Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்

Featured Replies

தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்

IMG_6542.jpg

தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர்.

 
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
 
எண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் பெரியளவிலான உல்லாச உணவு  விடுதி ஒன்றினை அமைத்து அதனுடன் இணைந்து இக் கோட்டை பகுதியினை நவீன உல்லாச தங்குமிட விடுதியாக மாற்றி அமைத்து உள்ளனர்.
 
குறித்த கடற் கோட்டையில் தங்குவதற்கு உள்நாட்டவருகளுக்கு நாளொன்றுக்கு தனி அறை எனில் 11 ஆயிரத்து 550 ரூபாயும் , காலை உணவுடன் தனி அறை எனில் 13 ஆயிரத்து 750 ரூபாயும் , கோட்டையின் முழு பகுதியும் எனில் 20 ஆயிரத்து 350 ரூபாயும் அறவிடபடுகிறது.
 
வெளிநாட்டவர்கள் எனில் நாளொன்றுக்கு தனி அறை எனில் 110 அமெரிக்கன் டொலர்ஸ்  , காலை உணவுடன் தனி அறை எனில் 120 அமெரிக்கன் டொலர்ஸ், கோட்டையின் முழு பகுதியும் எனில்198 அமெரிக்கன் டொலர்ஸ் அறவிடப்படுகிறது.
 
தொல்லியல்  சின்னங்களை பாதுக்கக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு உரியவை. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தல் , அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல் , அதனை உரிமை கோர முடியாது. என்பன தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.
 
இந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கடற்கோட்டையினை  கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி தற்போது உல்லாச தங்குமிட விடுதியினை நடாத்தி அதிகளவிலான வருமானத்தை கடற்படையினர் பெறுகின்றனர்.
 
இது தொடர்பில் தொல்லியல் திணைக்களம், கடற்படையினர் இடமிருந்து கடற்கோட்டையை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமா ?

http://globaltamilnews.net/archives/28881

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களுக்கு முன்னரே இலங்கை கடற்படையின் இந்த கோட்டை விடுதி பற்றி தமிழ் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. இந்தக் கோட்டையை போர்த்துக்கீசர் Fortaleza Real என்ற பெயரில் 1618 இல் நிறுவினார்கள். பின் வந்த ஒல்லாந்தர் 1680 இல் கோட்டையை புனரமைத்தபின் பெயரை Hammenhiel என்று மாற்றம் செய்தனர். பிற்காலத்தில் இலங்கை கடற்படையினர் இக்கோட்டையில் கைதிகளை அடைத்துவைக்கப் பயன்படுத்தியதுடன் 1971 காலப்பகுதியில் ஜேவிபியின் கிளர்ச்சியின் பின் இயக்கத்தை வழிநடத்திய ரோகண விஜவீரா ஜயதேவ உயாங்கொட மகிந்த விஜயசேகர ஆகிய பிரமுகர்களையும் இலங்கையரசு இங்கு சிறைவைத்திருந்தது. உள்ளுர் மக்களால் பூதத்தம்பி கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.