Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடால்ஃப் ஈச்மென் vs மொசாட்

Featured Replies

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று

செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது

ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது.

ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு.

ஆனால் அவர்களும் சில காலணிகளை அமைக்க முயற்சிக்கும் பொழுது மொத்த ஐரோப்பாவும் ஜெர்மனை கொத்தி எடுத்து, காலணி என்பது ஒன்றுமல்ல வியாபாரம் எனும் பெயரில் சுரண்டுவது

ஜெர்மனிக்கும் வியாபார ஆசை வந்தது, எந்திரம் முதல் சகலமும் விற்கலாம் என எண்ணினார்கள் , அன்றைய துருக்கியினை ஐரோப்பியரால் வீழ்த்தமுடியவில்லை, மிக பரந்த வலுவான சாம்ராஜ்யம் அது

ஜெர்மன் அவர்களோடு உறவாடி பெர்லின் பாக்தான் ரயில் விட முயற்சித்தது, அது வெற்றியாகியிருந்தால் ஜெர்மன் அன்றே வளர்ந்திருக்கும், துருக்கிக்கும் நல்ல பலன். விடுமா பிரிட்டனும் பிரான்சும்?, ஒரே சிக்கல் ரயில் சில நாடுகள் வழியே செல்லவேண்டும்

இந்த திட்டத்தை குழப்பத்தான் ஜெர்மன் கூட்டாளியான ஆஸ்திரிய இளவரசனை எவனோ சுட்டு கொன்ற்ய் சண்டை வெடித்து முதல் உலகப்போரானது

பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனை தோற்கடித்தன , துருக்கிய சாம்ராஜ்யமே அழிக்கபட்டது, ஜெர்மனை குறிவைத்து அடித்தார்கள், இனி எழும்பவே கூடாது என திட்டமிட்டு அடித்தார்கள்.

இன்றைய சிரியா,ஆப்கன் அளவிற்கு ஜெர்மனை சீரழித்தன, அதன் வளமான பகுதிகளை மற்றநாடுகள் பறித்தன, அவ்வளவு ஏன் அதற்கு மேலும் ஏராளமான வட்டிபணம் ஜெர்மன் கட்டவேண்டி இருந்தது. (உலகை நாங்கள் ஆளலாம் ஜெர்மன் எப்படி ஆளலாம் என்பது அவர்கள் எண்ணம்)

உண்மையான குடிமகனுக்கு வரும் கோபம் ஹிட்லருக்கும் வந்தது, உற்று கவனித்தான் அந்நாட்டு யூதர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணக்காரர்களாய் இருந்தனர் ஆனால் இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் கனவிலேதான் உழைத்தனர், அவர்கள் அப்படித்தான்.

அதற்கு முன் எல்லா தேசத்திலும் அடிபட்ட இனம்தான் யூத இனம், மிக சரியாக 50 வருடத்திற்கொருமுறை எங்காவது வாங்கிகட்டுவார்கள், அல்லது கொல்லபடுவார்கள், அப்பொழுதுதான் ரஷ்யா அடித்து முடித்திருந்தது.

காரணம் அவர்கள் ஜீன்கள் அப்படி, தொழில்செய்வது அப்படி, சாதாரணமாக தொடங்குவார்கள் ஆனால் கடுமையாக சம்பாதிப்பார்கள், பின்னர் வட்டி, பின்னர் அடமானம் கொஞ்சநாளில் ஏரியாவை வளைப்பார்கள், ஆனால் கனவெல்லாம் ஜெருசல்மில்தான் இருக்கும், சம்பாதிக்கும் நாடு கண்ணுக்கு தெரியாது, அதோடு ஒட்டவும் மாட்டார்கள்.

இதோ கேரளாவில் கூட 2000 வருடமாக வாழ்ந்தார்கள், இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் ஓடியே போய்விட்டார்கள், வளர்ந்த நன்றி, சோறுபோட்ட நன்றி எதுவுமே அவர்கள் இனத்திற்கு வராது, சொர்க்கத்தில் இருந்தாலும் எருசலேம் என சொன்னால் உடனே கிளம்புவார்கள்

புரியும்படி சொன்னால் முன்பு பர்மாவில் செட்டியார்கள் செய்ததை அவர்கள் ஐரோப்பாவில் செய்தார்கள், பின்னாளில் செட்டியார்கள் பர்மாவில் பட்டதை இவர்கள் அங்கு அடிக்கடி பட்டார்கள்.

நாடு நாசமாகிறது என ஹிட்லர் கவலையுற, யூதர்கள் பல வங்கிகளை நடத்தினார்கள் அனைத்து பணமும் எங்கு சென்றது என நினைக்கின்றீர்கள். நிலவங்கி என்றொரு புதிய வங்கி தொடங்கி பாலஸ்தீனை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிகொண்டிருந்தார்கள்.

ஆட்டோமன் துருக்கியர் வீழ்ந்த குழப்பமான பாலஸ்தீனம் அதற்கு வாய்ப்பளித்திருந்தது, ஓஹோ யூதர்கள் குறி இங்கிருக்கின்றதா? இந்த அரசு வீழத்தான் ஐரோப்பாவில் குழப்பமா? என அவனுக்கு பலத்த சிந்தனை வந்தது, அவன் யூதவெறுப்பு இங்குதான் தொடங்கிற்று

அவர்கள் ஜெர்மானியராக வாழ்ந்திருந்தால் ஹிட்லருக்குள் சாத்தான் வந்திருக்க வாய்ப்பே இல்லை, அவர்கள் யூதராகவே இருந்ததுதான் அவனுக்கு அவ்வளவு கோபம்

எங்கள் நாட்டில் சம்பாதித்துவிட்டு எங்கோ போய் கொட்டுகின்றார்கள் என்பது தான் ஹிட்லரின் கோபம், அது வெறுப்பாயிற்று. அதனையே மேடையில் முழங்கினான், மக்கள் அவனை தலைவனாக ஏற்றனர், ஹிட்லர் நாட்டின் தலைவருமானார்.

நிச்சயமாக அவனுக்கு அப்பொழுது யூதரை கொல்லும் திட்டமில்லை, நாடு முக்கியம் நாட்டை பாதுகாக்க ராணுவம் முக்கியம், அதற்கு யூதர்களின் சொத்துக்களை பிடுங்கினால் அது தேசிய சேவை என நினைத்தான்.

ஹிட்லர் எனும் பூதம் இன்றைய சிரியா நிலையிலிருந்த ஜெர்மனியை 7 ஆண்டுகளில் உலக வல்லரசாக்கிற்று. இனி எந்த அதிபரும் எந்த உலகிலும் செய்யமுடியாத சாதனை அது. மாபெரும் ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என உலகின் நம்பர்1 நாடாக ஜெர்மனை மாற்றி காட்டினார் ஹிட்லர், ராட்சத சக்தியாக ஜெர்மனியை மாற்றி காட்டினார், ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

அதற்கு அவனின் பொருளாதார அமைச்சர் Horace Greeley பெரும் காரணம், அவர்தான் ஜெர்மனியினை தூக்கி நிறுத்தினான் ஹிட்லரின் தேர்வு அப்படி மிக சரியாக இருந்தது

வல்லரசானதும் தன் ஆட்டம் தொடங்கினார் ஹிட்லர். அதன் பின் இழந்த பகுதிகளை மீட்டார், திடீரென பலம்பெரும் இந்தியா (ஒருவேளை பெற்றால்) காஷ்மீர், கச்சதீவு, கயிலாயமலை என மீட்டால் எப்படி இருக்கும், பாகிஸ்தானை முடக்கி, சீனாவை ஓடவிட்டு, ராஜபக்ஸேயையும் அந்த புத்ததுறவிகளையும் புழல் சிறையில் போட்டால் எப்படி இருக்கும் நமக்கு?, அப்படித்தான் ஜெர்மானியரும் ஹிட்லரை கொண்டாடி கடவுளாக்கினர்.

அப்படியே ஹிட்லர் ஒரு கொசுகடியிலோ அல்லது விபத்திலோ அல்லது உணவு செரிக்கமலோ, பாத்ரூமில் தவறிவிழுந்தோ, ஈவாபிரானோடு காதல் தகறாறில் தற்கொலையோ செய்து செத்திருந்தால் இன்றுவரை அவன் தான் மாபெரும் உலக ஹீரோ, ஆனால் அவன் உள்ளே இருந்த ஜெர்மானிய உணர்வு அவனை ஆட்டுவித்தது.

பிரிட்டனும், பிரான்சும், ஸ்பெயினும், போர்ச்சுகல்லும் ஆளும் உலகை ஜெர்மனும் ஆண்டால் என்ன?

பிரிட்டனை பிடித்தால் இலவசமாக இந்தியா உள்பட 70 நாடுகள்,பிரான்சை பிடித்தால் கூட 40 நாடு இவ்வளவுதான் உலகம், அமெரிக்கா ஒரு கொசு என்று திட்டமிட்டு போலந்திலிருந்து கணக்கை தொடங்கினான்.

ஐரோப்பா உனக்கு, ஆப்ரிக்கா இத்தாலிக்கு , கிழக்காசியா மற்றும் அமெரிக்கா எனக்கு என கூட்டணி சேர்ந்தது ஜப்பான், போர் வெடித்தது

ஆடாமல் ஜெயித்தான் ஹிட்லர், மிரட்டலிலே நாடுகளை பிடித்தான், அவன் பலம் அப்படி இருந்தது

அவன் பிடிக்கும் நாடுகளில் எல்லாம் யூதர்கள் இருந்தனர், விரட்டினால் அடுத்த நாட்டிற்கு ஓடினர், அங்கும் பிடித்து அவர்களை விரட்டும் கடினவேலை ஹிட்லருக்கு. அவர்களின் முகத்தை அல்ல நிழலை கூட பார்க்க அவன் விரும்பவில்லை, அவர்கள் ஜெர்மானிய துரோகிகள்.

இந்த கடும் பிரச்சினையை பற்றி தளபதி ஹிம்லர் மற்றும் இன்னொரு அதிகாரியுடன் ஆலோசித்தான், அதாவது அவ்வப்போது ஐரோப்பியர் யூதர்கள் மேல் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கைதான், சகலரும் அடித்துவிட்டு ஆட்டோவில் போட்டு யூத இனத்தை ஹிட்லரிடன் அனுப்பியிருக்கின்றார்கள், பீரியாகத்தான் இருக்கிறார் ஹிட்லர் விடுவாரா? எப்படி அடிக்கலாம் என்றுதான் திட்டமிட்டார்

அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம் என்றான் அந்த அதிகாரி, ஹிட்லரும் அந்த அளவு மக்களை வெறியேற்றி வைத்திருந்தார், தலையாடிய ஹிட்லர் உத்தரவிட்டார், பொறுப்பு உடனே அந்த இளம் அதிகாரிக்கு கொடுக்கபட்டது, உலகம் இனி நமது, அது யூதரில்லாத உலகமாக உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று சபதமும் செய்தார் அதிகாரி.

சிறந்த நிர்வாகியான ஹிட்லர் ஒரு லட்சம் யூதரை கொன்றால் உனக்கொரு மெடல் என அறிவித்துவிட்டு அதிகாரமும் கொடுத்தான்.

ஹிட்லர் வாழ்க எனும் மங்கள கீதத்துடன் ஜெர்மனியின் “யூத ஒழிப்புதுறை” செயல்பட ஆரம்பித்தது, சி.இ.ஓ நிச்சயமாக அந்த 35 வயது அதிகாரி.

செங்கிஸ்கான், தைமூர், செவ்விந்திரை அழித்தல் இம்மூன்றிற்கு பின் வரலாறு காணாத படுகொலையை நிகழ்த்தி காட்டினான் அந்த அதிகாரி, அவன் பெற்ற மெடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

40 மெடல்கள், அதாவது 40 லட்சம் யூதர்களை கொன்றதற்காக. உண்மை எண்ணிக்கை இன்னும் இருக்கலாம்.

எப்படி எல்லாம் கொல்லமுடியும் என அவன் மிக கொடூரமாக சிந்தித்தான், அந்த விஷயாவு கொட்டகை எல்லாம் இவன் சிந்தனையிலே உதித்ததுதான்.

அவன்தான் அடால்ப் ஈச்மென்.

ஒருவழியாக யுத்தம் முடிந்து ரஷ்யபடைகள் (இதுதான் ரஷ்யா என்றும் நேருக்கு நேர், அமெரிக்கா தொழில்நுட்பம் பின்னால் ஒளிந்துகொள்ளும் ) ஹிட்லரின் முக்கால்வாசி எரிந்த உடலையும்,ஹிம்லரின் முழு உடலையும் கைபற்றியபொழுது ஈச்மென்னை காணவில்லை, யுத்தத்தில் கொல்லபட்டிருக்கலாம் என விட்டுவிட்டார்கள்.

ஹிட்லரை விட ஈச்மேன் தான் பிரதான குற்றவாளி என்பதை ஐரொப்பா உணர்ந்திருந்தது

1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டு, மொசாத்தும் தொடங்கபட்டது, முதல்வேலையாக ஈச்மெனை ரகசியமாக‌ தேடினார்கள், அவர்களுக்கு வலுத்த சந்தேகம் இருந்தது. ஹிட்லரும் தப்பித்தான் என்பதும் அவர்கள் வாதம்.

இஸ்ரேல் அறிவிக்கபட்ட மறுநாள் யுத்தம், ஓயாத யுத்தம் அந்த யுத்தம் நடுவிலும் அவர்கள் வெறி ஈச்மென் மேலேயே இருந்தது, குறி வைத்து தேடினார்கள் அவ்வளவு வன்மம்

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பினாலும் யூத இனம் ஹிட்லரும், ஈச்மெனும் சாகவில்லை என்றே சொல்லிகொண்டிருந்தது, அவர்களுக்கு எங்கள் கையால்தான் சாவு என உறுமிகொண்டிருந்தது

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பிகொண்டிருந்தபொழுது ஈச்மென் வளர்ந்த தாடியுடனும் குடும்பத்தாருடனும் இத்தாலி அகதிகள் முகாமில் தங்கி இருந்தான், யுத்த கைதியும் அல்ல அகதி.

அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே அவன் ஈச்மென் என தெரியும், மற்றவர்களுக்கு ஒரு பிச்சைக்கார அகதி, கூலி வேலைக்காரன், இத்தாலியரின் தின கூலியில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

ஆனால் மொசாத அமைக்கபட்டவுடன் அவனது ராணுவ மூளை உஷாரானது, என்ன இருந்தாலும் ஜெர்மானியன் அல்லவா? யூத மூளை என்னவென்று நன்றாக உணர்ந்தவன், முடிவெடித்தான்

இனி ஐரோப்பா தனக்கு பாதுகாப்பான இடம் அல்ல, தப்ப வேண்டும்

தொடரும்…

  • தொடங்கியவர்

அடால்ப் ஈச்மென் Vs  மொசாத் : 02

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது? எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார்.

இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும் 

இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார்.

ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன, அடையாள ஆவணம் ஒன்றுமில்லாத மக்களுக்கு சம்பத்தபட்ட நாடுகள் அகதி அடையாள பாஸ்போர்ட் வழங்கலாம் என்பதும் ஒன்று.

உலகில் ஹிட்லருக்கு எதிரிகள் அதிகம்,நண்பர்களான‌ ஜப்பானும் அணுகுண்டு வாங்கி மல்லாக்க படுத்துவிட்டது, நேதாஜியின் மர்ம மரணம் உலகிற்கு சொன்னது ஒன்றுதான்

நேதாஜி விமான விபத்தில் சாகவில்லை, அவரை ஏற்க ஜப்பான் மறுத்திருக்கலாம், நேதாஜி தற்கொலை செய்திருக்கலாம், அன்றைய உலகின் வலுவான வாதம் அது

இதனால் ஜப்பான் செல்லும் திட்டம் சரிவராது என உணர்ந்தர் ஈச்மென், ஹிட்லரின் கூட்டாளியான முசோலினியும் தெருகம்பத்தில் பிணமாக தொ
தொங்கிவிட்டார், 

ஏதோ அகதி அடைக்கலத்தில் இவ்வளவு நாளும் இருந்ததே பெரும் அதிர்ஷ்டம், செல்ல வேண்டும் எங்காவது செல்லவேண்டும்.

அப்பொழுது அவர் மனதில் உதித்த நாடு அர்ஜெண்டினா
பொதுவாக தென் அமெரிக்க லத்தீன் கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க கிறிஸ்துவநாடுகளுக்கும் ஐரோப்பிய மேன்நிலை நாடுகளுக்கும் அதிகம் ஒத்துவராது இவை பெரும்பாலும் ஸ்பெயின் காலணிகள்,

பிரிவினை கிறிஸ்தவம், ஆண்டான் அடிமை , ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் மோதல் என பல பிரச்சினைகள் உண்டு, அப்படியான நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவிற்கு பிரிட்டன்,அமெரிக்கா நண்பர்கள் இல்லை. இன்று வரை அர்ஜெண்டினா அருகிலிருக்கும் தீவிற்கு பிரிட்டன் உரிமை கொண்டாடி சண்டை எல்லாம் போட்டிருக்கின்றது, இன்றும் கூட பிரிட்டன் விட்டுகொடுக்காத தீவு அது.

வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் தெனஅமெரிக்கர்கள் ஐரோப்பாவை பழிவாங்குவார்கள், கால்பந்தில் அது அதிகம் தெரியும். இன்னும் போதைபொருளை விளைவித்து ஐரோப்பாவிற்கு அனுப்பி கடுமையாக பழிவாங்கும் முறையும் உண்டு.

எளிதாக சொல்லவேண்டுமென்றால் பிரிட்டனை அடிக்கும் யாரும் அர்ஜெண்டினாவின் நண்பர்கள், ஹிட்லர் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தது, பல நாசி படைவீரர்கள் அங்கு தப்பி சென்றனர் என்பது உண்மை. ஹிட்லரே அங்கு நீர்மூழ்கியில் தப்பி சென்றார் என்றெல்லாம் கதைகள் உண்டு.

அந்த நாட்டை குறிவைத்தார் ஈச்மென், பரதேசி கோலத்தில் இத்தாலி குடியுரிமை இலாக்காவில் அகதி பாஸ்போர்ட் விண்ணப்பித்தார். நாசமாய் போன ஹிட்லரின் இறுதிபோரில் ரஷ்யபடைகள் வீட்டை கொளுத்தியதாகவும் தன்னையும், மனைவி மற்றும் 4 வயது மற்றும் 2 வயது மகன் தவிர சகலமும் எரிந்து விட்டதாக அழுது ஆர்பரித்தார்.

இத்தாலி அப்பொழுது சர்வ சிக்கலில் இருந்தது, முரடன் முசோலினி நாசமாக்கி வைத்திருந்தான். அகதிகளில் படித்தவர்கள் அறிவாளிகளை அமெரிக்கா அள்ளிகொண்டு சென்றது, ஆனால் பாமரர்களை இத்தாலியால் சமாளிக்கமுடியவில்லை, அகதிக்கான பாஸ்போர்ட்டுகளை அள்ளிவிட்டார்கள், இக்காலம் போல தீவிரவாதிகள் அபாயம் இல்லை. எனவே சிக்கல் இல்லை.

ஈச்மெனை அழைத்தார்கள், உங்கள் பெயர் என்ன என கேட்டார்கள், தான் ஒரு இத்தாலி வம்சாவளி ஜெர்மானியன் என சொன்ன ஈச்மென் அட்டகாசமான லத்தீன் பெயரை தனக்கு சூட்டிகொண்டார், ஞானஸ்நானம் கொடுக்க அருட்தந்தை இல்லை அவ்வளவுதான், பாஸ்போர்ட் கொடுக்க இத்தாலி இருக்கின்றது போதும்.

அந்த பெயர் "ரிக்கார்டோ கிளமெண்ட்".

அப்படியே தென் அமெரிக்க கால்பந்து ஆட்டக்காரர் பெயராக இருக்கின்றது அல்லவா?, அவ்வளவு தூரம் செல்லாவிட்டால் குளச்சல் டூ திருச்செந்தூர் கடற்கரை சுற்றி வாருங்கள், கத்தோலிக்க மீணவ கிராமங்களில் இந்த ஸ்டைல் பெயர் அத்துப்படி, எல்லாம் லத்தீன் செய்த மாயம்.
தாவரவியலும்,விலங்கியலும் படித்தவர்கள் மனதிற்குள் சபித்து சபித்து படித்த அந்த புரியாத பெயர்கள் எல்லாம் லத்தீன் மூலமே, 

ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களின் சமஸ்கிருதம்.

"ஹிட்லர் ஒழிக இத்தாலி வாழ்க" என கோஷமிட்டு ஒரு வழியாக ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் பாஸ்போர்ட் எடுத்துவிட்டு அர்ஜெண்டினா தூதரகம் சென்றார்.

அங்கு ராகத்தை மாற்றிபாடினார். தான் ஜெர்மன் ராணுவத்தின் கடைநிலை ஊழியர் எனவும், ஹிட்லரை இருமுறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும், தான் ஒரு ஜெர்மானியன் என்பதால் ஐரோப்பா தன்னை புறக்கணிப்பதாக அழுதார்.

"இதோ பார்த்தீர்களா வேலைதேடி இத்தாலியில் அலைந்தேன், பாஸ்போர்ட் கொடுத்து எங்காவது போய் தொலை என்கிறார்கள், நான் என்ன செய்வேன் மதர் மேரி சித்தம் இதுவானால் இனி சாவதை தவிர வழி இல்லை, இப்பொழுது கூட புனித பீட்டர் கல்லறையில் செபித்துவிட்டு சாக சென்றேன், வழியில் உங்கள் தூதரகம் தெரிந்தது, உதவுவீர்கள் என நம்புகிறேன்"

ஜெர்மானியன், அதுவும் படைவீரன் எல்லாவற்றிற்கும் மேல் கத்தோலிக்கன், இவருக்கு உதவாமல் நாம் சர்ச் சென்றால், பாவமன்னிப்பு கூட கொடுக்கமாட்டார்கள், அவ்வளவுதான் அகதி விசா கிடைத்தது,"ரிக்கார்டோ கிளமெண்ட்" எனும் ஈச்மென் அர்ஜெண்டினா தப்பினார்.

வடக்கு அர்ஜெண்டினாவில் டுகுமென் நகரின் ரோடுபோடும் கூலியாக வேலை செய்து,பின்னர் ஒப்பந்தக்காரர் ஆனார். கொஞ்சம் பணம் சேர்ந்ததும் குடும்பத்தாரையும் அழைத்து குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்தார். அந்த ஊரின் நிலமை சரியில்லை, போதை,குடி,வம்பு வழக்குகள் அதிகான ஊர் அது.

சில இடங்களில் அவர் தாக்கவும் பட்டார், எப்படி இருந்திருக்கும் அந்த முன்னாள் ஜெனரலுக்கு? ஆனால் பாஷா படத்தில் ஆனந்தராஜிடம் அடிவாங்கும் ரஜினி போல ரத்தத்தை துடைத்துகொண்டே சிரித்தார்.

"வன்முறை தவறு,சண்டை தப்பு நாமெல்லாம் கிறிஸ்தவர்கள்" என சகலருக்கும் போதித்துவிட்டு அர்ஜெண்டினா தலைநகர் "பியூனஸ் அர்ஸ்" வந்தார், ஒரு கார் கம்பெனிக்கு சென்று தொழிலாளியாக இணைந்தார்.

அது உலகின் புகழ்பெற்ற "பென்ஸ்" கார் தொழிற்சாலை, ஜெர்மனின் உலக அடையாளங்களின் ஒன்று. இன்று வரை நம்பர் 1.

ஹிட்லரின் ஆட்சியில் ஈச்மென் கைதட்டினால் ஆயிரம் பென்ஸ்கார்கள் ஓடி வந்து நின்றன, ஏன் நாளுக்கொரு பென்ஸ் ஈச்மெனுக்கு கிடைத்த காலமும் இருந்தது, கம்பெனி அதிபர்களே ஈச்மென் முன்னால் கைகட்டி நின்றனர்.

அந்த கம்பெனியில்தான் சாதாரண தொழிலாளியாக ஸ்பேனரும் அழுக்கு உடையுமாக , தனது பெரும் பிண்ணனியை மறைத்தபடி வேலை செய்தார் ஈச்மென்.
பேருந்தில்தான் வேலைக்கு செல்வார், நடந்துதான் பஸ்நிலையம் வருவார், அப்படியே அகதி வாழ்க்கையை அற்புதமாக நடித்துகொண்டிருந்தார்,கூட இரு பிள்ளைகளும் பிறந்தனர்.

அர்ஜெண்டினா பாஷா பாயாக மிக சமத்தாக தன் அடையாளங்களை மாற்றி ஒரு அகதி தொழிலாளி எப்படி இருப்பானோ அப்படியே மாறிப்போனார் ஈச்மென்.

10 வருடத்தில் உலகம் மாறிற்று, இங்கிலாந்து தன் வல்லரசு முடியினை துறந்தது, அமெர்க்காவும் ரஷ்யாவும் கடும் மோதலில் இருந்தன, இஸ்ரேல் பெரும் ரவுடியாக உருவெடுத்திருந்தது

இதனை எல்லாம் செய்திதாள்களில் படித்தபடி எல்லாம் மனதினால் சுமந்துகொண்டு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் ஈச்மென்

உலகையே மிரட்டிய ஒரு படையின் இரண்டாம் கட்ட தலைவன் இப்படி மாற முடியுமா? கட்டளையிட்டே பழகியவன் பிரட்டுக்கும், உருளைகிழங்கிற்கும் பொழுதெல்லாம் உழைக்க முடியுமா?

ஈச்மெனும் எனும் பாஷாபாயினால் முடிந்தது,  உலகம் அவனை மறந்தே போனது, இந்த பரதேசி கோல ரொட்ரிகோதான் அந்த படுபயங்கர ஈச்மென் என அவனையும் அவன் மனைவியினையும் தவிர யாருக்கும் தெரியாது.

இங்கோ மொசாத் 10 வருடமாக ஈச்மென்னை உறங்காமல் தேடியது, பெரும் பணத்தோடு சுவிஸ்,பாரீஸ் என தப்பியிருக்கலாம் என அங்கெல்லாம் புது பணக்காரர்களை உளவுபார்த்தது, ஒன்றும் பலனில்லை.

அடி அவர்களுக்கு புதிதல்ல எகிப்தியர், பாரசீகர், நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், ரோமர் பின்பு ஐரோப்பாவின் எல்லா நாடுகள் என எல்லா இடத்திலும் அடிபட்ட இனம் தான் யூத இனம்

எல்லா வல்லரசுகளும் அவர்களை அப்படி போட்டு அடித்திருக்கின்றன, அலறி அடித்து ஓடியிருக்கின்றார்கள் யூதர்கள்

ஆனால் இம்முறை அவர்கள் வைராக்கியம் கூடியிருந்தது, உலகில் எங்கு அடித்தாலும் எருசலேம் நோக்கி ஓடுவோம், ஆனால் எருசலேம் வந்தபின் திருப்பி அடிப்போம் என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்ற வெறியோடு அலைந்தார்கள்

அந்த வெறிதான் பெரும் எரிமலைகளை சமாளித்து இன்றும் இஸ்ரேலை அங்கு நிலை நிறுத்தி வைத்திருக்கின்றது,

ஈச்மென் சம்பந்தப்ட்ட பைல் அவர்களிடம் உண்டு, மற்றபடி ஏதும் தெரியாத நிலை, ஆனால் அவ்வப்போது அவர்களின் உலகாளாவிய ஹீப்ரு மொழி பத்திரிகையிலும், இன்னும் யூதபிண்ணனி கொண்ட பத்திரிகையிலும் ஈச்மென் படத்தை போட்டு "மர்மம்" எனும் செய்தியை வெளிச்சம்போட்டுகொண்டே இருந்தார்கள்.

இது ஓரளவு வேலை செய்தது, உலகின் எல்லா யூதர்களுக்கும் ஈச்மென்னை இஸ்ரேல் தேடுகிறது என்பது புரிந்தது, மற்றவர்களுக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான்.
ஈச்மென்னும் மறக்காமல் அதனை படித்துவிட்டு, பேப்பரை மடித்துவைத்துவிட்டு வேலைக்கு செல்வார், பாவம் பிள்ளைகுட்டிக்காரர் என சமூகம் சொல்லிகொண்டிருந்தது.

கிட்டதட்ட 10 வருடம் கடந்தது, யாருக்கும் துளியும் சந்தேகமில்லை, மூத்தமகன் 16 வயதை கடந்தான் அவனுக்கு "குளாஸ்" என பெயரிட்டிருந்தார், நல்லபெயர், பொருத்தமான பெயர்.

16 வயதினிலே என்றால் கண்டிப்பாக காதலும் வரவேண்டும், அவனுக்கும் வந்தது, யார்மேல் தெரியுமா? "சில்வியா" எனும் பெண்மேல்.

சில்வியா குறிப்பிடதகுந்த அழகி, சின்னதம்பி குஷ்பூ அளவிற்கு வரமுடியாவிட்டாலும் நல்ல அழகி என்றுதான் குறிப்புகள் சொல்கின்றது

 காரணம் அந்த இனமே கொஞ்சம் அழகான இனம் என்பது உலகம் ஒத்துகொண்ட உண்மை. (என்ன செய்ய தமிழ்படத்தில் எல்லாம் நடிக்கவரமாட்டார்கள், குஷ்பூ இருக்கும்பொழுது அவர்கள் எதற்கு? வந்தால் அவர்கள் அழகு குறைவு என்றாகிவிடும்) 

அவளிடம் மனதை மொத்தமாக பறிகொடுத்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் குளோஸ். கிட்டதட்ட "இதற்குத்தான் ஆசைபட்டாய் பாலகுமாரா" விஜய் சேதுபதி போல, சகலமும் சில்வியா.

யாராவது எடுத்து சொன்னால் "சிலிவியா ஹாப்பி அண்ணாச்சி" என்பதை "லத்தீன் ஸ்பானிஷ்" மொழியில் அடிக்கடி சொல்லிகொண்டான்,

சிலிவியா அற்புதமான‌ அழகி, ஆனால் அந்த தாழம்பூவில் ஒரு பூநாகம் ஒளிந்திருந்தது. அவள் தந்தை ஒரு யூதர். ஒருநாள் குளோசின் தொல்லை தாங்காமல் தந்தையிடம் கண்ணை கசக்கினாள் சில்வியா.

ஆம் யூதர்கள் எல்லா தேசத்திலும் உண்டு, எந்த வேடத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஆனால் இருப்பார்கள்

அதுவும் கிட்டதட்ட 3 ஆயிரம் நாசிக்கள் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார்கள் , அதில் ஹிட்லரும் இருக்கலாம் எனும் செய்திகள் அவர்களை உறங்கவிடவில்லை

அதனால் அர்ஜெண்டினா மீது கூடுதலாக ஒரு கண் வைத்த்தார்கள்.

இந்நிலையில்தான் ஒருவன் என்னை விடாமல் துரத்துகின்றான் என்றொரு யூதரிடம் வந்து நிற்கின்றாள் அவரின் மகளான சில்வியா.

"யாரடா அவன் என் மகளை விடாமல் துரத்துவது? யூதப்பெண்ணை யூதனுக்குத்தான் கொடுப்போம், உங்களுக்கும் எங்களுக்கும் பொருந்தாது, இஸ்ரேல் வேறு அமைந்தாயிற்று, நாங்கள் அங்கு சென்றாலும் சென்றுவிடுவோம்

நீ வேறு அர்ஜெண்டினா அழகியினை தேடிகொள் என  அவனுக்கு போதித்துவிட்டு வரலாம் என சிந்தித்தார் சில்வியாவின் தந்தை.

(தொடரும்..) 

(படம்: ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் ஈச்மெனின் பாஸ்போர்ட்)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வரலாறுகளும் நன்றாக  போகின்றன, எல்லாம் "முற்பகல் செய்யின்" தியரிதான்...., தொடருங்கள் வெங்கடேஷ்....!  tw_blush:

வணக்கம் வெங்கடேஷ்,

நல்லதொரு தொடரை ஆரம்பித்து உள்ளீர்கள். யாழில் இணைந்தமைக்கும் தொடருக்கும் நன்றி.

இது உங்கள் சொந்த ஆக்கமா அல்லது இன்னொரு தளத்தில் இருந்து பிரதி எடுத்து இங்கு பதிகின்றிர்களா ? இன்னொரு தளம் எனில் அதன் மூலத்தை குறிப்பிடவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.