Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதை தொடர்பான புதிய அறிக்கையால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள்

Featured Replies

சித்திரவதை தொடர்பான புதிய அறிக்கையால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் 

 

 

(லியோ நிரோஷ தர்ஷன் )

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுகின்றது. 

new-repot.jpg

கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற சட்ட விரோத தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையிலான அறிக்கையினை சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம்  வெளியிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு படைகளின் சித்திரவதைகள் 2016/17 என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள குறித்த புதிய அறிக்கையானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம் நிறைவேற்று பணிப்பாளர் இந்த புதிய அறிக்கையை தயாரித்துள்ளார். 

இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. புதிய அரசு பதவிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் குறித்த வலையமைப்புக்களை கலைக்க தவறி விட்டன. மிகப்பெரிய இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்கள் மனித  கடத்தல்கள் அச்சுறுத்தி இலஞ்சப் பணம் பறித்தல் போன்ற விடயங்கள் இந்த குற்ற செயல்களில் அடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு  நிபுணர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா தலைமையில் இயங்கிவரும் மேற்படி மனித உரிமை நிறுவனத்தின் இவ் ஆதார அறிக்கையானது முன்னாள் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் மற்றும் சட்டத்தரணிகளான அருண் கணநாதன், கீத் குலசேகரம் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/21873

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றன

 

jasmin.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் சி;த்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது வரையில் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை சித்திரவதை செய்வது ஓர் வருமானம் தரும் வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது என  அவா  சுட்டிக்காட்டியுள்ளார். 2016 அல்லது 2017ம் ஆண்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/archives/32930

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.