Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Featured Replies

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது கஜு கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

 

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

 

இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

 

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

 

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்

 

காரணங்கள்
சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்

 

வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்

 

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும்.

 

யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

 

அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன
உடல எடை இழப்பு
குமுட்டல் வாந்தி
பொதுவான உடல்நலக்குறைவு
சோர்வு
தலைவலி
அடிக்கடி ஏற்படும் விக்கல்
உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)

பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன
வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
அதிக தாகம் ஏற்படுதல்
தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
சுவாசம் நாற்றம் எடுத்தல்
உயர் இரத்த அழுத்தம்
பசியின்மை

 

எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்.

 

தடுப்புமுறை
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

 

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.

 

நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

 

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

 

சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

 

 

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது.

 

சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.

 

இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.

 

சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

 

இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம்.

 

அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது.

 

இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

 

அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை.
பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது. இது உண்மைதானா?

 

நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

 

 

கிட்னி கல் என்றால் என்ன?

 

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

 

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

 

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது

 

அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் – அறிகுறிகள்
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

 

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

 

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

 

ஆராய்ச்சியின் முடிவுகள்

 

Eric taylor MD மற் றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :
மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 

ஒன்று :-Health professionals follow up study 45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
இரண்டு :- Nurses Health study I 94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.
மூன்று :- Nurses Health study II 1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு

 

Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH
(Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.

 

இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,
அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

 

நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :–
மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,

 

நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

 

பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத்
தவிர்க்க வேண்டும்.

 

பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.
கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.

 

இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி,
அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

 

அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

 

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.
‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

 

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

 

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

 

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.

சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியன் பேசுகிறார்.

”மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115 முதல் 155 கிராம் எடை இருக்கும். இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது.

தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அதனால் இதை ‘சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பார்கள்.

சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்.

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும்.

 

உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு
சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

 

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

 

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.

4. குடிநீர் அளவு
வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

 

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்
மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும்.

 

எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…
சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் – சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

 

ரத்தம் – சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.
இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே,

 

இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.

 

https://vettrimurasu.com/archives/898

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.