Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு

Featured Replies

ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு

 
ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு
 

இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

http://newuthayan.com/story/12782.html

  • தொடங்கியவர்

ஐ.நா.வின் அரசியல்துறை பிரதி செயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மனுடன் சம்பந்தன் கலந்துரையாடல்

 
 

ஐ.நா.வின் அரசியல்துறை பிரதி செயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மனுடன் சம்பந்தன் கலந்துரையாடல்
 

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை பிரதி செயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மனை (Jeffrey Feltman) எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/107748/

சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்க தமிழ் மக்கள் இணங்கவில்லை, நாங்கள்தான் இணங்கினோம் – சம்பந்தன்!

சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்க தமிழ் மக்கள் இணங்கவில்லை, நாங்கள்தான் இணங்கினோம் - சம்பந்தன்!

சிறிலங்காவுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை எனவும், ஐநாவுக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கால அவகாசத்தை வழங்கியது என ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெட்மனிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெட்மனை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஐநா அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தியிருந்தனர்.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது, அரசியலமைப்பு மாற்றம், நல்லிணக்கம், ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் கடைப்பிடிக்கப்படும் மெத்தனப்போக்கு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையில் நிலவும் போட்டி காரணமாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலை மீண்டும் ஏற்பட அனுமதிக்கமுடியாது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்க தமிழ்மக்கள் விரும்பவில்லை. ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இரண்டு வருட கால அவகாசத்துக்கு இணக்கம் தெரிவித்தது.

தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் போதுமானளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. சிறிலங்காப் படையினர் வசமுள்ள காணிகள், காணாமல்போனோர் விடயங்கள், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=74110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.