Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா?

Featured Replies

மயிலிட்டியின் பல்வேறு ஆலயங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டுள்ள ஆலயங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா? என எண்ணத் தோன்றியது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 14ம் ஆண்டு நிறைவு விழாவும், புதிய மேல்மாடிக் கட்டிடத் திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கின் மயிலிட்டிப் பகுதியில் அமைந்துள்ள வீரமாணிக்கம் துறை கண்ணகை அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்ட பின்னர் திறக்கப்பட்டு முதன்முதலாக சனிக்கிழமை பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்த ஆலயத்தில் காணப்பட்ட சித்திரத் தேர் சரிந்த நிலையிலிருந்தது. இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களிலும் ஒரு மணிக்கூட்டுக் கோபுர மணி வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

வெள்ளைப் பொளி கல்லினாலான ஆலயத்தின் கோபுரத்திற்குத் தெய்வாதீனமாகச் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதும் ஆலயத்தின் ஏனைய பகுதிகள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சுவாமி விக்கிரகங்கள் ஒன்றையும் காண முடியவில்லை. 300 , 400 வருடங்களாக நாம் போற்றிப் பாதுகாத்த தெய்வத் திருவுருவங்கள் கடலுக்குள் வீசப்பட்டிருக்குமோ எனக் கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவித்த போது அந்தச் செய்தி எனக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த ஆலயத்திற்கு மயிலிட்டியைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து பொங்கிப் படையல் செய்து ஆலயத்தினதும், தமது வசிப்பிடங்களின் நிலைமையையும் எண்ணிக் கதறி அழுது வழிபட்டார்கள்.

இந்த ஆலயத்தில் நீண்டகாலமாகப் பூசை வழிபாடுகள் மேற்கொண்டு வந்த குமாரசாமி சிவாச்சாரியார் வயது முதிர்ந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ள போதும் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவருக்கு ஊர் மக்கள் கெளரவிப்பு நிகழ்வொன்றைச் செய்திருந்தார்கள்.

கெளரவத்தைப் பெற்றுக் கொண்ட சிவாச்சரியார் என் உடலை விட்டு உயிர் பிரியப் போகின்றது. இவ்வாறான நிலையில் எமது ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வங்களுக்குத் தீபம் காட்டுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டியுள்ளது என்று கூறி விக்கி விக்கி அழுதார். அவர் கூறியதைக் கேட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டால் மக்களும், ஆலயங்களும் எதிர்நோக்கியிருக்கும் பரிதாப நிலைமையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனாலும், மயிலிட்டி மக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் சேதமடைந்த எமது ஆலயங்களையும், கிராமத்தையும் மீளக் கட்டியெழுப்புவோம் என என் முன்னால் சபதமெடுத்துள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கூறியமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர்களின் எண்ணம் நிறைவேறப் பிரார்த்திக்கின்றேன்.

மயிலிட்டி மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் உறுதுணையாகவிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/151473?ref=home-feed

 
6 hours ago, போல் said:

மயிலிட்டியின் பல்வேறு ஆலயங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டுள்ள ஆலயங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா? என எண்ணத் தோன்றியது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மாவை, சுமந்திரன் எல்லாம் மேடையிலேறி சகலத்தையும் விடுவித்ததுக்கு நன்றி என்று சொன்னது பச்சைப்பொய் என்று அந்த மண்ணிலேயே வாழும் ஒருவர் சொல்லியிருக்கிறார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.