Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிக வட்டியில் சிறு வணிக கடன் புதைகுழியில் சிக்கிய தமிழர்கள்

Featured Replies

இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார் என்றார்.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் வெறும் ரூ.2,630 (இலங்கை ரூபாயில் 6,270) ஆக உள்ளது.

போர் ஓய்ந்து இப்பகுதியில் இயல்புநிலை திரும்பிய நிலை யில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதாகக் கூறி சிறுகடன் நிறுவனங்கள் இப்பகுதியில் நிறையப் பெருகின. உண்மையில், அந்த நிறுவனங்கள் கடன் கலாச் சாரத்தையே ஊக்குவித்தன.

சிறுநீரகத்தை விற்க முடிவு

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கும் ராஜா (39) என்பவர் தனது சிறு நீரகத்தை விற்க முடிவு செய்துள் ளார். இது குறித்து ராஜா கூறும் போது, எனது சிறுநீரகத்தை விற்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்களை அணுகி விசாரித்தபோது, ரூ.3.7 இலட்சம் தருவதாகக் கூறினார்கள். ஆனாலும் என்னுடைய கடனை (ரூ.6.3 இலட்சம்) முழுமையாக அடைக்க இந்தத் தொகை போதாது என்றார்.

இதுகுறித்து ராஜாவின் மனைவி சித்ரா கூறும்போது, வங்கிகளைப் போல் அல்லாமல், சிறு வணிக கடன் நிறுவனங்களிடம் சுலபமாக கடன் பெற முடிகிறது. ஈட்டுப் பிணை எதையும் இவர்கள் கேட்பதில்லை. மேலும் சிறுகடன் நிறுவன ஊழியர்கள் வீடு தேடி வந்து கடன் கொடுக்கின்றனர்.

ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற வேண்டி உள்ளது. இப்படித்தான் 5 முறை நாங்கள் கடன் வாங்கினோம். அதேநேரம் கடனை வசூலிக்க வீட்டுக்கே வந்து மிரட்டுகின்றனர். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத காரணத்தால், காலை 9 மணிக்கு முன்பே 4 குழந்தைகளுடன் பஸ்ஸில் பயணம் செய்து பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுகிறேன். ஒரு மணி நேர பயண தொலைவில் உள்ளது எனது பெற்றோர் வீடு. மாலையில்தான் வீடு திரும்புகிறோம்.

கடனை அடைக்க முடியவில்லை என்றால் எதற்கு உயிருடன் இருக்கிறீர்கள் ? சாக வேண்டி யதுதானே ? என என்னிடம் கோபமாக கூறுகிறார் சிறு வணிக கடன் நிறுவன ஊழியர். இதனால் வெறுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் என்றார்.

இந்நிலையில் சித்ரா சமீபத்தில் ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மாவட்டத்திலேயே இந்த ஒரு தொழிற்சாலை மட்டும்தான் உள்ளது. இதில் மாதம் ரூ.5,600 சம்பளம் பெறுகிறார். கட்டிட மேஸ்திரியான இவரது கணவருக்கு தினமும் வேலை கிடைப்பது அரிது.

தற்கொலை அதிகரிப்பு

மட்டக்களப்பில் மட்டும் 27 சிறுகடன் நிறுவனங்களின் கிளைகள் செயற்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித் துள்ளதாக மாவட்ட அரச அதிகாரி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள் ளார். இது குறித்து  2012 இல் இலங்கை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற இவர், கடன் வட்டியைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இது குறித்து சார்ள்ஸ் கூறும்போது, "என்னால் முடிந்தவரை சிறுகடன் நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கான வட்டியை 14 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத் துள்ளேன். அரசியல் அழுத்தம் காரணமாக அதற்கு மேல் குறைக்க முடியவில்லை.
போருக்குப் பிறகு இங்கு வேலை வாய்ப்பு உருவாகவில்லை. முதலீடு வரவில்லை. இதனால் சிறுகடன் நிறுவனங்கள் நுழை வது பெருகிவிட்டது. அன்றாட பிழைப்புக்காக இந்த நிறுவனங் களிடம் கடன் வாங்குபவோர் அதிக மாகிவிட்டனர். அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது தொழில் முனைவோராவது பற்றி அவர்களால் எப்படி சிந்திக்க முடியும்' என்றார்.

சிறுகடன் நிறுவனங்கள் மாதா மாதம் திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் பெண்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. சமீபகாலமாக வாராவாரம் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பையும் வழங்குகின்றன. இந்தக் கடனுக்கு 28 சதவீதம் வட்டி வசூலிப்பதாகக் கூறுகின்றன. ஆனால், வாரந்தோறும் அசலின் ஒரு பகுதியையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதால் மொத்தம் 69 சதவீத வட்டியை வசூலிக்கின்றன.

இதுகுறித்து ஹேமா என்பவர் கூறும்போது, கடன் வாங்கும் போது பெண்ணின் கணவர் உத்தர வாதம் அளித்து கையெழுத்து போட்டாலும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் பெண் களே குற்றம்சாட்டப்படுகின்றனர். வாராந்திர கடன் முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றார். இந்தப் பெண் தனது வீடு, நிலத்தை விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுகடன் நிறுவனங் கள் சங்கத்தின் செயலாளர் இம்ரான் நபீர் கூறும்போது, உள் நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுகடன் நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் அமைந்தது. அதே நேரம் இந்த நிறுவனங்கள் வழங்கிய கடன் தமிழர்களின் நிதி பிரச்சினைக்கு உடனடி தீர்வாக அமைந்தது. இந்த நிறுவனங்களால் சாதகமும் உள்ளது பாதகமும் உள்ளது என்றார்.

கடன் வசூலிப்பில் அதற்கான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சிறுகடன் சங்கம் வலியுறுத்தி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங் களில் உள்ள குடும்பங்களின் கடன் சுமை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கடந்த மே மாதம் இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது. இருப்பினும், சித்ரா போன்றவர்களின் குடும்பங்கள் கடன் என்ற புதைகுழியில் சிக்கி மீளமுடியாமல் தவிப்பது பதைபதைக்க வைக்கிறது.

மீரா ஸ்ரீநிவாசன் 

http://www.thinakkural.lk/article.php?article/xgchuuiymj6935ccce2fab7314687oekcd36b8bc8362d115dec2d5a2qgl5g

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் இல்ல  பலரது பேராசைகள்  அடுத்தவன் செய்வதைக்கண்டு தானும் அனுபவம் இல்லாமல் செய்ய வெளிக்கிட்டு கன குடும்பங்கள் நடுத்தெருவில நிற்கிறது கணவனுக்கு தெரியாமல் மனைவியும்  வாங்குவதால் விவாகரத்து வரைக்கும் நிற்கிது அடுத்த பணத்தை வசூலிக்க வருபவன்  அப்படியே  கடன் கொடுக்க  முடியாவிட்டால் அவள் கற்பை சூறையாடுவது இப்படி நிறையவே நடக்கிறது :104_point_left:

முயற்ச்சி இல்லை சோம்பேறித்தனத்தால் கடன்  வாங்கிய   பணத்தை வைத்திருந்தால் போதாது அதை வைத்து பிழைக்க  வேண்டிய வழி வகைகளை காண வேண்டும் . பெரிய தொழில்களில் திடிரென இறக்கும் போது காலை வாரியென்ன கவடை கிழித்து விட்டும் செல்லும் .

அனுபவம் என்ட  சொந்த காசை வைத்து  நெல்லு செய்ய வெளிக்கிட்டு கையோட கம்மாரிசு சொந்த காசு என்ற படியால் பிரச்சினை இல்லை இல்லையென்றால் இன்றும் மத்திய கிழக்கில் அடிமாடா இருந்திருக்க வேணும் ( மழை , பூச்சி , பதர் கதிர்)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனி ஒருவன் said:

இது தாயகத்துக்கு  புதிது

ஆனால் புலத்தில்......??

வேண்டாமே..tw_dissapointed_relieved:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது தாயகத்துக்கு  பதிது

ஆனால் புலத்தில்......??

வேண்டாமே..tw_dissapointed_relieved:

இது மட்டக்களப்பில் அதிகம் நடக்கிறது தற்போது கடன் வழங்க எத்தனையோ அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்துள்ளது குழுக்களாக சேர்ந்து (ஐவர்) கடன் வாங்குறார்கள் ஒருவருக்கு ஒருவர் கையொப்பமிட வேண்டும்  அதனால் பெறும் போது சந்தோஷமாக பெறுகிறார்கள் செலவழிக்கும் போதும் ஆனால் கட்டும் போது மட்டும்   இன்னொரு கடனை எடுத்தே கட்டுகிறார்கள் 

01. தின்று தீர்ப்பது 

02. ஆடம்பர பொருட்கள் உதாரணம் அடுத்த வ்வீட்டில் 32 இஞ்சி டீவி வந்து பாட்டு போட்டால் சிங்கர் , சொனி , ரொசிபா இப்படி யான கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி குமிப்பது பிறகு  காசு கட்ட முடியவில்லை என்றால் அவன் வந்து பொருட்களை தூக்கி செல்வது 

இன்னும் சொல்லலாம் இங்கே நிறைய இருக்கிறது   இது நகர் தொடக்கம் கிராமம் வரைக்கும் சென்றுள்ளது  கிராமங்கள் கூட சுய தொழிலை மறந்து நிற்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனி ஒருவன் said:

புலத்துக்காரர்

தாயகத்துக்கு வந்து செலவளிப்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

புலத்துக்காரர்

தாயகத்துக்கு வந்து செலவளிப்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

அவர்கள் உழைத்த காசை நான் சொல்ல வரவில்லை அது அவர்கள் விருப்பம் ஆனால் நான் கூறுவது இங்குள்ளவர்கள் கன பேர் சோம்பேறிகளாக தற்போது 

( வெளிநாட்டவர்கள் உழைத்த காசை ஏமாற்றி வாங்கி சொகுசாக வாழ்பவர்களையும் சொல்லலாம் ) உங்களுக்கு நான் சொல்ல தேவை இல்லை (நான் நினைத்திருந்தால் )  இந்த தமிழ் தட்டச்சு போதும் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

அவர்கள் உழைத்த காசை நான் சொல்ல வரவில்லை அது அவர்கள் விருப்பம் ஆனால் நான் கூறுவது இங்குள்ளவர்கள் கன பேர் சோம்பேறிகளாக தற்போது 

( வெளிநாட்டவர்கள் உழைத்த காசை ஏமாற்றி வாங்கி சொகுசாக வாழ்பவர்களையும் சொல்லலாம் ) உங்களுக்கு நான் சொல்ல தேவை இல்லை (நான் நினைத்திருந்தால் )  இந்த தமிழ் தட்டச்சு போதும் :104_point_left:

தம்பி  ராசா

புலத்துக்காரர்

தாயகத்துக்கு வந்து செலவளிப்பதை  பார்க்க உழைத்த காசு மாதிரியா தெரியுது??

இது தான் தாயகத்திலுள்ளோரின் தவறே....

ஏமாறாதீர்கள்

உழைத்த பணத்தை செலவளிப்பதற்கு ஒரு முறையுள்ளது...

(ஒரு  சிலரைத்தவிர)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.