Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை

Featured Replies

சைட்டம் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மால­பேயில் உள்­ளது சைட்டம், தெற்­கா­சிய தொழில்­நுட்ப முகா­மைத்­துவ கல்­லூ­ரியா, தெற்­கா­சிய தொழில்­நுட்­ப மருத்து கல்­லூ­ரியா என்­பது தொடர்பில் சபையில் ஆளும் தரப்­பிற்கும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை எழுந்­தது.

எனினும் தெற்­கா­சிய தொழில்­நுட்­பட மருத்­துவ கல்­லூ­ரியே சைட்டம் ஆகும் என விடாப்­பி­டி­யா­க­வி­ருந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, வைத்­திய பட்டம் வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­ம­ளிக்கும் வர்த்­த­மா­னியை பாரா­ளு­மன்­றத்தில் தினேஷ குண­வர்­தன எம்.பியே சமர்ப்­பித்தார் என்­பதை சபையில் ஆதா­ரங்­க­ளுடன் சமர்ப்­பித்­த­போதும் அதனை நிரா­கரித்த தினேஷ் எம்.பி சைட்டம் சட்­டத்­திற்கு முர­ணா­னது என்று வாதிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யி­யற்­கட்­டளை 23 இன் இரண்டின் கீழ் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்­தன , சைட்டம் தொடர்­பாக கேள்வி எழுப்­பினார்.

தினேஷ் குண­வர்­தன எம்.பி தனது கேள்­வியில்,

சைட்டம் மருத்­துவ கல்­லூரிக்கு எதிராக மாண­வர்கள் தொடர்ந்து பல்­க­லை­க­ழக புறக்­க­ணிப்­பினை செய்து வரு­கின்­றனர். இதன்­கா­ர­ண­மாக பல்­க­லை­க­ழக நட­வ­டிக்­கைகள் அனைத்து ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளது.இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்­று­த­ரு­மாறு கோரி மாண­வர்கள் போராட்டம் நடத்தும் போது பொலிஸார் மாண­வர்­களை கடு­மை­யாக தாக்­கு­த­கின்­றனர். எனவே இந்த பிரச்­சி­னைக்கு உடன் தீர்வு காண வேண்டும்.

 ஆகவே குறித்த பிரச்­சி­னையை தீர்க்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­குமா? அத்­துடன் புறக்­க­ணிப்பு செய்யும் மாண­வர்­களின் மஹா­பொல புலமை பரிசில் நீக்­கப்­பட்­டுள்­ளது. இதனை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என கேள்வி எழுப்­பினார்.

அதற்குப் பதி­ல­ளித்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல,

சைட்டம் மருத்­துவ கல்­லூரி 2009 ஆம் ஆண்டே ஆரம்­பிக்­கப்­பட்­டது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போதே சைட்டம் மருத்­துவ கல்­லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது. போதாத குறைக்கு 600 மில்­லியன் ரூபா கடன் தொகையும் வழங்­கப்­பட்­டது. இந்த கேள்­வியை தொடுத்த தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கு இன்­னு­மொரு அதிர்ச்­சியும் உள்­ளது.

அதா­வது மால­பேயில் உள்ள சைட்டம் மருத்­துவ கல்­லூரி பட்­டத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை 2013 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 26 ஆம் திகதி உயர் கல்வி அமைச்­ச­ருக்கு பதி­லாக பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்­தது அப்­போ­தைய ஆளும் கட்சி பிர­தம கொற­டா­வாக கட­மை­யாற்றி தினேஷ் குண­வர்­தன எம்.பியே ஆவார்.

எனவே அப்­போது ஒரு கொள்கை. தற்­போது வேறு கொள்கை என சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலை மேற்­கொள்ள வேண்டாம். வெட்கம் . வெட்கம் . இது பெரும் தலை குனி­வாகும் என்றார்.

இச்­ச­ம­யத்தில் கோப­ம­டைந்த தினேஷ் குண­வர்த்­தன எம்.பி, பொய் கூறா­தீர்கள். சபை நட­வ­டிக்­கை­களை திசைத்­தி­ருப்ப வேண்டாம் என கடும் தொனியில் கூறவும் கூட்டு எதி­ர­ணி­யினர் பெரும் கோஷ­மிட்­டனர்.

இச்­ச­ம­யத்தில் தனது தெளிவுப்­ப­டுத்­தலை முன்­னெ­டுப்­ப­தற்கு தினேஷ் குண­வர்த்­தன எம்.பி சபா­நாகர் கரு ஜெய­சூ­ரி­ய­வி­டத்தில் அவ­காசம் கோரிய போதும் சபா­நா­யகர் கரு ஜெய­சு­ரிய அதற்கு அனுமதி வழங்­க­வில்லை. இந்த சந்­தர்ப்­பத்தில் சபா­நா­ய­க­ரிடம் ஒழுங்கு பிரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்­திற்கு பேசு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அச்­ச­ம­யத்தில் அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம்,இவர்கள் கூறு­வ­தைப்­பார்த்தால் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தரா­த­போதும் வரு­கைப்­பணம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரு­வ­தைப்போல் உள்­ளது என நகைச்­சு­வை­யாகக் கூறினார்.

இத­னை­ய­டுத்து சபையில் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது. கூட்டு எதிர்க்­கட்­சியின் எம்.பிக்­க­ளான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, பிர­சன்ன ரண­வீர , பந்­துல குண­வர்­தன, உதய கம்­மன்­பில, உள்­ளிட்ட பத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் தமது ஆச­னங்­களில் இருந்து எழுந்து கோஷ­மிட்­டனர்.

ஆச­னங்­களில் அம­ரு­மாறு சபா­நா­யகர் பல­த­ட­வைகள் கோரி­ய­போதும் இறு­தி­யாக எச்­ச­ரிக்கை விடுத்­த­போதும் அவர்கள் அதனை பொருட்­ப­டுத்­தாது ஆளும் தரப்பை பார்த்தும், அக்­கி­ரா­னத்­தினைப் பார்த்தும் கைகளால் சைகை செய்­த­வாறு ஏதோ கூறி­ய­வாறே இருந்­தனர்.

ஒரு கட்­டத்தில் பாரா­ளு­மன்­றத்தின் உய­ரிய ஆச­னத்­திற்கு சவால் விடுக்க வேண்டாம் என சபா­நா­யகர் கரு ஜெய­சு­ரிய அழுத்­த­மாக கூறி­ய­தையும் பொருட்­ப­டுத்­தாது கூச்­ச­லிட்­டனர். அதற்கு பதி­லாக இரா­ஜங்க அமைச்சர் சுஜீவ சேர­சிங்க, சந்­திம கமகே எம்.பி உள்­ளிட்­ட­வர்­களும் கூட்டு எதி­ர­ணி­யி­னரை சாடி­ய­வாறு இருந்­தனர்.

இந்­நி­லையில் தினேஷ் குண­வர்­தன எம்.பிக்கு தௌிவு­ப­டுத்­து­தற்­கான வாய்ப்­பினை சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய வழங்­கினார். அச்­ச­ம­யத்தில் தினேஸ் குண­வர்த்­தன,

நான் தெற்­கா­சிய தொழில்­நுட்ப முகா­மைத்­துவ கல்­லூரி தொடர்­பான வர்த்­த­மா­னி­யையே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தேன். எனினும் சைட்டம் மருத்து கல்­லூரி வர்த்­த­மா­னியை சமர்ப்­பிக்­க­வில்லை. சபை முதல்வர் பொய்­யு­ரைக்­கின்றார். முழு நாட்­டுக்கும் தவ­றான தக­வலை வழங்க முற்­ப­டு­கின்றார். சைட்டம் என்­பது தெற்­கா­சிய தொழில்­நுட்ப முகா­மைத்­துவ கல்­லூரி . அதனைப் புரிந்து கொள்­ளுங்கள் என்றார்.

இச்­ச­ம­யத்தில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி வௌியிட்­ட­தாக கூறப்­படும் வர்த்­த­மான அறி­வித்­தலின் பிர­தி­யினை சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­யவின் கவ­னத்­திற்கு சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல கொண்டு வந்தார்.

அதனை பெற்­றுக்­கொண்ட சபா­நா­யகர் குறித்த வர்த்த மானியை முழு­மை­யாக வாசித்­த­துடன் அதனை தினேஷ் குண­வர்த்த எம்.பியி­டத்தில் காண்­பிக்­கு­மாறும் பணித்தார்.

தினேஷ் குண­வர்த்த எம்.பி அந்த பிர­தி­யினை பெற்­றுக்­கொண்ட போதும் அதனை தனது மேசையில் வைத்­து­விட்டு சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தவ­றாக வழி­ந­டத்­து­கின்றார். பொய்­கூ­று­கின்றார் என்று கூறி­ய­வாறே இருந்தார்.

இதன்­போது சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல , நீங்கள் தான் அனு­ம­திக்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை செய்­தீர்கள். தற்­போது எதிர்க்­கின்­றீர்கள். என்ன நியாயம். நீங்கள் தான் தவ­றி­ழைத்­துள்­ளீர்கள். ஆகவே நீங்கள் இந்த சபையில் மட்­டு­மல்ல முழு­மை­யான நாட்­டி­டமும் மன்­னிப்­பினை கோர­வேண்டும். அதுவே தேசி­யத்­திற்கு நீங்கள் செய்யும் பிர­தி­யு­ப­கா­ர­மாக இருக்கும் என்றார்.

இச்­ச­ம­யத்தில் ஒழுங்கு பிரச்­சி­னையை எழுப்­பி­ய­வாறு எழுந்த அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கூறு­கையில், சைட்டம் மருத்­துவ கல்­லூரி முற்­றிலும் சட்­ட­வி­ரோ­த­மா­னது. இதனை முறை­யான நிலை­மைக்கு கொண்டு வர வேண்டும் 2009 ஆம் ஆண்டு முதல் சைட்டம் கல்­லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டதில் இருந்து இன்றை வரை பட்டம் வழங்­கப்­பட்­ட­மைக்கு அப்­ப­டி­யாயின் யார் பொறுப்பு கூறு­வது என கேள்வி எழுப்­பினார்.

இதே­போன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசமும், அன்று நான் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது சைட்டம் கல்­லூ­ரிக்கு மருத்து பட்டம் வழங்க அனு­மதி வழங்­கி­யமை, மருத்­துவ பட்­டப்­ப­டிப்­பிற்­காக மாண­வர்­களை உள்­வாங்­கி­ய­மைக்­காக எதிர்ப்புத் தெரி­வித்து சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருந்தேன் என்று சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் கூட்டு எதி­ர­ணி­யினர் தொடர்ந்து எதிர்ப்­புக்­களை வௌியிட்­டுக்­கொண்­டி­ருந்த நிலையில் தினேஷ் குண­வர்த்த எம்.பி, 7ஆயிரம் பேருக்கு மாபொல புல­மைப்­ப­ரிசில் வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டள்ளது. அதனை வழங்குங்கள். இது உங்களுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை அல்ல என்று வலியுறுத்தினார்.

இச்சமயத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அன்று எமது கட்சியின் சிரேஷ்ட அரசியல் வாதியான லலித் அத்துலத் முதலில் வறிய மாணவர்களுக்கு மாபொல புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்தினார். பல்கலைக்கழகத்திற்கு வருகை தருபவர்களுக்கே இது வழங்கப்படும். பல்கலைக்கழகத்திற்கு வருகை தராது பகிஷ்பவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படாது. அதற்காக இத்தகைய விசேட திட்டத்தை அவர் ஆரம்பிக்கவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து இவ்வியடத்தினை நீடித்துச்செல்வதற்கு இடமளிக்க முடியாது என கடுமையான தொனியில் குறிப்பிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய அடுத்த விடயத்திற்கு நகர்ந்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.