Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை மீனவர்களுக்கு முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் துணை

Featured Replies

தென்னிலங்கை மீனவர்களுக்கு முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் துணை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோதமான தொழில்கள் அனைத்திற்கும் முல்லை மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றம் சாட்டியுள்ளது.

mullaitivu-fisherman.jpg

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையதின் பொருளாளர் எ.மரியராசா இக் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தல் ,டைனமைற் பயன்படுத்தி மீன்பிடித்தல்,வெளிச்சம்பாய்ச்சி மீன்படித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில்கள்  செய்யப்பட்டு  வருகின்றது. 

தென்னிலங்கை மீனவர்கள் இவ்வாறான தடை செய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கு முல்லை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை.

 

இதனால் சிறு தொழில்களை செய்யும் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதனால் கரையோரத்தில் உள்ள மணல் கிண்டப்பட்டு அந்த பகுதி பள்ளமாக மாறுவதுடன் கடல் அரிப்பை தடுப்பதற்கு கரையோரங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும் அடம்பன் கொடிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன.

 

இதேபோல் உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதனால் 40 மனிதர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் இல்லாமல்போகின்றது. இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் பல தடவைகள் முறைப்பாடு கொடுத்தும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை. அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியலவளத்துறை திணைக்களம் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக செயற்படாமல் தென்னிலங்கை மீனவர்களுக்காகவே செயற்படுகின்றது.

 

20 கடல்மைல்களுக்கு அப்பாலேயே அட்டை தொழில் செய்யவேண்டும் என சட்டத்தில் உள்ளது. ஆனால் முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களுக்காக 5 கடல் மைல்களுக்கு அப்பால் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் டைனமைற் பாவித்து மீன்பிடித்தல் போன்ற செய்ய கூடாது என சட்டத்தில் உள்ள நிலையில் 20 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் செய்யலாம் என அனுமதி வழங்கியிருக்கின்றார். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் காரணம் என்றார்.

http://www.virakesari.lk/article/21803

சட்ட திட்டங்களுக்கு அமைய வேலை செய்தால் நல்ல பெயர் மட்டும் கிடைக்கும். ஆனால் அவற்றை மீறி கள்ள வழிகளில் இயங்குபவர்களுக்கு அதிலும் அப்படி இயங்குகின்றவர்கள் வேற்று இனம் என்றால் அவர்களுக்கு உதவும் போது அதிக லாபமும் பயவியுயர்வும் கிடைக்கும். இப்படித்தான் நம் தமிழ் அதிகாரிகளில் பலர் எண்ணி செயல்படுகின்றனர்

சிங்கள அதிகாரிகளில் அனேகர் லாபம் கிடைக்கும் என்றாலும் தன் இனத்தின் நலன்களுக்கு எதிராக இயங்க விரும்பமாட்டார்கள்

புலிகள் தமிழ் அரச அதிகாரிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து செயற்பட்டது ஏன் என்று இப்ப புரிகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.