Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவாலி படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு

Featured Replies

நவாலி படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு

 

தமிழர் வரலாற்றில் மக்களால் ஜீரணித்துப் பார்க்க முடியாத படுகொலை என்றால் அது நவாலி படுகொலையாகும்.

இப்படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை. ஆலய வீதிகளில் தஞ்சமடைந்த வேளை யில் 13 குண்டுகளுக்கு 147 பேர் கொலை யுண்ட கோரமான தினத்தின் நினைவு நாள் 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நவாலித் தாக்குதல் சம்ப வத்தை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  

முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்பு ரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட சம்ப வத்தை நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்கின்றோம். இந்த கொடுமையான நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலய உயிரிழப்பு சர்வதேச சமூகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளா க்கியதுடன், தமிழ் மக்களை சொல் லொணாத் துயரத்துக்கும் இட்டு சென்றது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நவாலியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள் ஜூலை 09 ஆம் திகதியாகும்.  

அன்று தான் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் (சின்னக்கதிர்காமம்) ஆலயம் என்பவ ற்றின் மீதான விமானத்தாக்குதலில் அப்பாவி களான 147 மக்கள் காவு கொள்ளப்பட்டனர். வலிகாமம் முழுவதும் இடம்பெற்ற வான் தாக்குதலால் அந்தப்பகுதி முழுவதும் அதி ர்ந்து கொண்டிருந்த வேளையில், மாலை நேரத்தில் மக்கள் இடம்பெயர்ந்து கொண் 

டிருந்த தருணத்தில் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை அது. வடமாகாணத்தின் நவாலியூர் வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாளில் நிகழ்ந்த உயிரிழப்புகளை தமிழினம் ஒருபோதும் மறக்காது. மறக்க முடியாது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி.பி.சி.தமி ழோசை செய்தி நிறுவனம் செய்தி வெளி யிட்டது. முன்நோக்கிப்பாய்தல் எனப் பெயரி டப்பட்ட லீப் போர்வேர்ட் இராணுவ நடவ டிக்கையை வலிகாமம் பகுதியில் தொட ங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந் தும் மிகக்கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும் குண்டுதாக் குதல் களையும் மேற்கொண்டிருந்தனர்.  

திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு, வலி.தெற்கு, வலி. வடக்கு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள், ஆலயங்கள், பொது நிலையங்கள், அரச மற்றும் பொது நிறுவனங்களை நோக்கி காலை 5.20 மணியில் இருந்து விமானத் தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் சரமாரியாக நடத்தப்பட்டன.

இந்த வேளையில், சகல வீதிகளிலும் உலங்கு வானூர்திகளின் தாக்குதல் மற்றும் அகோரமான ஷெல் தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயப்பட்டவர்கள், இறந்த வர்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கூட இல்லை. வாகனங்களை இயக்குவதற்கு எரிபொ ருள்களும் அற்ற பொருளாதார தடையால் பெருமந்தமான காலப்பகுதி அது. இதே நேரம் காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் களைக் காப்பாற்ற மருந்தகங்களோ, வைத்தி யசாலைகளோ இயங்க முடியாத அவல நிலை.  வைத்தியசாலைகளிலும் மருந்துகளோ வைத்தியர்களோ காணப்படாத சூழல் நிலவியது. இறுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி இறந்த நிகழ்வுகளையும் நாம் மறக்க முடியாது. அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளின் ஊடாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களின் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக் கதிர்காம முருகன் ஆலய த்திலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறி அசதியால் படுத்து உறங்கினர்.  

இந்த வேளையில் யாழ்.நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தொடர்ச்சியாக 13 குண்டுகள் தான்தோன்றித் தனமாக மக்கள் ஒன்று கூடியிருந்த மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. அவ்வளவு தான் நவாலி கிராமம் ஒருகணம் அதிர்ந்தது. வீதிகள் தடை

பட்டு மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பெரிய புகைமூட்டம் உருவானது. நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயமும் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் அதிர்ந்தன. முற்றாக அழிந்து சிதைந்தன. சுமார் 147 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள். இந்த நிகழ்வில் கையிழந்து, காலிழந்து, தலையி ழந்து, உடல் சிதறி, குற்றுயிராகக் கிடந்த மக் களை எம்மால் இலகுவில் மறந்து விட முடி யாது.  

சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காய மடைந்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்திபலர் உயிரி ழந்ததை காண கூடியதாக இருந்தது. அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் பங்குகொண்ட வலி.தென் மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைக் சேர்ந்த நவாலி வடக்கு கிராம அலுவலர் செல்வி. ஹேமலதா செல்வராசா, சில்லாலை பிரிவு சிரேஷ்ட பிரிவு கிராம அலு வலரான பிலிப்பிள்ளை கபிரியேல் பிள்ளை ஆகியோர் சேவையின் போது ஸ்தலத் தில் மரணமான அரச சேவையாளர்கள் ஆவர்.  

அன்றைய தினம் மக்கள் தொண்டுப் பணியில் ஈடுபட்டு உணவு, குடி தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்க ளும் அந்தந்த இடத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை மறக்க முடியாது.  

இதனை நினைவு கூரும் முகமாக நாளை ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நவாலி சென்.பீற்றர்ஸ் திறந்த வெளி அரங்கிலும், நவாலி ஸ்ரீ சின்னக் கதிர்காம முருகன் ஆலயத்திலும் ஆலயப் பிரதம குரு சிவத்திரு மாரிமுத்து பத்மநாதன் தலைமையில் காலையிலும் மாலை யிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவு ள்ளன. இதேவேளை நவாலி வடக்கு சோம சுந்தரப்பு லவர் வீதியிலும், நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயப் பகுதியிலும் படு கொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. ஜூலை09 ஐ தமிழர் தேசம் என்றும் மறந்திடாது சோக தினமாகும். 

செ.ரமேஷ்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-8

  • கருத்துக்கள உறவுகள்

இதன் சூத்திரதாரிகள் இன்றும் குற்றத்துக்கு தண்டனை இன்றி.. சுதந்திரமாக தப்பி வாழ்கின்றனர். எம்மவர்களே அவர்களை தப்பிக்கவும் வைத்துள்ளனர்.. தம் சுயபோக சுகபோகத்திற்காக. :rolleyes:tw_angry:

நினைவு வணக்கங்கள். 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

நவா­லிப் படு­கொ­லை­யின் 22ஆவது நினைவு இன்று

 
நவா­லிப் படு­கொ­லை­யின் 22ஆவது நினைவு இன்று
 

நவாலி சென். பீற்­றர்ஸ் தேவா­ல­யம் மீதான தாக்­கு­த­லில் படு­கொலை செய்­யப்­பட்ட 147 பேரின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நவாலி சென். பீற்­றர்ஸ் தேவால­யத்­தி­லும், நவாலி சிறி கதிர்­காம (சின்­ன­க­திர்­காமம்) முரு­கன் ஆல­யத்­தி­லும் சிறப்பு வழி­பா­டு­க­ள் இடம்பெற்று நினைவு கூரப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

1995-ஆம் ஆண்டு வலி­கா­மத்­தில் அரச படை­க­ளது முன்­னே­றிப் பாய்ச்சலில் படை நட­வ­டிக்­கை­யால் இடம் பெயர்ந்து நவாலி சென்.பீற்­றர்ஸ் தேவா­ல­யத்­தி­லும், நவாலி சிறி கதிர்­காம முரு­கன் ஆலய சூழ­லி­லும் பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் தங்­கி­யி­ருந்­த­னர்.

அவர்கள் மீது 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி இலங்கை வான் படை­யின் புக்­காரா போர் விமா­னங்­க­ளின் மூலம் குண்­டு­களை வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தாக்­கு­தல் கார­ண­மாக தேவா­ல­யத்­தில் தங்­கி­யி­ருந்த 147 அப்­பா­விப் பொது மக்­கள் உயி­ரி­ழந்­த­னர்.360க்கும் மேற்­பட்ட பொது மக்­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்தக் கோரச் சம்­ப­வம் இடம்­பெற்று இன்று 22 ஆண்­டு­கள் நிறை­வ­டை­கின்­றன. 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை 6 மணி­ய­ள­வில் பங்­குத்­தந்தை றோய் பேடி­னன் தலை­மை­யில் நவாலி சென்ற் பீற்­றர்ஸ் ஆல­யத்­தில் சிறப்பு வழி­பா­டு­க­ளு­டன் இடம்பெற­வுள்­ளது.

இன்று மாலை 5.30 மணி­ய­ள­வில் நவாலி சிறி கதிர்­காம (சின்­ன­க­திர்­காம) முரு­கன் ஆல­யத்­தி­லும் ஆலய முதன்மைக்குரு சிவஸ்ரீ மாரி­முத்து பத்­ம­நா­தன் தலை­மை­யில் சிறப்பு வழி­பா­டு­கள் இடம்­பெ­ற­வுள்­ளது. நவா­லி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள நவாலி வடக்கு புல­வர் வீதி­யில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்­னங்­க­ளி­லும் “ஒளித்­தீ­பம்” ஏற்றி உறவுகளால் நினைவு கூரப்படும்.

இதே­வேளை மறைந்­த­வர்­கள் ஞாப­கார்த்­த­மாக இன்று நவா­லி­யில் குருதிக் கொடை நிகழ்­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குண்­டுத்­தாக்­கு­த­லில் மறைந்த ஹேம­லதா செல்­வ­ராஜா கிராம அலு­வ­லர் ஞாப­கார்த்­த­மாக பாட­சாலை வறிய மாண­வர்­கள் 50 பேருக்கு ஹேம­லதா ஞாப­கார்த்த நிதி­யத்தால் கல்வி உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன என தெரி­விக்­கப்­பட்­டது.

http://uthayandaily.com/story/10397.html

புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட  எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.
 
இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள்.
 
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபது வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.
 
உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
 
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.
 
இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச்  செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.
 
உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.
 
இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் –  தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.
 
நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும்  அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.
 
போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள்.  அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.
 
சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.
 
போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/32267

  • தொடங்கியவர்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது

IMG_8382.jpg


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற  பங்குத்தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

 

IMG_8165.jpg

IMG_8167.jpg

IMG_8179.jpg

IMG_8198.jpg

IMG_8217.jpg

IMG_8224.jpg

IMG_8356.jpg

IMG_8378.jpg

IMG_8380.jpg

IMG_8382-1.jpg

IMG_8414.jpg

http://globaltamilnews.net/archives/32307

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.