Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்படும் - க.ஞானசீலன்

Featured Replies

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார்.

அந்த விசாரணை அறிக்கை சரிவர வெளிவந்த பின்பு அதாவது இரண்டு அமைச்சர்கள் குற்றமிழைத்தார்கள் என்றும், இரண்டு அமைச்சர்கள் நிரபராதிகள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அறிக்கையில் நிரபராதிகள் என தெரிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் ஒரு மாத கட்டாய விடுமுறையில் அனுப்புவதென்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

நீதீபதிகள் அடக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையை ஒரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீதியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது தெளிவாக புலனாகின்றது.

எனவே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீது வீன் பழியை முதலமைச்சர் சுமத்தியுள்ளார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். விசாரணைக் குழுவின் அறிக்கையின் தீர்ப்பை அவர் சரியாக பார்க்கவில்லை. அவர் அரசியல் இலாபத்திற்காக செயற்பட்டுள்ளார்.

இதற்கு எமக்கு நீதி வேண்டும். கிடைக்காவிட்டால் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட குழு முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியில் குறித்த நபர் எந்த பதவியிலும் இல்லை என அவ் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/149142?ref=recommended1

  • தொடங்கியவர்
2 hours ago, Rajesh said:

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

அண்மைய சம்பவங்கள் மூலம் தமிழ் மக்கள் ஊழல் பெருச்சாளிகளையும் தமிழின விரோதிகளையும் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

அட இங்கு ibc நீட்டிக்கொண்டு இருக்கினம்  ஒருபக்க சார்பு ஓட்டகம்கள்.

எரித்தாலும் அந்தாள் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்பது இன்னும் இவருக்கு விளங்கலை.அதுசரி குற்றம் செய்தவனின் கொடும்பாவி எரிப்பது முறை அதைவிட்டு எதையோ நினைத்து எதையோ இடிப்பது போல் .....

  • கருத்துக்கள உறவுகள்

கொடும்பாவி எரிப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாக சொல்லியுள்ளார்.....அது சரி உவரை தனிய விட்டுவிட்டு மற்றவர்கள் ஏன் மாறிட்டினம்....


முதலமைச்சருக்கு ஆதரவாக வவுனியாவில் ஒன்று கூடினோர் அதிகம்...
 

  • தொடங்கியவர்
3 hours ago, Rajesh said:

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியில் குறித்த நபர் எந்த பதவியிலும் இல்லை என அவ் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் எந்த பதவியிலும் இல்லை

இவர் ஒரு கைக்கூலி!

அங்கிருக்கும் ஊடக அமைப்புக்களைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

சத்தியலிங்கத்தின் சமூகவிரோத முயற்சிகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

கொடும்பாவி எரிப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாக சொல்லியுள்ளார்.....அது சரி உவரை தனிய விட்டுவிட்டு மற்றவர்கள் ஏன் மாறிட்டினம்....


முதலமைச்சருக்கு ஆதரவாக வவுனியாவில் ஒன்று கூடினோர் அதிகம்...
 

ஆனால் தலையங்கம் முதல்வர் மீது சேறு அடிக்கிறதே புத்தன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.