Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை ஏமாற்றுவது தமிழ் தலைமைகளே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

தமிழர்களை ஏமாற்றுவது தமிழ் தலைமைகளே - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது தமிழ் தலைவர்களேயன்றி சிறிலங்கா அரசாங்கம் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வைத்தியர் நா.பன்னீர்செல்வம் எழுதிய விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் மற்றும் தடம் என்ற இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் உரையாற்றுகையில்,

1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம்.

ஏனெனில் அப்போதே 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது, குறித்த முறைமையை அப்போதிருந்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரம் ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கு இணைந்த தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியாவை கொண்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்று கொள்ளலாம் என்பதாகும்.

ஆனால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளோம். இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அன்று ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளாத எம்மைக் கொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது.

எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல, எமது தலைமைகளே துரோகம் செய்கின்றது.

http://thuliyam.com/?p=72946

திரு கஜேந்திரகுமார் சரியாகத்தான் கூறியிருக்கின்றார்.அவரது பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் சிங்கள அரசில் அமைச்சர் பதவிக்காக பத்து இலட்சம்  மலையகத் தமிழரது குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்ததே தமிழருக்கு எதிரான முதலாவது துரோகமாகும். 

இதன் விளைவாக   இலங்கைநாடாளுமன்றத்தில்  தமிழரின் பலம் அரைவாசியால் குறைந்தது.சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டநாடாளுமன்ற உறுப்பினர்  20பேரின் 10 பேர் அடுத்தமுறை தெரிவு செய்யப்பட முடியாமல் போயிற்று. 5,25 000 பேரும் அவர்களது தலைமுறையினரும் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர் 
 
மலையகத் தமிழரது  குடியுரிமையைப் பறித்த  இந்தக்குடியுரிமைச்   சட்டத்துக்கு ஆதரவளிப்பதை   அன்று தமிழ்க் காங்கிரஸ் கட்சியில்  இருந்த தந்தை செல்வநாயகம்கடுமையாக  எதித்தார்.ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆதலால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறித் தமிழசுக் கட்சியைத் தொடங்கினார்  என்பது வரலாறு ஆகும்.
 
 திரு கஜேந்திரகுமாருக்கு அன்றைய தமிழ்த்தலைவரான  தனது பாட்டனாரின்ஏமாற்றுவேலை, துரோகத்தனம்  நினைவு வந்திருக்கிறது போல தெரிகின்றது 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gari said:

40 வருடங்களுக்கு முன்னர் செத்துப்போன GG ஞாபகம் வருகிறது, ஆனால் 2017 இலும் தனது எதிர்கட்சி பதவிக்காக சம்பந்தர் செய்வது உங்களுக்கு தெரியவில்லை.

9 hours ago, MEERA said:

40 வருடங்களுக்கு முன்னர் செத்துப்போன GG ஞாபகம் வருகிறது, ஆனால் 2017 இலும் தனது எதிர்கட்சி பதவிக்காக சம்பந்தர் செய்வது உங்களுக்கு தெரியவில்லை.

ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இவர்களுக்கு அது எப்படித் தெரியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.