Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கத்துக்கு அரசு அர்ப்பணிப்பு

Featured Replies

நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு

 

நல்­லி­ணக்­கத்துக்கு அரசு அர்ப்­ப­ணிப்பு
(நமது நிருபர்)

இலங்­கையில் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுத்தல், மீண்டும் மோதல்கள் இடம்­பெ­றாமல் தடுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் ஊடாக தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் பொது­ச்செ­ய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்­ர­ஸிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு சட்டம், தேசிய நல்­லி­ணக்கம், ஆகி­ய­வற்­றுடன் சம்­பந்­தப்­படும் விட­யங்­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தா­கவும் ஐ.நா.செய­லா­ள­ரிடம் பிர­தமர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

 அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கிற்கு சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் ஐ.நா. செய­லாளர் நாயகம் அன் ­டோ­னியோ கட்­ரஸை சந்­தித்து

பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இந்த விட­யங்­களை தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதன்­போது தாம் ஐ.நா.வின் அக­திகள் தொடர்­பான உய­ரிஸ்­தா­னிகர் என்ற ரீதியில் இதற்கு முன்னர் பல தட­வைகள் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். மேலும் இந்த சந்­திப்பில் இலங்­கையில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்கம் தொடர்­பான விட­யங்கள் குறித்து பிர­தமர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

  இலங்­கையின் நல்­லி­ணக்க விட­யங்கள் தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள ஐ.நா. அலு­வ­லகம் எந்­த­வொரு நேரத்­திலும் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் இலங்­கையின் வெற்­றியே ஐ.நா. வின் எதிர்­பார்ப்­பென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஐ.நா. செய­லாளர் நாயகம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐ.நா.வின் மனி­த­வள தொடர்­பான பிரதி செய­லா­ளர்­நா­யகம் ஸ்டெபன் ஓபி­ரே­னையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது அவ­ச­ர­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்க உதவி செய்­த­மைக்­காக ஐ.நா.வின் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­களை ஐ.நா. வுக்­கான இலங்கையின் நிரந்தரவதிவிட பிரதிநிதி ரொஹான் பெரேரா கலந்து கொண்டார். மேலும் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான தலைமை அதிகாரி ஜெப் பெல்ட்மென்னையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.