Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம்

Featured Replies

ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம்

 

 

ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம்
 

வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது.

இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே.

195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது.

கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுை

இதனால் பஸ்கள் வீதியோரங்களில் நிறுத்தப்படுவதை இன்றும அவதானிக்க முடிகிறது.

195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

http://newsfirst.lk/tamil/2017/07/107170/

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இது சகஜமப்பா....

  • தொடங்கியவர்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும்.

 

20106815_10213306896376059_4932329636223674146_n1.jpg

வவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் மூலம் போக்குவரத்து தொடர்பான ஒழுங்குவிதிகளை தயாரித்து வர்த்தமானி மூலமாகவும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வடமாகணத்தில் இணைந்தநேர அட்டவணையினை அமுல்ப்படுத்தல் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை செயற்ப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலானது அமைச்சர் அவர்களினால் அனைத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுத்து கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் இணைந்தநேர அட்டவணை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன், சேவை வழங்குனர்களான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்கும் ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு இவைதொடர்பான ஏதேனும் ஏற்பாடுகள் இருப்பின் அவற்றினை அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுள்ளது. மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சேவை வழங்குனர்களினால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் கருத்தில்கொண்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அதனைத்தொடந்து மூன்று நாட்கள் கால அவகாசத்தில் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்தநேர அட்டவணைப்படி சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்ட செயலாளர், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் உயர்மட்ட அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

19895097_10213306932536963_4106368165047269698_n1.jpg
 
 
19989493_10213306936857071_7665997148959505130_n1.jpg
 
 
 
19990079_10213306934857021_8807998639483542881_n1.jpg
 
19990579_10213306892455961_1201073241310886331_n3.jpg
 
 
 

http://globaltamilnews.net/archives/32773

  • 1 month later...
  • தொடங்கியவர்

வவுனியா புதிய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அதிருப்தி

 

 

வவுனியா புதிய  பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அதிருப்தி
 

வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய பஸ்
நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அது இன்று பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது.

புதிய பஸ் நிலையம் செயற்படாமை தொடர்பில் பல தரப்பினரும் அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.

பெருந்தொகை செலவில் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா புதிய, பஸ் நிலையம் பயன்பாடின்றி காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/08/வவுனியாவில்-புதிதாக-நிர்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.