Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8 தமிழர் சுட்டுக்கொலை : 11 பேருக்கும் மறியல்

Featured Replies

8 தமிழர் சுட்டுக்கொலை : 11 பேருக்கும் மறியல்
 

தம்புத்தேகம, பாரதிபுரம் பகுதியில் தமிழர்கள் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 11 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், நிராயுதபாணிகளாக நின்றிருந்த, அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது-14), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது-18), முருகேசு ஜனகன் (வயது -17), நாதன் பவளநாதன் (வயது-45), சுப்பிரமணியம் திவாகரன், குணரத்தினம் சிவராஜன், ஆறுமுகம் சேகர் மற்றும் பொன்னம்பலம் கனகசபை ஆகிய எட்டுப் பேரே இவ்வாறு சரமாரியாக சுட்டுப் படுகொலை  செய்யப்பட்டவர்களாவர்.   

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கடந்த 4ஆம் திகதியன்று ஆஜர்படுத்திய போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

நிராயுதபாணிகளாக நின்றிருந்த சாதாரண குடிமக்கள் எட்டுபேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.  

அவரது சாட்சியத்துக்கும், சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸ் அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்துக்கும் இடையில் பரஸ்பர இருந்துள்ளது.  

இதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிளின் வாக்குமூலத்தில், உண்மைக்கு புறம்பான விடயங்களும் உள்ளமை நீதிபதியால் கண்டுபிடிக்கப்பட்டது.  

இதனையடுத்தே, தற்போது சேவையில் உள்ள பிரதிவாதிகள், 11 பேரும் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டனர். முறைப்பாட்டாளரின் சாட்சிகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்ககூடும் என்பதனால், அந்த 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.   

இதில், சாதாரண குடிமக்களான தமிழர்கள் எட்டுப்பேரை சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொலை செய்தமை உள்ளிட்ட, 37 அதிக்குற்றச்சாட்டுகளின் கீழ், அன்று கடமையிலிருந்த பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம சேகவர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.   

படுகொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,   

வயல்வெளிக்கு, 01-02-1998 அன்று காலை, 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், பணிக்கு சென்று கொண்டிருந்தவர்களை, பொலிஸாரும், ஊர்காவல் படையினரும், விசாரணைக்கு எனக்கூட்டி சென்று பொலிஸ் நிலையத்தின் முன்னால் நிற்கவைத்தனர்.   

காரணம் ஏதுமின்றி இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும் முன்பே, சுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். அதில், 8 பேர் பலியாகினர். 17 பேர், உயிரிழந்த எட்டுப்பேரில், நான்குபேர் பாடசாலைக் கல்வியை முடிக்காத மாணவர்களாவர். இருவர் பதின்ம வயதை சேர்ந்தவர்களாவர். அவ்விருவரும் சகோதரர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/8-தமிழர்-சுட்டுக்கொலை---11-பேருக்கும்-மறியல்/175-198063

  • கருத்துக்கள உறவுகள்

தம்பலகாமம், பாரதிபுரப் படுகொலை

 

 
 
IMG_01022012_222038.png
சிறிலங்கா சுதந்திரமடைந்த நாளில் இருந்து, தமிழ்மக்கள்எதிர்கொண்ட, அவர்களை உலுக்கியெடுத்த படுகொலைகள் ஏராளம்.அதிலும் கிழக்கு மாகாணம் படுகொலைகளின் களமாகவே இருந்தது.காரணம் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்களும் அத்துமீறிய குடியேற்றங்களும் கிழக்குமாகாணத்தை வசப்படுத்த முற்பட்டமைதான்.  தமிழர்பிரதேசங்களில் படுகொலைகளை நிகழ்த்தி விரட்டியடிப்பதன்மூலம் சிங்களமயமாக்கலைச் செய்வதை உத்தியாகக்கொண்டிருந்தனர். நில அபகரிப்பிற்காக, கிராமப்படுகொலைகள்சத்தமின்றி நடந்தேறின.  பாலம்போட்டாறு, ஜெயபுர ஆனதும்முதலிக்குளம் மொறவெவ ஆனதும் இப்படித்தான். இதன் தொடர்ச்சியாக, தம்பலகாமம் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் தமது எல்லைகளைவிரிவுபடுத்தும் பொருட்டு தம்பலகாமத்தின் ஏனைய பகுதிகளை நோக்கித் தாக்குதல்களைஆரம்பித்தனர். அதில்தான், 01.02.1998 அன்று பாரதிபுரத்தில் நடந்தேறியது அந்தக் கோரச்சம்பவம்.
 
பொதுவாக, எல்லைக் கிராமங்களில் நடக்கும் படுகொலைகள், தாக்குதல்களை சிங்கள-தமிழ்மக்களிடையேயான இனக்கலவரம் என வரையறைப்படுத்தி, சிறிலங்கா அரசு அதைக்கண்டுகொள்வதேயில்லை. இது சிங்களத் தாக்குதலாளிகளுக்கு வாய்ப்பாக இருந்தது மட்டுமன்றி, அரசின்ஊக்குவிப்பாகக்கூட அமைந்தது. ஆனால் தம்பலகாமத்தில் நடந்த படுகொலையில்காடையர்களுடன் காவல்துறையும் சேர்ந்து கொண்டதுதான் மிகப்பெரிய அவலம்.
 
download+(io.jpg
தம்பலகாமம், திருகோணமலை மாவட்டத்தில், விவசாயக் கிராமங்களைக் கொண்ட பிரதேசம்திருகோணமலைநகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில்அமைந்துள்ளதுசம்பந்தரால் பாடல்பெற்ற தலமானதிருக்கோணேசரத்துடன் தொடர்புடைய ஆதிகோணேசுரர்ஆலயத்தைக் கொண்டமைந்த சிறப்புப் பெற்றது. பாரதிபுரம், தம்பலகாமத்தின் பசுமையான கிராமங்களில் ஒன்று. கந்தளாய்க்குளத்தின் நீரப்பாசனத்தால் விவசாயத்தில்தன்னிறைவைக் கொண்டிருந்த வளமான கிராமம்.  இதன்காரணமாகவே சிங்களவர்களின் இலக்காக மாறியது
 
1990களின் பிற்பகுதியில் தம்பலகாம உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்த அத்தனைதமிழ்க்கிராமங்களும் இனத்தாக்குதலுக்கு உள்ளாகின. மனிதாபிமானமற்ற தாக்குதல்களால்அப்பிரதேசம் ஒட்டுமொத்தமான, பாரிய இடப்பெயர்வைச் சந்தித்தது. பெருமளவு மக்கள் வடபுலம்நோக்கி ஓடிவந்தனர். எஞ்சியோர் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.கிராமத்து மண்ணையே தமது சீவனோபாயத்திற்காக நம்பியிருந்த மக்களால் சிலகாலங்கள்கூடநீடிக்க முடியவில்லை. பசி, பஞ்சம், வறுமை வாட்டியெடுக்கத் தொடங்கியதால் உயிரைப் பணயம்வைத்து தமது சொந்த இடங்களுக்குச் திரும்பவும் செல்லத் தொடங்கினர். இனவாத அட்டகாசங்கள்சற்றே தணிந்திருந்ததால், சிங்களவர்களால் பறிக்கப்பட்ட கிராமங்கள் போக, மீதி இடங்களில் தமதுஇருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர்
 
அவ்வாறு மீளக்குடியமர்ந்த கிராமங்களான புதுக்குடியிருப்பு, பொற்கேணிபாரதிபுரம்போன்றவற்றை இலக்கு வைத்துப் பேரினவாதிகள் மீண்டும் தாக்கத்தொடங்கினர். அதன்உச்சக்கட்டமாக, தமிழர்களை அச்சமுறுத்தும் நோக்கில் ஒருகோரப்படுகொலையை பாரதிபுரத்தில் நிகழ்த்தி முடித்தது சிறிலங்கா காவல்துறை

01-02-  1998 அன்று காலை, மெதுவாக இருள் அகன்று கொண்டிருந்த வைகறைநேரத்தில் துயிலெழுந்த கிராமம் தனக்கான அன்றைய பணிகளுக்காக தயாராகிக்கொண்டிருந்ததுஏறக்குறைய 5.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட அந்த விடியல்பொழுதில், காவல்துறை நிலையத்திலிருந்த காவல்துறையினரும் ஊர்காவல் படையினரும்,அப்பகுதிகளில் வயல்வெளிக்கும், பணிக்கும் சென்று கொண்டிருந்தவர்களை  விசாரணை எனக்கூட்டிச் சென்று காவலரணனின் முன்னால் நிற்கவைத்தனர். காரணம் ஏதுமின்றி இழுத்துச்செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும் முன்புசுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். மொத்தமாக எட்டுஉடல்கள், சில கணங்களில் பிணமாகச் சரிந்தன. தொடர்ந்து நாலாபக்கமும் இலக்கின்றிச் சுட்டதில்பதினேழுபேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த எட்டுப்பேரில்,  நான்குபேர் பள்ளிப்படிப்பைமுடிக்காத மாணவர்கள். அவா்களில் இருவர் பதின்ம வயதில் இருந்த சகோதரர்கள்.
 
சுட்டுக்கொன்ற பின்னும் கொலைவெறி அடங்காத காவல்துறை, பிணங்களை உதைத்தும்குத்தியும் உருக்குலைத்தது.  உயிரிழந்த ஒருவரின் ஆண் உறுப்பை வெட்டி அவரது வாய்க்குள்திணித்துவிட்டுச் சென்றது. அதிகாலைவேளையில் நடந்த கோரக் கொலையால் தமபலகாமம்மீண்டும் ஒருமுறை கதிகலங்கியது. பிணமாகப் பிள்ளையைப் பார்த்த பெற்றோர், தந்தையைப்பார்த்த குழந்தைகளின் கதறல், அந்த வைகறைப் பொழுதை அதிரவைத்தது. அவர்களின் கண்ணீரில் அந்தக் கிராமமே நனைந்தது. அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சத்தில்பலர் உறைந்துபோயிருந்தனர். அன்று விழுந்த பேரிடியால், மீண்டும் தமது கிராமத்தை விட்டுஇடம்பெயரத்தொடங்கினார்கள்
 
index.jpg
வழமையாக இத்தகைய தாக்குதல்களை இனவாதம் எனமுடிச்சிடும் சிறிலங்கா அரசு, இம்முறை காவல்துறையின்அடாவடி நேரடியான சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதால்,கண்துடைப்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டது.விசாரணையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும்ஊர்காவல்படையினரும் சம்பந்தப்பட்டிருப்பதாகநிறுவப்பட்டபோதும், இதுவரை அந்தக் குற்ற அறிக்கைநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுமில்லை, குற்றவாளிகள்தண்டிக்கப்படவுமில்லை.

அன்றைய சம்பவத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் விபரம் 
1.     அமிர்தலிங்கம் சுரேந்திரன் -   14
2.     அமிர்தலிங்கம் கஜேந்திரன்-   18
3.     முருகேசு ஜனகன் -                     17
4.     நாதன் பவளநாதன் -                   45
5.     சுப்பிரமணியம் திவாகரன்
6.     குணரத்தினம் சிவராஜன்
7.     ஆறுமுகம் சேகர்
8.     பொன்னம்பலம் கனகசபை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.