Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருகுலராசா இராஜினாமா

Featured Replies

குருகுலராசா இராஜினாமா
 

வடமாகாண சபையின்  கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429

  • தொடங்கியவர்
குருகுலராசா இராஜினாமா
 

image_b300ebc239.jpg

வடமாகாண சபையின்  கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.

வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/குருகுலராசா-இராஜினாமா/150-198429

  • கருத்துக்கள உறவுகள்

இராஜினாமா என்றால் ஒருவழிப்பாதை அப்பு போனால் போனதுதான் திரும்பி வரமுடியாது.
அப்படியென்றால்  குற்றம் நிருபிக்கப்படும்வரை கட்டாய விடுமுறையில் செல்லுங்கள்.
நீங்கள் நிரபராதியென்றால் திரும்பிவரலாம். சும்மா மக்களை ஏமாற்றாதீர்கள்.

  • தொடங்கியவர்

வட மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார்

 


வட மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார்
 

வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா மறுத்துள்ள போதிலும் பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 4 அமைச்சர்களின் ஊழல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டதுடன் அந்தக்குழு, விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வட மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அந்த செய்தி மேலும் தொடர்கின்றது.

குறித்த விசாரணைக்குழுவால் 80 பக்க அறிக்கை ஜூன் மாதம் 6 ஆம் திகதி வட மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதில் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சுக்களில் ஊழல் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி ஐலண்ட் பத்திரிகையின் குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

இதைத் தொடர்ந்து விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கும் அமர்வை ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்கு வட மாகாண சபை ஒத்தி வைத்துள்ளதாகவும் தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/06/வட-மாகாண-கல்வி-அமைச்சர்-த/

  • தொடங்கியவர்

இராஜினாமா செய்ததாக வெளிவந்துள்ள செய்திகளை மறுத்துவிட்டார் குருகுலராசா

 


இராஜினாமா செய்ததாக வெளிவந்துள்ள செய்திகளை மறுத்துவிட்டார் குருகுலராசா
 

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சர் தியாகராசா குருகுலராசா பதவி இராஜினாமா செய்ததாக வெளிவந்துள்ள செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மாகாண கல்வி அமைச்சர் தியாகராசா குருகுலராசா மற்றும் அவரது ஊழலுக்கு உடந்தையாக செயற்பட்ட அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட வேண்டும் என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அமைச்சர் ஐங்கரநேசனும் அவரது செயலாளரும் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

வட மாகாண சபையின் அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் விசாரணைகளின் போது சமூகமளிக்காததால் அவர்கள் இருவரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை அடுத்து, வட மாகாண சபையின் அமர்வு நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரித்த மூவரடங்கிய குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட வட மாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

வட மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

வட மாகாண கல்வி அமைச்சர் தாம் வகித்த பதவியில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதற்கான இராஜினாமாக் கடிதத்தை இலங்கை தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழ் மிரர் பத்திரிக்கை இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் அமைச்சர் தி.குருகுலராசாவிடம் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது, தாம் பதவியை இராஜினாமா செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனே இறுதி முடிவை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/06/இராஜினாமா-செய்ததாக-வெளிவ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.