத்தாழ 65 லட்சம் தமிழர்கள் மீதும் ஒட்டுமொத்த கன்னடர்களின் கோபமும் திரும்பியிருந்தது. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. இதையும் சுட்டிக் காட்டிய கலைஞர் நம்ம ஆளுங்க அங்க பரிதவிக்கிறாங்க. அதற்காகவாவது ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் இறங்குங்க என்றார். அப்போது பெங்களூர் நக்கீரன் நிருபராக இருந்த தம்பி ஜெயப்பிரகாஷ் என்னைத் தொடர்பு கொண்டு அண்ணே நிலைமை மோசமாக இருக்கு. நீங்கள் ராஜ்குமாரை மீட்கப் போகலைன்னும் சொல்லீட்டீங்கன்னா, இன்னைக்கு இரவே ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படலாம் என்று பகீருட்டினார். இதனால் வேறுவழியின்றி தூதுக்கு ஒத்துக் கொண்டு காட்டுக்குப் போனோம். அங்கு வீரப்பனோடு பேச்சுவார்த்தை நடத்தினோம்.

45வது நாள் மூன்றாவது முறையாகக் காட்டுக்குப் போய் வந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞரைச் சந்தித்தோம். அப்போது ரஜினி சார் லைனில் வந்து கொண்டே இருந்தார். இதை கவனித்த கலைஞர், பேசுங்கள் என்றார். பேசினேன். அப்போது என்னிடம் ரஜினி, கர்நாடக அரசுக்கு ஒரு ஆதங்கம் இருக்கு. அது என்னன்னா, நாம் தான் தமிழகத்துக்குப் போய் பேசிக்கிட்டே இருக்கோம். தமிழக அரசு சார்பில் யாரும் இங்கே வந்து பேசவில்லையேன்னு நினைக்கிறாங்க. இதை சி.எம்கிட்ட சொல்லுங்க என்றார். நான் இதைக் கலைஞரிடம் சொல்ல, தமிழக அரசின் பிரதிநிதியாக நீங்களே கர்நாடகாவுக்குப் போங்க என்றார் அதிரடியாக. நான் திகைத்தேன். என் தயக்கதைப் பார்த்து கலைஞர் என்ன நினைத்தாரோ, துணைக்கு ரஜினியையும் அழைத்துச் செல்லுங்கள் என்றவர், ரஜினியையும் தொடர்புகொண்டு கோபாலுக்குத் துணையாக நீங்களும் செல்லுங்கள் என்றார்.

நான். தமிழக அரசின் பிரதிநிதி. எனக்கு துணையாக ரஜினி என்றால் எப்படி இருக்கும்? எனக்காக ஸ்பெஷல் ஃபிளைட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலே நானும் ரஜினியும் பயணித்தோம். கர்நாடகத்தில் 45 சைரன் கார்கள் என்னை அழைத்துச் செல்ல புல்லட் புரூப் கார் என எங்களை வரவேற்கக் காத்திருந்தன. அமர்க்களமான வரவேற்பு. முதல்வர் கிருஷ்ணா, காத்திருந்து எங்களை வரவேற்கிறார். ஒரு பத்திரிகையாளனுக்குக் கலைஞர் கொடுத்த மாபெரும் கெளரவம் தான் இது. அதன் பின் ராஜ்குமார் வெற்றிகரமாக மீட்கப்பட்டார். ராஜ்குமார் மீட்பு முயற்சி 108 நாட்கள் நடந்தது. அந்த 108 நாட்கள் கலைஞர் எந்த நேரமும் எங்களுடனேயே தொடர்பில் இருந்து ராஜ்குமாரை மீட்க மனிதநேயத்துடன் பயணித்து வெற்றி பெற செய்தது மறக்க முடியாத ஒன்று.

அவர் முதல்வராக இருந்த போது, இன்னொரு அனுபவம். வழக்கமாக காலை 6 மணிக்குள் பத்திரிகைகளைப் படித்துவிடுவது கலைஞரின் வழக்கம். அவற்றில் வரும் தவறான செய்திகளுக்கு, சம்மந்தப்பட்டவர்களை அழைத்து, அடுத்த அரை மணி நேரத்திற்குள் விளக்கமும் மறுப்பும் சொல்லிவிடுவார்.

இந்த நிலையில், ஒரு பத்திரிகை நடிகை ஒருவரைப் பற்றி கண்ணியக் குறைவாக எழுதிவிட்டது. இதைக் கண்ட கலைஞர், பெண்களுக்கான ஒரு வன்கொடுமைத் தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் அடிப்படையில், அந்தப் பத்திரிகை பொறுப்பாசிரியார் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பத்திரிகையாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று, ஊடக மைப்புகள் நடத்திய போராட்டத்தில் ஒரு பத்திரிகையாளனாக நானும் கலந்து கொண்டேன். மறுநாள் காலை, என்னை தொடர்புக் கொட கலைஞர், அந்த செய்தி நியாயமா? என்றார். நானோ அண்ணே, அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் அதற்காக இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்து பத்திர்கைகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் சரியில்லை. இனி வரும் காலங்களில் நீங்களே இந்த பதவியில் இருக்க வேண்டும். ஒரு வேளை ஜெயலலிதா வந்துவிட்டால், இந்த ஒரு சட்டம் போது. தனிக்கு எதிரான பத்திரிகைகளை ஒழித்தே விடுவார் என்றேன்.

உடனே கலைஞர் அப்படியா? அந்த சட்டத்தை எடுத்துடறேன். அந்த பத்திரிகை ஆசிரியரை ஜாமீனில் அனுப்பச் சொல்றேன். இனிமேல் இதுபோண்ற செய்தி வெளியிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்றார். அந்த தகவலையும் அவருக்கு நீங்களே தெரிவிச்சுடுங்க என்று, அவருக்காக பேசிய எனக்கே, அதற்காக கெளரவத்தையும் கொடுத்தார் கலைஞர்.

2003-ல் ஜெ. அரசு பொய்வழக்கு புனைந்து, என்னை பொடாவில் கைது செய்தது. அப்போது திமுக, மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்தது. அந்த நிலையிலும், கூட்டணி பற்றிக் கவலைப்படாமல், பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பொடா சட்டத்திற்கு எதிராகவும், என்னை விடுவிக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தையும் கூட்டத்தையும் நடத்தினார் கலைஞர். எந்த நிலையிலும், பத்திரிகைகளை நேசிப்பவராக, பத்திரிகையாளர்களின் தோழராக, காவல் அரணாய் நின்றவர் கலைஞர்.

எந்த சபையிலும் சத்தியமடித்துச் சொல்ல முடியும். கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான்!

http://tamil.thehindu.com/tamilnadu/karunanidhi-94/கலைஞருக்கு-நிகர்-கலைஞர்-மட்டும்-தான்-நக்கீரன்-கோபால்/article9719059.ece?homepage=true

  • தொடங்கியவர்

கருணாநிதியின் ஆறு தசாப்த சட்டமன்ற வாழ்க்கை - சில குறிப்புகள்

 
 

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த திமுக, 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption60 ஆண்டு கால சட்டமன்ற சாதனையாளர்

நாகப்பட்டினத்தை விரும்பிய கருணாநிதியைக் குளித்தலைக்கு அனுப்பினார் அண்ணா.

அந்தத் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர்.

திமுக சட்டமன்றக் கொறடாவானார். அன்று தொடங்கி கருணாநிதிக்குக் கட்சியில் ஏறுமுகம்தான்.

முக்கிய முடிவுகளில் கருணாநிதியின் கருத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

1962 தேர்தலின்போது கடந்தமுறை வென்ற 15 பேரையும் தோற்கடிக்க வியூகம் வகுத்தார் காமராஜர்.

அதில் 14 பேர் தோற்றுப் போயினர், தஞ்சாவூரில் போட்டியிட்ட கருணாநிதியைத் தவிர.

ஐம்பது உறுப்பினர்கள் கொண்ட திமுக சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவர் கருணாநிதி. கட்சி நடத்திய போராட்டங்களில் எல்லாம் கருணாநிதியின் பங்களிப்பு காத்திரமாக இருந்தது.

உறவுக்குக் கை, உரிமைக்குக் குரல்

கருணாநிதி Image captionமாநில முதல்வருக்கு சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை 1969ல் பெற்றார் கருணாநிதி

அதன் காரணமாகவே, 1967 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது கருணாநிதியைப் பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார் அண்ணா. திடீரென அண்ணா அகாலமரணம் அடைந்தபோது அவருக்குப் பதிலாக கருணாநிதி முதல்வரானார்.

அதுநாள்வரை காங்கிரஸ் எதிர்ப்பு, மத்திய அரசின் மீதான விமரிசனம் என்ற அளவில் செயல்பட்ட திமுகவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம்.

உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றார் கருணாநிதி.

மத்திய, மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய ராஜமன்னார் கமிட்டி அமைத்தார். சுதந்தர தினத்தன்று ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதே வழக்கம்.

ஆனால் கருணாநிதியின் முயற்சியால் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமை வந்தது.

 

காங்கிரஸ் உடைந்து, இந்திரா அரசு பெரும்பான்மை இழந்தபோது, அந்த அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தார் கருணாநிதி.

பிறகு 1971 தேர்தலில் திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அப்போது திமுக வென்ற இடங்கள் 183.

அத்தனை இடங்களை அதற்கு முன்னரும் பின்னரும் எந்தவொரு கட்சியும் பெற்றதில்லை.

சாதனைகளும், சர்ச்சைகளும்

சாதனைகளும் சர்ச்சைகளுமாகவே நகர்ந்தது கருணாநிதி ஆட்சி. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்சா ஒழிப்புத்திட்டம் என்று செயல்பட்ட அதேவேளையில் புதிய சர்ச்சை மதுவிலக்கு வழியாக வந்தது. நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மதுவிலக்கை ரத்துசெய்தார் கருணாநிதி.

அது மிகப்பெரிய விமரிசனத்தைக் கிளப்பியது.

இத்தனைக்கும் மறு ஆண்டே மதுவிலக்கை மீண்டும் கொண்டுவந்துவிட்டார். ஆனாலும் அவர் மீதான விமரிசனங்கள் இன்றளவும் தொடர்கிறது.

எம்ஜியாருடன் கருணாநிதி , அண்ணா Image captionஎம்ஜியாருடன் கருணாநிதி , அண்ணா

கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், கருணாநிதி அரசு மீது ஊழல் புகார் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதைக் கொண்டுதான் பின்னாளில் கருணாநிதி மீது சர்க்காரியா விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

கட்சி உடைந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்டநாதன் கமிஷனை அமைத்தார் கருணாநிதி.

 

அதன் நீட்சியாக, 25% இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31% ஆக உயர்த்தினார். மேலும், பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டையும் 16%-ல் இருந்து 18%ஆக உயர்த்தினார். சமூக நீதி வரலாற்றில் இது முக்கியமான முன்னேற்றம்.

காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க நடுவர் மன்றம் வேண்டும் என்று கோரி திமுக அரசே வழக்கு தொடர்ந்து, பின்னர் இந்திராவின் வாக்குறுதியை நம்பி அந்த வழக்கைத் திரும்பப்பெற்றதும், கச்சத்தீவு தாரை வார்ப்பைக் கடுமையாக எதிர்த்த அதேவேளையில், கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கையும் போடாமல் விட்டதும் கருணாநிதியின் மீது தொடரும் சர்ச்சைகள்.

நட்பில் சிக்கல்கள்

மாநில சுயாட்சி என்று பேசத் தொடங்கியது முதலே கருணாநிதி - இந்திரா நட்பில் சிக்கல்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த மோதல்களை நெருக்கடி நிலை ஊதிப் பெரிதாக்கின. எமர்ஜென்சியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. அதன் நீட்சியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356வது பிரிவின் கீழ் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது.

அத்தோடு, கருணாநிதி உள்ளிட்டோர் மீது நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது இந்திரா அரசு.

நெருக்கடி நிலையில் அதிகம் வதைக்குள்ளான கட்சி திமுக. ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் அந்தக் கட்சிக்குத் தோல்வியே மிஞ்சியது.

கருணாநிதி வகித்த முதல்வர் பதவி எம்.ஜி.ஆரிடம் சென்றது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும்வரை முதல்வர் நாற்காலி கருணாநிதி பக்கம் வரவே இல்லை.

என்றாலும், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக் கேள்வி எழுப்புவது, விமரிசிப்பது, சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பது என்று வீரியமிக்க எதிர்க்கட்சி அரசியலைச் செய்தார் கருணாநிதி.

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி

எம்.ஜி.ஆரை வீழ்த்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்த கருணாநிதி, எமர்ஜென்சி கசப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு, 1980 மக்களவைத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.

நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார்.

அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர் உயிருடனும் உறுதியுடனும் இயங்கிய காலத்தில் கருணாநிதி பெற்ற ஒரே வெற்றி இதுதான்.

 

மீண்டும் பிரதமரானார் இந்திரா. அப்போதுதான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதி மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன. பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி - இந்திரா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அரசின் மீதான விமரிசனங்களை அவையில் பதிவுசெய்தது, திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலைவழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட எம்.ஜி.ஆர் அரசு தயங்கியபோது, அந்த அறிக்கையை ரகசியமாகப் பெற்று பத்திரிகைகளில் வெளியிட்டது, கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியபோது நீதிகேட்டு நெடும்பயணம் சென்றது என்று தொடர்ச்சியாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே, தனது கட்சியையும் உயிரோட்டத்துடன் வைத்திருந்தார் கருணாநிதி.

எண்பதுகளின் மத்தியில் ஈழத்தமிழர் விவகாரம் மோசமடைந்தபோது, இனப்படுகொலைக்கு எதிராக கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணத்தின் மூலம் கருணாநிதி-எம்.ஜி.ஆர் எதிர் அரசியல் முடிவுக்கு வந்தது.

பிறகு நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. மீண்டும் முதல்வரானார் கருணாநிதி.

ஈழப் பிரச்சனை

வி.பி.சிங்குடன் கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவி.பி.சிங்குடன் கருணாநிதி

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, பெண்ணுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.

தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு கருணாநிதி அரசு ஆதரவளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பத்மநாபா படுகொலை வலுசேர்த்தது. கருணாநிதி அரசைக் கலைக்கக்கோரின எதிர்க்கட்சிகள்.

அந்தக் கோரிக்கையை வி.பி.சிங்குக்குப் பிறகு பிரதமரான சந்திரசேகர் நிறைவேற்றினார்.

ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாபத்தோடு 1991 தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி.

ஆனால் ராஜீவ் கொலை ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியது.

முக்கியமாக, திமுக தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி, துறைமுகம் தொகுதியில் கருணாநிதியைத் தவிர.

தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தப் பதவியையும் ராஜினாமா செய்தார்.

கருணாநிதி- வைகோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிந்தார் வைகோ

ஐந்தாண்டு காலத்துக்கு எதிர்க்கட்சி அரசியலையே நடத்தவேண்டிய சூழல். போதாக்குறைக்கு, கட்சிக்குள் பிளவு வேறு. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மதிமுகவைத் தொடங்கினார்.

ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி திமுக ஆட்சியில் அமர்வதற்கான வாயிலைத் திறந்துவிட்டது. 1996 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் முதல்வரானார் கருணாநிதி.

சர்ச்சைக்குரிய பாஜக கூட்டணி

மக்கள் நலத்திட்டமாக உழவர் சந்தை, முற்போக்குத் திட்டமாக சமத்துவபுரம் என்று நகர்ந்துகொண்டிருந்த கருணாநிதியின் அரசியல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம்.

பண்டாரம், பரதேசி என்று கருணாநிதியால் விமரிசிக்கப்பட்ட பாஜகவுடன் 1999ல் கூட்டணி அமைத்தார்.

கருணாநிதி வாஜ்பேயியுடன்படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionபாஜகவுடன் சர்ச்சைக்குரிய கூட்டணி

தேர்தல் ரீதியாக அந்த முயற்சிக்கு வெற்றிகிடைத்தாலும், ஆரம்பகாலம் தொட்டு சிறுபான்மையினர் ஆதரவுக்கட்சியாக, மதச்சார்பின்மை பேசும் கட்சியாக அறியப்பட்ட திமுகவின் வரலாற்றில் இதுவொரு நெருடல் முடிவுதான்.

ஐந்தாண்டுகளுக்கு பாஜகவோடு கூட்டணி அமைத்திருந்த திமுக, திடீரென அங்கிருந்து விலகி, காங்கிரஸ் பக்கம் வந்தது. மதச்சார்பற்ற அணியின் அவசியம் உருவாகியிருப்பதாகச் சொல்லி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற வானவில் கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற்றது திமுக.

2006 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெற்றது. மீண்டும் கருணாநிதி முதல்வரானார்.

அப்போது அவர் அமைத்தது மைனாரிட்டி அரசுதான். அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பாமக, இடதுசாரிகளின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் நீடித்தது கருணாநிதி அரசு.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களுள் சமச்சீர்க் கல்வித் திட்டம், தமிழ் செம்மொழி, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் என்று இயங்கிவந்த கருணாநிதி அரசுக்கு இலங்கை இறுதி யுத்தம் கடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியது.

 

கொதிநிலையில் ஈழம்

போரை நிறுத்தக்கோரி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதமும் விமரிசனத்துக்கு உள்ளானது.

ஈழப்பிரச்னை கொதிநிலையில் இருந்தபோது நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குப் பெரிய சேதாரமில்லை.

மீண்டும் மத்திய அரசில் திமுகவினர் இடம்பெற்றனர். ஆனால் 2011 தேர்தல் கடும் சவாலைக் கொடுத்தது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த ஆவணங்கள் வெளியானதும், அவற்றை ஈழ ஆதரவு அமைப்புகள் மக்களிடம் கொண்டுசென்றதும் திமுகவுக்கு நெருக்கடியை உருவாக்கின.

போதாக்குறைக்கு, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொண்டது.

தேர்தலுக்கு முன்பு மக்களை வாட்டிய மின்வெட்டுப் பிரச்னை தேர்தல் களத்தில் திமுகவை வதைத்தது. எல்லாம் சேர்ந்து 2011 தேர்தல் களத்தில் திமுகவைத் தோல்வியில் தள்ளின.

ஈழப்பிரச்னை காரணமாக காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு 2014 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. அதேசமயம், தேமுதிகவைக் கூட்டணிக்குக் கொண்டுவர முடியவில்லை. வேறு வழியின்றி சிறுகட்சிகளுடன் அமைத்த கூட்டணி நூறு சதவிகிதத் தோல்வியைத் தந்தது.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைAFP/GETTY

ஆனாலும் 2016 சட்டமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொண்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டார் கருணாநிதி.

அதுநாள்வரை திமுகவின் ஈர்ப்பு சக்தியான கருணாநிதி முதுமை, உடல்நிலை காரணமாகப் பிரசாரத்துக்குப் போக முடியாத நிலையில், நமக்கு நாமே என்ற பெயரில் பிரசாரப் பயணம் தொடங்கினார் முக.ஸ்டாலின்.

2016 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியின் முதன்மையாக இலக்கு, தேமுதிக. ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. கூட்டணிக்கு வாருங்கள் என்று விஜயகாந்துக்குப் பகிரங்க அழைப்புவிடுத்தார் கருணாநிதி.

ஆனால் கடைசிவரை தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை. வேறுவழியின்றி காங்கிரஸ் மற்றும் சில சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது திமுக.

தேர்தல் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ராஜ தந்திரியாக அறியப்பட்ட கருணாநிதிக்கு இது முக்கியமான பின்னடைவு.

தேர்தலின் முடிவில் திமுகவுக்குத் தோல்வியே மிஞ்சியது. என்றாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக அமர்ந்தது.

திமுக ஆகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் தற்போதைய சட்டமன்றத்திலும் மு.கருணாநிதி உறுப்பினராகத் தொடர்கிறார். இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் கிடைத்திராத வைரவாய்ப்பு கருணாநிதிக்கு மட்டுமே வசப்பட்டிருக்கிறது!

(கட்டுரையாளர், ஆர். முத்துக்குமார். எழுத்தாளர். "திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.)

http://www.bbc.com/tamil/india-40130024

  • தொடங்கியவர்

கருணாநிதி 60: தமிழர்களின் அரசியல் பெருமிதம்!

 

அகவை 94-ல் அடியெடுத்துவைக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது, அவருடைய சட்ட மன்ற அனுபவத்தில் வைர விழா ஆண்டு. கருணாநிதியின் இந்த 60 ஆண்டு கால சட்ட மன்ற வரலாற்றில், உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் என்று அவர் பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். வாய்ப்பிருந்தபோதும்கூடப் பல அரசியல் தலைவர்களையும்போல எந்தக் காலகட்டத்திலும் அவர் டெல்லி நோக்கிச் செல்லவில்லை. விளைவாக, இந்திய அரசியல் வரலாற்றில் பல அரசியல் கட்சிகளுக்கே இல்லாத வரலாற்றை அவர் படைத்திருக்கிறார். உலகச் சாதனையாகக்கூட இது இருக்கக் கூடும், எந்த நாட்டில் இப்படி ஒரு தலைவர் மக்களால் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்! ஆனால், ஒரு கருணாநிதியின் தனிப்பட்ட சாதனையாக மட்டும் அல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பெருமிதங்களில் ஒன்றாகவும் தன் அரசியல் வாழ்வை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதிலேயே அவருடைய பெருமை இருக்கிறது.

எல்லா அரசியல் தலைவர்களையும்போல அவர் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உண்டு; விமர்சனங்கள் உண்டு. 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்ட மன்றத்துக்குச் செல்கிறார்; அரை நூற்றாண்டு நெருங்கும் நிலையில் தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடிக்கிறார் என்பதைக்கூட ஜனநாயகத்தின் சாதனை என்று கருதத்தக்க அதே அளவுக்கு ஜனநாயகத்துக்கான சோதனை என்றும் கருத முடியும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டியும், சாதியப் புதைக்குழி மேல் அமைந்திருக்கும் இந்திய அரசியல் மேடையில் மிக அரிதான சாதனை கருணாநிதியினுடையது.

சமூகரீதியாக எண்ணிக்கை அளவிலும் மிகச் சிறுபான்மையான ஒரு சமூகத்திலிருந்து, அதுவும் சாதிய அடுக்குகளில் கீழே இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து உடைத்துப் பீறீட்டு எழுந்த பெருநட்சத்திரம் அவர். தமிழகத்தில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மதவாதச் சக்திகள் தலை தூக்காமல் பார்த்துக்கொண்டதில் அவருக்கு காத்திரமான பங்கு இருக்கிறது! சமூகநீதி வளர்த்தெடுக்கப்பட்டதிலும் தன்னுடைய மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறார். கருணாநிதியின் அரசியல் வாழ்வை இவற்றினூடாகவே நாம் பார்க்க வேண்டும்.

ஒரு முதலமைச்சராக கை ரிக் ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களை அவர் அறிமுகப்படுத்தினார். கண்ணொளித் திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள், இலவச கண்ணாடிகள் வழங்கினார். பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளர்களின் மறுவாழ்வுக்கு தனி இல்லங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித்தரும் திட்டத்தைப் பெருமளவுக்குக் கொண்டுசென்றார். அனைத்துக் கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதிகளைச் செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினார். மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை வழங்கினார். அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அரசு ஊழியர் பணிப் பதிவேட்டில் ரகசியப் பதிவுமுறையை ஒழித்தார். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனித்தனித் துறைகளை உருவாக்கினார். ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். சமத்துவபுரம் என்ற அனைத்து சாதி மக்கள் குடியிருப்பை ஏற்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை அதிகப்படுத்தினார். கல்வி உதவித்தொகையை உயர்த்தினார். ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மொழிப் போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினார். குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்பதைச் சட்டமாக்கினார். மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தார். அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்தார். கல்வித் துறையில் சமச்சீர்ப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அவர் பல திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்.

முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகளைப் போலவே எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணிகளும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியவை. ஜனநாயக அரசியலமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான முக்கியப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டவர் அவர். அதன் காரணமாகவே அவர் முதல்வர் பதவி வகித்த காலங்களில், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு உரிய வாய்ப்புகளை வழங்கினார். அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதை விரும்பினார். சட்ட மன்ற விவாதங்களைத் தனது பேச்சாற்றலாலும் இலக்கிய ரசனையாலும் அரசியலில் எதிர்த்தரப்பினரும் விவாதங்களைக் கேட்டு ரசிக்கும்படியானதாக அவர் உருமாற்றினார்.

இந்திய அரசியலமைப்பு வலுவான மைய அரசுக்கு வழிசெய்திருக்கும் நிலையிலும் மாநில உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி அவற்றைப் பெற முயற்சித்தவர் கருணாநிதி. குடியரசு தினம், சுதந்திர தினம் என்று இரண்டு நாட்களிலும் மாநில ஆளுநர்களே கொடியேற்ற வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, முதன்முதலாக மாநில முதல்வர் சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தவர் அவர். அண்ணா ‘ஸ்டேட் ஆப் மெட்ராஸ்’ என்றிருந்த தமிழ் நிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார் என்றால், அண்ணாவின் வழிவந்த கருணாநிதி, தலைநகரின் ‘மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என்றாக்கினார். காலனியாதிக்கத்தின் அடையாள அழிப்பு என்று பேசப்படும் நுண்ணரசியலை அவர் அரசியல் தளத்திலேயே நடைமுறைப்படுத்தினார். மும்பை, கொல்கத்தா என்று இந்தியாவின் மற்ற மாநகரங்கள் பெயர் மாற்றம் பெறுவதற்கு அதுவே முன்னோடியானது. மாநிலச் சுயாட்சிக்கான உறுதியான குரல்களில் ஒன்றாகக் காலம் முழுவதும் அவர் குரல் ஒலித்திருக்கிறது.

கருணாநிதியின் 60 ஆண்டு சட்ட மன்ற வாழ்க்கை இந்தியாவின் உயிர்நாடியான பன்மைத்துவத்தைப் பாதுகாக்க முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அவரது சேவையை அவரது கட்சியினரும், தமிழக மக்களும் நினைவுகூர்ந்து கொண்டாடும் இந்தத் தருணத்தில் ‘தி இந்து’வும் அதில் கைகோத்து உவகை கொள்கிறது.

http://tamil.thehindu.com/opinion/editorial/கருணாநிதி-60-தமிழர்களின்-அரசியல்-பெருமிதம்/article9718868.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

தந்தை அல்ல; தலைவர்!

மு.க.ஸ்டாலின்

 
stalin_3171114f.jpg
 
 
 

பொதுவாழ்வும் அரசியலும் சிலருக்குப் பெருமை. சிலருக்குப் பொழுதுபோக்கு. தலைவருக்கோ மூச்சுக்காற்று! மு.கருணாநிதி எனும் ஆளுமையை ஒரு தந்தையாகப் பார்த்த தருணங்களைக் காட்டிலும், அரசியல் தலைவராகப் பார்த்த தருணங்களே அதிகம். ஏனென்றால், அவர் அப்படித்தான் இருந்தார். ஆகையால், என் மனதில் உறைந்திருக்கிறபடி ஒரு மக்கள் தலைவராக, மக்கள் பிரதிநிதியாகவே அவருடைய இந்த அறுபதாண்டு சட்ட மன்ற நாட்களை நான் நினைவுகூர விழைகிறேன்.

கடும் உழைப்பே வெற்றிக்கான அச்சாரம்!

தலைவர் முதன்முதலாக சட்டமன்றத்தில் அடி எடுத்து வைத்தது, 1957 தேர்தலில் குளித்தலை தொகுதியில் பெற்ற வெற்றியின் மூலம்தான். அப்போது நான் நான்கு வயது சிறுவன். அது மிக மிக மங்கலான நினைவிலேயே இருக்கிறது. அடுத்து 1962 தேர்தலில் தஞ்சாவூரில் அவர் போட்டியிட்ட கடுமையான தேர்தல் களம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. தஞ்சாவூரில் தங்கமுத்து நாடார் என்ற கழகத்தவரின் இல்லத்தில்தான் எங்கள் குடும்பம் தங்கியிருந்து, தலைவரின் தேர்தல் பணிக்கு உதவியாக இருந்தது. தலைவரின் அன்னையும் எனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாளும் உடனிருந்தார். அனல் பறக்கும் பிரச்சாரம். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்குகின்றன.

பெரும் பதற்றம். அப்போது, பரிசுத்தம் நாடார் வெற்றி பெற்றுவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஊர்வலச் செய்தியை அறிந்த பாட்டி, மயக்கமடைந்துவிட்டார். ஆனால், உண்மையான முடிவு தலைவருக்கே சாதகமாக இருந்தது. கடும்போட்டி நிலவிய அந்தத் தேர்தல் களத்தில், கட்சி செல்வாக்கும்-தனிப்பட்ட செல்வாக்கும்-பணபலமும்-ஆளுமையும் மிக்க பரிசுத்தம் நாடாரை வென்று, இரண்டாவது முறையாக சட்டமன்றம் சென்றார்.

திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 15 பேருடன் அது சட்ட சபையில் காலடி வைத்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் 50 பேர் என்று உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், 1957-ல் வென்ற 15 பேரில் பேரறிஞர் அண்ணா உள்பட 14 பேர் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார்கள். முந்தைய தேர்தலில் வென்றவர்களில் மீண்டும் வென்றவர் தலைவர் மட்டும்தான். அப்படிப்பட்ட வரலாற்று வெற்றியை அருகிலிருந்து பார்த்து, மனதில் பதியவைத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. வியூகமும் கடுமையான உழைப்புமே அரசியலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றுணர்ந்த தருணம் அது.

எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பளி!

சின்ன வயதில் அண்ணா படிப்பகம் நாங்கள் சிறுவர்கள் சிலர் நடத்திவந்தோம். அண்ணா பிறந்த நாள் விழாவைத் தெருவில் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். கோபாலபுரத்தில் நாங்கள் இருந்த தெரு அந்நாளில் பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. ஒரு ஆர்வத்தில் என்ன செய்துவிட்டோம் என்றால், அண்ணா பிறந்த நாள் விழா பந்தல் போடும்போது, தெருமுக்கை அடைத்துப் போட்டுவிட்டோம். அது எங்கள் தெருமுக்கில் உள்ள கோயிலை மறைப்பதுபோல அமைந்துவிட்டது. சிறுவர்களான நாங்கள் இதை உணரவில்லை. குடும்ப மருத்துவராக அந்நாளில் இருந்த கிருஷ்ணன் - அவரும் பிராமணர்தான் - மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்து சுவாமியைச் சேவிக்க முடியாமல் செய்துவிட்டான் உங்கள் பிள்ளை என்று தலைவரிடம் சொல்லிவிட்டார். அன்று மாலை விழா மேடையில் பேசுகையில், இதைக் குறிப்பிட்டார் தலைவர். “நேற்று ஸ்டாலின் கனவில் வந்த சாமி, எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காவது கோயிலுக்கு வந்து கும்பிடச் செய்’ என்று சொல்லிதான் இப்படிப் பந்தல் போட்டுவிட்டார் போலும்” என்று ஹாஸ்யமாகப் பேசி இதைச் சமாளித்த தலைவர், இரவு என்னை அழைத்தார். “நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது வேறு; கடவுள் நம்பிக்கை உடையவர்களின் மனதைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வது வேறு. அறியாமைகூட சில சமயங்களில் அலட்சியம் ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்” என்றார்.

எதிர்த் தரப்பு எதிரித் தரப்பு அல்ல!

அரசியல் போட்டியாளர்களை எதிரியாகக் கருதியவர் அல்ல அவர் - மிகுந்த மரியாதையோடு அவர்களை அணுகவும் அவர்களிடமிருந்து கற்கவும்கூட முயன்றிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் மீது அவர் கொண்டிருந்த மரியாதை ஓர் உதாரணம். அப்போது அவர் முதல்வராக இருந்தார். என்னுடைய திருமணத்துக்காக எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைக்க விரும்பிய அவர், காமராஜரையும் சந்தித்து அழைத்தார். பெருந்தலைவர் அவசியம் என் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அச்சமயம் அவர் உடல்நலன் கொஞ்சம் குன்றியிருந்தது. ‘என்ன கஷ்டமாக இருந்தாலும் வந்துவிடுவேன்’ என்று அவர் சொன்னதும், அவர் கஷ்டப்படாமல் திருமணத்துக்கு வர என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்ய முற்பட்டார் தலைவர். பெருந்தலைவரின் கார் நேரடியாக திருமண மேடைக்கே வந்துவிடுவதுபோலத் திட்டமிட்டார். இதற்காக முன்பு தீர்மானித்திருந்த திருமண மண்டபத்தையே மாற்றினார். திட்டமிட்டபடி பெருந்தலைவர் பெரிய சிரமங்களின்றி திருமணத்துக்கு வந்து சென்றார். பெருந்தலைவர் மீது மிகுந்த மரியாதை தலைவருக்கு உண்டு. இந்த மரியாதை என்பது கட்சி வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஆளுமைகளைப் போற்றும் கல்வியைக் கழகத்தாருக்குக் கற்றுக்கொடுத்தது என்று சொல்லலாம்.

ஆயிரம்விளக்கிலிருந்து அறிமுகம்!

1989 தேர்தல் இரு வகைகளில் எனக்கு முக்கியமானது. திமுக 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த தேர்தல் அது. நான் முதன்முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியிலிருந்து சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய கன்னிப் பேச்சின்போது, ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். மிசா சிறைவாசத்தின்போது, காவலர்களின் கடுமையான தாக்குதலிலிருந்து என்னைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த அண்ணன் சிட்டிபாபுவை நினைவுகூர்ந்து, சிறையில் நடந்த அந்த மனித உரிமை மீறலுக்குக் காரணமான சிறைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஒரு முதல்வராக என் பேச்சை அவர் ஆதரித்தபோதும், நடவடிக்கை என்பதை உடனடியாக மேற்கொள்ளவில்லை. இதைக் கட்சி அலுவலகத் திலேயே நான் நேரில் சொல்லியிருக்கலாம் என்று கருதினார். சில விஷயங்களைக் கட்சிக்குள் முதலில் விவாதித்துவிட்டு, பின்னர் சபைக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவை என்ன என்பதை உணர்த்தினார். இருப்பினும், மிசா காலத்து மனித உரிமை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமான விசாரணைக்குப் பின்பு ஆவன செய்தார்.

சட்ட மன்றத்தின் நாயகன்!

ஆளுங்கட்சி வரிசையில் இருந்தபோதிலும் சரி; எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதிலும் சரி; சட்ட சபைக்கு அவர் தயாராக எடுத்துக்கொள்ளும் அக்கறையும் கரிசனமும் அசாதாரணமானவை. ஒரு பள்ளிக்கூட மாணவர் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒப்பானது அது.காலை எழுந்ததும் - ஏனைய கட்சிகளின் பத்திரிகைகள் உள்பட - எல்லாப் பத்திரிகைகளும் வாசித்துவிடுவதில் தொடங்கும் உழைப்பு அது. நள்ளிரவில் படுக்கைக்குச் செல்லும்போது அவர் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். மக்களுடன் இடையறாது உரையாடிக்கொண்டே இருப்பார். நேரில் நூறு பேரையாவது அன்றாடம் சந்தித்துவிடுவார். தன்னை எந்நாளும் ஒரு மாணவனாக அவர் வைத்துக்கொண்டிருந்த இந்தத் துடிப்புதான் அவர் எந்தச் சாரியில் இருந்தாலும், சட்ட சபையில் அவரை ஒரு நட்சத்திரமாகவும், நாயகனாகவும் வைத்திருந்தது. 2006-2011 ஆட்சிக்காலத்தில் துணை முதல்வர் பொறுப்பினை எனக்கு வழங்கியதுடன், நிதிநிலை அறிக்கையில், காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளளித்து என்னைப் பேசச் செய்தது, தலைவர் எனக்கு வழங்கிய அரிய வாய்ப்பு. தற்போது தமிழக மக்களின் பேராதரவு பெற்ற வலிமையான எதிர்க்கட்சியாக திமுக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் செயல்பட்டு வரும் நிலையில், தலைவர் வழிகாட்டுதலில்தான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றும் செயல்பட்டுவருகிறேன். அவருடைய செயல்பாடுகளே என்னைப் போல பலருக்கும் ஆக்கமும் ஊக்கமும்!

பெருமிதத் தருணம்!

இந்திய தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம், ஒரே கட்சி-ஒரே சின்னத்தில் 13 முறை சாதனை வெற்றி, எந்தத் தேர்தலிலும் தோல்வியே காணாத செல்வாக்கு, 5 முறை தமிழக முதல்வர், தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வர், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்கள், பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்களிப்பு, திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கையான சமூகநீதியை இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாற்றிய பேராற்றல் எனத் தன்னுடைய சட்ட சபை வைர விழா தருணத்தை இந்திய ஜனநாயக வரலாற்றின் முக்கியமான தருணமாகவும் அவர் மாற்றியது ஒருவகையில் தமிழகத்தின் பெருமை. தமிழரால் அவரும் அவரால் தமிழரும் பெருமை கொள்ளும் தருணம் இது!

- மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர்.

http://tamil.thehindu.com/opinion/columns/தந்தை-அல்ல-தலைவர்/article9718852.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

கோபாலபுரத்தில் பிறந்தநாள் கொண்டாடினர் குடும்பத்தினர்: கேக் சாப்பிட்டார் கருணாநிதி!

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், இன்று மாலை பிரமாண்ட விழா நடைபெறவுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் ஏராளமான தொண்டர்கள், கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Untitled_15087.jpg


இதையடுத்து, கருணாநிதி வைர விழாவில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வீட்டில் நடக்கும் தேநீர் விருந்தில், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

 

இந்நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் மற்றும் செல்வி உள்ளிட்டோர் கேக் வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, மகள் செல்வி கருணாநிதிக்கு கேக் ஊட்டிவிட்டார். அதை கருணாநிதி ரசித்து சாப்பிட்டார். இந்த விழாவில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/91240-birthday-celebration-in-karunanidhis-gopalapuram-house.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இது அப்போது உடன்பிறப்புகள் செய்த வேலை.


18893219_443164556060072_186288497285562

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.