Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலம் உவர் தன்மையானதால் வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி

Featured Replies

நிலம் உவர் தன்மையானதால்   வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி

நிலம் உவர் தன்மையானதால்     வாழ்வதற்கு வழியின்றி பல கிராம மக்கள் அவதி
 

கிளி­நொச்சி, பூந­க­ரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்பட்ட 2 ஆயி­ரம் ஏக்­க­ருக்­கும் அதி­க­மான வயல் காணி ­க­ளுக்­குள் கடல் நீர் உட்­பு­கு­கின்­றது.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக அவற்­றில் எந்­த­வித பயிர்ச் செய்­கை­யும் செய்­ய­மு­டி­யா­துள்­ளது. அங்­கி­ருந்த 50க் கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“இது தொடர்­பாக அரசோ, அதி­ கா­ரி­களோ கரி­சனை கொள்­ள­வில்லை. பல ஏக்­கர் காணி­களை கைவிட்டு விட்டு தற்­போது கால் ஏக்­கர் காணி­க­ளில் விவ­சா­யம் செய்­கின்­றோம்.”- என்று பாதிக்­கப்­பட்ட மக்­கள் விரக்­தி­யு­டன் தெரி­வித்­த­னர்.

“நாச்­சங்­குடா, குஞ்­சுக்கு­ளம் கிரா­மங்­க­ளில் 1950 ஆம் ஆண்­டுக்கு முற்­பட்ட காலத்­தில் இருந்தே நாங்­கள் வாழ்­கின்­றோம். புந­கரி மண்­டைக்­கல் ஆற்­றில் இருந்து சுமார் 6 கிலோ மீற்­றர் தொலை­வில் எமது கிரா­ மங்­கள் உள்­ளன. இங்கு வயல் காணி­களே அதி­க­மாக இருந்­தது.

வயலை நம்­பியே எமது வாழ்­வா­தா­ரம் இருந்­தது. நூற்­றுக் கணக்­காண ஏக்­கர் நிலங்­க­ளில் பயிர்ச் செய்­கையை மேற்­கொண்டு வச­தி­யாக வாழ்ந்­தோம்.

பிற்­கா­லத்­தில் எமது நிலங்­க­ளில் கடல் நீர் உட்­புக ஆரம்­பித்­து­விட்­டது.
இது தொடர்­பாக அந்த காலத்­தில் இருந்த அர­சி­யல் வாதி­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் தெரி­வித்­தோம்.

நாங்­கள் ஏறாத அலு­வ­ல­கங்­கள் இல்லை, பார்க்­காத அதி­கா­ரி­கள் இல்லை. இருந்தும் நட­வ­டிக்­கை­கள் ஏதும் எடுக்­கப்­ப­ட­வில்லை, தொடர்ச்­சி­யாக கடல் நீர் உட்­புக ஆரம்­பித்­தது.

வய­லில் கடல் நீர் புகுந்­தது. பயிர்ச் செய்கை படிப்­ப­டி­யா­கப் பாதிப்­ப­டைந்­தது. 1981 ஆம் ஆண்­ட­ள­வில் அந்த நிலங்­க­ளில் பயிர்­கள் வள­ர­வே­யில்லை. வாழ்­வா­தா­ரத்­திற்கு என்ன செய்­வது என்று தெரி­யாது நாங்­கள் அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்­தோம்.

பின்­னர் ஏற்­பட்ட போர் கார­ண­மாக மீண்­டும் மீண்­டும் இடப் பெயர்­வு­க­ளைச் சந்­தித்­தோம் தற்­போது கூட எமது சொந்த இடத்­துக்கு செல்ல முடி­யாது வெறும் கால் ஏக்­கர் நிலங்­க­ளில் பயிர்ச் செய்­கையை மேற்­கொண்டு வாழ்­கின்­றோம். எமது கிரா­மத்தை அண்டி செக்­காணி, அரச புரம், பத்­தி­னிப்­பாய் ஆகிய கிரா­மங்­கள் இருந்­தன.

அவை­யும் தோட்­டக்­கா­ணி­கள். அந்த காணி­க­ளி­லும் படிப்­ப­டி­யாக கடல் நீர் உட்­பு­குந்­தது. தோட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­டன. தற்­போது அங்­கும் தோட்­டம் செய்ய முடியா நிலை ஏற்­பட்­டுள்­ளது. மீண்­டும் அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

மண்­டைக்­கல் ஆற்­றில் இருந்து எமது கிரா­மத்­துக்கு செல்­லும் வரை அடந்த காடு­கள் முன்­னர் காணப்­பட்­டன. பாலை, வீரை முதிரை போன்ற மரங்­கள் நின்­றன. இப்­போது அங்கே எந்த ஒரு மர­மும் இல்லை. உப்பு நீர் அனைத்து மரங்­க­ளை­யும் கருக்­கி­விட்­டது. அனைத்­தும் அழிந்து விட்­டன.

இது அதிகாரிக்ளுக்கு தெரியாதா?. ஒரு பிரதேசம் அழிகின்றது என்றால் அதை தடுத்து நிறுத்த முடியாதா இவர்களால்?. அதிகாரிக ளும் அரசியல் தலைவர்க ளும் எமது கிராமம் தொடர் பான நடவடிக்கைகளை யும் எடுக்க முன்வர வேண்டும். நாங்கள் அங்கு மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.

எமது சந்ததிகள் அங்கு வாழ வேண்டும். ஏன் இவர்கள் இதுவரை அந்த கிராமத்தை பற்றி சிந்திக்கவில்லை.?”- என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.

http://uthayandaily.com/story/5674.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.