Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சுழற்சிமுறை ஆசனம்

Featured Replies

வடக்கு மாகாண சுழற்­சி­முறை ஆச­னம்

புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிப்பு ஜெய­சே­க­ரத்­தின் பெயர் பரிந்­துரை

 
வடக்கு மாகாண சுழற்­சி­முறை ஆச­னம்
 

வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சுழற்­சி­முறை நிய­மன ஆசன விட­யத்­தில், புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் யாழ்ப்­பாண வணி­கர் கழ­கத் தலை­வ­ரான ஆர்.ஜெய­சே­க­ரத்­தின் பெயர் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வரை கால­மும் சுழற்சி முறை ஆச­னத்­தின் அடிப்­ப­டை­யில் பதவி வகித்த வவு­னியா மாவட்ட உறுப்­பி­னர் மயூ­ரன், மாகாண சபை­யின் நேற்­றைய நூறா­வது அமர்­வு­டன் விடை பெற்­றார். மாகாண சபை­யில் நன்­றி­யு­ரை­யும் நேற்று நிகழ்த்­தி­னார்.

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இரண்டு நிய­மன ஆச­னங்­கள் கிடைத்­தன. ஓர் ஆச­னம் நல்­லாட்­சிக்­கான மக்­கள் முன்­ன­ணிக்கு வழங்­கப்­பட்­டது. மற்­றைய ஆச­னம் கூட்­ட­மைப்­பின் அங்­கத்­து­வக் கட்­சி­கள் இடையே சுழற்­சி­மு­றை­யில் பங்­கீடு செய்­யப்­பட்­டது.

சுழற்சி முறை­யில் நிய­மன ஆச­னம் தமது கட்­சிக்கே வழங்­கப்­பட வேண்­டும் என்று புளொட் அமைப்பு கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. இது தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சேனா­தி­ராசா மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ரி­டம் வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில், வடக்கு மாகாண சபை­யின் நிய­மன ஆச­னத்­துக்கு, மாகாண சபைத் தேர்­த­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் போட்­டி­யிட்ட ஆர்.ஜெய­சே­க­ரத்­தின் பெயரை இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளது.

தேர்­தல்­கள் திணைக்­க­ளம் அதனை ஏற்­றுக் கொண்டு, வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன் பிரதி வடக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய நூறா­வது அமர்­வில் பங்­கேற்க மயூ­ரன் வந்­தார். அவ­ரது ஆச­னத்­துக்­குப் புதி­ய­வ­ரின் பெயர் பிரே­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னால் அவ­ரைச் சபை அமர்­வில் பங்­கேற்க அனு­ம­திப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பில் சர்ச்சை எழுந்­தது. இறு­தி­யில் மயூ­ரன் சபை அமர்­வில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­பட்­டார்.

http://uthayandaily.com/story/14327.html

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

 
sithar.jpg
கௌரவ. இரா.சம்பந்தன், பா.உ.,
தலைவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு.
 
 
அன்பின் ஐயா,
 
வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக
 
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றிற்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்திற்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.
 
வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிற்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில்; ஒரு ஆசனமானது,  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவிற்கமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன.
 
மேலதிக ஆசனமாக கிடைத்த ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் அவர்கள் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.
 
மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி; விலகிய நிலையில், கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் தமிழரசுக் கட்சியை தழுவி செயற்படலாயினர். அந்தவகையில,; முதல் வாய்ப்பைப் பெற்ற மேரிகமலா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்;. பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் அவர்களை பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரிகமலா அவர்கள் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உப தலைவராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளரான மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்குமாறு கோரியதாகவும் அதற்கு சாதகமான பதிலை தமிழரசுக் கட்சி வழங்கியிருந்ததாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். ஆயினும் ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன் அவ்விடத்துக்கு அவசர அவசரமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரம் அவர்களை நியமித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள்.
 
ஏற்கனவே வட மாகாணசபையின் முல்லை மாவட்ட உறுப்பினராகவிருந்த கனகசுந்தரசுவாமி அவர்களின் மறைவையடுத்து பதவி வெற்றிடமாகியபோது, அடுத்த நிலையில் இருந்த எமது அமைப்பின் க.சிவநேசனின் பெயரை, பலமுறை நாம் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும்கூட, தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் மூன்று மாதகாலமாக தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்துவந்தது. இறுதியாக தேர்தல் ஆணையாளரே தனது பதவிக்குரிய அதிகாரவழியில் தற்துணிவுடன் சிவநேசனின் உறுப்புரிமையை அறிவித்திருந்தார். கூடவே, தமிழரசுக்கட்சியின் செயலாளரின் பொறுப்பற்றதன்மையை தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
ஆக, தார்மீக நெறிகளைமீறி, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களின் நியமனங்களில் தன்னிச்சையுடன் செயற்பட்டுவருகின்றமை அப்பட்டமான உண்மை.
 
ஐக்கியத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கூட்டமைப்பின் சகல கட்சிகளும் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட முடிவின்படி இவ் ஆசனம் எமது அமைப்பின் உறுப்பினருக்கே வழங்கப்படல் வேண்டும். இதுவே ஒப்புரவானதும் நீதியும் பண்பும் நிறைந்த தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக இருக்குமென நான் நம்புகிறேன். இது குறித்து பல சந்தர்ப்பங்களில் தங்களிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தேன்.
 
கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் திட்டமிட்டு புறம்தள்ளப்பட்டு வருகின்ற சூழலில், ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாக கருதி தமிழரசுக்கட்சியின் அடையாளத்தையும், பெயரையும் நாம் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவாகவே தற்போதைய நிலைமையை நாம் பார்க்கிறோம். ஓற்றுமைக்கான விலையான எமது விட்டுக்கொடுப்புகளை எமது பலவீனமாக கருதும் செயற்பாடுகள் கண்ணியமானவையோ, அரசியல் நாகரீகம் நிறைந்தவையோ அல்லது தமது பலம் என்று பெருமை கொள்ளக்கூடியவையோ அல்ல.
 
தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் இன்னும் பல உயர்ந்த பண்புகள் நிறைந்த தலைவர்களாலும் அவர்களின் தியாகத்தினாலும், அவர்களுடன் சமகாலத்தில் திருகோணமலையில் தங்களாலும், இளைஞரணி தலைவராக மாவை அண்ணராலும் கட்டிக்காத்து வழிநடாத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால போக்குகள் மக்களின் உணர்வுகளை மதிக்காதிருப்பதை தாங்கள் உணராமலிருக்க முடியாது. உதாரணமாக,  வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்தை அறிந்தவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.
 
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பாதகமான விமர்சனங்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகின்றபோதிலும், தமிழ் தேசிய பிரச்சனைக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் வரையிலாவது கட்டிக்காக்க வேண்டிய ஒற்றுமை குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை நேர்மையானது. உண்மையான ஐக்கியத்திற்கு முரணான நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக நாம் செயற்படவில்லை.
 
எவ்வாறிருப்பினும், தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவர்கள் பாரம்பரியமாக வெளிப்படுத்தி வந்த தலைமைத்துவப் பண்புகளையும், தமிழ் மக்களை ஓரணியில் ஒற்றுமைப்படுத்தி முன்கொண்டு செல்லும் பக்குவத்தையும் இன்று உங்களிடம் நான் காண்கிறேன். அதேவேளை கூட்டான ஓர் அமைப்புக்குரிய அடிப்படைப் பண்புகளை தூக்கிநிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு தஙகளையே சாரும் என நம்புகிறேன்.
எனவே, தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட  தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
 
த.சித்தார்த்தன் (பா.உ)
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
28ஃ07ஃ2017.
 
பிரதிகள்:
1. கௌரவ முதலமைச்சர், C.V. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை.
2. கௌரவ மாவை. சேனாதிராஜா, பா.உ, தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி.
3. கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பா.உ, தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்.
4. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் நாயகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
5. கௌரவ. சி.வி.கே.சிவஞானம், தவிசாளர், வடக்கு மாகாண சபை.

http://globaltamilnews.net/archives/34590

  • தொடங்கியவர்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு போனஸ் ஆசனம் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது

 


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு போனஸ் ஆசனம் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது
 

வட மாகாண சபையின் போனஸ் ஆசனத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு தொடர்ந்தும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றுக்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மற்றைய போனஸ் ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாகக் கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் அவர்கள் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.

 

சுழற்சி முறையிலான போனஸ் ஆசனத்தின் முதல் வாய்ப்பைப் பெற்ற மேரி கமலா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாண சபை உறுப்பினர் செ. மயூரனை பதவி நீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரி கமலாவை பதவி நீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரி கமலா தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் உப தலைவராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆரின் பாணியில் பதவி விலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக் கட்சி, பதவியிலிருந்த மாகாண சபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவி விலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தார்மீக நெறிகளை மீறி, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களின் நியமனங்களில் தன்னிச்சையுடன் செயற்பட்டு வருகின்றமை அப்பட்டமான உண்மை.

என அந்த கடிதத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/ஜனநாயக-மக்கள்-விடுதலை-மு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.