Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் : செவிடன் காதில் ஊதிய சங்கு

Featured Replies

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் : செவிடன் காதில் ஊதிய சங்கு

 

 

முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­ப­டும்­போது, காப்­பு­றுதி தொகையைப் பெறு­வ­தற்­காக உரி­மை­யா­ளர்­களே தீ வைத்துக் கொள்­கின்­றனர் என சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் கூறு­கின்றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­களை முறை­யிட்­ட­போதும் செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்­றஞ்­சாட்­டினார்.

muslim.jpg

பாரா­ளு­மன்­றத்தில் நேற்ற செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீவா தீர்­மானம் குறித்த சபை ஒத்­து­ழைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­வத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஜெனீவா தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வரு­டமும் ஒன்­பது மாதங்­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. இக்­காலப் பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்­க­வேண்டும். நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அரசு எதிர்­கொண்ட சவால்கள் பற்­றியும், கடந்­து­வந்த பாதை பற்­றியும் ஆய்­வு­செய்ய வேண்டும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கப்­ப­டுத்­து­வது, பொறுப்புக் கூறலை உறு­திப்­ப­டுத்­து­வது என்ற தொனிப்­பொ­ரு­ளி­லேயே ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. எனவே, இவ்­வி­ட­யத்தில் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை உறு­தி­யாக இருக்­கின்­றது. 

இங்­குள்ள சகல தீர்­மா­னங்­க­ளுக்கும் ஒரே தலைப்­புத்தான் வழங்­கப்­பட்­டுள்­ளன. நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் ஆகிய தலைப்­புக்­களே காணப்­ப­டு­கின்­றன. இந்த விட­யங்கள் தொடர்பில் தான் சில அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. 

சிலர் சட்­டங்­களில் இருந்து வதி­வி­லக்­கினைப் பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். அதற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது அடுத்து எவ்­வா­று முன்­னோக்கிச் செல்­லப்­போ­கின்றோம் என்று சிந்­திக்க வேண்டும். சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்டு எப்­படி பய­ணிக்கப் போகின்றோம் என்று சிந்­திக்க வேண்டும்

அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெற்­று­வரும் சுழ்­நி­லையில், மத ரீதி­யான சகிப்புத் தன்­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான விட­யங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். நாட்டில் தேவை­யற்ற குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் தரப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கமும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­களும் விரைந்து நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சியம். 

சில சக்­திகள் நாட்டில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன. இந்த சக்­திகள் தற்­பொ­ழுது வெறுக்­கத்­தக்க பேச்­சுக்­களை பரப்பி வரு­கின்­றன. இத­னுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர். இன்று வெ ளியா­கி­யுள்ள (நேற்று) வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் தலைப்­புச்­செய்­தியில் மூன்று பௌத்த அமைப்­புக்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றான வெறுப்பை ஏற்­ப­டுத்தும் பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

நுகே­கொட விஜ­ய­ராம பகு­தியில் முஸ்லிம் ஒரு­வரின் வர்த்­தக நிலை­யம் தீயி­டப்­பட்­டுள்­ளது. சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தீயிட்­டு­விட்டு ஓடிச் செல்­வது சீ.சி.ரி.வி கம­ராக்­களில் பதிவாகியுள்ளன. இவ்வாறிருக்கையில் உரிமையாளர் காப்புறுதியைப் பெறுவதற்காக தனது கடைக்கு தீயிட்டுக் கொண்டதாக சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது 

ஏத்தனையோ சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றபோதும் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்காமலிருப்பதானது, செவிடன் காதில் ஊதிய  சங்காக காணப்படுகின்றது என்றார். 

http://www.virakesari.lk/article/20680

  • தொடங்கியவர்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் பின்னணியில் திருட்டுச் சம்பவங்கள்

BTI33208fmt-69ea6827e2293abcce4c48d14fc0ae2e919e7249.jpg

 

(க.கம­ல­நாதன்)

நாட்டில் இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இடம்­பெ­று­கி­ன்றன என பேசு­கின்ற போது அதன் பின்­ன­ணியில் மேற்­படி சம்­பவத்தை சாத­க­மாக பயன்­ப­டுத்தி திருட்டுச் செயல்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே மேற்­படிச் சம்­ப­வங்­களின் போது சட்டம் சக­ல­ருக்கும் சம­னா­னது என்ற இடத்­தி­லி­ருந்து செயற்­பட்டு அனை­வரும் அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய ஒரு நாட்டை உரு­வாக்­குவோம் என சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

ரமழான் பண்­டி­கைகை முன்­னிட்டு பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாஸஸ்­த­ன­மான அலரி மாளி­கையில் இடம்­பெற்ற 83 பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நிதி உத­வி­களை வழங்­கி­வைக்கும் நிகழ்வில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று முன்­னெ­டுக்­கப்­படும் நிதி­யு­தவி வழங்­கப்­படும் நிகழ்­வா­னது ஒரு மத்­தி­ன­ரைவி மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்தி செய்­யப்­படும் நிக­ழ­வல்ல. மாறாக வரு­கின்ற நாட்­களில் இந்து மற்றும் கிறிஸ்­தவ மத் ஸ்தலங்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் இந்த உத­வித்­தொகை வழங்­கப்­படும்.

எமது நாட்டில் உள்ள மக்கள் குழுக்கள் கொண்­டாடும் 4 முக்­கிய பண்­டி­க­ளை­களில் ஒன்­றாக ரமழான் பண்­டிகையை கருத்­திக்­கொண்டே இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் தற்­கா­லத்தில் முஸ்லீம் மக்கள் மீதான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றமை குறித்து அதிகம் பேசப்­ப­டு­கின்­றது.

இது குறித்து பாரா­ளு­மன்­றத்­திலும் அமைச்­ச­ர­வை­யிலும் நாங்கள் பேசி­யுள்ளோம். அதன் போது சட்­டத்தை சக­ல­ருக்கும் ஒரே நியா­யத்தின் கீழ்தான் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பதை நான் உறு­திப்­பட கூறி­யுள்ளேன். இந்த விடயம் பேச்­சுக்கு மட்­டுப்­ப­டாது என்­ப­தையும் இங்கு உறு­தி­யாக கூறு­கின்றேன்.

அர­சாங்­கங்கம் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னரே மக்­க­ளுக்கு சட்­டத்தை சம­மாக நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்று வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது. அந்த விட­யத்தில் பின்­ன­டை­வுகள் காணப்­ப­டு­மாயின் அவற்றை திருத்­திக்­கொண்டு முன்­செல்ல எத்­த­னிக்க வேண்டும்.

அதேபோல் சில சந்­தர்­ப்பங்­களின் சட்­டத்தை சக­ல­ருக்­கும சம­மாக கைய­ளு­கின்ற போது குற்றம் நடந்த உட­னேய சட்­டத்தின் கீழான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­யாது போய்­விடும்.

குறிப்­பாக இன­வாத செயற்­பா­டுகள் என்று கூறப்­படும் செயற்­பா­டுகள் இன­வாத செயற்­பா­டு­க­ளாக இருக்­காது இன­வாத செயற்­பாடு ஒன்று இடம்­பெறும் சந்­தர்ப்­பத்தில் அதனை சாத­க­மாக கொண்டு வேறு திருட்டுச் செயற்­பா­டு­க­ளுக்கு இடம்­பெற்­றுள்­ளன.

அண்­மையில் இஸ்­லா­மியர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான கடை­யொன்று தீபற்­றி­யி­ருந்­தது அதன் போது அந்த சம்­பவம் முஸ்­லீம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையின் ஒரு அங்கம் என கூறப்­பட்­டது. ஆனால் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போதுதான் மேற்­படி கடையில் நடந்­தது ஒரு திருட்டுக் கும்­பளின் செயற்­பாடு என தெரி­ய­வந்­தது.

அதன் பின்னர் மற்­று­மொரு இஸ்­லா­மி­ய­ருக்கு சொந்­த­மான கடையில் தீப்பற்­றி­ய­போதும் இது இன­வாத சக்­தி­களின் செயற்­பாடு என்று எடுத்­துக்­காட்­டப்­பட்­டது. ஆனால் அது இன­வாத சக்­திகள் செயற்­ப­டல்ல மாறாக அக்­க­டைக்கு அருகில் உள்ள கடை­யொன்று தீபற்­றி­யதால் ஏற்­பட்ட தீப்­ப­ரவல் காரணமாக மேற்படி கடையும் தீக்கிரையாகியிருந்தது.

அதனால் இனவாத செயற்பாடுகள் என்று கூறவில்லை மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை சட்டத்தை நடைமுறைப்படுத்தி கட்டுப்படுதியுள்ளோம் என்பதே நிதர்நனமாகும்.

அதேபோல் எதிர்காலத்திலும் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தி இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரும் அச்சமின்றி வாழமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோம என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-07#page-1

  • தொடங்கியவர்

நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ

p18-a3b8db136113b9caed46d87e89d0be0e2ce12f37.jpg

 

நாசகார செயலென சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம் 
(எம்.எப்.எம்.பஸீர்)

நுகேகொடை, விஜேராம சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று நேற்று தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. லெதர் மற்றும் காபட் வகைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலை யமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ள நிலை யில், இது ஒரு நாசகார செயலாக இருக்க லாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் சம்பவம் குறித்து,  நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கண்டி - அக்குறனை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் பெஷன் லத்தர் எனப்படும் மேற்படி வர்த்தக நிலையம் நேற்று அதிகாலை வேளையிலேயே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. சம்பவம் இடம்பெறும் போது வர்த்தக நிலையத்தினுள் எவரும் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில் வெளியில் இருந்து வந்த எவறேனும் வர்த்தக நிலையத்துக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தீ காரணமாக வர்த்தக நிலையத்தின் முன் பக்கம் சிறிது சேதமடைந்துள்ளதுடன் பல இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன

எவ்வாறாயினும் நேற்று தீயினால் சேதமடைந்த குறித்த வர்த்தக நிலையத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஸ்தலத்தில் இருந்தவாறே சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் போது நாசகார செயல் ஒன்று இடம்பெற்றிருப்பின் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.