Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் எச்சரிக்கை

Featured Replies

சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர்  பென் எமர்சன் எச்சரிக்கை

இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும்  செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. முன்­னேற்றமானது தாம­த­ம­டைந்­துள்­ளது   என்­ப­துடன் அந்த நடவடிக்கை கள­ரீ­தி­யாக  நிறுத்­தப்­பட்­டு­விட்­டது என்றே கூற­வேண்டும்.  

ben-emmerson.jpg

தற்­போ­தைய கள நிலை­மையை பார்க்கும் போது அர­சாங்கம்  குறிப்­பிட்ட கால வரைய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என எதிர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில்  சர்­வ­தேச சமூ­கத்தின் பொறு­மைக்கும் எல்லை இருக்­கின்­றது  என்று  இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை ஒடுக்கும் போது  அடிப்­படை சுதந்­திரம் மற்றும்  மனித உரி­மையை  பாது­காப்­பது தொடர்­பான  ஐ.நா.வின் விசேட நிபுணர்  பென் எமர்சன்  தெரி­வித்தார். 

 

இலங்கை அர­சாங்கம்  குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு   நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சலு­கை­களை இலங்கை இழக்­கலாம்.  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உள்ள இந்த  விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம்.  இவ்­வாறு  பல  நிலை­மைகள் ஏற்­ப­டலாம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

பயங்­க­ர­வாத தடை­சட்­டத்தின் கீழ்   தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள்  பல்­வேறு வகை­யான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். உல­கி­லேயே மிகவும் கீழ்த்­த­ர­மான சித்­தி­ர­வதை நிலைமை இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது.  தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­ய­வேண்டும். அல்­லது பிணையில் விடு­விக்­க­வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர்  கூறினார். 

பயங்­க­ர­வாத தடை சட்­ட­மா­னது இன்­று­வரை  தமிழ் சிறு­பான்மை  மக்­களை பாதிக்கும் ஒரு சட்­ட­மா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.  தற்­போது புதி­தாக  உரு­வாக்­கப்­ப­டு­கின்ற சட்­ட­மூலம் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்கள் உள்­ளன.  இந்த விட­யங்­களை ஆராய்ந்து  சர்­வ­தேச  தரத்­திற்கு அமைய புதிய சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வேண்­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார். 

 

இலங்­கையின்  பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித  உரிமை  ஊக்­கு­விப்­புக்கள் தொடர்பில் மதிப்­பீ­டு­களை  மேற்­கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த  ஐ.நா.வின் விசேட  நிபுணர் பென் எமர்சன் நேற்று தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக  கொழும்பிலுள்ள  ஐ.நா. அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அதில் தனது  மதிப்பீடுகளை  வெளியிடும்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார். 

http://www.virakesari.lk/article/21879

  • தொடங்கியவர்

இலங்கை தோல்வி

ஐ.நா.நிபுணர் கடும் சாடல்

இலங்கை  தோல்வி
 

“ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தில் இலங்கை தோல்வி கண்­டுள்­ளது.  அத்­து­டன், மனித உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தில் அர­சின் செயற்­பா­டு­கள் ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றன.”
இவ்­வாறு மனித உரி­மை­கள் மற்­றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன் தெரி­வித்­தார்.

இலங்­கைக்­கான 5 நாள் பய­ணத்­தின் நிறை­வில் அவர், கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நிலை­மா­று­கால நீதிச் செயற்­பா­டு­க­ளில் இலங்கை அர­சால் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் உண்­மை­யான முன்­னேற்­றத்தை உறுப்­ப­டுத்­து­வ­தற்கு போது­மா­ன­வை­யல்ல.

போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை நீதிக்கு முன்­னால் நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கி­றதா? என்­ப­தற்கு சிறி­ய­ள­வி­லான சான்­று­கூட இல்லை.

ரணி­லின் வாக்­கு­றுதி
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை மறு­சீ­ர­மைக்­கும் பணி நிறை­வ­டைந்­த­வு­டன், உண்மை மற்­றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்­கான சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தோடு, போரின் போது இரு தரப்­பு­க­ளா­லும் மேற்­கொள்­ளப்­பட்ட மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­கங்­க­ளில் ஈடு­பட்­டோர் மீது குற்­ற­வி­யல் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்க சிறப்பு வழக்­க­றி­ஞர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனிப்­பட்ட வகை­யில் உறு­தி­ய­ளித்­தார்.

சாத­க­மான அறி­கு­றி­கள்
இவை அனைத்­தும் அர­சால் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளா­கும். அதில் சில சாத­க­மான அறி­கு­றி­கள் உள்­ளன என்­பது நியா­ய­மா­னது.

போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தி­னர் நீதிக்கு முன்­னால் நிறுத்­தப்­ப­டு­வார் என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க உறு­தி­ய­ளித்­துள்­ளார். போர் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யில் 11 பேர் கடத்­தப்­பட்­டமை தொடர்­பான குற்­றச்­சாட்­டில் மூத்த கடற்­படை அதி­காரி கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

மேலும் சட்­டமா அதி­பர், இரா­ணு­வத்­தி­னர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தமது அலு­வ­ல­கத்­தி­டம் கைய­ளிக்­கப்­பட்­டால், அவர்­கள் சட்­டத்­தின் முன் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள் என்று வாக்­கு­று­தி­ய­ளித்­தார்.

பாது­காப்­புத் துறை­யில்
உட­னடி மறு­சீ­ர­மைப்பு

ஆனால் இந்த அறி­கு­றி­கள் இலங்கை அடிப்­ப­டைப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளுக்கு நீடித்து நிலைக்­கக் கூடிய தீர்வை காணும் என்ற பன்­னாட்டு அர்ப்­ப­ணிப்பு மிகக் குறைவு.
இலங்கை அனைத்து சமூ­கங்­க­ளுக்­கா­க­வும் சமத்­து­வம் மற்­றும் பொறுப்­பு­ணர்வு ஆகி­ய­வற்­றால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் இடைக்­கால நீதிக்­கான ஒரு அர்த்­த­முள்ள முறையை அமைக்க வேண்­டும்.தேசி­யப் பாது­காப்­பத் துறை­யில் உட­னடி மறு­சீ­ர­மைப்­பும் தேவைப்­ப­டு­கி­றது.

சித்­தி­ர­வதை மீது
விசா­ரணை குறைவு

தடுப்­புக்­கா­வல் சித்­தி­ர­வ­தை­கள் பெரும் பிரச்­சி­னை­யாக உள்ள போதும், அவை மீதான விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­வது மிக­வும் குறைவு. சந்­தே­க­ந­பர்­க­ளைச் சித்­தி­ர­வதை செய்­த­தாக இது­வரை 71 பொலிஸ் அதி­கா­ரி­கள் மீதே நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சமீ­பத்­தி­யப் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கை­யின்
நற்­பெ­ய­ருக்­குக் கறை

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவை, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து இடங்­க­ளுக்­கும் அனு­ம­திப்­ப­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் நீண்­ட­கா­லம் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். பல ஆண்­டு­க­ளின் பின் அவர்­கள் குற்­ற­வா­ளி­காக இனங்­கா­ணப்­ப­டு­வ­தில்லை.

இந்த வழக்­கு­க­ளில் தலைமை வழக்­க­றி­ஞ­ராக சட்­டமா அதி­பர் உள்­ளார். பிணை விண்­ணப்­பங்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்க அவ­ருக்கு முழு அதி­கா­ர­மும் உண்டு. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளோ­ருக்கு பிணை அனு­மதி வழங்க கடந்த காலங்­க­ளில் அவர் மறுத்­து­விட்­டார். எனி­னும் அண்­மைக் காலங்­க­ளில் நிலமை மாறத் தொடங்­கி­யுள்­ளது.
இதன் விளை­வாக, சட்­டத்­தின் ஆட்­சிக்கு முற்­றி­லும் பொருந்­தாத வகை­யில் நீதித்­து­றை­யின் கைகள் அதி­கா­ரி­க­ளால் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

அர­சி­யல் கைதி­க­ளுக்கு
பிணை வழங்­க­வேண்­டும்

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தற்­போது 81 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 70 பேர் 5 ஆண்­டு­க­ளுக்கு மேலாக எது­வித விசா­ர­ணை­க­ளு­மின்­றித் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

12 பேர் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலா­கத் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் உல­க­ல­ள­வில் இலங்­கை­யின் நற்­பெ­ய­ருக்கு கறை­ப­டிந்த விட­ய­மா­கும். அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் பிணை­யில் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும். அல்­லது அவர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு சில மாதங்­க­ளுக்­குள் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும். ஆனால் அது வரு­டக் கணக்­கில் தாம­திக்­கக் கூடாது – என்­றார்.

இதே­வேளை, மனித உரி­மை­கள் மற்­றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், இலங்கை அர­சால் உட­ன­டி­யாக நிறை­வேற்­றப்­பட வேண்­டிய விட­யங்­கள் தொடர்­பில் பரிந்­து­ரை­க­ளை­யும் முன்­வைத்­தார்.

தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் நீதியை நிரந்­த­ர­மாக செயற்­பாட்­டுச் சம­மா­கும். தடுப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் விட­யம் தொடர்­பில் நீதியை மறு ஆய்­வுக்­குட்­ப­டுத்­து­வ­து­டன், அவர்­க­ளுக்கு நியா­ய­மான உத்­த­ர­வா­தங்­களை வழங்­கு­வதை இலங்கை அரசு உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்­டும்.

பொலி­ஸால் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டும் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் விசா­ரணை செய்­வ­தற்கு ஒரு சிறந்த வழி­மு­றையை அரசு நிறுவ வேண்­டும். பங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொலி­ஸா­ரி­டம் வழங்­கப்­ப­டும் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை வழக்கு விசா­ர­ணை­யின் ஆத­ரா­மாக முன்­வைப்­பது தொடர்­பில் மீளாய்வு செய்­யப்­பட வேண்­டும்- என்­றார்.

http://uthayandaily.com/story/11621.html

போரின் போது சிறிலங்கா படையினர் மற்றும் தமிழ்ப் போராளிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் ஐந்து நாட்கள் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது பயணத்தின் முடிவில், நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் உண்மையில் தேக்கநிலையிலேயே இருக்கின்றன.

Ben Emmerson -una

நிலைமாறுகால நீதி கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக, சிறிலங்காவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானது அல்ல.

சிறிலங்கா ஆயுதப்படையைச் சேர்ந்தவர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டதற்கு எந்தச் சான்றும் இல்லை.

ஆயுதப் படைகளுக்குள்ளேயும், கூட்டு அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கின்ற பிற்போக்கு சக்திகள் இதனை முடக்கி வைத்திருப்பதுடன்,  மீண்டும் இனமுரண்பாடு ஏற்படுவதற்கான அச்சுறுத்தலும் உள்ளது.

கூட்டு அரசாங்கத்தினதும், பாதுகாப்பு கட்டமைப்பினதும் செயல்முறைகளை  இந்த பிற்போக்கு சக்திகள் திசை திருப்பி விட அனுமதிக்காதீர்கள் என்பதே, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான எனது வேண்டுகோளாகும்.

போரின் போதும், போருக்குப் பின்னரும் ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள்  தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/07/15/news/24587

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் வகையில்.. உலகத் தமிழ் அமைப்புக்கள் சர்வதேச அரங்கில் தமது குரலை வலுப்படுத்தி.. சர்வதேச அரசுகளின் பக்கச்சார்புகளை வெளிக்காட்டி.. காத்திரமான நீதி நடவடிக்கை நோக்கி நியாயமாக சர்வதேச மக்களை சிந்திக்கச் செய்ய வேண்டும்.

இதன் மூலமே.. நமக்கு சர்வதேச ஆதரவோடு நிகழ்த்தப்பட்ட அநியாயத்துக்கு சர்வதேச நீதியை தேடித்தரச் செய்ய முடியும்.

அதேவேளை.. இந்த முயற்சிகளை குழப்பி.. எஜமான விசுவாச சுயபோக சுகபோகம் காணத்துடிக்கும் எமது அரசியல்வாதிகளை ஓரம் கட்டும் வகையில்.. அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்திற்கு மக்களின் அதிருப்தியை பதிவு செய்து வழங்க வேண்டும்.. ஆதாரத்தோடு.

முயன்றால்.. இதனை இனப்பற்றுள்ள உலகத் தமிழ் மாணவர்கள் செய்யலாம். தாயகத்தில் உள்ள நியாயமான குரல்களை இணைத்து. 

Edited by nedukkalapoovan

ஐ.நா அறிக்கையாளர் - சிறிலங்கா அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம்

Ben Emmerson

சிறிலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு  குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் நாள் சிறிலங்காவுக்கு வந்திருந்தார்.

இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன் போதே இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐ.நாவின் தலையீடுகள் குறித்து விஜேதாச ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, ஐ.நாவுடன் ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பேன் என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், விஜேதாச ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.

அதற்கு விஜேதாச ராஜபக்ச, ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக பதிலளித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நா நியாயமற்றமுறையில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் செயற்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் எமர்சன் ஐ.நாவுக்கு அறிக்கையிட்டுள்ளார்.

நீதியமைச்சில் நடந்த இந்த வாக்குவாதங்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரும், உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/07/15/news/24585

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.