Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருகுலராசா கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

Featured Replies

குருகுலராசா கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

 

 

குருகுலராசா கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
 

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தன்னிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எனினும், இந்தக் கடிதம் தொடர்பில் எவ்விதத் தகவல்களையும் வெளியிட முடியாது என மாவை சேனாதிராஜா நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மாகாணக் கல்வி அமைச்சரால் அவருடைய கட்சிக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தகவல்கள் தமக்கு தெரியாது எனவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டதாக அவருடைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதேவேளை, வட மாகாண அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை சாதாரணமான விடயமாகக் கருதுவதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒய்வு பெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் எஸ்.பத்மநாதன் ஆகியோர் வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த. குருகுலராசா ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையினால், அவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விசாரணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் 90 வீதமானவை மாகாண சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/06/ஊழல்-குற்றச்சாட்டு-குரு/

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் வடமாகாண கல்வி அமைச்சர்

 
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பதவி விலகியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது முடிவு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், அவை குறித்து விசாரணைகள் நிறைவடையும் வரையில் தாம் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக த.குருகுலராசா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விளக்கங்களை அளிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் நேற்று வரையில் கால அவகாசம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சர்கள் இருவரும் தனது விளக்கங்களை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

லங்காசிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.